கதை

கதம்பம் – 1-12-08

தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் ஒரு முறை ரயிலில் பயனம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் எதிரில் அமர்ந்து இருந்த பெண், அவரிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கத்தில் அவரை மயக்க முயற்சித்தாள். சிறி்தும் லட்சியம் செய்யாமால் படித்துக் கொண்டிருந்தார் தாஸ்.

பொறுமையிழந்த அப்பெண், “இந்தக் கூபேல் நாம ரெண்டு பேர்தான் இருக்கோம். நான் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தப் போறேன். கார்டு வந்தா நீ என்னிடம் தவறாக நடக்கப் பாத்தேன்னு சொல்லுவேன். இதெல்லாம் செய்யாம சும்மா இருக்கனும்னா எனக்குப் பணம் கொடு ” என்று மிரட்டினாள்.

தாஸ் அவளை நிமிர்ந்து பார்த்து தனக்கு காது கேட்காது, வாயும் பேசவராது எனவே அவள் சொல்வதை எழுதித் தரவேண்டுமென சைகையில் கேட்டார். அவளும் உடனே அவரிடமிருந்தே பேப்பரும் பேனாவும் வாங்கி சொன்னதை அப்படியே எழுதிக் கொடுத்தாள்.

எழுதியதை வாங்கிக் கொண்ட தாஸ் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தார். கார்டு வந்ததும் அவரிடம் விபரம் சொல்லி அப்பெண்மணியை ஒப்படைத்தார்.

பாவம் அந்தப் பெண்ணுக்கு தாஸ் ஒரு வழக்கறிஞர் என்பது தெரியாது.

****************************************************************

நேற்று வாரணம் ஆயிரம் படம் பார்த்தேன். எனக்குப் பிடிச்சது. கௌதம் மேனோன் படங்களில் காட்சிப்படுத்துதல் ஒரு அழகியல் சார்ந்து இருக்கும். இப்படமும் அவ்வாறே.

அப்பாவுக்கு அஞ்சலிப் படமா, காதல் படமா அல்லது ஆக்சன் படமான்னு ஒரு தெளிவில்லாம இருப்பதுதான் குறை. டெல்லி எபிசோட் இல்லாமலே படம் நன்றாகத்தான் இருந்திருக்கும்.

சமீரா ரெட்டி தன் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். சூர்யா தன் காதலை சொல்லும் சமயங்களில் (ரயில், வீடு) அதை மறுதலிக்கும் போது இயல்பாகச் செய்திருக்கிறார்.

படத்தின் மிகப் பெரிய குறை ஹாரிஸின் ரீ ரிக்கர்டிங். கடைசி 15 நிமிடங்கள் மிக அபத்தம். சூர்யாவும் அப்பா சூர்யாவும் பேசும் வசனங்களைக் கேட்கவிடாமல் செய்ததோடு ஒரு சங்கு ஊதுகிறார். கொடுமை. பாடலுக்கு ஹாரிஸ் ரீ ரிக்கு வேறு ஒருவர் என்றால் சரியாக இருக்குமோ என்னவோ. சில படங்களில் இளைய ராஜாவின் பின்னனி இசையே படத்திற்கு பலமாக இருக்கும்.

சிலர் இந்தப் படத்தையும் தவமாய்த் தவமிருந்து படத்தையும் ஒப்பிட்டிருந்தனர். இரண்டும் வேறு வேறு தளங்கள். சேரனோடது இடியாப்பம், தேங்காய் பால். மேனனோடது நூடுல்ஸ் சாஸ்.

****************************************************************

வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவல் உங்களுக்குப் பிடித்திருந்தால் ஜே டி க்ரூஸ் எழுதிய “ஆழி சூழ் உலகு” படித்துப் பாருங்கள்.

கடல்புரத்தில் ஒரு குடும்பதில் ஒரு தலைமுறயில் நிகழும் சம்பவங்களைக் கோர்த்தது. ஆழி சூழ் உலகு மூன்று தலை முறைக் கதை. இரு குழுக்களுக்கிடயே இருக்கும் தொழில் போட்டி, விரோதம், குரோதம், கோபம், தவறாகப் புரிந்து கொள்ளுதல், பொய்ப்பஞ்சாயத்து என அது வேறு விதமானது.

நுணுக்கமான பல சித்தரிப்புகளையும், விஸ்தாரமான விவரனைகளும் கொண்டது. ஒரு முழுமையான வாசிப்பனுபவத்துக்கு உத்திரவாதம் இந்நாவல்.

****************************************************************

பொதுவா ஒவ்வொரு பதிவருக்கும் ஒரு தனி எழுத்து நடைஇருக்கும், எழுத்தாளர்களுக்கு இருப்பது போல. அதே போல நம்ம கூடப் பழகுறவங்க, நம்மைச் சுற்றி உள்ளவங்க சிலர் ஒரே வார்த்தையைத் திரும்ப திரும்பச் சொல்லுவாங்க. அது அவங்களுக்கே உரியதாகவும் அவங்களுக்கு ஒரு அடையாளத்தைத் தருவதாகவும் இருக்கும்.

இந்த அடையாளத்தை கூர்மையாக் கவனிச்சு அதையும் ஒரு கவிதையாக்கியிருக்காரு பாருங்க கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன் என்கிற சி.கல்யாணசுந்தரம்.

”ஒரே சிக்கலாப் போச்சு”
என்பார் அய்யனார்
ஆறுமுகத்துடன் பேசும்போது
அடிக்கடி “நெருக்கடி” வந்தது
குமாரசாமி தன்பேச்சை
எப்போதும் “என்ன” என்று முடிப்பார்
“சரியா” என்று ஒப்புதல் கேட்பது
சங்கரியம்மா
சா.கந்தசாமியின் கதாபாத்திரங்கள்
“இது நன்றாக இருக்கிறது”
என்று சொல்கின்றன வெவேறு இடங்களில்
அவரவர் உலகம்
அவரவர் சொற்களில்
என் உலகம் எது என
நீங்கள் சொன்னால்
ரெம்பவும் “நல்லது”

– அந்நியமற்ற நதி தொகுப்பிலிருந்து

***************************************************

ரெண்டு பேரு டீ சாபிடலாம்னு ஒரு கடைக்குச் போறாங்க. டீ வழக்கமான நிறத்தில் இல்லாமல் கறுப்பாக இருக்குது.

நண்பர்களில் ஒருவன் கேட்டன் “ஏங்க பாலே ஊத்தலியா?”
மற்றவன் சொன்னான், ”கடை போர்ட பாக்கலியா நீ?”

வெளியே வந்து போர்டப் பார்த்தா “பாலக்காட்டார் கடை” .

காத்திருந்த காதலி

”சங்கர்”

”சொல்லு கெளரி”

”நல்லா இருக்கியா?”

”ம், நீ எப்படி இருக்க?”

”ஏன் ரெண்டு நாளா கூப்பிடல?”

”கொஞ்சம் வேலை இருந்துச்சு”

”என் ஞாபகம் இருந்தாச் சரி”

”சராசரி காதலி மாதிரியே பேசுர”

”வேற என்ன செய்ய? நானும் நம்ம கல்யாணம்னு எப்பன்னு கேட்டுட்டே இருக்கேன், நீயும் மழுப்பீட்டே இருக்கே”

”புரிஞ்சுக்கோ கெளரி, இப்பத்தான் ஒரு தொழில் அமைஞ்சுருக்கு. கொஞ்சம் சுதாரிச்சுக்கிறேன்”

”என்னவோடா, நீ சொல்லும்போது புரியிற மாரி இருக்கு ஆனா மனசுதாங் கேக்கமாட்டேங்குதுவ” என்றவாறே அலுப்புடன் போனை வைத்தாள்.

கெளரியின் தந்தை பம்ப் தொழில் நிறுவனம் ஒனறை நடத்தி வருகிறார். கெளரி தந்தைக்கு உதவியாக நிர்வாகத்தைக் கவணிக்கிறாள்.

சங்கரின் தந்தை வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர்.

சங்கரும் கெளரியும் பள்ளித் தோழர்கள், ஒரே கல்லுரியில் படித்த நெருக்கம் காதலை இதயத்தில் விதைத்தது.

தங்கள் காதலைத் தெரியப் படுத்தியதும், ஆரம்ப காலகட்ட சிறு எதிர்ப்புக்கு பிறகு பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டதில் இருவருக்கும் மகிழ்ச்சி.

சங்கர்தான் திருமணம் தற்பொழுது வேண்டாம், ஒரு வருடம் கழித்துச் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டிருக்கிறான்.

தன் நண்பன் கார்த்திக்குடன் சேர்ந்து ஆரம்பித்த கேட்டரிங் செர்விஸ் காலூன்ற ஆரம்பித்திருக்கிறது. இந்த சமயத்தில் திருமணம், கவணச்சிதறலுக்கு வழி வகுக்கும் என்பதால் ஒத்திப் போட்டிருக்கிறான்.

மூன்று மாதங்கள் கழித்து ஒரு நாள்,

”கெளரி, நான் கார்த்திக், கொஞ்சம் கங்கா ஹாஸ்பிடல் வர முடியுமா?”

”ஏன்? யாருக்கு என்னாச்சு?”

”இல்ல சங்கருக்குச் சின்ன ஆக்சிடெண்ட். பலமா ஒன்னும் இல்ல. உடனே வா ப்ளீஸ்”

(கார்த்திக் சொன்னதுல பாதி மெய் மீதிப் பொய்)

இந்தக் கதையைப்
பரிசல் காரன்
தொடர்ந்தது இங்கே ,
வெயிலான்
தொடர்ந்தது இங்கே ,
கிரி தொடர்ந்தது இங்கே
ஜெகன் தொடர்ந்தது இங்கே
tbcd தொடர்ந்தது இங்கே
கயல்விழி தொடர்ந்தது இங்கே
மை ப்ரன்ட் தொடர்ந்தது இங்கே     
கோபிநாத்
தொடர்ந்தது  இங்கே
கப்பி தொடர்ந்தது இங்கே

மட்டன் சாப்டுட்டு மலைக்குப் போனவனும் கூடப் போனவனும்.

ஒரு ஞாயிறன்று முருகேசனும், வெங்கடேசனும் மலைக்குப் போவதாக முதல் நாளே ப்ளான்.

ஆனா முருகேசன் வீட்டில் மட்டன் சாப்பிட்டதால, மறுநாள் போகலாம்னு வெங்கடேசங்கிட்ட சொன்னா, அவங் கேக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறான்.

முருகேசனும், வேற வழியில்லாமல் தன்னத்தானே சமாதானப்படுத்திக்கிட்டு (கிடா வெட்டி பொஙக வைக்கறதில்லையா?) சம்மதிச்சுட்டான்.

ரெண்டு பேரும் சாமி கும்புட்டுட்டு கீழ இறங்கும் போது வெங்கடேசங் கேட்டான்

“ஏண்டா மட்டன் சாப்டுட்டு வந்தியே சாமி கும்பிடும் போது குறுகுறுனு இல்லியா?”

“அடப் பாவி அதை நா எப்பவோ மறந்துட்டு திருப்தியா சாமி கும்பிட்டேன், நீ இன்னும் அதத்தான் யோசிச்சிட்டிருந்தியா?”

கொஞ்சம் படிச்சிருந்தா?

ஒரு டி சாப்பிடலாம்னு பர்ர்த்தா ஒரு கடை கூட இல்லை. அப்பத்தான் புத்திக்கு உறைச்சது. ஒரு கடை போட்டால் நல்லா இருக்குமேன்னு.

சின்னதா ஒரு டீக்கடை வைத்தேன். கொஞ்சம் கொஞ்சமா டெவெலப் செஞ்சு ஹோட்டலாக்குனேன். ஹோட்டலுக்கு மொத்தமா சரக்கு வாங்கும் போது மொத்த வியாபாரி பழக்கமானார். இந்த ஏரியாவுக்கு சப் டீலரானேன். அப்புறம் மேலும் மேலும் வளர்ச்சிதான்.

முதல்ல தொடங்குறதுதான் சிரமம், தொடங்கிட்டா போதும், அதுக்கப்புறம், பிஸினஸ் அதுவா உங்களை கொண்டு செலுத்தும். இது தான் நான் வெற்றி பெற்ற ரகசியம்.

சாரி கதை கட் பன்னி பேஸ்ட் செஞ்சப்போ இடம் மாறி விட்டது. கதை ஆரம்பம் கீழே.

கம்ப்யூட்டரை சரி செய்த பின் கிள்ம்பத் தயாரானோம்.
”இருங்க டி குடிச்சுட்டுப் போலாம்” என்றார்.

“சார் தப்பா எடுத்துக்கலனா ஒரு கேள்வி”

“கேளுங்க”

“படிக்கத் தெரியாமலே இவ்வளவு பெரிய தொழிலதிபராகிட்டிங்களே, கொஞ்சம் படிச்சிருந்தீங்கன்னா?”

“கோவில்ல மணி அடிக்கிறவனா இருந்திருப்பேன்”

“சார்!!”

“ஆமா, கோவில்ல மணி அடிக்கிறவனாத்தான் இருந்தேன். புதுசா வந்த பாதிரியார், நம்ம சர்ச்-ல வேலை பார்க்ரவங்க எல்லாம் குறைந்த பட்சம் எழுதப் படிக்கத் தெரிந்த்தவங்களா இருக்கனும்-னு ஒரு உத்திரவு போட்டார்.”

நானும் எவ்வள்வோ சொல்லிப்பார்த்தேன். அவர் கேக்கலை. வெறுத்துப் போயி, “போயா நீயும் உன் வேலையும்னு சொல்லிட்டு வெளிய வந்துட்டேன்”

இப்போ மேலருந்து படிங்க.