Month: January 2016

வாசிப்பின் ருசி

வாசிப்பதே அற்றுப் போய் விட்டது இந்நாட்களில். அல்லது, வாசிக்கும் மனநிலை வாய்க்கவில்லை என்றும் சொல்லலாம். என்றாலும், இப்புத்தாண்டில் இருந்து குறைத்தது 50 பக்ககங்களாவது வாசித்துவிட வேண்டும் என்பது என் வைராக்கியம். பிரவச/மயான வைராக்கியம் போல் நாளோடித் தேய்ந்து மறையாமல, நாள்தோறும் கூடி வர வேண்டும்.

அவ்வகையில் நேற்று வாங்கிய புத்தகம், மகுடேசுவரனின் “களிநடம்”. என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக நான் உணரும் கவிஞர்களுள் முதல்வர்.
வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை
என்ற அவரது கவிதை என்றென்றைக்கும் என்னைத் தொந்திரவு செய்வது. அவரது முகநூல் பதிவுகள் அவரை மேலும் அணுக்கமாகி இருக்கிறது.

புதின எழுத்தில், ஆசிரியனின் குரல் எல்லாக் கதாபாத்திரங்களின் வழியே ஒலிக்குமென்றாலும் எது அவனது குரல் என்பது தெளிவின்றி இருக்கும். கட்டுரைகள் அப்படியல்ல ஆசிரியருக்கும் நமக்குமான நேரடி உரையாடல்.

இதைப் படித்துமுடித்தவுடன், அவரது மொழித்திறம் புத்தகத்தையும் வாங்கிட வேண்டும்.