பிள்ளை மனம்

vlcsnap-2014-01-20-00h13m00s73

அதிகப் பிரசங்கிகளாய் அல்லாது, சிறுவர்களை நல்லவிதமாகச் சித்தரித்த ஒரு தமிழ்ப்படமும் என் நினைவில் இல்லை. ஒன்று வயதிற்கு மீறிய சொல்லாடல்களால் அவர்களைக் காட்டியிருப்பார்கள், அல்லது வயதிற்கு மீறிய காரியங்களைச் செய்யும் கதாநாயக பிம்பங்களாக.

 இவ்விரண்டுமல்லாது சிறார்களை அவரது இயல்புடனே காட்சிப்படுத்துதல் தமிழில் இல்லை என்றே சொல்லலாம். சிறார்களின் உலகம் நாம் நினைத்திருப்பதற்கு மாறானது, சிறாராக இருந்துதான் நாமும் வளர்ந்திருக்கிறோம். என்றாலும், வழியில் தொலைத்த புதையல் அந்த வருடங்கள், அப்பொழுது நிலவிய மனநிலை, ஒரு போதும் திரும்பக் கிடைக்காததுமாகும்.

சிறார்கள் உலகம் கேள்விகளால் நிறையப் பெற்றது. கேள்விகள், அக்கேள்விகளுக்குக் கிடைக்கும் பதில்கள் மூலமாகவே தங்களைச் சமைத்துக் கொள்கிறார்கள். கேள்வி கேட்க கிடைக்கும் வாய்ப்பும், அனுமதி(!?)யும் ஒருவனைத் தன்னம்பிக்கை உள்ளவனாக வார்த்தெடுக்கிறது. அல்லாது, தயக்கத்துடன், தனக்குள் புதைத்துக் கொள்ளும் கேள்விகள் எதையும் தேடிக் கற்கும் ஆவலைத் தடை செய்கிறது.

உண்மையில் கதை என ஏதுமில்லாத படம் இது. தனது ஆசிரியரிடம் நெருக்கமாகப் பழகும் அனில் அவர் கேட்டுக் கொண்டதற்கினங்க 101 கேள்விகளை எழுத ஒப்புக் கொள்கிறான்; ஒரு கேள்விக்கு ஒரு ரூபாய் என்ற அடிப்படையில்.

100 கேள்விகளை எழுதி முடித்துவிடும் அவனது 101 ஆவது கேள்வி என்ன என்பதே படம்.

அனிலாக நடித்திருக்கும் சிறுவனின், முகபாவனைகளும் உடல்மொழிகளும் வெளிப்பட்டிருக்கும் விதம் அபாரம். சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் என தங்களுக்குத் தாங்களே சுய விளம்பரம் செய்துகொள்ளும் தமிழ்த் திரையுலக சமகால நடிகர்கள் எவரேனும், இச்சிறுவன் செய்திருக்கும் பங்களிப்பில் 10சதமானம் திரையில் காட்டிவிட இயலுமெனில் தங்கள் பட்டங்களுக்கு நேர்மை செய்தவர்களாகி விடுவர்.

”தருவோ அம்மே?” என்று வினாத் தொக்க விழி ஏந்திப் பார்க்கும் பார்வையில் சகலத்தையும் சொல்லி விடுகிறான், அனிலாக நடித்திருக்கும் மின்னான்.

இந்திரஜித் மற்றும் லீனாவைத் தவிர மற்ற எவரும் பிரபலமானவரகளல்லர். திரைப்படமும் அவ்வகையில் தனிப்பட்ட எவர் மீதேறிப் பயணப்படவும் இல்லை.

நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருப்பதும், மையத்திலிருந்து விலகாத தன்மையும் படத்தைத் தன்னளவில் முழுமையானதாக ஆக்குகிறது.

தவறவிடக்கூடாத படம்.

http://en.wikipedia.org/wiki/101_Chodyangal

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s