குறும்படம் – மஹாதேவன்

.

மதம் மாறியது புரியாமல் ஒரு சிறுவன் ”தின்னூறு இட்டு விடும்மா ”என்று அடம்பிடிப்பதிலிருந்து ஆரம்பமாகிறது குறும்படம். அந்தச் சிறுவனின் அம்மா அவனைப் போட்டு அடிக்கிறாள். சிறுவனின் அக்கா ஆசை ஆசையாக பூ, பொட்டு வைத்துக் கொள்ள முய்ற்சி செய்கிறாள். அந்தக் குழந்தையையும் அடித்து பூவைத் தூக்கி எறிகிறார்கள். அந்த ஊரில் மாரி அம்மன் கோவில் திருவிழா நடக்கிறது. எல்லா சிறுவர்களும் துள்ளிக் குதித்து சந்தோஷமாக கோவிலில் விளையாடிக் கொண்டிருக்க பெந்தேகோஸ்தேவுக்கு மாறிய குடும்பத்தினரின் குழந்தைகள் மட்டும் ஏக்கத்துடன் தொலைவில் இருந்து அவர்களைப் பார்த்தபடி இருக்கின்றன.

இப்படியாக சம்பவங்கள் நடந்து கொண்டிருக்க ஒருநாள் அரசுப் பணி ஒன்றுக்கு தேர்வு நடக்கவிருக்கும் தகவல் வருகிறது. பெந்தேகோஸ்தேவைச் சேர்ந்த ஒருவரும் வின்ணப்பிக்கிறார். இந்து-ஆதிதிராவிடர் என்று இருப்பவர்களுக்கு மட்டும்தான் சலுகை உண்டு. கிறிஸ்தவ-ஆதிதிராவிடருக்கு சலுகை கிடையாது என்று அரசு அலுவலகத்தில் சொல்லிவிடுகிறார்கள். பெந்தேகோஸ்தேவைச் சேர்ந்தவர் இந்து ஆதிதிராவிடர் என்று போலிச் சான்றிதழ் தயாரித்துக் கொடுத்துவிடுகிறார். தாசில்தார் அலுவலகத்தில் இருந்து சோதனைக்கு வரப்போகிறார்கள் என்ற செய்தி அவர்களுக்குக் கிடைக்கிறது.

பெந்தேகோஸ்தேயினர் வீட்டில் இருக்கும் ஏசுநாதரின் படங்கள், காலண்டர்கள், ஸ்டிக்கர்கள் அனைத்தையும் பிய்த்து எறிகிறார்கள். அந்த நேரம் பார்த்து பாதிரியார் அவர்களது வீட்டுக்கு வருகிறார். பிய்த்து எறியப்பட்ட ஏசுநாதர் படங்களை கையில் எடுத்தபடியே அந்த வீட்டுக்காரர்களை கூர்ந்து பார்க்கிறார். அவர்கள் அவமானத்தால் தலை குனிந்து நிற்கிறார்கள்.

“உங்களுக்கு இப்படிச் செய்யறதுல கொஞ்சம் கூட வெக்கமோ வேதனையோ இல்லையா..? கேவலம் ஒரு வேலைக்காக கர்த்தரையே தூக்கி எறிஞ்சிட்டீங்க இல்லியா?” என்று அவர்களைத் திட்டுகிறார்.

“நாங்க காலகாலமா கும்பிட்டு வந்த மாரியாத்தாவையும் மதுரை வீரனையும் எங்க மனசில இருந்தே தூக்கி எறியச் சொன்னீங்களே அது மட்டும் சரிதானா?” என்று கேட்கிறார் திண்ணையில் படுத்திருக்கும் கிழவி.

பாதிரியார் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.

*************************************************************************

இது மஹாதேவன் என்பவரின் வலயில் படித்த ஒரு பதிவு. இது அவர் பார்த்த குறும்படமா அல்லது அவரது கருவா எனத் தெரியவில்லை. குறும்படம் 1, 2,3,4,5 என 5 பதிவுகள் போட்டிருக்கார். ஐந்தும் அருமை.

குறும்படம் ஐந்தைத்தான் முதலில் படித்தேன்(நன்றி – ஹரன் பிரசன்னா) அருமையாக இருக்கு.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s