தற்கொலைக்குத் தயாரானவன்

தற்கொலைக்குத் தயாரானவன்
பித்து நிலையில்
என்னென்னவோ செய்கிறான்

அவன் கையில்
குடும்பப் புகைப்படமொன்று கிடைக்கிறது
அதிலிருந்து தன்னுருவை
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்தரிக்கத் துவங்குகிறான்

எவ்வளவு நுட்பமாக செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டுவிரல் நுனி
கூடவே வருவேனென்கிறது.

ராஜி பத்மனாபன் – நான்காம் பாதை – சிற்றிதழிலிருந்து

18 comments

  1. சிற்றிதழில் வெளிவரும் கவிதைகளை படித்து ரொம்பநாளாச்சு. அமிர்தத்தில் ஒரு துளி பருக வாய்ப்பளித்தீர்கள் நன்றி. அது சரி நீங்களும் நம்மூர் காராரா..

  2. வருகைக்கு நன்றி.

    //அது சரி நீங்களும் நம்மூர் காராரா..//

    நீங்கள் நெல்லையில் எந்தப் பகுதி?

  3. //எவ்வளவு நுட்பமாக செயல்பட்டும்
    கைகோர்த்திருக்கிற
    தங்கையின் சுண்டுவிரல் நுனி
    கூடவே வருவேனென்கிறது//

    அருமையாக இருக்கிறது 🙂

  4. நல்லாருக்கு
    அவருடைய சிறந்த தொகுப்புகளை வெளியிடவும்

    வால்பையன்

  5. நன்றி கிரி

    //தங்கையின் சுண்டுவிரல் நுனி//
    என்பது ஒரு படிமம்தான். அதன் பின் நூல் பிடித்துச் செல்லத் தூண்டும் அநுபவம் தான் நல்ல கவிதையின் அடையாளம்.

  6. நன்றி வால்பையன்

    அவருடைய இன்னொரு கவிதை

    அழுக்கின் சுயம்

    ஒவ்வொரு மூலையிலும்
    வீடு இறைந்து கிடக்கிறது
    துணிக்குவியலாய்.

    ஒவ்வொரு துணியிலும்
    அவரவருக்கான
    பிரத்யேக வாசனை
    ஒட்டிக் கொண்டிருக்கிறது.

    எடுக்க எடுக்க
    மலைக்காமல் வளர்கிறது
    துணிகளின் மலை

    மடித்து
    மடித்து
    களைத்துப் போய்
    ஒவ்வொரு குவியலிலும்
    அழுக்காய்ப் படர்த்துகிறேன்
    என் சோம்பலின்
    சுய ரூபத்தை

    மணங்களின் கலவையினூடே
    முகரவியலா நறுமணத்துடன்
    உயர்ந்து வளர்கிறது
    என் சுயத்தின்
    விஸ்வரூபம்

  7. நன்றி சென்ஷி,

    கவிதை எழுதியவரைப் பற்றிய மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை.

    நான்காம்பாதை சிற்றிதழ், ஜனவரி – 1, 2008 ல் ஒரு இதழ் வந்தது. அதில் வந்த கவிதைதான் இது. அதன் பிறகு அந்த இதழ் வருகிறதா என்று கூடத் தெரியவில்லை.

  8. அடுத்த கவிதையும் அருமை
    கவிதை எழுத முயற்சிப்பவர்கள் இம்மாதிரியான கவிதைகளை முதலில் வாசிக்க வேண்டும்,
    ஒன்றன் கீழ் ஒன்று எழுதினால் கவிதை ஆகாது

    வால்பையன்

  9. // மடித்து
    மடித்து
    களைத்துப் போய்
    ஒவ்வொரு குவியலிலும்
    அழுக்காய்ப் படர்த்துகிறேன்
    என் சோம்பலின்
    சுய ரூபத்தை //

    அருமை! அருமை!

  10. குற்றாலத்துக்கு பக்கத்தில் தான். புளியங்குடி என்ற ஊர் தான் சொந்த மண். இந்த தகவல் மட்டும் போதுமா… தனி மடலில் வேண்டுமென்றால் சுய விபரங்களை அனுப்புகிறேன். நன்றி.

  11. //வால்பையன் said…
    அடுத்த கவிதையும் அருமை
    கவிதை எழுத முயற்சிப்பவர்கள் இம்மாதிரியான கவிதைகளை முதலில் வாசிக்க வேண்டும்,
    ஒன்றன் கீழ் ஒன்று எழுதினால் கவிதை ஆகாது

    வால்பையன்
    //

    வேற
    என்னவா –
    கும்

    :))

  12. தமிழ் சினிமா

    புளியங்குடிதான் என் தஙமணியின் சொந்த ஊர்.

    ஆனா அவங்க வளர்ந்ததெல்லாம் உடுமலையில்.

    தனி மடல் அனுப்புங்கள்.

    மகிழ்ச்சி.

  13. வால்பையன்

    100 கவிதைகள் படித்தால்தான் 2 அல்லது 3 நல்ல கவிதைகள் தேறுது.

    என்ன செய்வது, குறைவாக இருப்பதால்தானே தங்கத்திற்கு மதிப்பு அதிகம்.

  14. //வால்பையன் said…
    அடுத்த கவிதையும் அருமை
    கவிதை எழுத முயற்சிப்பவர்கள் இம்மாதிரியான கவிதைகளை முதலில் வாசிக்க வேண்டும்,
    ஒன்றன் கீழ் ஒன்று எழுதினால் கவிதை ஆகாது

    வால்பையன்
    //

    வேற
    என்னவா –
    கும்

    :)) //

    வஜனம்.

  15. வாங்க வெயிலான்.

    நல்லா சந்தோஷமா இருக்கிங்க போலருக்கு. 2 நாள் நல்ல ஜாலியா?

    என்ன நம்மாளு தொடர்ந்து எழுதுறேங்கறாரா?