கதம்பம் – 1-12-08

தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் ஒரு முறை ரயிலில் பயனம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் எதிரில் அமர்ந்து இருந்த பெண், அவரிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கத்தில் அவரை மயக்க முயற்சித்தாள். சிறி்தும் லட்சியம் செய்யாமால் படித்துக் கொண்டிருந்தார் தாஸ்.

பொறுமையிழந்த அப்பெண், “இந்தக் கூபேல் நாம ரெண்டு பேர்தான் இருக்கோம். நான் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தப் போறேன். கார்டு வந்தா நீ என்னிடம் தவறாக நடக்கப் பாத்தேன்னு சொல்லுவேன். இதெல்லாம் செய்யாம சும்மா இருக்கனும்னா எனக்குப் பணம் கொடு ” என்று மிரட்டினாள்.

தாஸ் அவளை நிமிர்ந்து பார்த்து தனக்கு காது கேட்காது, வாயும் பேசவராது எனவே அவள் சொல்வதை எழுதித் தரவேண்டுமென சைகையில் கேட்டார். அவளும் உடனே அவரிடமிருந்தே பேப்பரும் பேனாவும் வாங்கி சொன்னதை அப்படியே எழுதிக் கொடுத்தாள்.

எழுதியதை வாங்கிக் கொண்ட தாஸ் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தார். கார்டு வந்ததும் அவரிடம் விபரம் சொல்லி அப்பெண்மணியை ஒப்படைத்தார்.

பாவம் அந்தப் பெண்ணுக்கு தாஸ் ஒரு வழக்கறிஞர் என்பது தெரியாது.

****************************************************************

நேற்று வாரணம் ஆயிரம் படம் பார்த்தேன். எனக்குப் பிடிச்சது. கௌதம் மேனோன் படங்களில் காட்சிப்படுத்துதல் ஒரு அழகியல் சார்ந்து இருக்கும். இப்படமும் அவ்வாறே.

அப்பாவுக்கு அஞ்சலிப் படமா, காதல் படமா அல்லது ஆக்சன் படமான்னு ஒரு தெளிவில்லாம இருப்பதுதான் குறை. டெல்லி எபிசோட் இல்லாமலே படம் நன்றாகத்தான் இருந்திருக்கும்.

சமீரா ரெட்டி தன் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். சூர்யா தன் காதலை சொல்லும் சமயங்களில் (ரயில், வீடு) அதை மறுதலிக்கும் போது இயல்பாகச் செய்திருக்கிறார்.

படத்தின் மிகப் பெரிய குறை ஹாரிஸின் ரீ ரிக்கர்டிங். கடைசி 15 நிமிடங்கள் மிக அபத்தம். சூர்யாவும் அப்பா சூர்யாவும் பேசும் வசனங்களைக் கேட்கவிடாமல் செய்ததோடு ஒரு சங்கு ஊதுகிறார். கொடுமை. பாடலுக்கு ஹாரிஸ் ரீ ரிக்கு வேறு ஒருவர் என்றால் சரியாக இருக்குமோ என்னவோ. சில படங்களில் இளைய ராஜாவின் பின்னனி இசையே படத்திற்கு பலமாக இருக்கும்.

சிலர் இந்தப் படத்தையும் தவமாய்த் தவமிருந்து படத்தையும் ஒப்பிட்டிருந்தனர். இரண்டும் வேறு வேறு தளங்கள். சேரனோடது இடியாப்பம், தேங்காய் பால். மேனனோடது நூடுல்ஸ் சாஸ்.

****************************************************************

வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவல் உங்களுக்குப் பிடித்திருந்தால் ஜே டி க்ரூஸ் எழுதிய “ஆழி சூழ் உலகு” படித்துப் பாருங்கள்.

கடல்புரத்தில் ஒரு குடும்பதில் ஒரு தலைமுறயில் நிகழும் சம்பவங்களைக் கோர்த்தது. ஆழி சூழ் உலகு மூன்று தலை முறைக் கதை. இரு குழுக்களுக்கிடயே இருக்கும் தொழில் போட்டி, விரோதம், குரோதம், கோபம், தவறாகப் புரிந்து கொள்ளுதல், பொய்ப்பஞ்சாயத்து என அது வேறு விதமானது.

நுணுக்கமான பல சித்தரிப்புகளையும், விஸ்தாரமான விவரனைகளும் கொண்டது. ஒரு முழுமையான வாசிப்பனுபவத்துக்கு உத்திரவாதம் இந்நாவல்.

****************************************************************

பொதுவா ஒவ்வொரு பதிவருக்கும் ஒரு தனி எழுத்து நடைஇருக்கும், எழுத்தாளர்களுக்கு இருப்பது போல. அதே போல நம்ம கூடப் பழகுறவங்க, நம்மைச் சுற்றி உள்ளவங்க சிலர் ஒரே வார்த்தையைத் திரும்ப திரும்பச் சொல்லுவாங்க. அது அவங்களுக்கே உரியதாகவும் அவங்களுக்கு ஒரு அடையாளத்தைத் தருவதாகவும் இருக்கும்.

இந்த அடையாளத்தை கூர்மையாக் கவனிச்சு அதையும் ஒரு கவிதையாக்கியிருக்காரு பாருங்க கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன் என்கிற சி.கல்யாணசுந்தரம்.

”ஒரே சிக்கலாப் போச்சு”
என்பார் அய்யனார்
ஆறுமுகத்துடன் பேசும்போது
அடிக்கடி “நெருக்கடி” வந்தது
குமாரசாமி தன்பேச்சை
எப்போதும் “என்ன” என்று முடிப்பார்
“சரியா” என்று ஒப்புதல் கேட்பது
சங்கரியம்மா
சா.கந்தசாமியின் கதாபாத்திரங்கள்
“இது நன்றாக இருக்கிறது”
என்று சொல்கின்றன வெவேறு இடங்களில்
அவரவர் உலகம்
அவரவர் சொற்களில்
என் உலகம் எது என
நீங்கள் சொன்னால்
ரெம்பவும் “நல்லது”

– அந்நியமற்ற நதி தொகுப்பிலிருந்து

***************************************************

ரெண்டு பேரு டீ சாபிடலாம்னு ஒரு கடைக்குச் போறாங்க. டீ வழக்கமான நிறத்தில் இல்லாமல் கறுப்பாக இருக்குது.

நண்பர்களில் ஒருவன் கேட்டன் “ஏங்க பாலே ஊத்தலியா?”
மற்றவன் சொன்னான், ”கடை போர்ட பாக்கலியா நீ?”

வெளியே வந்து போர்டப் பார்த்தா “பாலக்காட்டார் கடை” .

42 comments

  1. இருங்க பதிவ படிச்சுட்டு வர்றேன் :))

  2. சுப்ரமணியபுரத்திற்குப் பிறகு பார்த்த முழு தமிழ் படம் வாரணம் ஆயிரம். பிடித்திருந்தது. எல்லாரும் அந்த டெல்லி எபிசோட் படத்திற்கு வேகத்தடை என்கின்றனர். கெளதமிற்கே வெளிச்சம். நல்ல தொகுப்பு!

  3. எழுதியதை வாங்கிக் கொண்ட தாஸ் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தார். கார்டு வந்ததும் அவரிடம் விபரம் சொல்லி அப்பெண்மணியை ஒப்படைத்தார்.

    //

    அன்னே உங்கள மாதிரியே அந்தக் காலத்துலயும் ஆளுக இருந்துருக்காய்ங்க :))

  4. நன்றி அப்துல்லா
    நன்றி முரளி
    நன்றி தமிழ்

  5. இந்த வார நகைச்சுவை நல்லா இருந்துச்சு, கதம்பமும்.

  6. அண்ணா..

    ரெண்டுபேரும் கல்யண்ஜி வாசகர் மன்றம் ஆரம்பிக்கலாமா?

  7. // ரெண்டுபேரும் கல்யண்ஜி வாசகர் மன்றம் ஆரம்பிக்கலாமா? //

    ரெண்டு பேர் மட்டும் சேர்ந்தா ‘கல்யண்ஜி’ வாசகர் மன்றம்.

    வெயி’லா’னையும் சேர்த்தாத்தான் ‘கல்’யா’ண்ஜி’ வாசகர் மன்றம். 🙂

  8. //எழுதியதை வாங்கிக் கொண்ட தாஸ் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தார். கார்டு வந்ததும் அவரிடம் விபரம் சொல்லி அப்பெண்மணியை ஒப்படைத்தார்//

    ஹா ஹா ஹா டாப்பு

    //நேற்று வாரணம் ஆயிரம் படம் பார்த்தேன். எனக்குப் பிடிச்சது. கௌதம் மேனோன் படங்களில் காட்சிப்படுத்துதல் ஒரு அழகியல் சார்ந்து இருக்கும். இப்படமும் அவ்வாறே.//

    வேலன் என் விமர்சனத்தில் நான் எதுவும் மிகை படுத்தி கூறி இருந்தேனா!

    //தன் காதலை சொல்லும் சமயங்களில் (ரயில், வீடு) அதை மறுதலிக்கும் போது இயல்பாகச் செய்திருக்கிறார்//

    உண்மையில் சிறப்பாக செய்து இருப்பார் ஆர்ப்பாட்டமில்லாமல்..ஆனால் அனைவரும் வேறு மாதிரி கூறுகிறார்கள்.

    //வெளியே வந்து போர்டப் பார்த்தா “பாலக்காட்டார் கடை//

    :-)))))))

  9. //எழுதியதை வாங்கிக் கொண்ட தாஸ் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தார். கார்டு வந்ததும் அவரிடம் விபரம் சொல்லி அப்பெண்மணியை ஒப்படைத்தார்//

    நிமிர்வோம்

  10. மேனனோடது நூடுல்ஸ் சாஸ்.

    இப்படியே போனால் படம் சூப்பரோ சூப்பரு

  11. /////இரு குழுக்களுக்கிடயே இருக்கும் தொழில் போட்டி, விரோதம், குரோதம், கோபம், தவறாகப் புரிந்து கொள்ளுதல், பொய்ப்பஞ்சாயத்து என அது வேறு விதமானது.////

    படகோட்டி??????

  12. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சிங்கம் தூங்கினப்போ ஈ துள்ளி விளையாடுனாப்போல, நான் ஊருக்குப் போயிருந்தப்போ மீ த பர்ஸ்ட் போட்டு ஏன்தான் இப்டி சம்மந்தியும், அண்ணனும் பீத்திக்கறாங்களோ:):):)

  13. முதல் சம்பவம் சூப்பர்:):):)

    //மேனனோடது நூடுல்ஸ் சாஸ்.
    //

    ஹி ஹி, இத்தாலிய நூடுல்ஸுக்கு சைனீஸ் சாஸ் போட்டு கொடுத்தா மாதிரி எனக்கு இருந்துச்சி:):):)

    கடல்புறத்தில் விமர்சனம் நான் இனிதான் படிக்கணும்.

    ஹி ஹி, கவிதயப் பத்தி நான் விமர்சனமா பண்ணமுடியும்:):):)

    //“பாலக்காட்டார் கடை”//

    :):):)

  14. இந்த வாரம் நகைச்சுவைதான் தான் டாப் அண்ணாச்சி

  15. 🙂 பாலக்காட்டார் ..நல்லா இருக்கு..

  16. சித்தரஞ்சந்தாசின் புத்திசாலித்தனம் வியக்க வைக்கிறது.ஆழிசூழ் உலகு இலக்கிய உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நான்தான் இன்னும் படிக்கவில்லை.(எப்படித்தான் படித்துவிடுகிறீர்களோ ! )
    இம்முறை சிரிப்பு உள்ளபடியே கலக்கல்.(உள்ளபடியே என்பது நான் அடிக்கடி பயன்படுத்தும் சொல்லோ என நினைக்கிறேன்.) கதம்பம். நறுமணம்.

  17. கதம்பம் மணம்….

    கெவின் காஸ்னரோட “வாட்டர் வேல்டு” படம் பாத்துருக்கீங்களா?

  18. முன் அனுமானங்கள் இல்லாமல் சென்று பார்த்தால் வாரணம் ஆயிரம் நல்லாத்தான் இருக்கு. பதிவுலகின் விமர்சனங்கள் பல்வேறாக இருந்தன, அவரவர் ‘கோட்பாட்டுகள்’ படி. டேதோ. படத்தில் இரு பாடல்கள் இனிமை.

    ‘ஆழி சூழ்’ படிக்க வேண்டும்.

    இந்த வார சிரிப்பு :))). இந்தக் கதம்பமும், இந்த வார அவியல் போலவே மணக்கிறது.

    அனுஜன்யா

  19. //“பாலக்காட்டார் கடை”//

    இந்தக் கதம்பம் மணக்கிறதுங்க.

  20. நன்றி கபீஷ்

    நன்றி ராதாகிருஷ்ணன் சார். அந்தப் பொறுப்புக்கு உங்கள விட்டா வேற தகுதியானவங்க யாரு?

    நன்றி பரிசல்.
    ஒரு முறை அவரை திருநெல்வேலியில் நாமெல்லாம் போய்ப் பார்க்கலாமா? வெயிலான் மூலம் முயலலாம்.

  21. நன்றி வெயிலான்.

    நீங்க இருந்தாத்தான் அந்த சபையே நிறைஞ்ச மாதிரி இருக்கும்.

    நன்றி கிரி. உங்க விமர்சனத்த நான் தவற விட்டுட்டேன். இப்பப் படிக்கிறேன்.

    நன்றி sureஷ்.
    படகோட்டி மிகவும் சினிமாத்தனமானது. நாவல் உன்னதம்.

  22. வாங்க ராப். கவிதை விமர்சனம் பண்ண நீங்கதான் சரியான ஆள். ஒரே நாள்ல ஒரே கவிதையில உலகப் புகழ் பெற்றவராச்சே.

    நன்றி அத்திரி
    நன்றி விஜய் ஆனந்த்
    நன்றி அமுதா (முதல் வரவு?)
    நன்றி முத்துலட்சுமி கயல்விழி

  23. வாங்க முத்துவேல். அப்பப்ப நேரம் கிடைக்கும்போது படிக்கனும் அவ்வளவுதான்/

    மகேஷ் அந்தப் படம் பத்தி நீங்க ஒரு பதிவு எழுதி அறிமுகம் தாங்களேன்.

    வாங்க ராஜ். இதுதான் முதல் வருகை?
    நீங்க கேட்ட தகவல்களுக்கு இந்தப் பதிவப் பாருங்க ஆழி சூழ் உலகு

  24. நன்றி அனுஜன்யா. உங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு நீங்க சொன்ன போதே நல்லா இருக்கும்னு ஒரு நம்பிக்கை வந்தது. பொய்க்கவில்லை.

    நன்றி நித்யா. ஏ சி பாளையம்னா எந்த ஊருங்க? ஊரே குளிருமா?

  25. அண்ணே.. பின்ன்றீங்க.. சித்தரஞ்சன் போன்ற சுவாரசியங்களை எங்குதான் பிடிக்கிறீர்களோ, பிரமாதம். நானும் அதுபோல புத்திசாலியாக இருக்கவேண்டும் என ஆசையாக இருக்கிறது. என் வாழ்க்கையிலும் இது போல ஒரு சம்பவமாவது (குட்டியூண்டாகவாவது) நடந்ததேயில்லை. இனிமேலும் .. ம்ஹும்..!

  26. //தாமிரா said…
    அண்ணே.. பின்ன்றீங்க.. சித்தரஞ்சன் போன்ற சுவாரசியங்களை எங்குதான் பிடிக்கிறீர்களோ, பிரமாதம். நானும் அதுபோல புத்திசாலியாக இருக்கவேண்டும் என ஆசையாக இருக்கிறது. என் வாழ்க்கையிலும் இது போல ஒரு சம்பவமாவது (குட்டியூண்டாகவாவது) நடந்ததேயில்லை. இனிமேலும் .. ம்ஹும்..!//

    வாங்க தாமிரா, இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாலதான் சாத்தியம். கல்யாணத்துக்கபுறம் அந்தப் பக்கக் கதவு சாத்திடும்.

  27. //வெளியே வந்து போர்டப் பார்த்தா “பாலக்காட்டார் கடை//

    ம், நல்லாவே சிரிக்க வெச்சீங்க.

    மற்றதில் சிந்திக்கவும் வெச்சிருக்கீங்க.

  28. யாருங்க அந்த தாஸ்ஸு சரியான கில்லாடியா இருப்பாரு போல

  29. கதம்பமாகவே கொடுத்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும். அதனை ரசிப்பார்கள்.
    எல்லாவற்றையும் பிடிக்கும் படி சுவையாக எழுதியிருப்பது நன்றாக உள்ளது.

  30. நன்றி அமிர்தவர்ஷினி அம்மா
    நன்றி வால்பையன்
    என்ங்க சித்தரஞ்சன் தாஸத் தெரியாதா?
    நன்றி புகழன்.

  31. கவிதைக்கு நன்றி! ஆமா…நீங்க அடிக்கடி பயன்படுத்துகிற வார்த்தை என்ன 🙂

  32. ‘எறும்பு ஊர்வது போல்’

    இதை எஸ்.ரா. வின் எழுத்துக்களில் அடிக்கடி பார்த்த நினைவு