Month: December 2008

மானமுள்ள தமிழா, தை முதல் நாள்தான் புத்தாண்டு

சென்ற பதிவில் நெல்லைக் கண்ணன் கவிதை ஒன்றைப் பின்னூட்டமாக இட்டிருக்கிறார் பரிசல்.

தமிழ்க்கடவுள்
முருகன் கோவிலில்
நீண்ட வரிசை
ஜனவரி 1.

இதில் ஏதும் தவறிருப்பதாகத் தெரியவில்லை. காலண்டர் வருடம் ஜனவரி 1 ல் தொடங்குவதைத்தானே காலகாலமாகக் கடைபிடித்து வருகிறோம்? அன்று வருடத்தின் முதல்நாள் எனவே செண்டிமெண்டாகக் கோவிலுக்குப் போவது சரிதானே?

கோடை விடுமுறை கழிந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தை, முதள் நாள் உடை, ஷீ, பேக், புத்தகம், பேனா என புதியனவாக, ஒரு உற்சாகத்துடன் செல்லுவது போலத்தான் இதுவும்.

மேலும் இந்தியர்கள் மொழியால் பிரிக்கப்பட்டிருக்கின்ற வேளையில், தமிழ்ப் புத்தாண்டு, தெலுங்குப் புத்தாண்டு, மலையாளப் புத்தாண்டு போன்றவை வேறு வேறு தேதியில் வருகின்றன. இந்தியா முழுமைக்குமான ஒரு புத்தாண்டு என்பது இதுதானே, வேறென்ன செய்ய?

என்னுடைய வாடிக்கையாளர்கள், சென்னை, பெங்களூரு, கொச்சி மற்றும் மும்பையில் இருக்கின்றனர். என்னைப் போன்றவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு ஒரே நாளில் அனைவருக்கும் வாழ்த்துச் சொல்ல.

புத்தாண்டு பற்றிய போஸ்டர் ஒன்று ஈரோடு முழுவதும் ஒட்டப்பட்டிருக்கிறது கீழ்க்கண்ட வாசகத்துடன்.

தை முதல் நாள்தான் புத்தாண்டு தொடங்குகிறதா இல்லையா என்பதைத் தள்ளி வைத்து விட்டு, ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடுவதில் என்ன தீமை என்று யாராவது சொல்லுங்கள். குடி கும்மாளம்தான் கொண்டாட்டம் என்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. அது தவிர்த்து இதைக் கொண்டாட வேறு வழியிருக்கிறது. குறைந்த பட்சம், வாழ்த்துச் சொல்லி இனிப்புப் பரிமாறிக் கொள்ளத் தடை ஒன்றுமில்லையே?

சில தீர்மானங்களை எடுக்கவும் ( அதை கடைபிடிக்கிறோமா என்பது வேறு) அன்று நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து வாழ்த்துச் சொல்லவும் மற்றுமுமொரு சந்தர்ப்பம். ஆனால் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று சொல்லும் தகுதி யாருக்கு இருக்கிறது.

பெயருக்கு முன் இனிசியல் ஆங்கிலத்தில்தான் போடுகிறோம்.

கேக் வெட்டித்த் பிறந்த நாள் கொண்டாடுகின்றோம்.

பேண்ட் சர்ட் அணிந்துதான் தமிழை வளர்க்கின்றோம்.

ஆங்கிலத் தேதியில்தான் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றோம்.

தமிழ்
புத்தாண்டு அன்று தொடங்கும் காலண்டர் எதுவும் இல்லை.

தமிழக
அரசு ஊழியர்களுக்கான டயரி ஆங்கிலப் புத்தாண்டுக்குத்தான்.

அரசாங்கக் கலண்டர்கள் ஆங்கில புத்தாண்டுக்குத்தான்.

ஜனவரி
முதல் டிசம்பர் வரைதான் அரசு ஊழியர்களுக்கான விடுமுறை நாட்கள்கணக்கிடப்படுகின்றன.

ஜனவரி
1 அரசே புத்தாண்டு தினம் என விடுமுறை அளித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, தை முதல்நாளைப் பொங்கலாகக் கொண்டாடும் விதமாக உழவர்கள் வாழ்க்கை இருக்கிறதாவெனில் இல்லை என்பதே நிதர்சனம்.

உழவன்
அறுவடை செய்து
பொங்கல் வைத்தது
அந்தக் காலம்
அவனே
ரேசன் கடைக்
க்யூவில்
நின்று
பொங்கல் வைப்பது
கஷ்டகாலம்.

டிஸ்கி : தமிழ்ப் புத்தாண்டு அன்று HAPPY NEW YEAR ன்னு ஆங்கிலத்துல வாழ்த்துச் சொல்லுவது நகைமுரண் இல்லையா?

கதம்பம் – 30/12/08

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு புத்தாண்டும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைகளையும், சவால்களையும்அதை சாதிக்க புது உத்வேகத்தையும் அளிப்பதாகத்தான் இருக்கிறது.

******************************************************************

காந்தியடிகளால் இந்தியாவின் சொத்து என்று புகழப்பட்ட ஜீவா, வீதியில் கையில் ஒரு துணிப்பையுடன் வேகவேகமாய் நடந்து செல்கிறார். எதிரே வரும் அவரது நண்பர் ஜீவாவைப் பார்த்து , “ தோழர் ஜீவா, ஏன் நடந்து செல்கிறீர்கள்?

அதற்கு ஜீவா, “ பஸ்ஸில் செல்வதற்கு காசில்லை. அதான் நடந்து செல்கிறேன் என்றார்.

அது சரி கையிலே என்ன வச்சிருக்கீங்க?”

தோழர்கள் கொடுத்த கட்சி நிதிஎன்றார் ஜீவா.

பஸ்ஸிற்குத் தேவையான காசை அதிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது தானே?” என்றார் நண்பர்.

கட்சி நிதின்னு தோழர்கள் தந்த பணத்திலிருந்து ஒரு சல்லிக்காசு எடுத்தால் கூட அது பெரிய குற்றம். அந்தக் கணக்கை அப்படியே கட்சி அலுவலகத்தில் ஒப்படைப்பது தான் அவர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றும் செயலாக இருக்கும்என்றபடியே நடையைக் கட்டினார் ஜீவா.

பெருமூச்சு விடுவதைத் தவிர நம்மால் ஒன்றும் செய்ய இயலாது இப்பொழுது.

*********************************************************************

தமிழுக்கு சாகித்ய அகாடமி வழங்கும் விருது ெரும்பாலும் விமர்சனங்களுட்பட்டே இருந்திருக்கிறது. ஒரு விதி விலக்காக இந்த வருடம் யாரும் விரல் நீட்டிக் குறைபட முடியாத, முழுவதும் தகுதி உள்ள ஒருவருக்குக் கிடைத்திருக்கிறது.

பிரபல மிழ் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமிக்குமின்சாரப்பூஎன்ற அவரது சிறுகதை தொகுப்பிற்காக அரசின் சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மேலாண்மறைநாட்டை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (59). ஊர் பெயரையும் சேர்த்து மேலாண்மை பொன்னுச்சாமி என அழைக்கப்படுகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலத் துணைச் செயலாளரான இவர், 5ஆ‌ம் வகுப்புவரை படித்துள்ளார், பலசரக்கு கடை வைத்துள்ளார்.

இவரது சிபிகள் என்ற சிறுகதைத் தொகுப்பை வாசித்துள்ளேன். ஒரு கிராமத்திலிருந்து டவுனுக்குக் கிளம்பும் டவுன் பஸ்ஸில் ஏறும் பயணிகளின் மன நிலையை பதிந்திருப்பார். யாரும் யாருக்கும் எதையும் விட்டுத்தரத் தயாராக இல்லாத உறுதியுடன் இருப்பர். ஆனால் சக பயணியான நிறைமாதக் கர்ப்பிணிக்கு பிரசவ வலி எடுத்ததும் எல்லோரும் அவரவர் வழியில் உதவுவதுடன், ஒத்துழைப்பும் நல்குவர்.

இந்த வித்தியாச மன நிலையை மிக அழகாகப் படம் பிடித்திருப்பார். அவரது கதை மாந்தர்கள், இத்தரத்தினரே.

விருது பற்றிய மாதவராஜின் பதிவு .

***************************************************************

எது கவிதை என்பதில் அவரவருக்கான அபிப்ராயம் அவரவருக்கு, எனினும்பொதுவான கருத்து அது எழுதியவர் உணர்ந்ததை படிப்பவருக்குக் கடத்தவேண்டும் என்பதே.

கவிதை என்பதற்கான இலக்கணம் வெவேறெனினும், மேற்ச்சொன்ன இலக்குஎட்டப்படுமாயின், அது எவ்வாறாக இருப்பினும் கவிதைதான்.

விகடனில் வெளியானஇந்த முத்திரைக் கவிதைகள் அவ்வகை.

மனசு

சோகக் கலவை
பூசிய முகங்கள்
எறும்புத் தொடர்தலாய்
துக்க விசாரிப்புகள்
இறுதிச் சடங்குகளில்
இனிய நண்பன்
கவலைக்குள் முங்கி
தேகம் நனைக்கையில்
ஆசையில் நினைத்தது
நேற்றிரவு நான் வாங்கிய
பத்தாயிரக் கடனை
பத்தினியிடம்
சொல்லியிருப்பானா..?

பா.கீதா வெங்கட்

உயிரின் ஒலி

வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை

மகுடேசுவரன்

செவலையெனும் சித்தப்பு

அப்பா போனதுக்கப்புறம்
செவலைதான்
எங்களுக்கு சோறுபோட்டுச்சு.

மூட்டை ஏத்தி வந்தப்ப
கால்முறிஞ்ச செவலையை
அடிமாடாய் ஏற்றிப்போனான் யாவாரி.

எங்களை விட்டுப் பிரிந்த
செவலை இறந்துபோனாலும்
எந்தத் தப்பிலாவதும்
தவுலிலாவதும்
அழுதுகொண்டுதானிருக்கும்
எங்களைப்போல.

சிவராஜ்

***************************************************

ரயிலில் இரு பெண்மணிகள், சுமார் 35 வயதிருக்கும், தங்களுக்குள் யார் வயதுகுறைவு என்பது குறித்து வாக்குவாத்தில் ஈடுபட்டனர், பிரண்ட்லியாகத்தான். இருவரும் தங்கள் வயது 25 லிருந்து ஒன்றோ இரண்டோதான் அதிகம் என்பதைநிறுவ மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர்.

பொறுக்க முடியாமல் அருகில் அமர்ந்திருந்த 50 வயசுக்காரர் எழுந்து சொன்னார்,

என்னக் கொஞ்சம் அப்பர் பெர்த்துக்கு ஏத்தி விடுறீங்களா?”

ஏங்க

இல்ல எனக்கு வயசு 12 தான் ஆச்சு , மேல ஏற முடியாது, அதுதான்

கதம்பம் 15/12/08

ஒரு முறை ராஜாஜியின் மாளிகையில் தங்கினார் காந்தி. அவர் தங்கியிருந்த அறையில் சத்தியமூர்த்தி, ராஜாஜி ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். திடீரென்று உள்ளே நுழைந்தார் பாரதியார். காந்தியை வணங்கி விட்டு அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.

“மிஸ்டர் காந்தி! இன்று மாலை 5.30 மணிக்குத் திருவல்லிக் கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் நான் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?’ என்று காந்தியைக் கேட்டார் பாரதியார். அந்த நேரத்தில் மற்றோர் இடத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலையால், “கூட்டத்தை மறுநாளைக்கு ஒத்தி வைக்க முடியுமா?’ என்று திருப்பிக் கேட்டார் காந்தி.

“ஒத்தி வைக்க முடியாது; நான் போய் வருகிறேன்! தாங்கள் துவங்கப் போகும் இயக்கத்தை நான் வாழ்த்துகிறேன்!’ என்று போய்விட்டார் பாரதியார்.

பாரதி வெளியேறியதும், “யார் இவர்?’ என்று கேட்டார் காந்தி. அவர், “எங்கள் தமிழ் நாட்டுக் கவி!’ என்று சொன்னார் ராஜாஜி. “இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும், இதற்குத் தமிழகத்தில் ஒருவரும் இல்லையா?’ என்றார் காந்தி.
(நன்றி : தினமலர்)

பாதுகாக்க ஆளில்லாவிட்டாலும் நினைத்துப்பார்க்கக்கூட ஆளில்லதவராக ஆகிவிட்டார். டிசம்பர் 11 ஐக் கண்டுகொள்ளாத மீடியாக்கள் டிசம்பர் 12 ஐக் கோலாகலமாகக் கொண்டாடினர். இலக்கியத்தைத் தன் தோள்களில் தாங்கி வளரும் சமுதாயமே முன்னேறும்.

பூமணியின் வெக்கை நாவல், அண்ணனைக் கொன்றவனைப் பழிவாங்கும் சாதாரணக் கதைதான். ஆனால் எழுதப்பட்ட விதத்தில் சிறந்த படைப்பாக ஆகியிருக்கிறது.

15 வயதே ஆன செலம்பரம்(சிதம்பரம்) அண்ணனைக் கொன்றவனின் கையெடுக்கும் முயற்சியில் தோற்று ஆளையே கொன்று விடுகிறான். அவனறியாமல் அவனுக்கு உதவி செய்ய வரும் அப்பாவும் அவனும் அதன்பின் காட்டுக்குள் மறைந்து வாழ்வதும், அந்தச் சம்பவத்தை செய்யத் தூண்டிய காரணமும் அதனிடையே அவர்களது வாழ்க்கையுமென நாவல் பரந்து விரிகிறது.

ஒரு குடும்பமும் அதன் உறவின்முறைகளும் மட்டுமல்லாது அந்தக் கிராமமே அவர்களுக்கு உதவுவதும் அரசாங்க நிறுவனம் பணம்படைத்தவர்களின் கைக்கூலியாகச் செயல்படுவதும் மிகச் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

ஏதோ பழிக்குபழி வாங்கினான் என்று மலினமாகியிருக்கக்கூடிய ஒரு சம்பவதைப் பிரியத்துகுரியதாக நாவல் ஆக்க முனைந்துள்ளது. வன்முறையை உள்ளடக்கிய வாழ்க்கையில் வர்க்க நலன்கள் மோதுகிற சூழலில் உழைக்கும் வர்க்கத்தின் குடும்ப உறவுகள் மிக இனிமையான மனிதச் சூழல்கள் ஆகிய ஒரு உலகிற்குள் சஞ்சரிக்கிறார் பூமணி” ராஜ் கெளதமன் (சிலுவை ராஜ் சரித்திரம் – நாவலாசிரியர்)

இது போன்ற யதார்த்த நாவல்கள் அதிகக் கவனம் பெறாமல்போவதும், பிற நாவல்கள் விளம்பரப்படுத்தல் மூலமும் , சந்தைப்படுத்தல் மூலமும் உலக உயரத்தில் என புகழப்படுவது தமிழிலக்கிய உலகின் ஒரு நகைமுரண்.

****************************************************************

”இரட்டைக் குழந்தைகளோட அச்சன் “ என்றொரு மலையாளப் படம் பார்த்தேன். 90 களின் ஆரம்பத்தில் வந்த படம். சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் ஸ்ரீனிவாசன் கதை திரைக்கதை எழுதியது.

நான்காவது பிரசவத்திலும் இறந்து பிறந்த குழந்தையுடன் போராடும் தந்தைக்கு ஆறுதலளிக்க தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளிலொன்றைக் கொடுக்கிறார் ஜெயராம்; மனைவிக்குத் தெரியாமல்,அரைமனதுடன்.

பிறிதொரு நாளில் தாங்க முடியாத மன அழுத்தத்தில் அதைச் சொல்லிவிட நேர்கிறது மனைவியிடம். அதன் பின்னெழும் உக்கிரகரமான சம்பவங்களும் மனநிலைகளில் ஏற்படும் மாற்றமுமாக நகர்கிறது படம். கொஞ்சம் அதிகமாகி இருந்தாலும் தற்கால மெகாத்தொடர் போல ஆகியிருக்கும் அபாயமுள்ள கதையை தேர்ந்த திரைக்கதை முலம் சுவராஸ்யமாக்கியிருக்கிறார் ஸ்ரீனிவாசன்.

தமிழில் இதுபோல ஒரு பிரச்சினையை மையமாக வைத்து படங்கள் எடுக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ தெரியவில்லை.

மலையாளக் திரையுலகிற்கும் தமிழ்த் திரையுலகிற்கும் இருக்கும் ஒரு வித்தியாசமே அதற்குத் தடைக்கல். அங்கே கதை நடிகர்களைத் தீர்மானிக்கிறது. ஆனால் இங்கே நடிகர்கள்தான் கதையைத் தீர்மானிக்கிறார்கள். இந்த வரையறைக்கு வெளியே தயாரிக்கப்பட்ட படங்கள் வெற்றி பெற்றது கண்கூடு.

*************************************************************

தெயவம் மனிதனாய் ஜனித்தால்
ஜீவிதம் அனுபவிச்சறிஞ்சால்
திருச்சி போகுமுன்னே
தெய்வம் பறயும்
மனிதா நீதான்
எண்ட தெய்வம்.

(திருச்சி – திரும்பி)

இது சமீபத்தில் இரு மலையாளிகள் பேசிக்கொண்டிருந்தபோது கேட்ட கவிதை வரிகள். மூலத்தில் எழுதியவர் யார்? தமிழ்ப் படுத்தப் பட்டிருக்கிறதா? எனில் என்ன அப்புத்தகத்தின் பெயர்? யாராவது உதவமுடியுமா?

இனி இந்தவாரக் கவிதை.

பயனிகள் கவனிக்கவும்

ஒரு ரயில் நிறுத்தம்
கண்டிப்பாக ஐந்து நிமிடம்
நின்று கிளம்பி விடும்
நூறு ரூபாய் கொடுத்து
நான்கு சமோசாவும் இரண்டு டீயும்
ஒரு கை கேட்கிறது

கேட்டதை கொடுத்து மீதி சில்லறையும்
கொடுக்கிறார் மறக்காமல்

இட்லி பொட்டலமும் சாம்பார் பாக்கெட்டும்
கொஞ்சம் கெட்டி சட்னியும் கூட
கேட்ட இன்னொருக் கைக்கு கொடுக்கிறார்

அடுத்த ஸ்டேஷனில் நிற்காது
தீர விசாரித்து ஒரு கை
பத்து ரூபாயும் அறுபது காசுகளும்
எண்ணிப்பார்த்து கொடுத்து
வாங்கி கொள்கிறது

சில கைகள் ஏதோ வாங்கிக்
கொண்டு பதிலுக்கு கிழிந்த நோட்டுக்கள்
உடைந்த நாணயங்கள்

தயிர் சாதத்திற்கு பதிலாக லெமன் ரைஸ்
மாற்றிக்கொள்கிறது ஒரு கை
அந்த கைக்கு கூட்டி கழித்து
கூட குறைய இல்லாமல்
கொடுக்கிறார் துல்லியமான சில்லறை

இதை அந்த குப்பை தொட்டியில் போடு
என்று சொன்ன – ஒரு
சிறுமி கைக்கு பணிகிறார்

ஊசிப்போச்சு என்று பாதி
சாப்பிட்டுவிட்டு மீதியை நீட்டுகிறது
முகத்தில் பருக்கைகளுடன் ஒரு கை

வண்டியின் கூடவே ஒடி
உள்ளே போய் அந்த கையைப் பார்த்து
கொடுத்து விட்டு பிளாட்பாரத்தின்
கடைசி சிமெண்ட் சதுர நுனியில்
உயிர்பிடித்து இறங்கும் அவர்
சட்டக் கல்லூரி வாசலில்
ஆயுதம் தாங்கிய கைகள்
ஏதோவொன்றின் அப்பாவாக
இருக்கலாம்

ரவிஷங்கர் உயிரோசையில் வெளியான கவிதை

***********************************************************

ஓரு மலையாளியிடம் கடன் வாங்கியவர் பட்ட அனுபவம் இது.

கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார் மலையாள அன்பர். நாளை காலையில் தருகிறேன் என்பார். காலையில் வந்தால் மாலையில் தருகிறேன் என்பார். இப்படியாகக் காலை மாலை என மாற்றி மாற்றி அவரை அலைகழித்திருக்கிறார் இவர்.

வெறுத்துப் போன மலையாள அன்பர் சொன்னார், “ சாரே இது சரியில்ல கேட்டோ? ராவிலே ஒரு சம்சாரம், ராத்திரிக்கு ஒரு சம்சாரம்.”

திட்டிவிடு அவர் போன பின் இவர் அவர் தங்கமணியிடம் நாய் பட்டபாடு பட்டார்.

மலையாளத்தில் சம்சாரம் என்றால் பேச்சு என்றும் ராவிலே என்றால் காலையில் என்றும் அர்த்தம் சொல்லி அவர் தங்கமணிக்கு விளங்க வைத்தார்கள்.

சம்சாரம்னாலே பேசீட்டே இருப்பாங்கன்னுதான் மலையாளத்துல அப்படி வச்சுட்டாங்களோ?

முத்திரைக் கவிதைகள்

காதலைத்தவிர்த்த பாடுபொருள் கொண்ட கவிதைகள் எனக்கெப்போதும் பிடித்தமானவை. பல்வேறு சாத்தியங்களைக் கொண்ட கவிதைகள் உங்கள் பார்வைக்கு. இன்னும் சில, வரும் வாரங்களில்.

புண்ணியம்

தீர்த்தவாரித் திருவிழாவில்
அலங்கரிக்கப்பட்ட
அர்த்தநாரீஸ்வரரின்
பிரமாண்ட திரு உருவத்தை
கழுத்துப் புண்களில்
ரத்தம் வடிய
கண்களில்
நீர் கசிய
இழுத்து வரும்
வண்டி மாடுகளுக்கு
தெரிந்திருக்காது
அவை
எவ்வளவு பாக்கியம்
பெற்றிருக்க வேண்டுமென்பது!

– க.பாலவெங்கடேசன்

குற்ற மனசு

ஆறாயிரத்துக்கு
விற்றுவிட்ட பிறகும்
ராவோடு ராவாக
புதிய எஜமானனின்
தொழுவத்துக் கயிற்றை
அறுத்துக்கொண்டு
பத்து கிலோமீட்டர்
பயணம் செய்து
மூச்சிரைத்தபடி
வீட்டு வாசலில்
வந்து நிற்கிற
வெள்ளைப் பசுவைப்
பார்க்கும்போது
உறுத்தத்தான் செய்கிறது
தனிக்குடித்தனம்
வந்தவனுக்கு

– ஜெ.முருகன்

நானும் நீயும்

நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்றுகொண்டிருப்பாய் நீ

உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல்
தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ

எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப் பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை

– ஜெயபாஸ்கரன்

நகரம்

சீறும் பைக்கின் பின்ஸீட்டில்
டி-ஷர்ட் பெண்ணைப் பார்க்கையிலே
கண்கள் இமைக்கும், படம் விரியும்
சாலையில் கவனம் தடுமாறும்
விரட்டிச் சென்று மறுபடியும்
கிட்டே பார்க்கத் தோன்றும்
சிக்னல் விழுந்து பைக் விரைய
மனசுள் ஏதோ குறுகுறுக்கும்
ப்ளஸ் டூ மகளும் போவாளோ
யாரோ ஒருத்தன் பின்னாடி?

– ஜெயந்த்

மனசு

சோகக் கலவை
பூசிய முகங்கள்
எறும்புத் தொடர்தலாய்
துக்க விசாரிப்புகள்
இறுதிச் சடங்குகளில்
இனிய நண்பன்
கவலைக்குள் முங்கி
தேகம் நனைக்கையில்
ஆசையில் நினைத்தது
நேற்றிரவு நான் வாங்கிய
பத்தாயிரக் கடனை
பத்தினியிடம்
சொல்லியிருப்பானா..?

– பா.கீதா வெங்கட்

நன்றி : ஆனந்த விகடன். முத்திரைக் கவிதைகள் (2002)

கொசுத் தொல்லை தாங்க முடியலடா நாராயணா.

நோக்கம் :
கடிப்பதன் மூலம் மலேரியா மற்றும் டெங்கு காச்சலைப் பரப்பும் கொசுக்களை ஒழித்தல்.

தேவையான உபகரணங்கள் :

1. இரு அங்குல நீளம் இரு அங்குல அகலம், ஒரு அங்குல உயரமுள்ள தட்டையான பரப்புள்ள கற்கள் இரண்டு. பக்கத்தில் எங்காவது கட்டிட வேலை நடந்தால் அங்கிருந்து மார்பிள் அல்லது கடப்பா கற்கள் கிடைத்தால் நலம்.

2. 100 மி லி அளவுள்ள சீசா நிறைய மயக்கமருந்து. சீசா மீது குளோரோபார்ம் என்று லேபில் இருந்தால் அகற்றிவிடவும் (காரணம் கடைசியில்). மயக்க மருந்து கிடைக்கவில்லையெனில் மாற்று ஏற்பாடு கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது.

3. பஞ்சு ரோல் – 1

4. 6 அடி நீளமும் 3 அடி அகலமும் உள்ள கெட்டியான போர்வை. காதி பவணில் வாங்குவது உசிதம்.

5. ஒரு டப்பா குளுக்கோஸ் பவுடர்.

செய்முறை:

முதலில் நல்ல காற்றோட்டமுள்ள இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். படுக்கை விரித்துத் தயார் செய்யவும். அரைமணி நேரம் கழித்து கதவு மற்றும் ஜன்னல்களை மூடவும். படுக்கையில் படுக்குமுன் தயார் செய்த கற்கள், பஞ்சு, மயக்க மருந்து ஆகியவற்றை தலைமாட்டில் தயாராக வைத்துக் கொள்ளவும். போர்வையால் முழு உடலையும் மூடிக் கொண்டு ஒரு கையை மட்டும் வெளியே நீட்டியவாறு படுக்கவும். உங்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களை அசைபோடவும்.

முதலில் ஒரு கொசு வந்து வெளியே நீட்டியிருக்கும் கையில் இடம் பார்த்து அமரும். நன்றாக அமர்ந்து விட்டது என்று உறுதியானபின், போர்வைக்குள் இருக்கும் இன்னொருகையை நீட்டித் தலை மாட்டில் இருக்கும் மயக்கமருந்தை பஞ்சில் நனைத்து கொசுவின் மூக்கில் காட்டவும். கொசு மயங்கி விடும். ஒரு கல்லை எடுத்து மயங்கிய கொசுவை அதன் மீது சரியாக நட்ட நடுச் செண்டரில் வைக்கவும். இரண்டாம் கல்லை வைத்து ஓங்கி அடிக்கவும். அதிகச் சத்தம் வராமல் பார்த்துக் கொள்ளவும், மற்ற கொசுக்கள் பயந்து பின்வாங்கும் அபாயமுள்ளது.

இது போல பிற கொசுக்களுக்கும் தொடரவும்.

மயக்க மருந்து கிடைக்காதவர்கள் பலநாட்கள் துவைக்காத தங்கள் ஷாக்ஸை கொசு முகத்தில் காட்டினால் போதும அல்லது கொசுவின் கஷ்கத்தில் கிச்சு கிச்சு மூட்டலாம். பிற செய்முறைகள் அதே.

சீசாவின் லேபிலை அகற்றச் சொன்ன காரனம், கொசுக்கள் பொதுவாக எழுத்தறிவு இல்லாதவை என்றாலும் இளைய தலைமுறைக் கொசுக்களுக்குப் படிக்கத் தெரிந்திருக்கும், அவை மற்ற கொசுக்களை உஷார் படுத்திவிட வாய்ப்புண்டு.

முடிவு :
வீட்டுக்கு ஒரு இளைஞர் தங்கள் சுகதுக்கங்களைத் தியாகம் செய்து இந்நடவடிக்கையில் இறங்கினால், மனிதகுல அழிவுக்குக் காரணமான கொசு இனத்தை பூண்டோடு ஒழித்துவிடலாம்.

டிஸ்கி : குளுக்கோஸ் டப்பா எதுக்குன்னு உங்களுக்கு இன்னும் தெரியல்லன்னா இப்பத் தெரிஞ்சுக்குங்க. கொசு அடிச்சு டயர்டா ஆச்சுன்னா தண்ணியில குளுக்கோஸ் கலந்து குடிச்சா தேவையான சக்தியும் உறசாகமும் உடனடியாகக் கிடைக்கும் அதுக்குத்தான்
.

இந்தப் பதிவப் படிச்ச பதிப்புல எழுதுனது

சொல்ல நினைத்ததும்; சொன்னதும்; சொல்ல மறந்ததும்

நடிகர் அமரர் எம் என் நம்பியார் உடல் தகனத்திற்கு மின்மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ப ஜ கட்சி இல கணேசன் அவர்கள் முன்கூட்டியே மின்மயானத்திற்குச் சென்று அங்கு ஏதாவது ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தால் செய்யலாம் என்று சென்றார்.

அவரை வரவேற்ற மயான ஊழியர் சொன்னார், “ வாங்க வாங்க நீங்கதான் அடுத்தது”

கணேசனுக்கு திக்குன்னு ஆகிருச்சு;ஒன்னும் புரியவில்லை. அவர் குழப்பத்தை அதிகப்படுத்த ஊழியர் மேலும் சொன்னார், “உங்களுக்குத்தான் அதிகச் சான்ஸு”

“ஏ என்னப்பா சொல்லுறே”ன்னு கணேசன் கேட்டதுக்குச் சொன்னார்,”கூட்டணி மட்டும் சரியா முடிவு பண்ணுனா அடுத்து உங்க ஆட்சிதான்”

தினமலர்ல படிச்ச இந்தச் செய்தி போலத்தான் நம் வாழ்விலும் நடக்கும் சில சமயம்; நாம் சொல்ல நினைப்பதும், சொன்னதும், சொல்ல மறந்ததும் வேறு வேறாக அமைந்து கோக்குமாக்கு ஆகிவிடும்.

என் தங்கமணி அவர் தம்பியை மொபைலில் அழைத்து, “ என்ன துரை இருக்கியா? போய்ட்டியா?”ன்னு கேட்டார். அவம்பாவம் இப்பத்தான் 3 மாசத்துக்கு முன்னால கல்யாணம் ஆச்சு. ”அக்கா என்ன சொல்லுறீங்கன்னு”, கேட்டபிறகு சொன்னார்,”இல்லடா ஊர்ல இருக்கியா இல்ல சிஙக்ப்பூர் போய்ட்டியான்னு கேட்டேன்”

என் பிரண்டு இப்படித்தான் பொலம்பினான். ”போய்ச்சேந்தவன் எவனும் போன் பண்ணிச் சொல்லுறதில்ல”.

“ஏ என்னடா சொல்லுறே? போய்ச்ச்சேர்ந்தப்புறம் எங்குட்டுக்கூடிப் போன் பண்ண?”

“இல்ல பங்காளி, வர்ராய்ங்க, நல்லா சாப்பிடுராய்ங்க, ஊர் சுத்திப் பாக்குராய்ங்க, ஊருக்குப் போனதும் வந்து சேர்த்திட்டோம்னு ஒரு போன் பண்ணுனா கொறஞ்சா போவாய்ங்க?”

சமீபத்துல கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். கீரை நன்றாகச் செய்திருந்தார்கள். கொஞ்சம் கீரைக் கொடுங்கன்னு கேட்டதுக்குச் சூப்பர்வைசர் சொன்னார், “டேய் இங்க புளூ சட்டக்கார அண்ணாச்சிக்குத் தூக்குப் போடு”

தேரடித் திடலில் நடந்த மீட்டிங்க்ல மைக்கு கொஞ்சம் தகராறு பண்ணுச்சு. பேச்சளர் வெறுப்பாகி மைக் செட்டுக் காரரத் திட்டீட்டாரு. மேடைக்கு வந்து மைக்கச் சரி செஞ்ச செட்டுக்காரர் சொன்னார், “ மைக்கு நல்லாத்தாம் இருக்கு, ஸ்பீக்கர்தாம் கொஞ்சம் லூசு”