கதம்பம் – 18/05/09

பொள்ளாச்சித் தொகுதியில் கொ மு பேரவை பெஸ்ட் ராமசாமி கண்டிப்பாகத் தேர்வாகி விடுவார் என எல்லோரும், மற்றுக் கட்சியினர் உட்பட எண்ணிக் கொண்டிருக்க அவர் டெபாசிட் இழந்திருக்கிறார். தேர்தல் அலுவலுக்கு என் மனைவி சென்ற வாக்குச்சாவடியில் கூட அவருக்குத்தான் அதிக வாக்குகள் விழுந்திருக்குமெனச் சொன்னார்.

மக்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

இத்தனை வருட அரசியல் அனுபவமுள்ள மணி சங்கர், சிதம்பரம், இளங்கோவன், வைகோ போன்றோர் தடுமாற ரித்தீஷ் போன்றோர் வெற்றி பெற தேர்தலின் சமன்பாடு என்னவெனப் புரியவில்லை.

*************************************************************************

சென்ற வாரம் எனது கதை ஒன்று விகடனில் வெளியாகியது. நேரிலும், தொலைபேசியிலும், அலைபேசியிலும், மின்னரட்டையிலும், மின்னஞ்சல் மூலமாகவும் பாராட்டிய உங்கள் அனைவருக்கும்… வேறென்ன சொல்ல நன்றியைத் தவிர.

பைத்தியக்காரன் பாராட்டியவிதம் பிடித்திருந்தது. பிறிதொரு பதிவில் அதைப் பகிர்கிறேன்.

*************************************************************************

சென்ற வாரம் ஜ்யோராம் சுந்தர் கோவை வந்திருந்தார். நானும் சஞ்சயும் அவருடன் ஒரு பின் மாலையைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டோம், நல்ல விவாதங்களுடன் கருத்துப் பகிர்தலுடனும்.

முதலில் தான் ஒரு வாசகன் என்று தன்னைப் பற்றிச் சொல்லும் சுந்தர் நல்ல படிப்பாளி. அவரது படிக்கும் முறை ஆச்சர்யம் தரக்கூடும். ஒரே சமயத்தில் நாலைந்து புத்தகங்களை வைத்துக் கொண்டு இதில் சில பக்கங்கள் இன்னொன்றில் சில பக்கங்கள், பிறிதொன்றில் சில பக்கங்கள் எனப் படிப்பாராம். ஒரு எழுத்தாளரைத் தொடர்ந்து படிப்பதால் ஏற்படும் ஆயாசத்தை இது தவிர்க்குமெனச் சொன்னார். முயல வேண்டும்.

*************************************************************************

அசோகமித்திரனின் “ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்” என்னும் சிறுகதைத் தொகுதியைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் எனக்குப் பிடித்த கதையான புலிக் கலைஞன் உள்ளது. ஆனால் ரிக்‌ஷா, ரிஷ்கா என்ற இரு வார்த்தைகளைப் பிரதானமாகக் கொண்டு அவர் எழுதியுள்ள ரிக்‌ஷா ஒரு வித்தியாசமான கதை. மேலும் சில ஆச்சர்யங்கள் இத்தொகுதியில். 1957 முதல் 1999 வரை அவர் எழுதியுள்ள கதைகளின் தொகுப்பு இது. இந்தக் கால கட்டத்தைப் புரிந்தவர்களுக்கு இது நல்ல வாசிப்பனுபவத்தைத் தரக் கூடும். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இத்தொகுப்பினைத் தொகுத்தவர் அரவிந்தன்.

*************************************************************************

பிழைத்தல் வேண்டிச் செய்யும் செய்கைளினூடாக வழியும் பாவங்களைக் களைதல் பற்றிய யாத்ராவின் கவிதை இம்முறை

பிழைத்தல்

கசப்பின் முள் கிரீடத்தின் ஊடே

குருதி வழிய

வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பவர்களுக்காக

பாரம் சுமக்கப்போகிறவர்களின்

உள்ளங்கைகளிலும் கால்களிலும்

அறையப்போகும் ஆணிகளையும்

தேர்ந்த மரத்தில் சிலுவைகளையும்

தயாரிக்கச்சொல்லி உத்தரவு

குளிர்காய மரபுத்தர் சிலைகளும்

நல்ல விற்பனை

உயிர்த்தெழுதல் வேண்டி நிற்கும்

அனேகர்கள் மன்னிப்பீர்களாக

வணிகம் முடிந்து

பாவமன்னிப்போ

பங்கு காணிக்கையோ

குற்றவுணர்வு பீடிக்காதிருக்க

வழிகள் அனேகம்

சாமர்த்தியமாய் பிழைத்தலே முக்கியம்

*************************************************************************

”பதவியில் இருந்தால்தான் மக்களுக்குச் சேவையாற்ற முடியும் என்பதில்லை

சொன்னவர் யார்?

1. வைகோ
2. தங்கபாலு
3. ஈ வி கே எஸ்
4. சரத்குமார்

.

33 comments

  1. நல்லா கலந்து கட்டி அடிச்சு இருக்கீங்க நண்பா.. யாத்ராவின் கவிதை அருமை..

  2. முதலில்

    விகடனில் வந்தமைக்கு

    வாழ்த்துகள்

  3. \\ஒரு எழுத்தாளரைத் தொடர்ந்து படிப்பதால் ஏற்படும் ஆயாசத்தை இது தவிர்க்குமெனச் சொன்னார். \\

    நல்ல தகவல்

  4. கதம்பம் நல்லா இருக்கு.

    உங்கள் விகடன் கதையை இப்போதுதான் லக்கிலுக் பதிவில் வாசித்தேன். எளிமையா அருமையாக இருக்கிறது. அந்த முடிவு அப்படித்தான் இருக்க வேண்டும்.

    சுந்தர் அவர்களைப்பற்றி யாத்ராவின் மூலம் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    யாத்ராவின் கவிதையை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

    சொன்னது சரத்குமார்தான் நினக்கேன்.

  5. பூஜைக்கேத்த கதம்பம்

    (சுத்த பத்தமா இருக்கு)

  6. எங்க ஊர்ல யாரைக் கேட்டாலும் வைகோ தான் வருவார்னு சொன்னாங்க. மாணிக் தாகூர் இவ்ளோ நாளா எங்கேயோ டெல்லில இருந்துட்டு, ஒரே ஒரு நாள் தான் பிரச்சாரம் பண்ணியிருக்கார். அவரு யாருன்னு வாக்கு சாவடி போற வரை எங்க ஊர்ல பெரும்பாலானோருக்குத் தெரியல. ஆனா ஜெயிச்சுட்டார். ஒன்னுமே புரியல போங்க..

    /*பதவியில் இருந்தால்தான் மக்களுக்குச் சேவையாற்ற முடியும் என்பதில்லை*/

    இதை சொன்னவர் இந்த நாலு பேருல யாரா இருந்தாலும் சரி.. அடுத்த தேர்தல்ல நிக்காம இருந்தா சரி. (மை பஜ்ஜி சேய்ஸ் இட் இஸ் சரத் குமார்)

  7. /
    ”பதவியில் இருந்தால்தான் மக்களுக்குச் சேவையாற்ற முடியும் என்பதில்லை”

    சொன்னவர் யார்?
    /

    எல்லாருமே சொல்லுவார்கள்.

    சொன்னபடி செய்பவர் யார்னு கேள்வி கேட்டிருக்கலாம்

  8. உங்களையும் சஞ்சயையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அண்ணாச்சி!

    புலிக்கலைஞன் எனக்கும் மிகப் பிடித்த கதை. படித்து பல வருடங்கள் ஆகியிருந்தாலும், இன்னும் மறக்காத கதை.

  9. கொ மு பேரவை – இப்படி அந்ததந்த இடங்களில் இருக்கும் பண வசதி படைத்த ஆதிக்க சாதிகள் அரசு – அதிகாரத்தைக் கைப்பற்ற முனைவது ஆபத்தானது.

  10. ஜ்யோவ் வாசிப்பு அபாரமானது. உண்மையிலேயே ‘முதன்மையாய் வாசகன்’ தான் அவர். நீங்களும் இலேசுப்பட்டவர் இல்லை.

    சமீப காலங்களின் சில மகிழ்வுகளுக்கு யாத்ராவும் ஒரு காரணம். திருப்பூர் வரை எல்லாம் வருகிறார் என்று நினைக்கிறேன். ஒரு முறை வளைத்துப் பிடியுங்கள் 🙂 (சஞ்சயை அருகில் சேர்க்க வேண்டாம் :))) )

    அனுஜன்யா

  11. //மக்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை.//

    நிஜம்தான்… கடவுளைக் கூட புரிவது சுலபம் போல ஆகிவிட்டது 🙂

  12. விகடன் கதைக்கு வாழ்த்துகள் அண்ணாச்சி !!

  13. //இத்தனை வருட அரசியல் அனுபவமுள்ள மணி சங்கர், சிதம்பரம், இளங்கோவன், வைகோ போன்றோர் தடுமாற ரித்தீஷ் போன்றோர் வெற்றி பெற தேர்தலின் சமன்பாடு என்னவெனப் புரியவில்லை.//

    That is called times. 😉

    //”பதவியில் இருந்தால்தான் மக்களுக்குச் சேவையாற்ற முடியும் என்பதில்லை”

    சொன்னவர் யார்?

    1. வைகோ
    2. தங்கபாலு
    3. ஈ வி கே எஸ்
    4. சரத்குமார்//

    Ans: All the above!

  14. இத்தனை வருட அரசியல் அனுபவமுள்ள மணி சங்கர், சிதம்பரம், இளங்கோவன், வைகோ போன்றோர் தடுமாற ரித்தீஷ் போன்றோர் வெற்றி பெற தேர்தலின் சமன்பாடு என்னவெனப் புரியவில்லை.

    //

    டோன்ட் வொர்ரி…தம்பி இன்னாத்துக்கு
    இர்க்கேன் சொல்லுங்கோ…
    நீங்க மெட்றாஸ் வரசொல்லோ ஒரு கிளாஸ் எடுக்குறேன்.அப்பாலிக்கா ஜகூரா
    ப்ரியும்

    🙂

  15. ”பதவியில் இருந்தால்தான் மக்களுக்குச் சேவையாற்ற முடியும் என்பதில்லை”

    சொன்னவர் யார்?

    1. வைகோ
    2. தங்கபாலு
    3. ஈ வி கே எஸ்
    4. சரத்குமார்

    //

    அண்ணாத்த இன்னாதிது???
    ஒரு டமாஷ படிச்சோமா சிர்ச்சோமான்னு
    இல்லாத பப்ளிக்காவுட்டு அவரு மானத்த வாங்கிகினு..ஹா…ஹா…

  16. டெபாசிட் வாங்க எத்தனை சதவிகித ஓட்டுகள் வாங்க வேண்டும்?

    அங்கே யார் யார் எவ்வளவு ஓட்டுகள் பெற்றிருக்கிறார்கள்!

  17. //முதலில் தான் ஒரு வாசகன் என்று தன்னைப் பற்றிச் சொல்லும் சுந்தர் //

    உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டாரா குருஜி???? கார்க்கி எங்கிருந்தாலும் வரவும்…

    யாத்ரா கவிதை அருமை.

  18. /மக்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை./
    மிகச் சரி.

    விகடன் கதை.இப்பத்தான் விசயமேத்தெரியுது. வாழ்த்துகள் அண்ணாச்சி.ரொம்ப சந்தோசம்.
    சீக்கிரம் பதிவிடுங்க.

    சுந்தர்ஜீயப் பாக்கணும்னே ஒரு கூட்டத்துக்குப் போனேன். கொஞ்சந்தான் பேசமுடிஞ்சது.அதுவே ரொம்ப நாளைக்கு நினைச்சுக்கிட்டிருக்க வைக்குது.

    ஆசையா இருக்கு அண்ணாச்சி. உங்கள மாதிரி நிறையப் படிக்கணும்னு

    யாத்ராவைப் பற்றிய பகிர்தல் மகிழ்ச்சியளிக்கிறது. பெரிய லெவல் கவிதை இது அண்ணாச்சி.

    அரசியல்வாதுங்க பண்ற காமெடியால உங்க காமெடிய மிஸ் பண்ணவேண்டியதாயிருக்குது.

  19. யாத்ராவின் கவிதையை வாசிப்பது ஒரு சுகானுபவம்.

    அசோகமித்ரனின் புலிக்கலைஞன் சிறந்த கதைகளுள் ஒன்று.
    ஒரு பக்கத்திற்குள் அடங்கிவிடக்கூடிய ரிக் ஷா கதை குழந்தைகளின் உலகம் குறித்தான பெரியவர்களின் பார்வையை கேலி பேசுவதான நல்ல கதை.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

  20. இந்த தேர்தல் முடிவுகள் எனக்கும் பிடிக்கவில்லை, புரியவில்லை … இது ஆராயப்படவேண்டிய ஒரு sociological phenomenon … election results do not fall in a pattern – there is no design to approach this … hmmm …

  21. hi valpiyan,

    To get 1/3 of vote who won the seat. for example, for selected candidate won 1000 vote.If you get at least 333 vote then only you get deposit amount.

    Kongu munetra peravai going to good.it’s perform well for kongu mandalam. It’s not like P.M.K.

    Understand Mr.Sunder.

  22. நன்றி கார்த்திகைப் பாண்டியன்.
    நன்றி சென்ஷி.
    நன்றி ஜமால்.

    நன்றி மன்குதிரை. சொன்னது சரத்துதான். அது சரி நினைக்கேன்ன்னு சொல்லுதியளே நெல்லைக் காரவுகளோ?

    நன்றி முரளி. கண்ணன்னாலே பக்திதானே?

    நன்றி சோம்பேறி. வைகோ தோத்தது எனக்கும் வருத்தம்தான். இவரமாதிரி ஆட்கள் தோற்று ஒன்றும் தெரியாத புதியவர்கள் வெற்றி பெருவது அதிர்ச்சி அளிக்கிறது.
    சரிதான் அதைச் சொன்னது சமக சரத்துதான்.

    நன்றி சிவா.

    நன்றி சுந்தர். வட்டாரக் கட்சிகள் பலம் பெறுவது ஆட்சிக்கு நல்லதல்ல என்பது என்னுடைய எண்ணமும் கூட. ஏனெனில் பமக மாதிரி they will become a pain in the ass. முழுங்கவும் முடியாமத் துப்பவும் முடியாம கலைஞர் பட்ட அவஸ்தை போதும்.

  23. நன்றி அனுஜன்யா. யாத்ரா நண்பரின் திருமணத்திற்குத்தான் திருப்பூருக்கு வந்திருக்கிறார்.

    நன்றி மகேஷ்.

    நன்றி சென்னை.

    நன்றி அப்துல்லா. அரசியலை நாங்க எழுத்துக்கூட்டிப் படிச்சிட்டு இருக்கோம் நீங்க அதுல முனைவர் பட்டம் பெற்றவர். பார்க்கலாம் பூவோட சேர்ந்து இந்த நாரும் மணக்குதான்னு.

    வால். மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெர்றிருக்க வேண்டும். அவர்கள் போட்டியிட்ட ஆறு தொகுதிகளிலும் சில ஆயிரம் வோட்டுக்களில் டெபாசிட் இழந்திருக்கிறார்கள்.

    நன்றி நர்சிம்.
    அவருதான் வாசகனான்னு தெரியாது ஆனா அவரு நல்ல வாசகன்.

    நன்றி முத்துவேல். வாழ்த்துக்கள் புது வரவுக்கு.

    நன்றி வாசுதேவன். ரிக்‌ஷா கதை எனக்கு பிடித்ததற்குக் காரணம் இதைக்கூடக் கதையாக்க முடியுமா என என் மகள் வியந்து என்னிடம் சுட்டிக் காட்டியதே.

    நன்றி நந்தா. மக்கள் வாக்களிக்கும் முறைக்கு ஏதும் சமன்பாடுகளோ அல்லது வரையறைகளோ இருப்பதுபோல் தென்படவில்லை. That is why it is called political science.

    நன்றி சங்கர். மூன்றில் ஒரு பங்கல்ல;ஆறில் ஒன்று. மேலும் வட்டாரக் கட்சிகள் வலுவடைவதை நான் எதிர்க்கிறேன்.

    ஒரு காருக்கு ஒரு டிரைவர்தான் இருக்க வேண்டும் ஆளாளுக்கு ஸ்டிரிங்க் பிடித்தால் சுத்து சுத்துன்னு சுத்தும். ஒரு டிரைவருக்கு மாற்றாக இன்னொருவர் வரலாமே தவிர, பயணிகள் அனைவரும் டிரைவராக இருப்பது ஆபத்து.

  24. அண்ணாச்சி, எனக்கு பேச்சே வரவில்லை, உங்கள் அன்பு எல்லாம் என்னை திக்கு முக்காட வைக்கிறது, உங்கள் கதம்பத்தில் என் கவிதையை தொகுத்திருந்ததை பார்த்ததும் மகிழ்ச்சி தாங்க முடியாது, நண்பர் முத்துவேலுக்கு தொடர்பு கொண்டு என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். மிக்க நன்றி
    ஆரம்பத்தில் எப்பவோ பதிவிட்டிருந்த கவிதை, முதலில் பெயர் எல்லாம் பார்க்க வில்லை, page ஐ scroll செய்யும் போது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே எனத் தான் தோன்றியது முதலில், பிறகு, பார்க்காதிருந்து நெடுநாட்களுக்குப் பிறகு என் குழந்தையை பட்டுத் தொட்டிலில் பார்க்கிற மகிழ்ச்சி உண்டானது.
    நண்பர் முத்துவேலிடம் திருப்பூர் வந்த பிறகு தான் பேசினேன், தங்களை சந்திக்கிற ஆசையிருந்தது, பிறகு, அது காலை நேரம், அலுவல்களில் மூழ்கியிருக்கிற நேரம், முன்னறிவிப்பேதுமின்றி திடுதிப்பென்று சந்திப்பது சரியாகாது, நீங்களும் பணி நிமித்தம் எங்கு இருக்கிறீர்களோ என நினைத்தேன்.

    சுந்தர் அவர்களின் வாசிப்பு குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள், உங்கள் வாசிப்பு குறித்தும் அனுஜன்யா அவர்கள் குறிப்பிட்டிருந்தார், வாசித்ததை வாசித்தவர்களோடு பேசி பகிர்ந்து கொள்கிற இன்பமே தனி.

    விகடன் கதைக்கு வாழ்த்துகள்

    நண்பர்கள் எல்லோரையும் ஒன்றாக சந்திக்க வேண்டுமென மிகவும் ஆசையாயிருக்கிறது.

  25. நன்றி யாத்ரா,

    நல்ல கவிதைகள் கண்டுகொள்ளப் படாமல் போகிறதே என்ற ஆதங்கம்தான் என் பதிவில் பதிவிடுவதற்கான காரணம்.
    திருப்பூர் மற்றும் கோவைப் பதிவர்களுக்கு நேரம் காலம் ஏதுமில்லை சென்னைப் பதிவர்களைப் போல. சந்திக்க வாய்த்தால் சந்திப்பது இருக்கும் வேலகளுக்கிடையேதான். எங்கள வாழ்க்கை முறை அவ்வாறு அமைந்து விட்டது. அலுவல் நேரம் சொந்த நேரம் என்ற எல்லைகள் ஏதுமற்று அலைகிறோம். எனவே அடுத்த முறை வர வாய்ப்பின் முன்கூட்டியே சொல்லுங்கள் சந்திப்போம்.

    நன்றி TVRK சார்.

  26. கதம்பம் நல்லா இருக்கு.

    உங்கள் விகடன் கதையை வாசித்தேன். அருமையாக இருக்கிறது.

  27. இத்தனை வருட அரசியல் அனுபவமுள்ள மணி சங்கர், சிதம்பரம், இளங்கோவன், வைகோ போன்றோர் தடுமாற ரித்தீஷ் போன்றோர் வெற்றி பெற தேர்தலின் சமன்பாடு என்னவெனப் புரியவில்லை. //

    வாங்கிய காசிற்கு ஓட்டுப் போட நினைக்கும் மக்கள் மனசாட்சியை மறந்து விடுவது தான் காரணம்.

    ஒரு எழுத்தாளரைத் தொடர்ந்து படிப்பதால் ஏற்படும் ஆயாசத்தை இது தவிர்க்குமெனச் சொன்னார். முயல வேண்டும் //

    நானும் முயற்சிக்கிறேன்.

    கவிதை முழுசாப் புரியல. எனக்கு வாசிப்பனுபவம் குறைவு.

  28. இங்கே கொங்கு பேரவை நண்பர்கள்கூட அப்படித்தான் சொன்னார்கள். முதலில் நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தது.. இருப்பினும் ஒருலட்சம் வாக்குகள் பெற்றிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கும்.

    உங்கள் கதையை விகடனில் பார்த்தேன். வாழ்த்துகள்.

    யாத்ராவை திருப்பூரில் நான் சந்தித்தேன். மிக நல்ல கவிஞர். கவிதைகளைப் பற்றி நான் சொல்லவேண்டியதேயில்லை.. அத்தனை பிரமாதமாக எழுதக் கூடியவர்.

  29. இதை ஸ்டேட்டஸ் மெசேஜாக போடாததால எனக்குத் தெரியவே இல்லை. வேற ஒரு நல்லவரால ஏற்பட்ட டென்ஷனை முழுசா இந்தப் பதிவும் பின்னூட்டமும் போக்கிடிச்சி. 🙂

    //சென்ற வாரம் ஜ்யோராம் சுந்தர் கோவை வந்திருந்தார். நானும் சஞ்சயும் அவருடன் ஒரு பின் மாலையைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டோம், நல்ல விவாதங்களுடன் கருத்துப் பகிர்தலுடனும்.//

    அன்னப்பூர்ணாவில் காபி குடிக்கலாமா இல்லை கேஆரில் காபி குடிக்கலாமா என்பதைத் தாண்டி நடந்த விவாதங்களில் நான் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. :))

    //சொன்னவர் யார்?

    1. வைகோ
    2. தங்கபாலு
    3. ஈ வி கே எஸ்
    4. சரத்குமார்//

    இதில் என் பெயரை தவிர்த்த உங்கள் நுண்ணரசியலை அப்துல்லா சார்பில் கண்டிக்கிறேன். 🙂

  30. //நண்பர்கள் எல்லோரையும் ஒன்றாக சந்திக்க வேண்டுமென மிகவும் ஆசையாயிருக்கிறது.//
    யாத்ரா, தயவு செய்து என் ஆசை அனுகன்யா மாமாவிடம் மட்டும் தகவல் சொல்லிவிட வேண்டாம். என்னை சந்திக்கவிடாமல் சதி செய்வார். ;))

Leave a reply to சென்ஷி Cancel reply