Month: August 2008

கதம்பம் – 1/09/08

னக்கு வந்த SMS ஒன்னப் பாருங்க. ‘காந்தி எடுத்தது கல் உப்பா? பொடி உப்பா?”. சட்டுனு எப்பவோ படிச்ச ஒரு விஷயம் ஞாபகம் வந்தது.

காந்திஜி ஒரு தடவ இங்கிலாந்து போனப்ப, பிரிட்டிஷ் பிரதமர் அவருக்கு ஒரு காக்டெயில் விருந்து கொடுத்தாரு. காந்திஜிதான் மது அருந்த மாட்டாரே, அதனால அவருக்கு ஒரு தேனீர் தரச்சொன்னாரு. காந்திஜி தேனீர் வேண்டாம் ஒரு டம்ளர் வென்னீர் கொடுங்கன்னு சொன்னாரு. வென்னீர் வந்ததும் ஒரு பொட்டலத்தைப் பிரிச்சு அதுல இருந்ததப் போட்டுக் கலக்கிக் குடிச்சாரு. என்னது அதுன்னு கேட்ட பிரதமருக்கு பதில் சொன்னாரு இது நான் உங்களுக்கெதிராகக் காய்ச்சிய உப்பு. என்ன ஒரு தைரியம் பாருங்க.

இப்ப நீங்களே சொல்லுங்க அவரை இந்த மாதிரி கலாய்க்கிறது தப்பில்லையா?

*********************************************

ன் பிறந்த ஊரான வடகரையில் 80% முஸ்லிம்தாங்க.
ரமலான் சமயத்துல அதிகாலேல 3 மணிக்கு நல்ல ரொட்டியும் சால்னாவும் கிடைக்கும். டேஸ்ட்டும் நல்லா சூப்பரா இருக்கும். மத வேறுபாடு இல்லாமச் சாப்பிட்டோம். அதே மாதிரி மாலை நோன்பு துறக்கும் போது கிடைக்கும் நோன்புக் கஞ்சியும் நன்றாக இருக்கும்.

இப்பல்லாம் முன்னப்போல இல்லப்பா, எல்லாம் மாறிடுச்சுன்னாரு எங்க மாமா. மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு. எங்க தடம் மாறிச்சுன்னு தெரியல. நாமெல்லாம் ஒத்துமையாத்தான் இருக்கோம். நம்ம தலைவர்கள்தான் சரியில்லை.

****************************

வேர்கள்

அவசரத் தந்தி
வியர்வையில் ஊற
ரயிலுக்கு அலைகையில்

ஆங்கோர் சல்லிவேர்

வரிசையில்
எங்கு
நின்றிருந்தாலும்
இயல்பாய் நுழையும்
இழைபோல் ஒன்று

நியாயத்திற்குப் பாயும்
மடையை மறித்துக்
குறுக்கே
கிடக்கும் ஒன்று

பல்கலைக்கழகப் பாதையில் ஒன்று
கர்பக்கிரக மூலையில் ஒன்று
மருத்துவமனையின் மாடியில் ஒன்று

காவல் நிலையச் சுவரில் ஒன்றென

சீமைக் கருவை போல்

அடர்ந்தும் படர்ந்தும்
ஈரம் உறிஞ்சும்
வேர்கள் எங்கும்

நாஞ்சில் நாடன்
,
மண்ணுள்ளிப் பாம்பு கவிதைத் தொகுப்பிலிருந்து

********************************************

ரெண்டுபேரு சண்டை போட்டுட்டு இருப்பதை ஒரு சிறுவன் வேடிக்கை பார்த்துட்டுருக்கான்.

அப்ப அந்த வழியா வந்தவரு கேட்டாரு, ”தம்பி யாரு இவங்க? ஏன் சண்டை போடுறாங்க?”

பையன் சொன்னான், “ ரெண்டு பேரும் என் அப்பா”

“என்னது ரெண்டு பேருமா? எப்படிப்பா யாராவது ஒருத்தர்தானே இருக்க முடியும்?”

”ஆமாங்க அதுக்குத்தான் அடிச்சிக்குறாங்க”

**********************************

சில பதிவுக்கு பின்னுட்டத்தில ROFTL, LOL னு போடுறாங்க. என்னான்னு என்ன மாதிரி புதுசா வந்தவிகளுக்கு சீனியர்(என்ன தமிழ் வார்த்தை?) பதிவர்கள் சொல்லிக் கொடுத்தா நல்லா இருக்கும்.

BRB, OMG,BTW, ATM, nOOb, SOHF, IMHO, IONO, 2G2BT இதெல்லாம் என்னங்க?

அது சரி சீனியர்- தமிழ் ல என்ன வார்த்தை? .

************************************

வேலன் ..என்..’கால ஓட்டத்தில் காணாமல் போனது, என்ற என் பதிவைப் பாருங்கள்.,உங்கள் பெயரை ஒரு தொடரில் கோத்து விட்டு இருக்கிறேன், அப்படீன்னு காஞ்சனா ராதாகிருஷ்ணன் அழைச்சிருக்காங்க.

உறவினர் திருமணத்திற்கு குற்றாலம் போறேங்க. திரும்ப வந்து, வெள்ளிகிழமை எழுதிடலாம்.

Advertisements

நீங்க என் மனைவி நான் உங்க கணவர்

எழுதும்போது வரும் தவறுகள் சில சமயம் சிரிப்பை வரவைத்தாலும், அர்த்தம் மாறும் பொழுது சொல்ல வந்தது அடிபட்டுப் போகிறது.

கமா, முற்றுப் புள்ளி மற்றும் அரைப் புள்ளி முதலியன ஒரு வாக்கியத்தில் வர வேண்டிய இடத்தில் வராவிட்டாலும், வரக்கூடாத இடத்தில் வந்தாலும் அர்த்தம் அனர்த்தமாகிவிடுகிறது.

நான் 10ஆவது படிக்கும்போது, என் தமிழாசிரியர் ராமச்சந்திரன் இதில் மிகக் கடுமையாக இருப்பார். அதன் அத்தியாவசியம் குறித்து அவர் சில உதாரணங்கள் தந்தது இன்னும் மனசிலிருக்கிறது.

கமா இல்லாமல் குழப்பம்.

இரண்டு நண்பர்கள் எதிரெதிர் வீடு, டூர் போலாம்னு முடிவு செய்றாங்க.
ரெண்டு பேருக்குமே குழந்தைகள் உண்டு. பசங்களக் கூட்டீட்டுப் போறதா இல்லை பெற்றோரிடம் விட்டுட்டுப் போறதா என்பதில் குழப்பம்.

கணவரிடமிருந்து சரியான பதில் கிடைக்கதால், கடுப்பான மனைவி, எதிர் வீட்டுக் காரரை அணுகி கேட்டாங்க “ ஏங்க முடிவா யாராரு டூர் போறோம்?”.

அதுக்கு அவரு சொன்னாரு,”நீங்க என் மனைவி நான் உங்க கணவன்”

கமா வைக்கக்கூடாத இடத்தில் வைத்ததால் குழப்பம்.

தினசரியில் தலைப்புச் செய்தி :
விவசாயிகளுக்குக் குமரி, மாவட்ட ஆட்சியர் உத்திரவு.

ழ, ல, ள குழப்பம் தவிர்க்க வேண்டும்.

பழம் சாப்பிட்டாப் பலம் வரும்.

அதிகப் பளு தூக்கினா முதுகெலும்பு பழுதாகிடும்.

பள்ளிக்கூடத்தில் பல்லி அதிகமா இருக்கும் அதுக்காக பல்லிக்கூடம்னு எழுதக் கூடாது.

பாலத்தின் மீது போட்ட தார்ச்சாலை வெயிலுக்கு பாளம் பாளமாக வெடிக்கும்.

சம்பளம் வாங்கினா ’சம்’ பலம் வரும் அதுக்காக சம்பலம்னு எழுத வேண்டாம்.

குதிரைக்குக் குளம்பு இருக்குங்கிறதுக்காக அதக் குழம்பு வைக்கச் சொல்லக்கூடாது.

காள் காள்னு கத்துனாலும் கழுதைக்கு இருப்பது நாலு கால்.

அறையில் பாதி இடம்தான் உங்களுக்கு என்றாலும் நீங்கள் அரைவாசி ஆகமாட்டீர்கள்.

வெள்ளம் வடிந்தபின் கரையெல்லாம் கறை படிந்திருக்கும் அது வெள்ளக் கறை; வெல்லக் கறை அல்ல.

கப்பல் துறைமுகம் வந்ததும்தான் துரை முகத்தில் களை.

காலையில் எழுந்து பல் விளக்க வேண்டும், விலக்க கூடாத பழக்கமிது.

ஆங்கில வார்த்தைகளைத் தமிழில் எழுதும் போது

பக்கத்து வீட்டு ‘ஆன்ட்டி’ – ஆண்டி யாகும் போது பாவமா இருக்கு.

நீங்களும் பின்னுட்டத்தில் இரண்டு வாக்கியங்கள் எழுதுங்கள்.

பரிசலும், கோவியும் பின்னே ஞானும்.

விசித்திரமானது பரிசல் மனம். அவியல் ஆன்மிகம் அனைத்துப் பொருள் உரைத்தாலும் மிகச் சரியாக பரிசல் மனம் என்பது எப்படி செயல்படுகின்றது என்பதற்கான தெளிவுரை எவருமே இதுவரை எழுதவில்லை.

ஒரு நாளைக்கு பரிசல் மனத்தில் தோன்றும் எண்ணங்கள் சுமார் 40,000 வரை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இவை சனி, ஞாயிறு வேறுபடலாம்.

பரிசல் மனதில் தோன்றும் பதிவுகளில் முதன்மையான இருவகைகளில் ஒன்று நல்ல பதிவுகள், மற்றது கும்மிப் பதிவுகள், இதைத் தவிர்த்து மூன்றாவதாக ஒருவகை பதிவுகள் உண்டு அவை விடைபெறுகிறேன் பதிவுகள் என்ற வகையில் வரும்.

பரிசலுக்கு பதிவுகள் உற்பத்தி தன்னிச்சையான செயல் போன்றது தான். தட்டச்சு செய்யும் போது ஒவ்வொரு விரலையும் சிந்தித்து சிந்துத்து அழுத்துவதில்லை. பழக்கத்தின் காரணமாக நினைக்க நினைக்க அடித்துக் கொண்டே இருக்கும், நமது விரல் செயல்படுகிறது என்ற உணர்வே இல்லாது தட்டச்சு செய்வது போன்றது தான் பரிசல் மனதில் தோன்றும் பதிவுகள். அவை அனிச்சையானது. அடுத்த வினாடியில் செய்ய வேண்டியது எதுவுமில்லை என்றாலும் சிந்தனைகளில் எதாவது பதிவு ஓடிக் கொண்டே இருக்கும்,

புதுப்பதிவருக்கு பின்னுட்டம் வரும் வரை பதிவுகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் அதன் பிறகு அலை அலையாய் பதிவுகள் ஏற்பட்டு கும்மி வளர்ச்சியின் விதையாக மாறிவிடும். ஆரம்பத்தில் தேடலாக தொடங்கும் பதிவுகள் பிறகு மொக்கையாக மாறிவிடும்.

பரிசலால் சிந்திக்கக் கூடிய (அதாவது சுய சிந்தனை) நிலையில் அவர் மனதில் மேற்சொன்ன பகுப்பில் (நல்ல / கெட்ட / தேவையற்ற) பதிவுகள் சுழல ஆரம்பிக்கின்றன. இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே அவருக்குத் தோன்றும் பதிவுகள் சுமார் 50 இருக்கும். ஒரு இரண்டு நிமிடம் எதுவுமே செய்யாமல் அவர் மன ஓட்டத்தை மட்டுமே கவனித்தால் அவர் எப்படியெல்லாம் பதிவுகள் போடுகிறார் என்பது பற்றி அறிவீர்கள், அந்த இரண்டு நிமிடத்தில் தோன்றிய பதிவுகளில் 90 விழுக்காடு நல்ல பதிவுகளாகவே இருக்கும்.

பரிசலுக்கு பதிவு எழுதும் அயற்சியைவிட கும்மிப் பின்னுட்டமிடும் அயற்சியே சோர்வை மிகுதியாகத் தரும். இந்த சோர்வின் மூல காரணிகளே அதிகப் கும்மிதான். நல்ல பதிவுகள் மனச்சோர்வை ஏற்படுத்தாது மாறக உற்சாகம் தரும், விடைபெறுகிறேன் வகைப் பதிவுகள் மனச்சோர்வை ஏற்படுத்தும். அவர் எழுதியதில் 10% கும்மிப் பதிவுகளும், 80% நல்ல பதிவுகளும் இருக்கிறது.

அவரது மூளையில்(?) இருந்துதான் பதிவுகளுக்கான சக்திகள் செலவிடப்படுகின்றன. மூளை தொடர்ந்து இயங்கும் போது தேவையற்ற பதிவுகளுக்கான சக்தி குறைந்து மனச்சோர்வாகிறது. உடல் நலம் மனநலத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதால் உடல்சோர்வும் ஏற்படுகிறது. தகுந்த பயிற்சியின் மூலம் தேவையற்ற பதிவுகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். வெற்றிப் பதிவாளர்கள் அனைவருமே இலக்கு ஒன்றின் மீதான குறியில் ஒருமுகமாகி தேவையற்ற பதிவுகளைக் குறைத்துக் கொண்டவர்கள் தானே.

இன்னும் எழுதலாம் படிப்பவர்கள் சோர்ந்துவிடுவார்கள் ! – இது இங்கு நான் எழுதிய கும்மிப் பதிவு! 🙂

டிஸ்கி : ஒன்னும் புரியலைன்னா கோவி எழுதிய இந்தப் பதிவு பாருங்க. பரிசல் எழுதுன(?) இந்தப் பதிவையும் பாருங்க

கதம்பம் – 25/08/08

முதல் முறையாகத் தொடுத்த கதம்பத்திற்குப் பாராட்டுத் தெரிவித்த உலகெங்கிலுமுள்ள லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு நன்றி. (சரி.. சரி.. மிகைபடச் சொல்வதுதானே தமிழர் பழக்கம்.)

*******************************************************

சென்ற வாரம், என் மகளின் பிறந்த தினத்திற்கு வாழ்த்துச் சொல்லிய அனைவருக்கும் நன்றி.

கர்ப்பம் தரித்திருப்பதை மனைவி தெரியப்படுத்தியபோதிருந்த கலவையான மனநிலை, குழந்தையை முதல்முதலில் கையில் வாங்கியபோதிருந்த பரவச மனநிலை, அவள் வளர்ந்து இன்று பருவ வயதினளாய் கல்லூரி செல்லும் காலம் வரையான நாட்களை அசை போட்டுக் கொண்டிருந்தபோது வந்ததிந்த மடல். அனுப்பியவர் அனுஜன்யா

வேலன்,

பாரதிக்கு எங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள். மென்மேலும் பல சிறப்புகள் பெறட்டும் அவள்.

தேவதச்சன் கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது:

நாற்பது வயதில் நீ நுழையும்போது உன்
ஒப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன
சட்டையை தொளதொளவென்றோ
இறுக்கமாகவோ போடுகிறாய்
தலைமுடியை நீளமாகவோ
குறுகவோ தரிக்கிறாய்
உன்னிடமிருந்து பறந்து சென்ற
இருபது வயது என்னும் மயில்
உன் மகளின் தோள்மீது
தோகை விரித்தாடுவதை
தொலைவிலிருந்து பார்க்கிறாய்
காலியான கிளைகளில்
மெல்ல நிரம்புகின்றன
அஸ்தமனங்கள், சூர்யோதயங்கள்
மற்றும் அன்பின் பதட்டம்

அனுஜன்யா

நன்றி, புரிதலுக்கும், பகிர்தலுக்கும்.

கையில் அள்ளிய நீர் விரலிடுக்குகளில் வழிந்து விடுவதைப் போல் காலம் நம் கண் முன்னே கரைந்தோடி விடுகிறதல்லவா?

********************************************

சிவகாசியில் ஒருவரையொருவர் அண்ணாச்சி என்றழைப்பதுதான் வழக்கம். இந்த உரையாடலைப் பாருங்கள், இரண்டு கணக்குப்பிள்ளைகள் பேசுகிறார்கள்.

அண்ணாச்சி வணக்கம் வேல் பிரஸ்ல இருந்து பேசுறேன்.

வணக்கம் அண்ணாச்சி சொல்லுங்க.

அண்ணாச்சி இருக்காங்களா? எங்க அண்ணாச்சி பேசனும்னாங்க.

அண்ணாச்சி வெளியூர்ல இருக்காங்க.

சரிங்க அண்ணாச்சி, அண்ணாச்சி வந்தா எங்க அண்ணாச்சிக்கு போன் போடச்சொல்லுங்க.

சரிங்க அண்ணாச்சி.

நல்லதுங்க அண்ணாச்சி.

********************************************************

முகம் திருத்துதல்

மேல் பெர்த்தில் இருந்து
இறக்கி விட்டதற்காக
அம்மாவிடம் கோபித்துக் கொண்டு
முகத்தைத் திருப்பிப் படுத்துக் கொண்டவள்
ஐந்து நிமிஷத்தில் அப்படியே
தூங்கியும் விட்டாள்.
கோபமாகத் தூங்குகிற மகளை
கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்த
அவள் அம்மா அப்புறம்
போர்வையை ஒழுங்கு செய்வது போல்
மகளின் முகத்தை சரி செய்து விட்டாள்.
தூக்கம் கலையாமல்
பட்டுப் பாவாடையை கழற்றி விட்டு
பழைய கவுனை அணிவிப்பது போல
அத்தனை எளிதாக.

-முகுந்த் நாகராஜன்.

இந்தக் கவிதை உங்களுக்குப் பிடித்திருந்தால் இவரின் மற்ற கவிதைகளையும் ரசிக்கலாம் இங்கே

இந்த வலைக்கு சுட்டி தந்த வெயிலானுக்கு நன்றி

நகைச்சுவையுங்க – 3

காட்டுக்குள் இரண்டு நண்ப்ர்கள் நடந்து போய்கொண்டிருந்தார்கள். திடீரென்று புலி உறுமும் சத்தம் கேட்கவும், அவசரமாக் ஓடத் தயாராகின்றனர். தன் ஷீ லேசை சரி செய்து கொண்டு ஓடுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தவனைப் பார்த்து மற்றவன் கேட்டான்,

”நண்பா, அந்தப் புலியைவிட வேகமா ஓடிட முடியும்னு நீ நம்புறியா?”

அதற்கு, சிரித்துக் கொண்டே அவன் சொன்னான், “ நான் புலியைவிட வேகமாக ஓட வேண்டியதில்லை, உன்னைவிட வேகமா ஓடினாப் போதும்!”

மனைவி : ஏங்க, என்கிட்ட உங்களுக்குப் ரெம்பப் பிடிச்சது என் அழகா? அன்பான மனமா? பணிவான குணமா?

கணவன் : ” உன்னோட இந்தக் காமெடிதாம்மா.”

தன் கம்பெனியைச் சுத்திப் பார்க்க முதலாளி ரவுண்ட்ஸ் வந்துகிட்டிருந்த நேரம். ஒருத்தன் மட்டும் வேலையே செய்யாமல், சுவர் மேல் சாய்ந்து பராக் பார்த்துக் கொண்டிருந்த்தான்.

மெதுவாக அவனிடம் போய் கனிவாகக் கேட்டார், “தம்பி உனக்கு மாசம் எவ்வளவு சம்பளம்?”

“அவன் ரெம்ப சாதாரணமாகவே பேசினான், “2500 ரூபாய் , ஏன் கேக்குறீங்க”

அதற்குப் பதில் கூடத் தராமல் தன் பர்ஸிலிருந்து 5000 ரூபாயைக் கொடுத்து
” நான் இங்கே வேலை செய்யறதுக்குத்தான் சம்பளம் தர்றேன். இப்படி சும்மா நிக்கறதுக்கு இல்லை. இந்தா இரண்டு மாசச் சம்பளம். எடுத்துகிட்டுப் போயிடு! இனிமே வரவேண்டாம்”னு துரத்தீட்டார்.

அவனும் அதவாங்கீட்டு கூலா வெளிய போயிட்டான்.

அதுக்கப்புறம் அங்கிருந்த மற்ற உழியர்களப் பார்த்து, “ இப்படிப்பட்டவர்களுக்கு இனிமே இதுதான் கதி”னு கடுமையா எச்சரிச்ச முதலாளி, “ அந்த ராஸ்கல் எந்த டிபார்ட்மெண்ட்?”னு கேட்டார்.

கூட்டத்திலிருந்து ஒரு குரல் “அவன் கூரியர் பையன் சார்!”

டிஸ்கி : என் மகளின் activity நோட்டிலிருந்து எடுக்கப்பட்டது.

கதம்பம் – 17/08/08

புளிக்காய்ச்சல்
பூம்பருப்பு (கடலப் பருப்பு வேகவைத்துத் தாளித்தது)
கோஸ் பொரியல்
புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு
உருளைக்கிழங்கு பொரியல்.
இனிப்பு பூந்தி
சிப்ஸ்
அப்பளம்
வடை
சாதம்
பருப்பு + நெய்
சாம்பார்
ரசம்
பாயசம்
மோர்

இதெல்லாம் கல்யாணச் சாப்பாடு இல்லீங்க. நேற்று மதுரையில் ஒரு குடும்பத்தில் 10 ஆம் நாள் காரியத்திற்குப் போயிருந்தபோது நான் சாப்பிட்டதுதான்.

இப்படியா துக்கம் கொண்டாடு(!)வது? இறந்தவர் 65 வயதுப் பெண்மணி. அவரது நினவை யாரும் போற்றியது போலத் தெரியவில்லை. பேசியதெல்லாம் அரசியலும், கிரிக்கெட்டும்தான். இதில் சாப்பாட்டில் குறை சொன்னதுதான் மனதை நெருடுகிறது.

**********************************************

மதுரைக்குப் போகும்போது ரன் படமும், திரும்பி வருபோது வின்னர் படமும் பார்த்தேன். முன்னதில் விவேக் காமெடி, பின்னதில் வடிவேல்.

இருவர் காமெடியையும் ஒப்பிட்டால் எனக்குத் தோன்றியது இதுதான்.

விவேக் காமெடிக்காக பிறரை இழிவுபடுத்தத் தயங்குவதில்லை. அண்டங்காக்கா, தொழுவத்தில் கட்ட வேண்டியது என்று கொஞ்சம்கூட மரியாதையே இல்லாமல் அப்பாவையே நக்கலடிக்கிறார். மற்றவர்களையும் அவ்வாறே – (கிராஜுவேட் பாடியக் கரக்ட் பண்ணுறியா?). எல்லோரையையும் ஏளனமாகத்தான் அழக்கிறார்.

ஆனால், வடிவேல் (கைப்புள்ள) தனனை இழிவுபடுத்திக் கொண்டு நம்மை நகைக்க வைக்கிறார். ஒவ்வொரு முறையும் ஏதாவது இக்கட்டில் மாட்டிக் கொண்டு நம்மை சிரிக்க வைக்கிறார். மற்றவர்கள்தான் அவரை ஏளனமாக அழைக்கிறார்கள்.

டனால் தங்கவேலு திரைப்படத்தில்கூட யாரையும் இழிவுபடுத்தி அழைக்க மாட்டாராம். அவரது காமெடியெல்லாம் மிகவும் டீசெண்டாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தது ‘எழுத்தாளர் பைரவன்’ (கல்யாணப்பரிசு) காமெடிதான்.

இப்ப இருப்பதில் வடிவேலுதான் தாக்குப் பிடிக்கிறார். விவேக்கின் காமெடி ட்ராக்குகளை எழுதிய பிரசன்னக்குமார் இறந்துவிட்டார். வேறு நல்ல ஆள் கிடைக்கும்வரை விவேக் நிலை கவலைதான்.

*****************************************************

தசாவதாரத்திற்குமுன் சிவாஜி 9 வேடங்களில் நடித்த நவராத்திரிதான் ஒருவர் அதிகபட்ச வேடங்களில் நடித்தது என்று நினைத்திருந்தேன், இந்தச் செய்தியைக் ‘காலச் சுவடு’ பத்திரிக்கையில் படிக்கும்வரை. (எழுதியவர் – எஸ்.சட்டநாதன், நெல்லை)

தமிழில்
1941-ல் ‘ஆர்யமாலா’ பி யூ சின்னப்பா 10 வேடங்கள்
1950-ல் ‘திகம்பர சாமியார்’ எம் என் நம்பியார் 12 வேடங்கள்

ஹாலிவுட்டில்
1913 ‘குயின் விக்டோரியா’ ரோல்ப் லெஸ்லீ 27 வேடங்கள்
1915 பர்த் ஆஃப் எ நேஷன்’ ஜோஸப் ஹான்பெர்ரி 14 வேடங்கள்
1929 ‘ஒன்லி மீ’ லுபினோ லேன் 24 வேடங்கள்
1964 ‘ நோ கொஸ்டின்ஸ் ஒன் சாட்டர்டே ராபர்ட் ஹிர்ஷ் 12 வேடங்கள்.

டோண்டு, சுப்பையா போன்ற இளைஞர்கள் மேலதிகத் தகவல்கள் தருவார்களா?

***********************************************

ஏனென்றால், Betrayal can only happen if you are in love என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. காதலை விட வேறு எந்த இடத்திலும் துரோகத்தின் வலிமை அவ்வளவு தீவிரமாகவும், கடுமையாகவும் இருப்பதில்லை. அதனால்தான் பெரும்பாலான கொலைகள் காதலை முன்வைத்து நடக்கின்றன.

படத்தில் நடக்கும் அத்தனை கொலைகளுக்கும் காரணமாக இருப்பது ஒரு பெண்ணின் வார்த்தைகள்தான். எக்ஸ் கவுன்ஸிலராக இருக்கும் கனகுவின் அண்ணனுக்கு அவர் எதிர்பார்த்த படி கட்சித் தலைவர் பதவி கிடைக்காததால் மிகவும் நொந்து போய்க் கிடக்கிறார். அப்போது அவர் மனைவி “இவரும் உக்கார்ந்து கிட்டு இருக்கார் பதவி வரும் வரும்னுட்டு; எங்கே வந்துது? கோவில் திருவிழா அன்னிக்குக் கூட வெளியே தலை காட்ட முடியாம பொம்பளை மாதிரி மொட்ட மாடில போய் ஒளிஞ்சுக் கிட்டு இருந்தார் ” என்று பலவாறாகப் பேசி அவமானப் படுத்துகிறாள். இந்தப் பேச்சுதான் கனகுவை உசுப்பி விடுகிறது. ” வீட்டில் பெண்கள் கூட நம்மை மதிக்க மாட்டேன் என்கிறார்கள்; இனிமேல் வாழ்ந்து என்ன பயன்? ” என்று அழகரிடம் சொல்லி அவனையும் பரமனையும் தங்கள் எதிரியைத் தீர்த்துக் கட்டத் தூண்டிவிடுகிறான். இரண்டு சாதாரண இளைஞர்கள் கொலைகாரர்களாக மாறி அந்தக் கொலை இறுதியில் கொல்லப் படுவதற்கு எக்ஸ் கவுன்ஸிலரின் மனைவியின் ஒரே ஒரு பேச்சுதான் காரணமாய் அமைகிறது.

சுப்பிரமணியபுரம் விமர்சனம் – சாரு நிவேதிதா

வெள்ளிக்கிழமையா உம்புள்ளய இட்டா

ஒரு தபா, ராம கிருஷ்ணரான்ட அஞசலயும் அவ பையனும் போனாங்க.

அஞ்சல சொல்லிச்சி, “சாமீ எம்புள்ள அஸ்கா தின்னுக்கினேக்கீரான். எம்மாஞ் சொல்லியிம் தின்னுக்கினேக்கீரான். கொடலு வெந்துபூடுமாமே அல்லாரும் சொல்லிக்கினாங்க. கரீக்ட் பண்ணு சாமி” ச்சு

ராமகிருஷ்ணர், அந்தப் பையன ஒரு லுக் விட்டுக்கினாரு. இன்னாவோ ரோசிச்சாரு. அப்பாலிக்கா, “ வெள்ளிக்கிழமையா உம்புள்ளய இட்டா” னாரு.

வெள்ளிகிழமை போச்சொல்ல, “ அஸ்கா தின்னுகினீன்னா கொடலு வெந்துபூடும், கைகால் வெளங்காதுபூடும், வயசாச்சொல்ல பேஜாராப்பூடும்” னாரு.

அஞ்சல கேட்டுச்சி, “ஏஞ்சாமீ, இத்த அன்னிக்கெ சொல்லீருக்லாம்ல, இன்னாத்துக்கு இன்னொரு தபா வரச்சொல்லி எங்கள வீனா அலய வுட்டே?”

அதுக்கு ராமகிருஷ்ணரு, “அஞ்சலை எனிக்கே அஸ்கா திங்கிற பயக்கம் கீரப்ப, நா இன்னான்னு உம்புள்ளையாண்ட சொல்லுவேன். நான் மொதோ ஸ்டாப் பண்ணிக்கினு அப்பால அவனுக்கு அட்வைஸ் வுட்டுகினே” னாரு

டிஸ்கி : இந்தக் கதையச் சொல்ல இப்ப இன்னா அவசரம்?

தமிழ்மண நிர்வாகிகளுக்கு ஒரு திறந்த மடல்

அன்புள்ள தமிழ்மண நிர்வாகிகளுக்கு,

வலையுலகில் தற்போதைய நிலவரம் உங்களுக்குத் தெரியுமா?

கொஞ்ச காலம் தசாவதாரம், குசேலன் என்று சூடான பதிவுகளாக வந்து கொண்டிருந்தது. ஆனால் தற்பொழுது இவர் அவருக்கு எழுதிய பகிரங்கக் கடிதம் தான் வலையுலகின் லேட்டஸ்ட்.

அடிக்கடி நேருக்கு நேர் அல்லது தொலைபேசியில் அல்லது சாட்டில் பேசிக்கொள்ளுபவர்களே இந்த வேலையைச் செய்வதுதான் உச்சகட்டக் கொடுமை.

இன்னும் கீழ்க்கண்ட கடிதங்கள் வருமுன் இதற்கு ஒரு தடா போட வேண்டியது உங்கள் தலையாயக் கடமை.

தங்கமணிக்கு ரங்கமணி
வைரமுத்துவுக்குக் கலைஞர்.
ஓட்டுனருக்கு நடத்துனர் .
கம்பெளண்டருக்கு டாக்டர்.
உதவி ஆசிரியருக்குத் தலைமை ஆசிரியர்.
வாகன ஓட்டுனருக்கு உரிமையாளர்
மாணவருக்கு ஆசிரியர்.
சர்வருக்கு சரக்கு மாஸ்டர்.
சித்தாளுக்குக் கொத்தனார்.
சால்னா விறபவருக்கு சரக்கு விறபவர்.
பின்னுட்டமிடுபவருக்கு பதிவர்
குடியிருப்பவருக்கு வீட்டு உரிமையாளர்

ஆகவே தமிழ்மண நிர்வாகிகளே, இந்தப் போக்கைத் தடை செய்யுங்கள். அல்லது குறந்தபட்சம், தமிழ்மண முகப்பில் ஒரு பகுதியை இதற்கென்று ஒதுக்குங்கள். பதிவுகளை வகைப் படு்த்துவதில் திறந்த மடல் என்ற வகையையும் உருவாக்குங்கள். அந்தப் பகுதிக்கே நாங்கள் போகமால் தப்பிக்க இது உதவும். தயவு செய்து சூடனா இடுகையில் இந்தப் பதிவுகள் வராமல் பார்த்துக் கொள்வது தமிழ் பதிவுலகத்திற்கு நீங்கள் செய்யும் சிறந்த சேவையாகப் போற்றப் படும்.

இப்படிக்கு,

11-08-08 மாலை வரை நன்றாக இருந்தவன்.

குறிப்பு : விக்னேஸ்வரன் என்ற பதிவ்ரின் பின்னுட்டங்களத் திரட்ட வேண்டாம்.
அவரிடம் இந்தவகைப் பதிவுகளுக்கான நிரந்தர பின்னுட்ட டெம்ப்லேட்டுகள் அதிகமுள்ளன. அவைகளைக் கொண்டு சரமாரியாக எல்லோருக்கும் பின்னூட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்மணத்திலிருந்தே அவரைத் தூக்குவது நல்லது.

குறிப்பு 2 : இவவகைப் பதிவுகளிட்டவர்களை குறித்துவைத்துக் கொண்டு எதிர்காலத்தில் அவர்களை நட்சத்திரப் பதிவர்களாக ஆக்காமல் எங்களக் காக்க வேண்டுகிறோம்.

டிஸ்கி : லதானந்த், பரிசல், வால்பையன், நந்து f/o நிலா, ஜெகதீசன், நமக்கல் சிபி, தமிழ்ப் பிரியன் முதலானவர்களை எந்த விதத்திலும் இந்தப் பதிவு நேரடியாகவோ மறைமுகவாகவோ குறிக்கவில்லை.

டிஸ்கி 2: கவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டுப் புகைப் படங்களையும் வண்ணங்களையும் தவிர்த்திருக்கிறேன்

விளையாட்டாப் போச்சு

சின்ன வயசுல, விளையாட்டுங்கிறது சீசனுக்கு சீசன் மாறும். ஓரு சமயம் பம்பரம் ஜோராச் சுத்தும். அப்புறம் தூக்குத் தூக்கி, மரமேறின்னு வேற வேற விதமா மாறிவிடும். ஆனாலும் பால்யத்தை சுவராஸ்யமாக்கி பரவசமாக்கியதிலும், தோழமை உணர்வு ஊறச் செய்ததிலும் விளையாட்டுகளின் பங்கு முக்கியமானது.

அதிலும் என்னைப் போல் லைன் வீடுகளில் வசித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். என்ன சண்டையாயிருந்தாலும் பெரியவர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள். நீங்க இன்னைக்கு கா விடுவீங்க நாளைக்குப் பழம் விடுவீங்க நாங்க அப்படியெல்லாம் இருக்க முடியாதுன்னு சொல்லுவாங்க. வேற வழியில்லமல் சண்டை போட்டவனுடன் சேர்ந்து விளையாட வேண்டிய கட்டாயம். கட்டாய நெருக்கம் வேறுபாடுகளை மறக்கச் செய்யும். இப்ப அது மாதிரியெல்லாம் பாக்க முடியாது. பள்ளிகளில் கூட எனக்கு, என்னோடதுங்கற மனப்பான்மை பெருகிவிட்டது. விட்டுக் கொடுப்பது சுத்தமாக இல்லை. இந்தச் சிறுவர்கள் நாளை பெரியவர்கள் ஆகும்போது என்ன விதமான் விளைவுகள் வருமென்று யோசித்தால் பயமாக இருக்கிறது.

சமீபத்தில் எஸ் ராமகிருஷ்ணன் கட்டுரை ஒன்றில் தனது மகனுக்கு கழுதை ஒன்றைக் காட்ட வேண்டும் என்று அலைந்ததை எழுதிருக்கிறார். அது போல எதிர்காலத்தில் நமது குழந்தைகள் இந்த விளையாட்டுக்களைப் பற்றிப் படிக்கத்தான் முடியும் போலிருக்கிறது. இந்த விளையாடுக்களெல்லாம் நான் விளையாடியவை. பெயர்கள் இடத்தப் பொறுத்து மாறுபடலாம்.

பம்பரம்

பம்பர விளையாட்டில் அலர்ட்டா இருப்பது முக்கியம். 1 2 3 சொன்ன உடனே கோஸ் எடுக்க வேண்டும் (பம்பரத்தை தரையில் சுற்றவிட்டு சாட்டையால் கோதி எடுத்து கையில் பிடிப்பது). கடைசியில் பிடிப்பவரின் பம்பரம் வட்டத்துள் வைக்கப்பட்டு மற்றவர்களின் பம்பரத்தால் குத்திக் குதறப்படும். குத்துவதென்பது நேரடியாக அல்ல. பம்பரத்தை சாட்டை மூலம் சுழலவிட்டுத்தான். இதற்கு ஆக்கர் வைத்தல் என்று சொல்லுவோம்.

குறிபார்த்து பம்பரத்தின் தலையில் குத்துவதுதான் சவால். பெரியண்ணாகளுடன் ஆட நேர்ந்தால் நம் பம்பரம் இரண்டாகக் கூட உடைந்து விடும். குத்தும்போது உள்ளே இருக்கும் பம்பரம் வெளியே வந்தால், மீண்டும் கோஸ் எடுக்க வேண்டும். யார் கடைசியோ அவர்கள் பம்பரம் உள்ளே.

பம்பரத்தின் வடிவமும் ஊருக்கு ஊர் மாறுபடும். சில சமயங்களில் வடிவங்களுக்கு ஒன்று என்றவிதத்திலும் வைத்திருப்போம். சாட்டை கையில் இருந்து உருவாமல் இருக்க சாட்டையின் இறுதியில் முடிச்சுப் போட்டு சோடா பாட்டில் மூடியை(எங்க ஊர்ல – காளி மார்க் அல்லது (அதோட போலி) யாளி மார்க்) தட்டையக்கி அதில் ஒரு ஓட்டை போட்டு மீண்டும் ஒரு முடிச்சுப் போட்டு வைத்திருப்போம். எங்க ஊர்ல பாலகிருஷ்ணன்னு ஒருத்தன் ஹார்லிக்ஸ் பாட்டில் மூடியப் போட்டு வைத்திருப்பான்.

பம்பரம் உடைந்தாலோ, அல்லது அதிக ஆக்கர் வாங்கி அம்மைத் தழும்பு போல ஆனாலோ வருத்தப் பட மாட்டோம். தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தது, விளையாட்டுகள் அதை வளர்த்தன.

கில்லி (தாண்டல்)

இந்த விளையாட்டு தென் மாவட்டங்களில் செல்லாங்குச்சி என்றழைக்கப் படுகிறது. சில இடங்களில் கிட்டிப்புள் என்றழைக்கப்படுகிறது. இந்த விளையாட்டு குழு விளையாட்டு என்பதால் சகோதரத்துவத்தை வளர்த்தது.

இதைப் பற்றிய பதிவு ஏற்கனெவே நா ராதா கிருஷ்ணன் என்பவரால் எழுதப் பட்டிருக்கிறது.

சுட்டி

நுங்கு வண்டி பற்றியும் எழுதியிருக்கிறார்.

தூக்குத்தூக்கி

எல்லோர் கையிலும் 3 முதல் 4 அடி நீளமுள்ள குச்சி வேண்டும். சாட் பூட் த்ரீ போட்டு அவுட்டானவனை ஒரு வட்டம் வரைந்து அதனுள்ளே நிற்க வைப்போம். அவனது இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கச் செய்து அவனது கட்டை விரல மற்றும் ஆள்காட்டி விரல்களுக்கிடயில் அவனது குச்சியைக் கொடுத்து நிற்க வைப்போம். எல்லோரும் தங்களது குச்சியின் நுனி எதாவது ஒரு கல்லின் மீது படுமாறு இருக்க வேண்டும். யாரோ ஒருவர் அவனது குச்சியை தனது குச்சியால் வெகு தூரம் போய் விழுமாறு, அவன் தலைக்கும் குச்சிக்கும் இடையில் தனது குச்சியைக் கொடுத்து நெம்பி விடுவான் . அவ்வாறு செய்து விட்டு அவனும் உடனே ஓடிப்போய் ஒரு கல்லின் மீது வைத்துக் கொள்ளவேண்டும். யார் குச்சி கல்லைத் தொடாமல் இருக்கிறதோ அவர்களைத்தொட்டால் அவன் அவுட்.

அவன் ஒருவனைத் தொட ஓடும் பொழுது அவனை விடப் பெரியவன் அவனுக்குமுன் வந்து அவனைத் திசை திருப்புவான். அதன் மூலம் துரத்தப் படுபவன் தப்பிக்க வாய்ப்பிருக்கும். கீழே விழுந்த குச்சியை எவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் கொண்டு செல்வர். குச்சியைக் கையால் தொடாமல் தங்களது குச்சியால்தான் தொட வேண்டும் என்பது முக்கியம். அதற்குள் யாராவது சிக்கி விட்டால் அவர்கள் குச்சி அங்கே வைக்கப் பட்டு விளயாட்டு மீண்டும் தொடரும்.

சென்ற தூரத்தைக் கொண்டு பெரியவர்கள் முடித்துக் கொள்ளலாமா என்று அவனைக் கேட்பார்கள். சரி என்றால் அங்கிருந்து வட்டம் இருக்குமிடம் வரை நொண்டி அடிக்க வேண்டும். கூட்டமாக மற்றவர்கள் ஓடுகாலி நாய் நொண்டி நாய் என்று பாடிக் கொண்டே வருவார்கள். நாய் என்று திட்டி விட்டார்களே என்றில்லாமல் மீண்டும் அந்த விளையாட்டுத் தொடரும்.

மரமேறிக் குரங்கு

ஏதாவது வேப்ப மரம் அல்லது புளிய மரத்தில்தான் இந்த விளையாட்டை விளையாடுவோம். சாட் பூட் த்ரீயில் அவுட்டானவனை மரத்தின் கீழே ஒரு வட்டம் போட்டு அதனுள்ளே ஒரு குச்சி வைத்து அதை வட்டத்துக்கு வெளியே போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லி விடுவர். மரதிலிருபவர் தரையிலிருக்கும்போது கீழிருப்பவனால், தொடப்பட்டால் அவுட்.

அவன் ஒரு திசையில் ஓடி அவனை அவுட்டாக்க முயற்சித்தால், வேறு ஒருவன் கீழிறங்கி அந்தக் குச்சியை வெகு தூரம் வீசி எறிந்து விடுவான். அவன் ஓடிப்போய் எடுத்து வருமுன் மற்றவர் கீழிறங்கி அவனுக்குப் பழிப்புக் காட்டுவர். அவனை அலைய வைப்பதும் பிடி கொடுக்காமல் மரத்திலிருந்து தொங்கியவாறே சாகசம் செய்வதும், உடலுக்கும் மனதிற்கும் நல்ல பயிற்சி.

இதைப்போல மற்றவர்களும் தொடரலாம். அதற்கு இங்கே ஒரு இணைப்பு மட்டும் கொடுங்கள்.