என்ன தவம் செய்தேனோ?

பதிவர் ஒருவரின் குழந்தையை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது அவசரம் கருதி. பதிவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சென்னையில் அவருக்கு யாரையும் தெரியாது. நண்பர்களுமில்லை, உறவினருமில்லை. கையில் காசுமில்லை. என்ன செய்வது?

குறைந்த மாதங்களே அறிமுகமாகி இருக்கும் இன்னொரு பதிவருக்குத் தொலைபேசினார். அடுத்த 10 நிமிடத்தில் அந்தப் பதிவர் மருத்துவமனைக்கு வந்து குழந்தையை சேர்க்க எல்லா உதவிகளும் செய்துவிட்டுக் கிளம்பும்போது செய்த காரியம் இன்னும் பிரமிப்பூட்டுவதானது.

தனது வங்கி அட்டையைக் கொடுத்து அதற்கான பின்(PIN) என்னவென்பதையும் சொல்லி,

“எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தை முக்கியம்” என்றவாரே காரில் ஏறிப் போனார்.

அடுத்த நாளிரவு தவிர்க்க முடியாத ஒரு வேலை காரணமாக 4 மணி நேரம் வெளியே செல்ல வேண்டி இருந்தது. இன்னொரு பதிவர் இவர் முக வாட்டத்தைக் கவனித்து விவரமறிந்து தானே குழந்தை அருகிலிருந்து கவனித்துக் கொண்டார்.

இன்னொரு பதிவர்(மருத்துவர்) குழந்தைக்கு கொடுக்கப் படும் சிகிட்சை சரியானதுதான் சீக்கிரம் சரியாகி விடுமென ஆறுதல் படுத்தினார்.

இவர் வெளிநாடுவாழ் பதிவர். அவரது தந்தை சமீபத்தில் காலமாகி விட்டார். உடனே கிளம்பமுடியாத சிக்கல் ஒன்றில் இருந்தாரவர். எனக்கு விஷயம் தெரிந்ததும் இரண்டு பதிவர்களிடம் அவரது நிலை பற்றிச் சொன்னேன். சில மணி நேரத்திலேயே அவரது நாட்டுத் தூதரகத்தில் பேசி, அவருக்கு விமான டிக்கட் புக் செய்து, சென்னையிலிருந்து அவரது ஊர் செல்லக் கார் என எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டு எனக்குத் தகவல் தந்தனர். அவர் கிளம்பய்தில் இருந்து அவரது பயணம் குறித்த நேர்முகத் தகவல் அரை மணிக்கொரு முறை என் செல் பேசிக்கு வந்தவாறே இருந்தது.

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ வேலை செய்யும் ஒருவருக்கு அவரை நேர்முகமாகக் கூட சந்தித்திராத பலர், அவரது நிலை குறித்த கவலையும் அக்கறையும் பட்டது என்னை நெகிழச் செய்தது.

இன்னொரு பதிவரின் அன்னை சென்னையில் ஒரு அறுவை சிகிட்சைக்காக் இருந்த பொழுது அவருக்கு உதவி செய்தவர்கள் எண்ணிக்கை அவரது பதிவிற்கு வரும் கும்மிப் பின்னூட்டங்களைவிட அதிகம்.

இறுதியாக என் நேரடி அனுபவம். நான் சமீபத்தில் வீடு வாங்கியது உங்கள் அனைவருக்கும் தெரியும். தெரியாதது நான் பணம் போதாமல் தவித்தது. கட்டிய வீட்டை வாங்கியதால் சொன்ன தேதியில் பணம் கொடுத்தே ஆக வேண்டிய சூழ் நிலை. வேறொரு பதிவரிடம் இதைக் குறித்து வருத்தமாகப் பேசிக் கொண்டிருந்தேன். இதைத் தெரிந்து கொண்ட இன்னொரு பதிவர் தானே முன் வந்து எனக்குப் பணம் கொடுத்து உதவினார் சரியான சமயத்தில். உடுக்கை இழந்தவனின் இடுக்கன் களைந்த நட்பது.

பதிவரின் கதை பத்திரிக்கையில் வந்தால் உடனே அழைப்புகள் பறக்கின்றன, இன்னாருடைய பதிவு இத்தனாம் பக்கம் என. குழும மெயிலில் வாழ்த்துக்கள் பதியப் படுகின்றன. வாழ்த்துப் பதிவு உடனே இடப்படுகிறது. எவருக்கும் இன்னொருவர் மீது கிஞ்சித்தும் பொறாமை இல்லை. ஏதோ தன்னுடைய பதிவே வந்ததுபோல் ஒரு கொண்டாட்டம். இதெல்லாம் வேறிடத்தில் சாத்தியமா?

சிறுகதைப் போட்டிக்கு நானும் கதை அனுப்பலாமென்றிருக்கையில் என் மெயிலில் அபிப்ராயம் கேட்டு வரும் கதைகள் என்னை ஆச்சர்யப் பட வைக்கின்றன. சக போட்டியாளரிடமே போட்டிக்கான கதையைச் சொல்லுவது முதிர்ந்த எழுத்தாளர்களே செய்யாத ஒன்று. என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி.

இவர்களெல்லாம் யாரார் என நான் நேரடியாகச் சொல்லாமல் பூடகமாகச் சொன்னதின் நோக்கம் இரண்டு.

1. அவர்களே அதை விரும்பவில்லை. நமக்கு அது பெரிய விசயம் அவர்களுக்கு அது சாதாரணம் போலும்.

2. அவர்கள் யாரெனத் தெரிந்தால் கடவுள் ரேஞ்சுக்கு அவர்களை உயர்த்தி விடும் அபாயமும் உள்ளது. பின் அவர்கள் நம்முடன் சகஜமாகப் பழக இடமில்லாமல் போய்விடக் கூடும்.

உண்டென்றும்
இல்லையென்றும்
இருக்கலாமென்றும்
உணரப்படும் கடவுள்
அவருக்கும்
அவர் சார்ந்த குடும்பத்தினருக்கும்
இறையருள் பெய்யட்டும்
எல்லா வளமும் அருளட்டும்.

டிஸ்கி : பதிவர்கள் யாரெனத் தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்ல வேண்டாம்… ப்ளீஸ்

.

Advertisements

60 comments

 1. //டிஸ்கி : பதிவர்கள் யாரெனத் தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்ல வேண்டாம்… ப்ளீஸ்//

  சரிங்க அண்ணாச்சி :))

 2. எனக்கும் இது போன்ற நெகிழ்ச்சியான ஒரு உதவி இரு பதிவர்களால் சமீபத்தில் நிகழ்ந்தது.

  என்ன சொல்ல!

  கண்டிப்பா தவம் செஞ்சிருக்கணும் பதிவர்களாக.

 3. அத்தனையும் உண்மை, எனக்கே இதுபோல நடந்திருக்கிறது. நான் என்ன எழுதியிருக்கிறேன் இதை யார் படிக்க போகிறார்கள் என்றிருக்கும்போது முகம் தெரியாத சக பதிவர் திடீரென அழைத்து நண்பா, நல்ல எழுதறீங்க தொடந்து எழுதுங்க அப்படீன்னு சொல்லும்போது உண்மையிலேயே நான் சிலாகித்துத்தான் போனேன்.

 4. அண்ணாச்சி,

  நெகிழ்ச்சியான பதிவு. கடன் பிரச்னையில் நான் தவித்தபோது என்னை கரை சேர்த்ததும் – சேர்ப்பதும் பதிவுலக நண்பர்கள்தான். சாலமன் – முத்தையா கடித சுற்றில் அதை குறிப்பிட்டும் இருக்கிறேன்.

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

 5. அண்ணே நீங்கள் சொல்வது 100% சரிதாங்க.

  உதவிய பதிவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்.

 6. மிக நெகிழ்ச்சியான பதிவு
  அண்ணாச்சி.

  பதிவின் தலைப்பை அடிக்கடி
  சொல்லிப் பார்த்துக் கொள்கிறேன்

 7. பின்ன மழை எப்பிடிப் பெய்யுதுன்னு நினைக்கிறீங்க?

 8. உதவிய பதிவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்களும், நெஞ்சார்ந்த நன்றிகளும்..!!!

 9. உண்மைதான் வேலன். யாரோ சமீபத்தில் சொன்ன ‘காலேஜில் திரும்ப படிக்கும்’ அனுபவம் பதிவுலகில் கிடைக்கிறது. நிறைய சந்தோஷங்கள், தேவையான அளவு அலம்பல்கள், சச்சரவுகள், நிறைய புது புது விஷயங்கள், நம்ம திறமையை (சரி சரி) மற்றவர்கள் கண்டுபிடித்து சொல்லுவது என்று பல பல விஷயங்கள். நல்லா எழுதி இருக்கீங்க.

  Confidentiality எல்லாம் சரிதான்.

  ஆனாலும், தனி மின்னஞ்சலில் இந்த உதவி செய்யும் பதிவர்கள் பெயர், முகவரி கொடுங்களேன். நிச்சயமா நீங்க கொடுத்தீங்கன்னு சொல்ல மாட்டேன் 🙂

  அனுஜன்யா

 10. அருமையா சொல்லியிருக்கீங்க அண்ணாச்சி.. பாராட்டுகள்..

 11. அண்ணாச்சி,
  நான் எழுதவேண்டிய பதிவு, நீங்கள் எழுதிவிட்டீர்கள் எல்லார் சார்பாகவும்.
  என் தந்தையின் இறப்பின் போது பதிவுலக சொந்தங்கள் செய்த உதவிகள் அனைத்தையும் பார்த்துவிட்டு நான் மனதிற்குள் நினைத்தது இது தான். “என் தந்தை என்னை தனியாக விட்டு சென்றுவிடவில்லை. இத்தனை சொந்தங்கள் இருக்கின்றார்கள்” .
  நான் நேரில் சந்தித்த பதிவர்கள் வெகு சிலரே. ஆனால் எல்லோரும் உண்மையில் என்னுடன் இருந்ததைப் போல உணர்ந்தேன்.

  நான் ப‌திவ‌ர். இந்த‌ உல‌க‌த்துல‌ எந்த‌ நாட்டுக்கு போனாலும் அங்க‌ ஒரு சொந்த‌ம் இருக்கும் . இது தாங்க‌ நான் எழுதி ச‌ம்பாதிச்ச‌ பெரிய‌ சொத்து. மனசு முழுக்க நன்றி உணர்ச்சி இருக்கு. ஆனா அத வெளில சொல்லி உங்களையெல்லாம் அந்நியப்படுத்த விரும்பல. அப்டியே தவறி நன்றி நான் சொன்னாலும் அடிக்கத்தான் வருவாங்க எல்லாரும்.
  இதுக்கு மேல‌ சொல்ல‌ வ‌ர‌லை.

 12. நல்ல விடயம் அண்ணாச்சி.
  அதததுக்கும் ஒரு மனசு இருக்கனுமில்ல…

  அப்புறம் இந்த செல்வேந்திரனை கொஞ்சம் என்னன்னு விசாரிங்க அண்ணே.

 13. உதவிய பதிவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்

 14. நல்ல விஷயம். நல்ல உள்ளங்களுக்கு வணக்கங்கள்

 15. நெகிழ்ந்தேன்…
  உண்மையில் இம்மாதிரியான உறவுகள் கிடைக்க தவம் செய்திருக்க வேண்டும்.

 16. பதிவுலகம் கும்மிக்கு மட்டுமில்லாமல்
  நல்ல விஷயங்களும் நடக்கின்றன.

  சந்தோஷம்.

 17. //டிஸ்கி : பதிவர்கள் யாரெனத் தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்ல வேண்டாம்… ப்ளீஸ்//

  சரிங்க அண்ணாச்சி :))

 18. பதிவுலகம் கும்மிக்கு மட்டுமில்லாமல்
  நல்ல விஷயங்களும் நடக்கின்றன.

  சந்தோஷம்.

 19. நெகிழ்சியாக இருக்கிறது … தமிழில் சிறுபத்திரிக்கை இயக்கம் போலவே பதிவர்கள் என்பதும் ஒரு மாற்று கலை இயக்கமாக வளர்ந்திருக்கிறது … ஆனால் இங்கேயும் மற்ற இயக்கங்களை போன்றே நல்லதும் கெட்டதும் கலந்து தான் இருக்கும் என்று நினைக்கிறேன் … நீங்கள் நடக்கும் நல்லதை மட்டும் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள் போல … வரவேற்கிறேன் …

 20. டிஸ்கியால் கைகளைக் கட்டிப் போட்டு விட்டீர்கள்

  அண்ணாச்சி!!!!!!

 21. ஆமாம் அண்ணாச்சி. நான்கூட இப்ப உள்ளூர் நண்பர்களை விட அதிகமாய் பதிவர் நண்பர்களுடன்தான் நெருக்கமாகவும், நேரத்தையும் செலவிடுவதுமாகவும் இருக்கிறேன். ஆச்சரியமளிக்கும் அன்னியோன்யம் ஏற்பட்டுவிடுகிறது.

 22. நீங்க சொல்லி இருக்கும் அத்தனை நண்பர்களும் தெரியும். அவர்களுக்கு நண்பர்கள் என்று சொல்வதே பெருமையாய் இருக்கு. அரசியல் பதிவுகள் எழுத/ அரசியல் பதிவுகளில் விவாதிக்க ஆரம்பித்தப் பிறகு நான் வாங்காதா திட்டே இல்லை.. :).. நான் ரொம்பவே சென்சிடிவ். ஆனாலும் அந்த வசவுகளை எல்லாம் புறந்தள்ளி இன்னும் பதிவுகளை வாசித்து கருத்துக்களை சொல்வதற்கு ஒரே காரணம் இந்த நிகரில்லா நட்பு தான்.

  என்ன தவம் செய்தேனோ?

 23. இந்த வேலை இல்லா சமயத்தில், வேலை வாங்கி கொடுத்த பதிவர் செம்மல்கள் பற்றி கேள்விப்பட்டு உள்ளீர்களா?


  விஜயஷங்கர்
  பெங்களூரு

 24. நெகிழ வைக்கும் கை வண்ணம்…நன்றி காய்ச்சலை உண்டாக்கி விட்டீர்கள்

 25. வடகரை அண்ணா,
  நெகிழ்வாக இருக்கிறது.
  நட்பும் தோழமையும் தவிர்த்து,
  வேறென்ன வேண்டும் வாழ்வில்,

  நர்சிம்மிடம் கூறியிருந்தேன்.
  இந்த ஒருமனப்போக்கை குவித்து, நல்ல விஷயமாக்க ஒரு முன்முயற்சி செய்யுங்கள் என்று.
  செய்யலாம் என்றார்.
  எல்லோருக்கும்,
  எல்லாவற்றிற்கும் நன்றியும், அன்பும்.

 26. பதிவ படிக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு சார்…..

  அனைத்து நண்பர்களும் நலமோட வாழ என்ன்டோ வாழ்த்துக்கள்

 27. அண்ணாச்சி, செண்டிமெண்டான பதிவைப் போட்டு இருக்கீங்க.. நெகிழ்கின்றேன்..
  அதே..”என்ன தவம் செய்தேனோ?”

 28. அன்பின் அண்ணாசி

  என்ன தவம் செய்தேனோ – உண்மை உண்மை

  டிஸ்கி என் கைகளைக் கட்டிப்போடுகிறது.

  உண்மையிலேயே நாம் கொடுத்துவைத்தவர்கள் அண்ணாச்சி – நமது உலகம் நட்பின் உலகம் – அன்பின் உலகம்

  நன்றி அண்ணாச்சி

 29. அற்புதமான பதிவு. பதிவுலகத்தின் அற்புதங்கள் நாளுக்கு நாள் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன. மிகுந்த பெருமையடைகிறேன் நானும் ஒரு ஒரமாக இங்கே இருப்பதில்.

  நீங்கள் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ள அந்த உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

  மனிதர்களின் மீது நம்பிக்கை இழக்காமல் இருக்க இப்படிப்பட்ட மனிதர்களும் அவர்களை அடையாளம் காட்டும் இது போன்ற எழுத்துக்களும் என்றும் மிக அவசியம்.

 30. உங்களின் இந்தப் பதிவி விகடன் குட் ப்ளாக் கில் வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 31. மனம் நிறைந்து இருக்கிறது….
  அன்புடன் அருணா

 32. Dear Friends

  Please include me in your circle. i am still speechless to see all you. I am proud about all you.

  visit my blog at

  kathalukai.blogspot.com

 33. எனக்கு கூட நிறைய அனுபவங்கள் அண்ணாச்சி!

  எல்லோருமே சொந்த சகோதரன் போல் பார்த்து கொள்கிறார்கள்!

  பதிவுலகில் நான் கண்ட நட்பில் சில உறவுகளில் கூட கிடையாது!

 34. “டிஸ்கி : பதிவர்கள் யாரெனத் தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்ல வேண்டாம்… ப்ளீஸ்”

  appadiya….
  saringa uncle

  .

 35. //தனி மின்னஞ்சலில் இந்த உதவி செய்யும் பதிவர்கள் பெயர், முகவரி கொடுங்களேன். நிச்சயமா நீங்க கொடுத்தீங்கன்னு சொல்ல மாட்டேன் :)//

  நல்லா தமாஷ் பண்றிங்க!

 36. அருமை! அருமை… பதிவுலகத்தின் அறிமுகம் கிடைத்ததில் பெருமைப்படுகிறேன்!

 37. DEAR VELAN, LET US CREATE DISTRICTWISE BLOGGERLIST.THAT MIGHT HELP WHEN SOME OF OUR BLOGGERS,IN EMERGENCY SITUATION.BUT THAT MUST BE CREATED ONLY WITH THE WILLINGNESS OF THE BLOGGERS.IF IT IS POSSIBLE, THE BLOGGER COMMUNITY WILL BECOME MORE THAN A UNDIVIDED JOINT FAMILY.AND IT CANNOT BE COMPARED WITH ANYTHING ELSE.

 38. ரொம்ப நல்ல விசயங்கள் நெகிச்சியாக உள்ளது.

 39. I am very happy to hear all these things.Really proud of following all these bloggers. Hats off to them. Always we have a special place for friendship.

  Radha
  Canada

 40. அண்ணாச்சி இதையெல்லாம் படிக்கும் போது என் உதடுகள் துடித்துக் கொண்டும் கண்கள் நீர்த் திரையிட்டுக் கொண்டுமிருந்தது, மிகவும் நெகிழ்வா இருக்கு, ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க அண்ணாச்சி, அந்த அன்பு உள்ளங்களின் பெயர் முகம் பார்த்தறியாமலேயே மனதால் மனதில் முழுமையாக தரிசித்து விட்டேன்.

  பதிவுலகத்தில் இருப்பதற்கு மிகவும் பெருமிதப்படுகிறேன், சந்தோஷப் படுகிறேன். நான் என்ன எழுதினாலும் எவ்வளவு எழுதினாலும் இத்தருணத்து என் உணர்வுகளை சொல்லிவிட முடியவில்லை.

 41. பதிவுலகம் என்பது நம்ம சொந்த ஊர் மாதிரி அண்ணாச்சி….நம்ம ஊர்ல உள்ளவர்கள் நல்ல விசயத்தில் ஜெயிக்கும் போது நமக்கு தானே பெருமை

 42. ஐம்பதாவது கமெண்ட்!

  இந்த பொறாமை என்ற விஷ(ய)ம் எங்காவது கிஞ்சித்தும் தெரியவதே இல்லையே பதிவர்களுக்குள்.. நடிக்கிறார்களோ என்றுகூட நினைத்திருக்கிறேன் அண்ணாச்சி!

  நிச்சயமாக நாமெல்லாம் தவம் செய்யாமலே வரம் வாங்கிவந்தவர்கள்தான்!

 43. உதவிய பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் வணக்கங்களும்!

 44. தங்கள் மற்றும் பிற பதிவர்களின் நெகிழ்வான அனுபவத்தைப் பதிவு செய்ததற்கு நன்றி.

  ஸ்ரீ….

 45. மெய்சிலிர்க்க வைத்தது. வாழ்க அந்த நல்ல உள்ளங்கள்.

 46. யாரென சொல்லக்கூடாது என்று நீங்கள் அன்புக்கட்டளை இட்டுள்ளபடியால் நம் நண்பர்கள் அனைவருக்கும் (அவர்களுடைய அடையாளம் தவிர்த்து) வாழ்த்துகளை மட்டும் கூறிக்கொள்கிறேன் :)))

  இதை அனைவருக்கும் தெரியப்படுத்திய உங்களது பெருந்தன்மைக்கும் நன்றி.

 47. அண்ணாச்சி எனக்கு பதிவர்கள் செய்த உதவியை சொன்னால் நான் இதுவரை எழுதி இருக்கும் பதிவுகளின் எண்ணிக்கையை தாண்டும் அளவுக்கு தொடராக எழுதவேண்டும்.

 48. அண்ணாச்சி எனக்கு பதிவர்கள் செய்த உதவியை சொன்னால் நான் இதுவரை எழுதி இருக்கும் பதிவுகளின் எண்ணிக்கையை தாண்டும் அளவுக்கு தொடராக எழுதவேண்டும்.

 49. கண் முன் தெரிந்த ஒருவருக்கே உதவ முன்வராத இந்த நாட்களில்..

  கண்ணுக்கே தெரியாத பலருக்கு பல உதவிகள் செய்து மனிதத்தை உயிர்ப்பித்து வாழவைத்துகொண்டிருக்கும் பதிவர் உலகத்திற்கு என்றும் எனது
  …."நன்றிகளை சொல்ல போவதில்லை"..

  காரணம்..

  நண்பர்களுக்கு இடையே நன்றிகள் சொல்லிக்கொள்வது அநாகரீகம் என்று சொல்வார்கள்.அதனால்தான்..

  நல்ல பதிவு வேலன் அண்ணே..!!!
  கலக்குங்க..!!

  மனிதம் மலரட்டும். என்றும். எப்போதும்.

 50. கண் முன் தெரிந்த ஒருவருக்கே உதவ முன்வராத இந்த நாட்களில்..

  கண்ணுக்கே தெரியாத பலருக்கு பல உதவிகள் செய்து மனிதத்தை உயிர்ப்பித்து வாழவைத்துகொண்டிருக்கும் பதிவர் உலகத்திற்கு என்றும் எனது
  …."நன்றிகளை சொல்ல போவதில்லை"..

  காரணம்..

  நண்பர்களுக்கு இடையே நன்றிகள் சொல்லிக்கொள்வது அநாகரீகம் என்று சொல்வார்கள்.அதனால்தான்..

  நல்ல பதிவு வேலன் அண்ணே..!!!
  கலக்குங்க..!!

  மனிதம் மலரட்டும். என்றும். எப்போதும்.

 51. கருத்துக்கள் கருத்து மோதல்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டிய ஒரு நட்பும் பிணைப்பும் பதிவுலகில் இருக்கின்றது.
  வேற்றுமையில் ஒற்றுமை – இது இந்தியாவுக்குப் பொருந்துமோ என்னவோ ஆனால் தமிழ் பதிவர்களுக்கு நன்றாகவே பொருந்துகிறது.

 52. கருத்துக்கள் கருத்து மோதல்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டிய ஒரு நட்பும் பிணைப்பும் பதிவுலகில் இருக்கின்றது.
  வேற்றுமையில் ஒற்றுமை – இது இந்தியாவுக்குப் பொருந்துமோ என்னவோ ஆனால் தமிழ் பதிவர்களுக்கு நன்றாகவே பொருந்துகிறது.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s