எங்களுக்கு ஒரு அறை இருந்தது


கவிதைகளை 3 வகைப்படுத்தலாம்

புலவருக்குப் புரியும்

இந்த வகைக் கவிதையப் புரிஞ்சுக்கிறதுக்கு கொஞ்சமாவது படிச்சிருக்கனும். இது நம்ம பேட்டை இல்லை. நாம ஏதாவது சொல்லப் போக, யாராவது அரு பழ வேல என்று தொடங்கும் புலவர் சரிக்குச் சரி கூப்பிடுவாங்க. நம்மால முடியாது. விட்டுடுவோம்

நம்ம அண்ணன் லதானந்த் கூட வெண்பாப் போட்டி வெச்சுறுக்கார். வெண்பா எத்தனை, வெறும்பா எத்தனை தேருதுன்னு பார்க்கலாம்.

யாருக்கும் புரியாது

பின் நவீனத்துவம், கட்டுடைத்தல், அழகியல், முற்போக்கு போன்ற வார்த்தைகள் நிரம்பியது. முக்கியமான தகு்தி யாருக்கும் புரியக்கூடாது. எழுதுறவங்களுக்குப் புரியு்மான்னு என்னைக் கேக்கக் கூடாது.

நிறைய உதாரணம் தரலாம். ஆனால் கட்டற்ற சுதந்திரம் தரும் பயம் காரணமாக தவிர்த்துவிடலாம்.

‘நினைவின் காட்டுப்பாதை
கரிய குதிரை
நான் அலையும்போது
யாரின் குரல்?’

மனசு கஷ்டமா இருக்கும்போது இந்த மாதிரிக் கவிதைகளைப் படிக்க நேர்ந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும். ஹெவியா இன்ஸுரன்ஸ் எடுத்துக்குங்க.

இந்த மாதிரிக் கவிதை எழுதுவது பத்தி ஜெயமோஹன் எழுதியிருக்கார் இங்கே

எல்லோருக்கும் புரியும்

இதுதாங்க நம்ம வகை. படிக்க ஆரம்பிச்ச மூனாவது அடியிலேயே நம்மை உள்ள இழுத்துடனும்.

படிக்கும்போதோ அல்லது முடிச்ச உடனேயோ நாமும் இது போல் அநுபவிச்சிருக்கமே என்று உணர வைக்க வேண்டும்.

கால‌ம் (ஆக‌ஸ்‌ட் 1991) எ‌ன்ற ‌சி‌ற்‌றித‌ழி‌ல் சமயவேல் எழுதிய எங்களுக்கு ஒரு அறை இருந்தது க‌விதையை த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம் தளத்திலிருந்து கொடுத்துள்ளேன்.

ஆசிரமம் தெருவில்
எங்களுக்கு ஒரு அறை இருந்தது
நகரத்தில் எதனிடமும் ஒட்டுப்பட முடியாமல்
கூரைகளுக்கு மேல் மிதந்த
மிகச் சிறிய அறை அது.

சார்மினார் கோல்டுபிளேக் வில்ஸ் பில்டர்
செய்யது பீடிப் புகைகளூடே
விதம் விதமாய் உரையாடும் முகங்கள்
பேச்சுகள் பகிர்வுகள் விவாதங்கள்
துண்டன் துண்டமாய் வெட்டி அலசினோம்
வாழ்க்கையை

சமயத்தில் அறை நகர்ந்து
காந்தி மைதானத்தில் கூடும்
புற நகர்ச் சாலை பாலச் சுவர்
அல்லது மேடேறிக் கதிரேசன் மலை சேரும்
எங்கும் பேச்சுத்தான்

வாழ்வின் விசாரத்தை எப்பவும்
கூடவே இழுத்துக் கொண்டு
அலைந்தது எங்கள் அறை

உலகைச் சீரமைப்பதற்கான கருவிகளை
ஏராளமாய் உற்பத்தி செய்து (தலைகளில்)
அறை முழுவதும் தொங்க விட்டோம்

எது குறித்தும் எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்காமல்
அறைச் சுவர்கள் பிரியமுடன் கொடுத்த
சுதந்திரத்தை எல்லோரும் தின்று வந்தோம்

எங்கோ சாப்பிட்டோம்
எப்போதோ தூங்கினோம்
எல்லா இடங்களிலும் டீ குடித்தோம்
அவன் காசு கொடுத்தான்
இவன் சிகரெட் வாங்கினான்
சதா புகைப் பிடித்தோம்
இளந்தாடியுடனும், குறுஞ்சிரிப்புடனும்
ஒருவன் பாட்டில்கள் கொண்டு வந்தான்
இட்லிகளும் புரோட்டாக்களும்
பார்சலில் வந்தன
விதமான போதையில்
எல்லாவற்றையும் மிகத் தெளிவாக
விளங்கிக் கொண்டோம்

அறைக்காற்றில்
எங்கள் பெருமூச்சுகளையும்
ஆத்மாக்களையும் கலந்தோம்

நண்பர்கள் கூடக்கூட
அறை அகன்று விரிந்தது
ஒருவர் பாயில் மூவர் தரையில்
இருவர் சேரில்
படியில் இருவர் நியூஸ் பேப்பரில் ஒருவர் என
தாறுமாறாய் படுத்து
நிம்மதியாகத் தூங்கினோம்

அறையை விட்டுக் கிளம்பி
குடும்பம் கட்டியிருக்கும் நாங்கள்
வீட்டையும் அறையையும் இணைக்க முடியாமல்
திணறிக் கொண்டிருக்கிறோம்.

நீங்க படிச்ச நல்ல கவிதைய அறிமுகப்படுத்துங்களேன்.

4 comments

  1. நல்லதொரு பதிவு.. உங்களோட இதுக்கப்புறம் எழுதின பதிவுகளை படிச்ச நான் இதை எப்படி மிஸ் பண்ணினேன்னு தெரியல.. இத மறுபடி போடுங்க. (தமிழ்மணத்துல வரீங்களா?)

  2. நல்லதொரு பதிவு.. உங்களோட இதுக்கப்புறம் எழுதின பதிவுகளை படிச்ச நான் இதை எப்படி மிஸ் பண்ணினேன்னு தெரியல.. இத மறுபடி போடுங்க. (தமிழ்மணத்துல வரீங்களா?)

  3. சமயவேல் கோவில்பட்டிக்காரர். செம்மலரில் இவரது கவிதைகள் அதிகம் வரும். அந்த அமைப்புச் சார்ந்தவர்.

    இது போன்ற பொதுக் கவிதைகளும் எழுதுவார்.

    மேலும் சில நான் ரசித்த நல்ல கவிதைகளை எடுத்துப் போட உத்தேசம்.

    தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்.

  4. சமயவேல் கோவில்பட்டிக்காரர். செம்மலரில் இவரது கவிதைகள் அதிகம் வரும். அந்த அமைப்புச் சார்ந்தவர்.இது போன்ற பொதுக் கவிதைகளும் எழுதுவார்.மேலும் சில நான் ரசித்த நல்ல கவிதைகளை எடுத்துப் போட உத்தேசம்.தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்.