தமிழ்

நீங்க என் மனைவி நான் உங்க கணவர்

எழுதும்போது வரும் தவறுகள் சில சமயம் சிரிப்பை வரவைத்தாலும், அர்த்தம் மாறும் பொழுது சொல்ல வந்தது அடிபட்டுப் போகிறது.

கமா, முற்றுப் புள்ளி மற்றும் அரைப் புள்ளி முதலியன ஒரு வாக்கியத்தில் வர வேண்டிய இடத்தில் வராவிட்டாலும், வரக்கூடாத இடத்தில் வந்தாலும் அர்த்தம் அனர்த்தமாகிவிடுகிறது.

நான் 10ஆவது படிக்கும்போது, என் தமிழாசிரியர் ராமச்சந்திரன் இதில் மிகக் கடுமையாக இருப்பார். அதன் அத்தியாவசியம் குறித்து அவர் சில உதாரணங்கள் தந்தது இன்னும் மனசிலிருக்கிறது.

கமா இல்லாமல் குழப்பம்.

இரண்டு நண்பர்கள் எதிரெதிர் வீடு, டூர் போலாம்னு முடிவு செய்றாங்க.
ரெண்டு பேருக்குமே குழந்தைகள் உண்டு. பசங்களக் கூட்டீட்டுப் போறதா இல்லை பெற்றோரிடம் விட்டுட்டுப் போறதா என்பதில் குழப்பம்.

கணவரிடமிருந்து சரியான பதில் கிடைக்கதால், கடுப்பான மனைவி, எதிர் வீட்டுக் காரரை அணுகி கேட்டாங்க “ ஏங்க முடிவா யாராரு டூர் போறோம்?”.

அதுக்கு அவரு சொன்னாரு,”நீங்க என் மனைவி நான் உங்க கணவன்”

கமா வைக்கக்கூடாத இடத்தில் வைத்ததால் குழப்பம்.

தினசரியில் தலைப்புச் செய்தி :
விவசாயிகளுக்குக் குமரி, மாவட்ட ஆட்சியர் உத்திரவு.

ழ, ல, ள குழப்பம் தவிர்க்க வேண்டும்.

பழம் சாப்பிட்டாப் பலம் வரும்.

அதிகப் பளு தூக்கினா முதுகெலும்பு பழுதாகிடும்.

பள்ளிக்கூடத்தில் பல்லி அதிகமா இருக்கும் அதுக்காக பல்லிக்கூடம்னு எழுதக் கூடாது.

பாலத்தின் மீது போட்ட தார்ச்சாலை வெயிலுக்கு பாளம் பாளமாக வெடிக்கும்.

சம்பளம் வாங்கினா ’சம்’ பலம் வரும் அதுக்காக சம்பலம்னு எழுத வேண்டாம்.

குதிரைக்குக் குளம்பு இருக்குங்கிறதுக்காக அதக் குழம்பு வைக்கச் சொல்லக்கூடாது.

காள் காள்னு கத்துனாலும் கழுதைக்கு இருப்பது நாலு கால்.

அறையில் பாதி இடம்தான் உங்களுக்கு என்றாலும் நீங்கள் அரைவாசி ஆகமாட்டீர்கள்.

வெள்ளம் வடிந்தபின் கரையெல்லாம் கறை படிந்திருக்கும் அது வெள்ளக் கறை; வெல்லக் கறை அல்ல.

கப்பல் துறைமுகம் வந்ததும்தான் துரை முகத்தில் களை.

காலையில் எழுந்து பல் விளக்க வேண்டும், விலக்க கூடாத பழக்கமிது.

ஆங்கில வார்த்தைகளைத் தமிழில் எழுதும் போது

பக்கத்து வீட்டு ‘ஆன்ட்டி’ – ஆண்டி யாகும் போது பாவமா இருக்கு.

நீங்களும் பின்னுட்டத்தில் இரண்டு வாக்கியங்கள் எழுதுங்கள்.

Advertisements

சுகன்யா(100/100)வின் மின் அஞசல்

கொஞ்ச நாளைக்கு முன்பு திருப்பூர் மாணவி சுகன்யா 5 பாடத்திலும் 100/100 வாங்கியது பற்றிப் பதிவிட்டிருந்தேன்.

அவருக்கு நான் ஒரு பாரட்டுக் கடிதமும் எழுதி அனுப்பியிருந்தேன்.

அதற்கு அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருகிறது.

Respected Sir /Madam,

I’m Suganya R, student of LRG Govt Arts College For Women, Tirupur. You had sent a congratulating letter to me for getting centum in my university examination. I’m so proud to receive that letter from you.That was a great reward given to me.

Thank you,

அவரைப் பாரட்ட நினைப்பவர்கள் அவரது மின்னஞ்சல் முகவரி வேண்டுமானால், vadakaraivelan@gmail.com என்ற முகவரிக்குத் தனிமடல் அனுப்புங்கள்.

விளம்பரத் தமிழ்

சில சமயங்களில்விளம்பர வாசகங்களை, ஆங்கிலத்திலிருந்தோ அல்லது இந்தியிலிருந்தோ வார்த்தைக்கு வார்த்தை அப்படியே தமிழ் படுத்துகிறார்கள். அதோடு நம்மையும் படுத்துகிறார்கள்.

1. இப்பொழுது வாழ்க்கை ஆகிவிட்டது ஜிங்கலாலா.

2. இதை விட மலிவாகவும் சிறப்பாகவும் வேறு இடத்தில் கிடைத்தால், மாறுபாடன இரட்டிப்பு பணம் வாபஸ்.

3. ஐத்தலக்கா ஆப்பர்.

யாராவது விளக்குங்களேன்.