நையாண்டி

கொசுத் தொல்லை தாங்க முடியலடா நாராயணா.

நோக்கம் :
கடிப்பதன் மூலம் மலேரியா மற்றும் டெங்கு காச்சலைப் பரப்பும் கொசுக்களை ஒழித்தல்.

தேவையான உபகரணங்கள் :

1. இரு அங்குல நீளம் இரு அங்குல அகலம், ஒரு அங்குல உயரமுள்ள தட்டையான பரப்புள்ள கற்கள் இரண்டு. பக்கத்தில் எங்காவது கட்டிட வேலை நடந்தால் அங்கிருந்து மார்பிள் அல்லது கடப்பா கற்கள் கிடைத்தால் நலம்.

2. 100 மி லி அளவுள்ள சீசா நிறைய மயக்கமருந்து. சீசா மீது குளோரோபார்ம் என்று லேபில் இருந்தால் அகற்றிவிடவும் (காரணம் கடைசியில்). மயக்க மருந்து கிடைக்கவில்லையெனில் மாற்று ஏற்பாடு கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது.

3. பஞ்சு ரோல் – 1

4. 6 அடி நீளமும் 3 அடி அகலமும் உள்ள கெட்டியான போர்வை. காதி பவணில் வாங்குவது உசிதம்.

5. ஒரு டப்பா குளுக்கோஸ் பவுடர்.

செய்முறை:

முதலில் நல்ல காற்றோட்டமுள்ள இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். படுக்கை விரித்துத் தயார் செய்யவும். அரைமணி நேரம் கழித்து கதவு மற்றும் ஜன்னல்களை மூடவும். படுக்கையில் படுக்குமுன் தயார் செய்த கற்கள், பஞ்சு, மயக்க மருந்து ஆகியவற்றை தலைமாட்டில் தயாராக வைத்துக் கொள்ளவும். போர்வையால் முழு உடலையும் மூடிக் கொண்டு ஒரு கையை மட்டும் வெளியே நீட்டியவாறு படுக்கவும். உங்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களை அசைபோடவும்.

முதலில் ஒரு கொசு வந்து வெளியே நீட்டியிருக்கும் கையில் இடம் பார்த்து அமரும். நன்றாக அமர்ந்து விட்டது என்று உறுதியானபின், போர்வைக்குள் இருக்கும் இன்னொருகையை நீட்டித் தலை மாட்டில் இருக்கும் மயக்கமருந்தை பஞ்சில் நனைத்து கொசுவின் மூக்கில் காட்டவும். கொசு மயங்கி விடும். ஒரு கல்லை எடுத்து மயங்கிய கொசுவை அதன் மீது சரியாக நட்ட நடுச் செண்டரில் வைக்கவும். இரண்டாம் கல்லை வைத்து ஓங்கி அடிக்கவும். அதிகச் சத்தம் வராமல் பார்த்துக் கொள்ளவும், மற்ற கொசுக்கள் பயந்து பின்வாங்கும் அபாயமுள்ளது.

இது போல பிற கொசுக்களுக்கும் தொடரவும்.

மயக்க மருந்து கிடைக்காதவர்கள் பலநாட்கள் துவைக்காத தங்கள் ஷாக்ஸை கொசு முகத்தில் காட்டினால் போதும அல்லது கொசுவின் கஷ்கத்தில் கிச்சு கிச்சு மூட்டலாம். பிற செய்முறைகள் அதே.

சீசாவின் லேபிலை அகற்றச் சொன்ன காரனம், கொசுக்கள் பொதுவாக எழுத்தறிவு இல்லாதவை என்றாலும் இளைய தலைமுறைக் கொசுக்களுக்குப் படிக்கத் தெரிந்திருக்கும், அவை மற்ற கொசுக்களை உஷார் படுத்திவிட வாய்ப்புண்டு.

முடிவு :
வீட்டுக்கு ஒரு இளைஞர் தங்கள் சுகதுக்கங்களைத் தியாகம் செய்து இந்நடவடிக்கையில் இறங்கினால், மனிதகுல அழிவுக்குக் காரணமான கொசு இனத்தை பூண்டோடு ஒழித்துவிடலாம்.

டிஸ்கி : குளுக்கோஸ் டப்பா எதுக்குன்னு உங்களுக்கு இன்னும் தெரியல்லன்னா இப்பத் தெரிஞ்சுக்குங்க. கொசு அடிச்சு டயர்டா ஆச்சுன்னா தண்ணியில குளுக்கோஸ் கலந்து குடிச்சா தேவையான சக்தியும் உறசாகமும் உடனடியாகக் கிடைக்கும் அதுக்குத்தான்
.

இந்தப் பதிவப் படிச்ச பதிப்புல எழுதுனது

Advertisements

கோடி ரூபாய் புராணம் – வால் பையன்

எனக்கு பேங்க் அக்கவுண்ட் அறிமுகமானது நண்பன் அனந்த ராமன் மூலமாக. அதன் பிறகு சில நாட்கள் பேங்க் ஸ்டேட்மெண்ட் படிக்க மட்டும் செய்தேன். சென்ற நவம்பர் மாதத்தில் ஒரு நாள் (தேதி கிழமை ஞாபகம் இல்லை, பழைய பாஸ்புக் தொலைந்து விட்டது) ஒரு பேங்க் அக்கவுண்ட் ஆரம்பித்தேன். தற்செயலாகத்தான் இந்த பேங்கில் ஆரம்பித்தேன். 1000 ரூபாயுடன் ஆரம்பித்த எனது அக்கவுண்டில் இன்று ஒரு கோடி ரூபாய் இருக்கிறது.

ஆனால் சில நாட்களாக இத்தோடு இந்த அக்கவுண்டைக் குளோஸ் செய்துவிடலாமா என்னும் அளவுக்கு மன உளைச்சல். நான் ஏதோ பேங்க் ஊழியர்களிடம் விளையாட்டாகப் பேசப்போய் பன்முனை தாக்குதலில் மாட்டி கொண்ட மான் போல ஆகிவிட்டேன். நான் செய்த தவறு பேங்க் சீனியர் மேனேஜரிடமே வாதம் செய்தது.

சில மாதங்களுக்கு முன்னாள் அக்கவுண்டில் வரிசையாக பத்து சலான்கள் நிரப்பி கலக்சன் போட்டேன். ஆனால் ஒரு சலான் கவுண்டர் பாயில் எனக்குக் கிடைத்தது. உடனே அவரது அலைபேசிக்கு அழைத்துக் கேட்டேன். அவ்வளவு சலான்கள் தேவையில்லாதது, 10 செக்காக இருந்தாலும் ஒரே சலானில் எழுதலாம், அதனால் ஒன்றை மட்டும் கலக்சன் அனுப்பினேன் என்று கூறினார், அவருக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். அப்பொழுதெல்லாம் அவருக்கு என் அக்கவுண்ட் பிடிக்காது என்று நினைத்தேன், அவருக்கு என்னையவே பிடிக்காது என்று இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்.

கடைசியாக வந்த சர்ச்சைக்குரிய ட்ரான்ஸாக்சன் பற்றி நான் ஏதும் தவறாக கூறவில்லை. ஸ்டேட்மெண்டில் இறுதியாக “இந்த ஸ்டேட்மெண்டுக்கு நீங்கள் கன்ஃபர்மேசன் கொடுத்து என்னை பெரியாளாக்க வேண்டாம், அதை உங்கள் அசிஸ்டண்ட் பார்த்து கொள்வார்” என்று எனது ஆடிட்டருக்கு எழுதியிருந்தார்.
நான் “என் அக்கவுண்டில் கிரிடிட் வரவில்லையே என்று பார்த்தேன் வந்து விட்டது” என்று தான் எழுதியிருந்தேன். அது முதல் நான் எப்பொழுது பேங்கில் பணம் போட்டாலும் எடுத்தாலும் என் மொபைலுக்கு SMS வருவது போல் செட் செய்து விடுவேன், அப்போதும் அதைத் தான் செய்திருந்தேன். மற்ற ட்ரான்சாக்சன்கள் மட்டும் வந்ததால், என் அந்த குறிப்பிட்ட ட்ரான்ஸாக்சனை ரெக்கர்டு செய்வீர்களா என்று கூட கேட்டிருந்தேன்.

அதற்கு பதில் அவர் வித்தியாசமாய் கொடுத்ததால் அங்கே செய்யும் விவாதத்திற்கு பதிலாக நானே ஒரு கம்ளெயின்ட் எழுத வேண்டியதாயிற்று. சமீபத்தில் நண்டு நாகேந்திரன் , யாரு நிவேதிதா, ரமணா சுதாகர் போன்றவர்களின் ஸ்டேண்ட்மெண்டில் ட்ரன்சாக்சன்கள் சரியாக இருந்தன.

நான் என்ன துரோகம் அவர்களுக்கு செய்தேன், நான் ஸ்டேட்மெண்ட் கேக்கும்போதெல்லாம், ஸ்டேசனரி இல்லை, பிரிண்டர் வேலை செய்யவில்லை என்று சொல்கிறார்கள். எனக்கு வேறு பெயரில் பேங்க் அக்கவுண்ட் இருப்பதாகவும் சொல்லி ஒரு கும்பல் புரளியை கிளப்பி கொண்டு திரிகிறது.

அது போல் நான் செய்வதில்லை என்று பலமுறை சொல்லியிருக்கிறேன், என் செக்குகளை என் அக்கவுண்டில் போடமுடியாமல் பினாமி அக்கவுண்ட் வைத்திருக்கும் அளவுக்கு இன்கம் டேக்ஸ் பிரச்சினை இல்லை.

இவர்களுக்கு நான் எப்படி தான் நம்ப வைப்பது, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் சத்தியம் என்ற வார்த்தை உண்மையுடன் இணைந்துள்ளது என்று நம்புகிறேன். நான் கட்டிய ஒரே வீட்டின் மீது ஆணையாக நான் பினாமி அக்கவுண்ட் வைத்ததில்லை, வைத்திருக்கவில்லை, வைக்கப் போவதுமில்லை. இதற்கு மேல் நம்பினால் நம்புங்கள் நம்பாட்டி போங்கள்.

இந்த வீணாய் போன பேங்க் அக்கவுண்ட் உனக்கு என்ன தந்தது என்று கேட்டால் வசதியும், பாதுகாப்பும் என்று சொல்லி வந்தேன். ஆனால் நான் கொஞ்சமும் எதிர்பாராத, நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் ஒரு நண்பர், நான் தான் அனில் அம்பானி பெயரில் அக்கவுண்ட் வைத்திருக்கிறேன் என்று சொல்லி வருவது பெருத்த காயத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது.

எனக்கு SB அக்கவுண்டைத் தவிர வேறொரு அக்கவுண்ட் உண்டு. அதுவும் இதே பேங்கில் தான் இருக்கிறது, எனது வியாபார நிமித்தமாக அதை பயன்படுத்தி வருகிறேன், பல ஊர்களிலிருந்து நான் வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்குவதால், அந்த பணத்திற்குன்டான தனிக் கணக்கு வைக்க வேண்டியுள்ளது. கணக்குச் சரி பார்க்க , அந்த அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட்டை எனது வாடிக்கையாளர்கள் கேட்கும் போது அளிக்கிறேன். இது தவிர நான் வேறு எந்த அக்கவுண்டிலும் போடுவதில்லை, எடுப்பதில்லை.

பொதுவாக நான் எந்த கட்சிக்கும் ஆதரவாளன் இல்லை, வாழ்க, ஒழிக கோஷம் போடுவது எனக்கு பிடிக்காது, ஆனால் வங்கி அரசியல் அதை வி்ட கேவலமாக இருக்கிறது. ஒரு சில நபர்களால் நான் மற்ற நண்பர்களையும் இழந்து விடுவோனோ என பயம் வருகிறது எனக்கு.

நான் பேங்க் அக்கவுண்ட் தொடங்கி எந்த புரட்சியையும் செய்து வி்டப் போவதில்லை, சர்ச்சைக்குரிய அக்கவுண்டில் யாரும் எனக்காகப் பணம் போடப் போவதில்லை. எனக்கு மன உளைச்சலே மிச்சமாகிறது.

இருப்பினும் என் மீது அவதூறு பரப்புவதற்கு அவர்களுக்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும். நானே விவாதம் என்ற பெயரில் சுப்பையா வாத்தியார், நண்பர் கூடுதுறையின் ஸ்டேண்ட்மெண்டுகளில் சந்தேகம் எழுப்பி மன உளைச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறேன். அதே போல் வேறு எங்கும் தவறு நடந்திருக்கலாம்.
இந்த இடத்தில் நான் அப்படியேதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று பகிரங்க மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

இவ்வளவு நடந்தும் என் மீது நம்பிக்கை வைத்து என்னை நம்பும், எனக்கு கடன் கொடுக்கும் நண்பர்களுக்கு நான் கோடான கோடி கடன் பட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

இத்துடன் எனது கோடி ரூபாய் புராணம் முடிந்தது.

டிஸ்கி : வால் பையனின் இந்தப் பதிவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பரிசல்காரனின் இந்தப் பதிவுக்கு சம்பந்தம் இருக்கான்னு நீங்கதான் சொல்லனும்

நீங்க என் மனைவி நான் உங்க கணவர்

எழுதும்போது வரும் தவறுகள் சில சமயம் சிரிப்பை வரவைத்தாலும், அர்த்தம் மாறும் பொழுது சொல்ல வந்தது அடிபட்டுப் போகிறது.

கமா, முற்றுப் புள்ளி மற்றும் அரைப் புள்ளி முதலியன ஒரு வாக்கியத்தில் வர வேண்டிய இடத்தில் வராவிட்டாலும், வரக்கூடாத இடத்தில் வந்தாலும் அர்த்தம் அனர்த்தமாகிவிடுகிறது.

நான் 10ஆவது படிக்கும்போது, என் தமிழாசிரியர் ராமச்சந்திரன் இதில் மிகக் கடுமையாக இருப்பார். அதன் அத்தியாவசியம் குறித்து அவர் சில உதாரணங்கள் தந்தது இன்னும் மனசிலிருக்கிறது.

கமா இல்லாமல் குழப்பம்.

இரண்டு நண்பர்கள் எதிரெதிர் வீடு, டூர் போலாம்னு முடிவு செய்றாங்க.
ரெண்டு பேருக்குமே குழந்தைகள் உண்டு. பசங்களக் கூட்டீட்டுப் போறதா இல்லை பெற்றோரிடம் விட்டுட்டுப் போறதா என்பதில் குழப்பம்.

கணவரிடமிருந்து சரியான பதில் கிடைக்கதால், கடுப்பான மனைவி, எதிர் வீட்டுக் காரரை அணுகி கேட்டாங்க “ ஏங்க முடிவா யாராரு டூர் போறோம்?”.

அதுக்கு அவரு சொன்னாரு,”நீங்க என் மனைவி நான் உங்க கணவன்”

கமா வைக்கக்கூடாத இடத்தில் வைத்ததால் குழப்பம்.

தினசரியில் தலைப்புச் செய்தி :
விவசாயிகளுக்குக் குமரி, மாவட்ட ஆட்சியர் உத்திரவு.

ழ, ல, ள குழப்பம் தவிர்க்க வேண்டும்.

பழம் சாப்பிட்டாப் பலம் வரும்.

அதிகப் பளு தூக்கினா முதுகெலும்பு பழுதாகிடும்.

பள்ளிக்கூடத்தில் பல்லி அதிகமா இருக்கும் அதுக்காக பல்லிக்கூடம்னு எழுதக் கூடாது.

பாலத்தின் மீது போட்ட தார்ச்சாலை வெயிலுக்கு பாளம் பாளமாக வெடிக்கும்.

சம்பளம் வாங்கினா ’சம்’ பலம் வரும் அதுக்காக சம்பலம்னு எழுத வேண்டாம்.

குதிரைக்குக் குளம்பு இருக்குங்கிறதுக்காக அதக் குழம்பு வைக்கச் சொல்லக்கூடாது.

காள் காள்னு கத்துனாலும் கழுதைக்கு இருப்பது நாலு கால்.

அறையில் பாதி இடம்தான் உங்களுக்கு என்றாலும் நீங்கள் அரைவாசி ஆகமாட்டீர்கள்.

வெள்ளம் வடிந்தபின் கரையெல்லாம் கறை படிந்திருக்கும் அது வெள்ளக் கறை; வெல்லக் கறை அல்ல.

கப்பல் துறைமுகம் வந்ததும்தான் துரை முகத்தில் களை.

காலையில் எழுந்து பல் விளக்க வேண்டும், விலக்க கூடாத பழக்கமிது.

ஆங்கில வார்த்தைகளைத் தமிழில் எழுதும் போது

பக்கத்து வீட்டு ‘ஆன்ட்டி’ – ஆண்டி யாகும் போது பாவமா இருக்கு.

நீங்களும் பின்னுட்டத்தில் இரண்டு வாக்கியங்கள் எழுதுங்கள்.

பரிசலும், கோவியும் பின்னே ஞானும்.

விசித்திரமானது பரிசல் மனம். அவியல் ஆன்மிகம் அனைத்துப் பொருள் உரைத்தாலும் மிகச் சரியாக பரிசல் மனம் என்பது எப்படி செயல்படுகின்றது என்பதற்கான தெளிவுரை எவருமே இதுவரை எழுதவில்லை.

ஒரு நாளைக்கு பரிசல் மனத்தில் தோன்றும் எண்ணங்கள் சுமார் 40,000 வரை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இவை சனி, ஞாயிறு வேறுபடலாம்.

பரிசல் மனதில் தோன்றும் பதிவுகளில் முதன்மையான இருவகைகளில் ஒன்று நல்ல பதிவுகள், மற்றது கும்மிப் பதிவுகள், இதைத் தவிர்த்து மூன்றாவதாக ஒருவகை பதிவுகள் உண்டு அவை விடைபெறுகிறேன் பதிவுகள் என்ற வகையில் வரும்.

பரிசலுக்கு பதிவுகள் உற்பத்தி தன்னிச்சையான செயல் போன்றது தான். தட்டச்சு செய்யும் போது ஒவ்வொரு விரலையும் சிந்தித்து சிந்துத்து அழுத்துவதில்லை. பழக்கத்தின் காரணமாக நினைக்க நினைக்க அடித்துக் கொண்டே இருக்கும், நமது விரல் செயல்படுகிறது என்ற உணர்வே இல்லாது தட்டச்சு செய்வது போன்றது தான் பரிசல் மனதில் தோன்றும் பதிவுகள். அவை அனிச்சையானது. அடுத்த வினாடியில் செய்ய வேண்டியது எதுவுமில்லை என்றாலும் சிந்தனைகளில் எதாவது பதிவு ஓடிக் கொண்டே இருக்கும்,

புதுப்பதிவருக்கு பின்னுட்டம் வரும் வரை பதிவுகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் அதன் பிறகு அலை அலையாய் பதிவுகள் ஏற்பட்டு கும்மி வளர்ச்சியின் விதையாக மாறிவிடும். ஆரம்பத்தில் தேடலாக தொடங்கும் பதிவுகள் பிறகு மொக்கையாக மாறிவிடும்.

பரிசலால் சிந்திக்கக் கூடிய (அதாவது சுய சிந்தனை) நிலையில் அவர் மனதில் மேற்சொன்ன பகுப்பில் (நல்ல / கெட்ட / தேவையற்ற) பதிவுகள் சுழல ஆரம்பிக்கின்றன. இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே அவருக்குத் தோன்றும் பதிவுகள் சுமார் 50 இருக்கும். ஒரு இரண்டு நிமிடம் எதுவுமே செய்யாமல் அவர் மன ஓட்டத்தை மட்டுமே கவனித்தால் அவர் எப்படியெல்லாம் பதிவுகள் போடுகிறார் என்பது பற்றி அறிவீர்கள், அந்த இரண்டு நிமிடத்தில் தோன்றிய பதிவுகளில் 90 விழுக்காடு நல்ல பதிவுகளாகவே இருக்கும்.

பரிசலுக்கு பதிவு எழுதும் அயற்சியைவிட கும்மிப் பின்னுட்டமிடும் அயற்சியே சோர்வை மிகுதியாகத் தரும். இந்த சோர்வின் மூல காரணிகளே அதிகப் கும்மிதான். நல்ல பதிவுகள் மனச்சோர்வை ஏற்படுத்தாது மாறக உற்சாகம் தரும், விடைபெறுகிறேன் வகைப் பதிவுகள் மனச்சோர்வை ஏற்படுத்தும். அவர் எழுதியதில் 10% கும்மிப் பதிவுகளும், 80% நல்ல பதிவுகளும் இருக்கிறது.

அவரது மூளையில்(?) இருந்துதான் பதிவுகளுக்கான சக்திகள் செலவிடப்படுகின்றன. மூளை தொடர்ந்து இயங்கும் போது தேவையற்ற பதிவுகளுக்கான சக்தி குறைந்து மனச்சோர்வாகிறது. உடல் நலம் மனநலத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதால் உடல்சோர்வும் ஏற்படுகிறது. தகுந்த பயிற்சியின் மூலம் தேவையற்ற பதிவுகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். வெற்றிப் பதிவாளர்கள் அனைவருமே இலக்கு ஒன்றின் மீதான குறியில் ஒருமுகமாகி தேவையற்ற பதிவுகளைக் குறைத்துக் கொண்டவர்கள் தானே.

இன்னும் எழுதலாம் படிப்பவர்கள் சோர்ந்துவிடுவார்கள் ! – இது இங்கு நான் எழுதிய கும்மிப் பதிவு! 🙂

டிஸ்கி : ஒன்னும் புரியலைன்னா கோவி எழுதிய இந்தப் பதிவு பாருங்க. பரிசல் எழுதுன(?) இந்தப் பதிவையும் பாருங்க

நகைச்சுவையுங்க – 3

காட்டுக்குள் இரண்டு நண்ப்ர்கள் நடந்து போய்கொண்டிருந்தார்கள். திடீரென்று புலி உறுமும் சத்தம் கேட்கவும், அவசரமாக் ஓடத் தயாராகின்றனர். தன் ஷீ லேசை சரி செய்து கொண்டு ஓடுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தவனைப் பார்த்து மற்றவன் கேட்டான்,

”நண்பா, அந்தப் புலியைவிட வேகமா ஓடிட முடியும்னு நீ நம்புறியா?”

அதற்கு, சிரித்துக் கொண்டே அவன் சொன்னான், “ நான் புலியைவிட வேகமாக ஓட வேண்டியதில்லை, உன்னைவிட வேகமா ஓடினாப் போதும்!”

மனைவி : ஏங்க, என்கிட்ட உங்களுக்குப் ரெம்பப் பிடிச்சது என் அழகா? அன்பான மனமா? பணிவான குணமா?

கணவன் : ” உன்னோட இந்தக் காமெடிதாம்மா.”

தன் கம்பெனியைச் சுத்திப் பார்க்க முதலாளி ரவுண்ட்ஸ் வந்துகிட்டிருந்த நேரம். ஒருத்தன் மட்டும் வேலையே செய்யாமல், சுவர் மேல் சாய்ந்து பராக் பார்த்துக் கொண்டிருந்த்தான்.

மெதுவாக அவனிடம் போய் கனிவாகக் கேட்டார், “தம்பி உனக்கு மாசம் எவ்வளவு சம்பளம்?”

“அவன் ரெம்ப சாதாரணமாகவே பேசினான், “2500 ரூபாய் , ஏன் கேக்குறீங்க”

அதற்குப் பதில் கூடத் தராமல் தன் பர்ஸிலிருந்து 5000 ரூபாயைக் கொடுத்து
” நான் இங்கே வேலை செய்யறதுக்குத்தான் சம்பளம் தர்றேன். இப்படி சும்மா நிக்கறதுக்கு இல்லை. இந்தா இரண்டு மாசச் சம்பளம். எடுத்துகிட்டுப் போயிடு! இனிமே வரவேண்டாம்”னு துரத்தீட்டார்.

அவனும் அதவாங்கீட்டு கூலா வெளிய போயிட்டான்.

அதுக்கப்புறம் அங்கிருந்த மற்ற உழியர்களப் பார்த்து, “ இப்படிப்பட்டவர்களுக்கு இனிமே இதுதான் கதி”னு கடுமையா எச்சரிச்ச முதலாளி, “ அந்த ராஸ்கல் எந்த டிபார்ட்மெண்ட்?”னு கேட்டார்.

கூட்டத்திலிருந்து ஒரு குரல் “அவன் கூரியர் பையன் சார்!”

டிஸ்கி : என் மகளின் activity நோட்டிலிருந்து எடுக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமையா உம்புள்ளய இட்டா

ஒரு தபா, ராம கிருஷ்ணரான்ட அஞசலயும் அவ பையனும் போனாங்க.

அஞ்சல சொல்லிச்சி, “சாமீ எம்புள்ள அஸ்கா தின்னுக்கினேக்கீரான். எம்மாஞ் சொல்லியிம் தின்னுக்கினேக்கீரான். கொடலு வெந்துபூடுமாமே அல்லாரும் சொல்லிக்கினாங்க. கரீக்ட் பண்ணு சாமி” ச்சு

ராமகிருஷ்ணர், அந்தப் பையன ஒரு லுக் விட்டுக்கினாரு. இன்னாவோ ரோசிச்சாரு. அப்பாலிக்கா, “ வெள்ளிக்கிழமையா உம்புள்ளய இட்டா” னாரு.

வெள்ளிகிழமை போச்சொல்ல, “ அஸ்கா தின்னுகினீன்னா கொடலு வெந்துபூடும், கைகால் வெளங்காதுபூடும், வயசாச்சொல்ல பேஜாராப்பூடும்” னாரு.

அஞ்சல கேட்டுச்சி, “ஏஞ்சாமீ, இத்த அன்னிக்கெ சொல்லீருக்லாம்ல, இன்னாத்துக்கு இன்னொரு தபா வரச்சொல்லி எங்கள வீனா அலய வுட்டே?”

அதுக்கு ராமகிருஷ்ணரு, “அஞ்சலை எனிக்கே அஸ்கா திங்கிற பயக்கம் கீரப்ப, நா இன்னான்னு உம்புள்ளையாண்ட சொல்லுவேன். நான் மொதோ ஸ்டாப் பண்ணிக்கினு அப்பால அவனுக்கு அட்வைஸ் வுட்டுகினே” னாரு

டிஸ்கி : இந்தக் கதையச் சொல்ல இப்ப இன்னா அவசரம்?

தமிழ்மண நிர்வாகிகளுக்கு ஒரு திறந்த மடல்

அன்புள்ள தமிழ்மண நிர்வாகிகளுக்கு,

வலையுலகில் தற்போதைய நிலவரம் உங்களுக்குத் தெரியுமா?

கொஞ்ச காலம் தசாவதாரம், குசேலன் என்று சூடான பதிவுகளாக வந்து கொண்டிருந்தது. ஆனால் தற்பொழுது இவர் அவருக்கு எழுதிய பகிரங்கக் கடிதம் தான் வலையுலகின் லேட்டஸ்ட்.

அடிக்கடி நேருக்கு நேர் அல்லது தொலைபேசியில் அல்லது சாட்டில் பேசிக்கொள்ளுபவர்களே இந்த வேலையைச் செய்வதுதான் உச்சகட்டக் கொடுமை.

இன்னும் கீழ்க்கண்ட கடிதங்கள் வருமுன் இதற்கு ஒரு தடா போட வேண்டியது உங்கள் தலையாயக் கடமை.

தங்கமணிக்கு ரங்கமணி
வைரமுத்துவுக்குக் கலைஞர்.
ஓட்டுனருக்கு நடத்துனர் .
கம்பெளண்டருக்கு டாக்டர்.
உதவி ஆசிரியருக்குத் தலைமை ஆசிரியர்.
வாகன ஓட்டுனருக்கு உரிமையாளர்
மாணவருக்கு ஆசிரியர்.
சர்வருக்கு சரக்கு மாஸ்டர்.
சித்தாளுக்குக் கொத்தனார்.
சால்னா விறபவருக்கு சரக்கு விறபவர்.
பின்னுட்டமிடுபவருக்கு பதிவர்
குடியிருப்பவருக்கு வீட்டு உரிமையாளர்

ஆகவே தமிழ்மண நிர்வாகிகளே, இந்தப் போக்கைத் தடை செய்யுங்கள். அல்லது குறந்தபட்சம், தமிழ்மண முகப்பில் ஒரு பகுதியை இதற்கென்று ஒதுக்குங்கள். பதிவுகளை வகைப் படு்த்துவதில் திறந்த மடல் என்ற வகையையும் உருவாக்குங்கள். அந்தப் பகுதிக்கே நாங்கள் போகமால் தப்பிக்க இது உதவும். தயவு செய்து சூடனா இடுகையில் இந்தப் பதிவுகள் வராமல் பார்த்துக் கொள்வது தமிழ் பதிவுலகத்திற்கு நீங்கள் செய்யும் சிறந்த சேவையாகப் போற்றப் படும்.

இப்படிக்கு,

11-08-08 மாலை வரை நன்றாக இருந்தவன்.

குறிப்பு : விக்னேஸ்வரன் என்ற பதிவ்ரின் பின்னுட்டங்களத் திரட்ட வேண்டாம்.
அவரிடம் இந்தவகைப் பதிவுகளுக்கான நிரந்தர பின்னுட்ட டெம்ப்லேட்டுகள் அதிகமுள்ளன. அவைகளைக் கொண்டு சரமாரியாக எல்லோருக்கும் பின்னூட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்மணத்திலிருந்தே அவரைத் தூக்குவது நல்லது.

குறிப்பு 2 : இவவகைப் பதிவுகளிட்டவர்களை குறித்துவைத்துக் கொண்டு எதிர்காலத்தில் அவர்களை நட்சத்திரப் பதிவர்களாக ஆக்காமல் எங்களக் காக்க வேண்டுகிறோம்.

டிஸ்கி : லதானந்த், பரிசல், வால்பையன், நந்து f/o நிலா, ஜெகதீசன், நமக்கல் சிபி, தமிழ்ப் பிரியன் முதலானவர்களை எந்த விதத்திலும் இந்தப் பதிவு நேரடியாகவோ மறைமுகவாகவோ குறிக்கவில்லை.

டிஸ்கி 2: கவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டுப் புகைப் படங்களையும் வண்ணங்களையும் தவிர்த்திருக்கிறேன்

வசூல் சக்ரவர்த்தி

சமீபத்தில் படித்த ஜோக் எதில் என்பது மறந்துவிட்டது.

பயனிகள் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரனமாக ஆளில்லாத தீவு ஒன்றில் இறக்கப்படுகிறது.

தீவில் மனித நடமாட்டமே கிடையாது எந்த அடிப்படை வசதியுமில்லை.

விமானமும் சரிசெய்யப்பட்டு கிளம்பும் என்ற நம்பிக்கை இல்லை.

ஆனால் ஒருவர் மட்டும் நம்பிக்கையோடு மிகவும் மகிழ்ச்சியாக இருககிறார்.

“எப்படிங்க ”

“இந்தமாதம் ஊருக்குப் போயிருந்ததால கிரிடிட் கார்டுக்குப் பணம் கட்டல. கார் கடனுக்கும் பணம் செலுத்தவில்லை. அனேகமாக வீட்டுக்கடனையும் கட்டியிருக்க மாட்டாள் என் மனைவி. எப்படியும் கடன வசூலிக்க நம்மத் தேடி வந்துருவாங்க கவலப் பட்டாதீங்க”

டிஸ்கி : இதுக்கும் குசேலனுக்கும் எந்த சம்பந்தமில்ல, ஹி ஹி.