யாம் துஞ்சலமே

நம்ம ஆளு ஒருத்தன் பக்கத்தூர் பொண்ணு ஒண்ணை லவ்விட்டாரு. அவங்க வீட்டுல பகல்ல வெளிய வர முடியாது அப்படி வந்தாலும் தோழியோடதான் அனுப்புவாங்க. அதனால தலைவரு நைட்ல போயி அவங்க வீட்டுக் காம்பவுண்ட் கிட்ட இருந்து சிக்னல் காட்டுவாரு, அம்மணி எந்திருச்சு வெளிய வரும், ரெண்டு பேரும் பேசுவாங்க, காதல வளர்த்துவாங்க.

ஒரு நாள் நம்மாள் வரலை. அம்மணி சிக்னல் வரும் வரும்னு காத்திருந்து ஏங்கிருச்சு. அடுத்த நாள் தண்ணி எடுக்கப் போகும்போது நம்மாளு அன்னைக்குன்னு அங்க வழில ஒரு மரத்துக்குப் பின்னாடி ஒளிஞ்சுகிட்டு ஏன் நேத்து வரலைன்னு கேக்குறாரு ஜாடையா.

அதுக்கு தோழி சொல்றா, “ ஹலோ நேத்து நீங்க வரவும் இல்லை சிக்னலும் தரலை. அப்புறம் எப்படி என் ஃப்ரண்டு வருவாள்?”னு

”இல்லைங்க நான் வந்தேன், சிகனல் குடுத்தேனே, உங்க ஃப்ரண்டு தூங்கி இருப்பாங்க”ன்னு சொல்றாரு.

அதுக்கு ஃப்ரண்டு சொல்றா, “யோவ் சும்மா ரீல் விடாதே,  ஊரே தூங்கிருச்சு ஆனா நாங்க ரெண்டு பேரும் தூங்கலை. காதை நல்லாத் தீட்டி வச்சிட்டுக் காத்திருந்தோம். எங்க வீட்டுப் பக்கத்திலதான் எழில்ங்கிற மலை இருக்கு. அதுல மயிலோட கால் பாதம் மாதிரி இருக்கிற இலைகளை உடைய நொச்சி மரம் இருக்கு. அந்த மரத்துல கிளை முழுவதும் மலர்ந்து செழித்திருக்கிற மலர்கள் மாலைல வாடி இரவுல வதங்கிக் கீழே தரைல விழுற சப்தம்கூடக் கேட்டுது எங்களுக்கு. ஆனா உன் சத்தமே கேட்கலை. கன்ஃபர்ம்டா நீ வரலை”

கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே-

எம் இல் அயலது ஏழில் உம்பர்,

மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி

அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த

மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.

– கொல்லான் அழிசி.

நொச்சி இலை, மயில் கால தடம், மயில் பாதம் முதலியவைகளைப் பார்க்காதவங்க இங்கே போய்ப் பாருங்க.

அது மட்டுமல்ல ப்ளாக்கின் சாத்தியக்கூறுகளை யாரும் சரியா உபயோக்கிக்கலைன்னு எஸ்.ரா சொன்னதை இவரு தவறுன்னு நிருவி இருக்கார்.

குறிப்பா இந்தக் கட்டுரை.

One comment

Leave a comment