ஆதியின் அறைகூவல்

வடகரையாரை நோக்கி நான் கேட்கிறேன் ” இளைஞர்களை காப்பாற்றும் பொருட்டு கல்யாணத்தின் ஆபத்துகளை குறித்து ஒரு பதிவாவது போட்டிருக்கிறீரா? கதைதான் எழுதியிருக்கீரா? அல்லது அடி வாங்கியதை பப்ளிக்காக ஒப்புக்கொண்டுதான் இருக்கிறீரா? அல்லது குறைந்த பட்சம் ஒரு எதிர் பின்னூட்டமாவது போட்டிருக்கிறீரா? “

இப்படி என்னைப் பார்த்துக் கேட்டது யாருன்னு நெனைக்கிறிங்க? நம்ம ஆதித்தாமிரா தான்.

சம்சார சாகரத்துல எப்படி நீந்தி கரையேறனும்னு பதிவெல்லாம் போட்டு விளக்க முடியாதுங்க. ஏன்னா அது ஆளாளுக்கு ஊரூருக்கு வித்தியாசப் படும். ஒருத்தருக்கு சரியா வர்ரது இன்னொருத்தருக்குப் புட்டுக்கிடும். காலே கால் கிலோ அல்வாவும், ஒரு முழம் மல்லியப்பூவும்னு கவுண்டர் காமெடி உங்களுக்கு ஞாபகம் வருதா?

ஆனாலும் நம்ம வீரத்தைக் கேள்வி கேட்டுட்டதால ஒரு சிறுகதை

எம்புருசன் எம்புட்டு நல்லவரு!

கதவைப் பூட்டி இழுத்துப் பார்த்துவிட்டு காரில் ஏறினேன். காரை ஸ்டார்ட் செய்யுமுன், மனைவிக்கு (குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போயிருக்கிறாள்) ஒரு போன் அடித்தேன்.

“தங்கம், நானே பருப்புச் சாதம் வச்சுக்கிடலாம்னு பாக்கேன், எம்புட்டு அரிசிக்கு எம்புட்டுத் தண்ணி வைக்கனும்னு சொல்லுப்பா?”

“எதுக்குங்க இந்த வீண் வேலை? பேசாமா எங்கனயாச்சும் டிபனச் சாப்பிடுங்க”

“இல்லப்பா இப்பச் செஞ்சா அதையே மத்தியானத்துக்கும் வச்சிக்கிடலாமுல்லே அதான்”

“நீங்களாவது மத்தியானத்துக்கு வந்து சாப்பிடறாவது. நான் சமைச்சு வச்சுக் காத்துகிட்டு இருக்கும்போதே வர மாட்டீங்க. வீணா பொருளுக்குப் பிடிச்ச தண்டமா”

“பொறுப்போட ஒரு காரியம் செய்யலாம்னு உங்கிட்ட கேட்டேம்பாரு என்னை அடிக்கனும்”

“சரி சரி, சின்ன ஒழக்குல ஒரு ஒழக்கு அரிசி வையுங்க உங்களுக்கு ரெண்டு நேரத்துக்கு வரும்.”

“சரி பருப்பு எவ்வளவு போட”

”ஒரு கை அளவு பருப்புப் போட்டாப் போதும்.”

”தண்ணி எவ்வளவு?”

”சின்னச் செம்புல ஒரு செம்பு நெறையத் தண்ணி வைங்க.”

“ஒரு விசிலா? ரெண்டா?”

“ரெண்டாவது விசில்ல ஸ்டவ்வ ஆப் பண்ணிடுங்க. மறக்காம 10 நிமிஷம் கழிச்சு எடுத்து ஹாட் பேக்குல வச்சிடுங்க.”

“இவ்வளவுதானே ஜாமாய்ச்சுடலாம். அத்தை மாமா அதை எல்லாத்தையும் கேட்டேன்னு சொல்லு”

”ஸ்பீக்கர் போன்ல நீங்க பேசுறதக் கேட்டுட்டு இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் ஒரே சந்தோஷம் நீங்க இவ்வளவு பொறுப்பா இருக்கதப் பாத்து. எனக்கு இப்பத்தாங்க நிம்மதி. நான் இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வர்ரங்க”

”சரிம்மா. நாளைக்குப் புளிச்சாதம் செய்யலாம்னு இருக்கேன்”

போனை ஆப் செய்துவிட்டு காரை அண்ணபூர்ணாவுக்கு விட்டேன். மதியம் கொக்கரக்கோவில் சாப்பிட்டாப் போச்சு.

டிஸ்கி : இத யாராவது கடைபிடிச்சு அடி வாங்கினா கம்பெனி பொறுப்பில்லை. குறிப்பா என்னோட ஃபாலோவர்ஸ். என் பிளாக்க மட்டும் பாலோ பண்ணுங்க.

.

39 comments

  1. போங்கண்ணா…. உங்களுக்கு கம்பினி ரகசியத்தை பாதுகாக்கவே தெரியலே…. இப்படி போட்டு உடைச்சிட்டீங்களே….

  2. அட! அதிரடி சிறுகதையா இருக்கு. சங்கம் ஆரம்பிச்சிர வேண்டியது தான்.

  3. கிகிகி.. பெரியவங்க என்னென்னெமோ சொல்றீங்க

  4. //கார்க்கி said…
    கிகிகி.. பெரியவங்க என்னென்னெமோ சொல்றீங்க

    //

    ஆமாண்டா கார்க்கி..இனிமே இந்தப் பெருசுங்ககூடச் சேரவேகூடாது.

    :))

  5. அண்ணாச்சி, ரெண்டு பக்கமும் சேதாரம் இலலாம தப்பிச்சுக்கிட்டீங்க போல இருக்கே.. ;-))

  6. ஆஹா..இப்படி ஒரு வழி இருக்கா..இவ்வளவுநாள் இது எனக்குத் தெரியாமா…வெந்நீர் வைக்கக்கூட தெரியாதவன்னு பேர் வாங்கிட்டேனே!

  7. ஆஹா…போற போக்குல அடுச்சுவிட்டுட்டு போய்க்கிட்டேயிருக்கிற இந்த ஸ்டைல்தாம்னே நெம்ப பிடிச்சது.

  8. அண்ணாச்சி.. கலக்கல்.. நம்ம ஆதிக்கு சரி போட்டிதான் போங்க..

    //
    இத யாராவது கடைபிடிச்சு அடி வாங்கினா கம்பெனி பொறுப்பில்லை.
    //

    ஐ லைக் திஸ் டிஸ்கி.. :)))

  9. // சம்சார சாகரத்துல எப்படி நீந்தி கரையேறனும்னு பதிவெல்லாம் போட்டு விளக்க முடியாதுங்க. ஏன்னா அது ஆளாளுக்கு ஊரூருக்கு வித்தியாசப் படும்.//

    அதானே. அடிவாங்குவது அப்படின்னு இருக்கும் போது, அதை எப்படி வாங்கணும் வேற சொல்லியா கொடுக்க முடியுமா.

    சரணம்… சரணம் இது எல்லா இடத்திலேயும் ஒன்னுதாங்க.

  10. ஆண்கள் பாதுகாப்பு சங்கத்துக்கு நீங்க தான் அண்ணாச்சி வாழ்நாள் தலைவரு.

    வேணும்ணா சென்னை கிளைக்கு தலைவரா தங்கத் தாமிராவ நியமிச்சுரலாம்.

  11. //இப்படி போட்டு உடைச்சிட்டீங்களே….//

    //அட! அதிரடி சிறுகதையா இருக்கு//

    Same here… 😉

  12. அண்ணாச்சி கதை அருமை, இதனோட தொடர்ச்சியா என்னுடைய சில வரிகள்.

    தேனுங் மாமா, சமச்சி சாப்டு பாத்தரத்தல்லாம் கழுவி வச்சிருக்கீங்,
    அப்படியே தண்ணி ஊத்தி சிங்குல போட வேண்டிய தானுங், நானு வந்து கழுவியிருப்பேன்லா

    அதில்லம்மணி வீச்சம் கண்டு போச்சி, நேத்து சாய்ந்தரந்தேன் கழுவி போட்டேன்

    ஏனுங்மாமா உம்ம கைப்பதம் சாப்டு பாக்கோணம்னு ஆசையா இருக்குங், என்ற இவள் சொற்களில் இருக்கும் நெகிழ்ந்த குழைவான குரலில், அதன் குழந்தைமையில்,எனக்கு என்னமோ போலாகிவிட்டது,

    கதை இன்னமும் தொடரலாம்,,,,,

    வட்டார வழக்கு மொழியில் எனக்கு மிகுந்த ஈடுபாடு, அதுவும் கோயம்புத்தூர் பாஷை, சமீபத்தில் கோமு அண்ணனோட ஒரு தொகுப்பு வாசிச்சி கிட்டிருக்கேன், அந்த பாதிப்புல சில வரிகள் எழுதிப் பாத்தேன்

  13. நான் அவ்வப்போது கவனித்துக் கொண்டிருக்கிறேன். தாங்கள் மட்டுமல்ல.. அருமையான தங்கமணி மேட்டர்கள் நம் நண்பர்கள் பலரிடமும் இருக்கிறது, குறிப்பாக வெண்பூ. என்ன அவர்கள் வீட்டில் பதிவுகள் படிக்கப்படுவதால் முழு வீச்சில் அடித்து ஆட முடியவில்லை, நீங்களூம் அந்த லிஸ்ட்தான் என நிரூபித்துள்ளீர்கள். நான் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூவாய் ஜொலிக்கிறேன்.. அவ்வளவுதான்.

  14. ஆனாலும் கூவுன அரைமணி நேரத்துல பதிவுன்னா கொஞ்சம் ஆவேசமாத்தான் ஆயிட்டீங்கபோல.. ஹிஹி..

  15. //கிகிகி.. பெரியவங்க என்னென்னெமோ சொல்றீங்க//
    ஐயா ராசா.. அற்புதம்! எப்புடிப்பா இப்புடி வார முடியுது?! ஹிஹி.. ரிப்பீட்டிடுறேன்

  16. நன்றி குமார்
    நன்றி நாதன்
    நன்றி நைனா, நாலு பேருக்குப் பிரயோசனமா இருக்கும்னா தப்பில்லை.
    நன்றி வெயிலான்.
    நன்றி கார்க்கி
    நன்றி மணிகண்டன்
    ந்ன்றி சென்ஷி
    நன்றி அப்துல்.
    நன்றி தமிழ். பின்ன தங்கமணி,ஃபிரண்ட்சுக ரெண்டுபேரும் நமக்கு முக்கியலில்லையா?
    நன்றி TVRK சார். இதெல்லாம் சூழ்னிலைக்குத் தகுந்தபடி தானா வரும். உங்களுக்கு அவசியமில்லை போல இருக்கு.
    நன்றி ராமல்க்ஷ்மி. என்ன வெறும் ஸ்மைலி மட்டும்?
    நன்றி கும்க்கி
    நன்றி வெண்பூ. நமக்கு சுயமரியாதை(!?) முக்கியம்.
    நன்றி ராகவன். சரண்டர்தான் ஒரே ஃபெயில் சேஃப் மெக்கானிசம்.
    நன்றி ஜோசப். தாமிராதான் தலிவர்.
    நன்றி ரமேஷ்
    நன்றி மயில். இது மாதிரி இன்னும் டெக்னிக் இருக்கு. அப்பப்ப வரும்.
    நன்றி யாத்ரா. பல்வேறு சாத்தியக் கூறுகளடங்கியதுதானே ஒரு சிறுகதை.
    நன்றி தாமிரா. வசிஷ்டர் வாயால் பாராட்டு?
    நன்றி வெங்கிராஜா.

  17. நல்ல சிறுகதை வாசிப்பிற்குரிய அனுபவத்தை தந்தது. சரளமான நடை.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

  18. நன்றி தாமிரா. வசிஷ்டர் வாயால் பாராட்டு?//

    ஏற்கனவே அங்கிள்னு சொல்லி கடுப்பேத்திகிட்டிருக்காங்க.. இந்த லட்சணத்துல தாத்தா ரேஞ்சுக்கு ஒப்பீடா? வெளங்கிரும்..

  19. அசத்தல் சிறுகதை.

    அச்சுக்கு அனுப்பலியா அண்ணாச்சி?

  20. கதை சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகி தொடர்கிறது.கதை கிழ் வரிக்குப் பிறகு
    தொடருகிறது.

    //”சரிம்மா. நாளைக்குப் புளிச்சாதம் செய்யலாம்னு இருக்கேன்//

    “நீங்க சும்மா பிலிம் காட்டாதீங்க.
    அதெல்லாம் செய்யமாட்டிங்க டியர்.”

    ”செய்வேன்…It is a promise”

    “செய்யமாட்டேங்க….இவ்வளவு dig பண்ணி கேட்கும்போதே something wrongன்னு தெரியுது.
    சரவணாதானே…”

    ”அடிப் பாவி… கண்டுபிடிச்சுட்ட”

    “நா உங்க follower ஆச்சே”

  21. //என் பிளாக்க மட்டும் பாலோ பண்ணுங்க.//

    Adhaana paathen…Sariyaana advice :)))

  22. ஆதிமூலகிருஷ்ணன் said…

    நன்றி தாமிரா. வசிஷ்டர் வாயால் பாராட்டு?//

    ஏற்கனவே அங்கிள்னு சொல்லி கடுப்பேத்திகிட்டிருக்காங்க.. இந்த லட்சணத்துல தாத்தா ரேஞ்சுக்கு ஒப்பீடா? வெளங்கிரும்.

    ஆதித் தாமிராவ தாத்தான்னு முதல்ல கூப்பிட்ட பெருமை என்னையே சாரும்.

  23. நாங் கூட பருப்பு சாதம் செஞ்சி, குக்கர் தீயும்னு நெனச்சு மேலே படிச்சேன்.

    ஆனா முடிவுல என்ன ஒரு ட்விஸ்ட்….

    அட அட இது மட்டும் உங்க தங்கமணிக்கு தெரிஞ்சா, அங்கேயும் இருக்கு ஒரு ட்விஸ்ட்…

  24. அண்ணாச்சி

    நல்லா இருக்கே – பாவம் அம்மிணிய வூருக்கு அனுப்பிச்சிட்டி கோயம்புத்தூர்ல கொண்டாட்டமா

    நடக்கட்டும் நடக்கட்டும்

  25. நன்றி வாசுதேவன்
    நன்றி பரிசல்
    நன்றி மண்குதிரை
    நன்றி ரவிசங்கர்
    நன்றி நாகேந்திர பாரதி
    நன்றி பட்டாம்பூச்சி
    நன்றி அமித்து அம்மா
    நன்றி சீனா சார்

  26. //நையாண்டி நைனா said…
    போங்கண்ணா…. உங்களுக்கு கம்பினி ரகசியத்தை பாதுகாக்கவே தெரியலே…. இப்படி போட்டு உடைச்சிட்டீங்களே….//

    ரிப்பீட்டேய்……………..

  27. adhi said
    // ஏற்கனவே அங்கிள்னு சொல்லி கடுப்பேத்திகிட்டிருக்காங்க.. இந்த லட்சணத்துல தாத்தா ரேஞ்சுக்கு ஒப்பீடா? வெளங்கிரும்..//

    நம்ம எல்லா uncleம்
    உங்களை uncleனு கூப்பிட்டால், நான் உங்களை தாத்தா என்று கூப்பிடுவதுதானே முறை??? இதுக்கெல்லாம் போய் கோபித்துக்கொண்டால் எப்படி?

  28. You Are Posting Really Great Articles… Keep It Up…

    We recently have launched a website called “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
    http://www.namkural.com.

    நன்றிகள் பல…

    – நம் குரல்

  29. அட்டகாசம் அண்ணாச்சி. நல்ல ஃப்ளோ. கடைசியில் நல்ல திருப்பம். சூப்பர்.

    அனுஜன்யா


  30. You Are Posting Really Great Articles… Keep It Up…

    We recently have launched a Tamil Bookmarking site called “Tamilers”…

    http://www.Tamilers.com
    தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

    நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்