எனக்கு கேட்கத்தான் தெரியும்

01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எனது யார் இந்த வடகரை வேலன் பதிவைப் படித்தால் தெரியும்

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

ஞாபகம் இல்லை; பால்யத்தில் அழுதது கணக்கில்லையெனில்.

எனக்கு நல்ல நண்பனாகவும். ஆசானாகவும், சாய்ந்துகொள்ளத் தன்னிருதோள் தந்தவனாகவும், இடித்துரைக்கும் மந்திரியாகவும் என்னை வழிநடத்திய என் தந்தை இறந்தபோதுகூட நான அழவில்லை.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும்; நான் பணம் கொடுக்க வேண்டியவர்களுக்கு.

செக்கில் கையெழுத்துப் போடுவதைத் தவிர தற்பொழுது ஏதும் எழுதுவதில்லை.

4).பிடித்த மதிய உணவு என்ன?

சைவம் : கடைந்த பாசிப்பயறு, கீரைப் பொரியல், மிளகுரசம், எருமைத் தயிர்.

அசைவம் : உளுந்தம்பருப்புச் சாப்பாடு, கறிக்குழம்பு

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

சாத்தியமில்லை. அவரைப் பத்தித் தெரியணும். அலைவரிசை ஒத்துவரணும்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா….அருவியில் குளிக்க பிடிக்குமா?

குற்றாலத்துக்காரங்கிட்ட கேட்டா என்ன பதில் வரும்னு தெரியாதா?

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்களை.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்தது – இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னா அது தற்பெருமை.

பிடிக்காதது – ஒத்திப் போடுதல்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

பிடித்தது :– என்னைச் சகிச்சுக்கிறது.

பிடிக்காதது :- எதையும் ரெம்ப சீரியஸா எடுத்துக்கிறது.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

கேள்வி புரியவில்லை. நான் யார் பக்கத்திலா அல்லது யாராவது என் பக்கத்திலா?

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

எதாவது உடை ஜோசியம் சொல்லுவதற்காகவா?

வெள்ளைச் சட்டை, காக்கிப் பேண்ட்.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

இதில இருந்து என்ன கண்டுபிடிப்பீங்கன்னு தெரியல.

”காதல் வைத்துக் காதல் வைத்துக் காத்திருந்தேன்” பாட்டுத்தான் என் ஆல்டைம் பேவரிட். ய்வன்சங்கர், விஜய் ஜேசுதாஸ் காம்பினேசன். இதைவிடச் சிறப்பான பாட்டு இன்னும் கேட்கவில்லை.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பின்க்

14.பிடித்த மணம்?

மண்வாசனை

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

நான் யாரையும் அழைக்கப் போவதில்லை.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

னிறையச் சொல்லலாம். குறிப்பாக அவியல்.

17. பிடித்த விளையாட்டு?

இண்டோர் செஸ், டேபிள் டென்னிஸ். அவுட்டோர் கபடி.

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை. கடன்காரர்களையும், பழைய காதலிகளையும் பார்த்தால் சில சமயம் அணிவதுண்டு; முக மறைக்க.


19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

இயல்பாக எடுக்கப்பட்ட திரைப் படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

லால் சலாம். மோகன்லால், வேனு நாகவல்லி காம்பினேசன்.

கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படைச் சித்தாந்ததின் மீது எழுப்பபட்ட கேள்விதான் படம். இதைப் போல ஒரு திரைப்படம் தமிழில் சாத்தியமா?

முடிந்தால் இதே காம்பினேசனில் வந்த வரவேழ்ப்பு திரைப்படத்தையும் பார்க்கவும்.

21.பிடித்த பருவ காலம் எது?

கோடை. அப்பொழுதுதான் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடியும்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

மணல்வீடு சிற்றிதழ். ஆசிரியர் ஹரிகிருஷ்ணன்.

தஞ்சைப் பிரகாஷ் கட்டுரைகள்.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

நான் மாற்றுவதேயில்லை. யாராவது மாற்றி வைப்பார்கள். பிடித்திருந்தால் தொடர்வேன். பிடிக்காவிட்டாலும் தொடர்வேன்.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த: பிறந்த குழந்தையின் குவா குவா.

பிடிக்காதது: அப்பா 65% அம்மா 55% இருவரும் தங்கள் குழந்தை 99.99% எடுக்க வேண்டும் என்று டார்ச்சர் செய்யும் சத்தம்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

மும்பை, அனுஜன்யா வீட்டுக்கு.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இதுவரை இல்லை. வேணும்னா என் தங்கமனியக் கேளுங்க. no man is a hero to his wife.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையுடன் ஒப்பிடுவது, இதைப் போன்ற வன்முறை வேறெதுவ்மில்லை.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

ஏதுமில்லை.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சிங்கபூர். இன்னும் போனதில்லை.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படியே. எனக்கொன்றும் குறை இல்லை. நல்ல குடும்பம். அளவான வசதி. அளவு சம்பாத்யம் தரும் தொழில். உடனிருக்கும் நண்பர் கூட்டம். வேறென்ன வேண்டும்?

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

மனைவி இல்லாம வீட்டுல ஒரு காரியம் செஞ்சா மனைவி வந்து அதச் சரி பண்ண ஒம்பொது காரியம் செய்யணும். அதனால சும்மா இருப்பதே உசிதம்.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

Happiness is found along the road; not at the end.

.

52 comments

  1. //17. பிடித்த விளையாட்டு?

    இண்டோர் செஸ், //

    ஏதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்று நினைக்கிறேன்:)))

  2. 18.கண்ணாடி அணிபவரா?

    இல்லை. கடன்காரர்களையும், பழைய காதலிகளையும் பார்த்தால் சில சமயம் அணிவதுண்டு; முக மறைக்க.//

    ஒரு வேளை நீங்க வைத்திருக்கும் கண்ணாடி பஸ் கண்ணாடியோ? ஏன்னா முகத்தை மறைக்கன்னு சொல்றீங்களே. சாதாரண்மாக கண்ணாடி கண்ணைதானே மறைக்கும்!

    அளவில்லா
    டவுட்டோ
    குசும்பன்

  3. தமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்
    . தமிழ்10 இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச் சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .
    மேலும் படிக்க

    http://tamil10blog.blogspot.com/2009/06/10_02.html

  4. //குசும்பன் said…

    18.கண்ணாடி அணிபவரா?

    இல்லை. கடன்காரர்களையும், பழைய காதலிகளையும் பார்த்தால் சில சமயம் அணிவதுண்டு; முக மறைக்க.//

    ஒரு வேளை நீங்க வைத்திருக்கும் கண்ணாடி பஸ் கண்ணாடியோ? ஏன்னா முகத்தை மறைக்கன்னு சொல்றீங்களே. சாதாரண்மாக கண்ணாடி கண்ணைதானே மறைக்கும்!

    அளவில்லா
    டவுட்டோ
    குசும்பன்//

    ஹா ஹா ஹா 🙂

  5. //15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

    நான் யாரையும் அழைக்கப் போவதில்லை.//

    எனக்கு இந்த பதில் ரொம்பப் பிடிச்சுருக்குது :))

  6. // 29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

    சிங்கப்பூர். இன்னும் போனதில்லை. //

    எப்போ வர்றீங்க???

  7. //பழைய காதலிகளையும் பார்த்தால் சில சமயம் அணிவதுண்டு//

    சாரோட ஆட்டோக்ராப்ல நிறைய எபிசொட் இருக்கும்போல

  8. //பழைய காதலிகளையும் பார்த்தால் சில சமயம் அணிவதுண்டு//

    சாரோட ஆட்டோக்ராப்ல நிறைய எபிசொட் இருக்கும்போல

  9. கடன்காரர்களையும், பழைய காதலிகளையும் பார்த்தால் சில சமயம் அணிவதுண்டு; முக மறைக்க.//

    காதலிகளையுமா?? தங்கமணி கவனிக்க..

    //மனைவி இல்லாம வீட்டுல ஒரு காரியம் செஞ்சா மனைவி வந்து அதச் சரி பண்ண ஒம்பொது காரியம் செய்யணும். அதனால சும்மா இருப்பதே உசிதம்.//

    அந்த பயம் இருக்கட்டும்..

  10. கடன்காரர்களையும், பழைய காதலிகளையும் பார்த்தால் சில சமயம் அணிவதுண்டு; முக மறைக்க.//

    காதலிகளையுமா?? தங்கமணி கவனிக்க..

    //மனைவி இல்லாம வீட்டுல ஒரு காரியம் செஞ்சா மனைவி வந்து அதச் சரி பண்ண ஒம்பொது காரியம் செய்யணும். அதனால சும்மா இருப்பதே உசிதம்.//

    அந்த பயம் இருக்கட்டும்..

  11. //குசும்பன் Says: June 3, 2009 11:22 AM
    //17. பிடித்த விளையாட்டு?

    இண்டோர் செஸ், //

    ஏதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்று நினைக்கிறேன்:)))
    //

    பாவம்யா அவரை விட்டுவிடு அவருக்கு இன்னும் அகவை 50 ஆகலை !
    🙂

  12. //குசும்பன் Says: June 3, 2009 11:22 AM
    //17. பிடித்த விளையாட்டு?

    இண்டோர் செஸ், //

    ஏதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்று நினைக்கிறேன்:)))
    //

    பாவம்யா அவரை விட்டுவிடு அவருக்கு இன்னும் அகவை 50 ஆகலை !
    🙂

  13. பதில்கள் அனைத்தும் அருமை குறிப்பாக 27வது கேள்விக்கான பதில்.

    அப்புறம் நீங்க குறிப்பிட்டுள்ள இரண்டு மலையாள படங்களையும் நானும் பார்த்திருக்கிறேன் "லால் சலாம்" படத்தில் படம் நெடுக ஒரு மாதிரியான பிரச்சார நெடி அடிக்கும்(என்னோட பெர்ஸனல் ஒப்பீனியன்) அதுவே வரவேழ்ப்பில் கொஞ்சம் ஜனரஞ்சகமாக சொல்லப்பட்டிருக்கும் ஒரு கதையில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் மோகன்லால் முரளியிடம் கேட்கும் சில கேள்விகளும் அதனை தொடர்ந்து வரும் வசனங்களும் லால் சலாமைவிட ஷார்ப்பாக இருந்த மாதிரி உணர்ந்தேன்.இரண்டுமே அருமையான படங்கள்.

  14. பதில்கள் அனைத்தும் அருமை குறிப்பாக 27வது கேள்விக்கான பதில்.

    அப்புறம் நீங்க குறிப்பிட்டுள்ள இரண்டு மலையாள படங்களையும் நானும் பார்த்திருக்கிறேன் "லால் சலாம்" படத்தில் படம் நெடுக ஒரு மாதிரியான பிரச்சார நெடி அடிக்கும்(என்னோட பெர்ஸனல் ஒப்பீனியன்) அதுவே வரவேழ்ப்பில் கொஞ்சம் ஜனரஞ்சகமாக சொல்லப்பட்டிருக்கும் ஒரு கதையில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் மோகன்லால் முரளியிடம் கேட்கும் சில கேள்விகளும் அதனை தொடர்ந்து வரும் வசனங்களும் லால் சலாமைவிட ஷார்ப்பாக இருந்த மாதிரி உணர்ந்தேன்.இரண்டுமே அருமையான படங்கள்.

  15. பொறுப்பான அப்பா 🙂 நிறைய அப்பாக்கள் இப்படி இருக்க வேண்டும். 🙂

  16. பொறுப்பான அப்பா 🙂 நிறைய அப்பாக்கள் இப்படி இருக்க வேண்டும். 🙂

  17. அசைவம் : உளுந்தம்பருப்புச் சாப்பாடு, கறிக்குழம்பு

    நேக்கும்.

  18. அசைவம் : உளுந்தம்பருப்புச் சாப்பாடு, கறிக்குழம்பு

    நேக்கும்.

  19. very nice, very nice!

    whatz உளுந்தம்பருப்புச் சாப்பாடு? recipe plz~!

  20. very nice, very nice!

    whatz உளுந்தம்பருப்புச் சாப்பாடு? recipe plz~!

  21. //no man is a hero to his wife.//

    இப்படி படீர்ன்னு போட்டு உடைச்சிடிங்களே!

  22. //no man is a hero to his wife.//

    இப்படி படீர்ன்னு போட்டு உடைச்சிடிங்களே!

  23. // குசும்பன் said…

    //17. பிடித்த விளையாட்டு?

    இண்டோர் செஸ், //

    ஏதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்று நினைக்கிறேன்:))) //

    சூப்பர் குசும்பு…

  24. // குசும்பன் said…

    //17. பிடித்த விளையாட்டு?

    இண்டோர் செஸ், //

    ஏதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்று நினைக்கிறேன்:))) //

    சூப்பர் குசும்பு…

  25. வாழ்க்கை பத்தின கடைசி ஒரு வரி எல்லோருக்கும் வாழ்கை பாடத்தின் முதல் வரி.
    (அப்பாடா எதுகைமோனைல எழுதி எம்பூட்ட்டு நாளாச்சு???)

  26. வாழ்க்கை பத்தின கடைசி ஒரு வரி எல்லோருக்கும் வாழ்கை பாடத்தின் முதல் வரி.
    (அப்பாடா எதுகைமோனைல எழுதி எம்பூட்ட்டு நாளாச்சு???)

  27. கையெழுத்து, கண்ணாடி,தனித்திறமை பற்றிய பதில்கள் சூப்பர்.

  28. கையெழுத்து, கண்ணாடி,தனித்திறமை பற்றிய பதில்கள் சூப்பர்.

  29. ///முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?கண்களை.///
    ரொம்ப நல்ல/எனக்கு பிடித்த பழக்கம்.

    ///பழைய காதலிகளையும் ///
    எப்பூடிடிடிடி? எத்தனை?

    ///no man is a hero to his wife.///
    ஹா ஹா ஹா,, ஆனாலும் ரொம்ப உண்மையை சபையில பேசறீங்க!

  30. ///முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?கண்களை.///
    ரொம்ப நல்ல/எனக்கு பிடித்த பழக்கம்.

    ///பழைய காதலிகளையும் ///
    எப்பூடிடிடிடி? எத்தனை?

    ///no man is a hero to his wife.///
    ஹா ஹா ஹா,, ஆனாலும் ரொம்ப உண்மையை சபையில பேசறீங்க!

  31. அண்ணாச்சி,
    உளுத்தம்பருப்பு சாப்பாடு அசைவமா?

  32. அண்ணாச்சி,
    உளுத்தம்பருப்பு சாப்பாடு அசைவமா?

  33. கேள்வி அதற்கான பதில்கள் எல்லாமே அருமை அண்ணாச்சி.

  34. கேள்வி அதற்கான பதில்கள் எல்லாமே அருமை அண்ணாச்சி.

  35. உங்களைப்பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது

  36. உங்களைப்பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது

  37. அண்ணே, நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
    //எனக்கு நல்ல நண்பனாகவும். ஆசானாகவும், சாய்ந்துகொள்ளத் தன்னிருதோள் தந்தவனாகவும், இடித்துரைக்கும் மந்திரியாகவும் என்னை வழிநடத்திய என் தந்தை இறந்தபோதுகூட நான அழவில்லை.//

    மிகவும் பிடித்திருந்தது இந்த வரிகள்.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

  38. அண்ணே, நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
    //எனக்கு நல்ல நண்பனாகவும். ஆசானாகவும், சாய்ந்துகொள்ளத் தன்னிருதோள் தந்தவனாகவும், இடித்துரைக்கும் மந்திரியாகவும் என்னை வழிநடத்திய என் தந்தை இறந்தபோதுகூட நான அழவில்லை.//

    மிகவும் பிடித்திருந்தது இந்த வரிகள்.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

  39. //உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

    இதுவரை இல்லை. வேணும்னா என் தங்கமனியக் கேளுங்க. no man is a hero to his wife.//

    உண்மைதான்.. !!

    பதில்கள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்.!!

  40. //உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

    இதுவரை இல்லை. வேணும்னா என் தங்கமனியக் கேளுங்க. no man is a hero to his wife.//

    உண்மைதான்.. !!

    பதில்கள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்.!!

  41. //மோகன்லால், வேனு நாகவல்லி காம்பினேசன்.//

    வரவேழ்ப்பு மோகன்லால் – சத்யன் அந்திகாடு இல்ல??

  42. //மோகன்லால், வேனு நாகவல்லி காம்பினேசன்.//

    வரவேழ்ப்பு மோகன்லால் – சத்யன் அந்திகாடு இல்ல??

  43. அளவான, கண்டிப்பான,அன்பான,உண்மையான நெகிழ்வான,பொருட்படுத்தக்கூடிய, பொருட்படுத்த தேவையில்லாத,உடனிருக்க ஏங்கவைக்கிற, இன்ன அனேக முகங்களை காட்டியிருக்கிறீர்கள் அண்ணாச்சி.பயன் செய்தோர் உங்கள் குடும்பம் மட்டுமல்ல..நட்பாக கிடைக்கப்பெற்ற நாங்களும்தான்.

  44. அளவான, கண்டிப்பான,அன்பான,உண்மையான நெகிழ்வான,பொருட்படுத்தக்கூடிய, பொருட்படுத்த தேவையில்லாத,உடனிருக்க ஏங்கவைக்கிற, இன்ன அனேக முகங்களை காட்டியிருக்கிறீர்கள் அண்ணாச்சி.பயன் செய்தோர் உங்கள் குடும்பம் மட்டுமல்ல..நட்பாக கிடைக்கப்பெற்ற நாங்களும்தான்.

Leave a reply to manasu Cancel reply