ரமாவா? ஆதியா?


நம்ம ஆதி திருமணம் செஞ்சுக்கப் போறீங்களா ஜாக்கிரைதை என்பதாக ஒரு பதிவு போட்டிருக்கார். நல்லாத்தான் இருக்கு ஆனா வழக்கம்போல ஆணாதிக்க மனோபாவம் தூக்கலா இருக்கு. அதோட இன்னொரு பக்கம்னு ஒண்ணு இருக்கு. எல்லோரும் வசதியா அதப் பாக்கிறதில்ல.

ஆணோட ரசனைக்குத்தான் பெண் ஒத்துப் போக வேண்டுமா? பெண்ணுக்கும் ரசனைகள் இருக்காதா? அவளோட ரசனை உசத்தி கம்மின்னு எதை வச்சு அளக்கிறீங்க. குத்துப் பாட்டு கேட்டா ரசனை கம்மியா? எத்தனை பெண்கள் குத்துப் பாட்டுன்னாலே முகம் சுளிக்கிறாங்க. உண்மையில் ஆண்கள்தான் குத்துப் பாட்டுக்கு குதியாட்டம் போடுறாங்க இல்லையா?

//*டிவியில் ‘மதுரக்கார மச்சானுக்கு ஜாஸ்திதான்.. மஸ்து ஜாஸ்திதான்..’ என்ற பாடல் ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென ‘எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுங்க இது..’ என்பாள். நீங்கள் என்ன செய்வீர்கள்? //

ஒண்ணும் செய்ய வேண்டாம். முடிஞ்சா ரசிங்க இல்லன்னா வேற வேலையப் பாருங்க. ஆனா 1967ல டான் பிராட்மேன் விளையாடின மேட்ச்ச 197ஆவது தடவையா இன்னும் பாக்குறீங்களே அது ஞாயமா?

//*ஒரு ச‌ம‌ய‌ம் ‘டூவீலரில் வ‌ர‌முடியாது, முதுகு வ‌லிக்கும். ஆட்டோ வேண்டாம், வீண்செல‌வு. ப‌ஸ்ஸில் வேண்டாம், ரொம்ப‌ கூட்டமாயிருக்கும்’ என்பாள். பிறிதொரு ச‌ம‌ய‌ம் ‘வீடுவீடுன்னே கிட‌க்கிறேனே.. எங்காவ‌து கூட்டிப்போயிருக்கீங்க‌ளா..?’ என்பாள் நான்குபேர் இருக்கும் போது. //

சரிதானே? பதிவர் சந்திப்புன்னா எதையாவது பொய் சொல்லி(ஆபீசில் அவசர வேலை) வெளியே போய்டுவீங்க. ரமாவை நெனைச்சுப் பாருங்க அய்யா. வாரம் முழுவதும் வெளிய சுத்துற ஆசாமிக்கு ஞாயிறு ஒருநாள்கூட வீட்டுல இருக்க முடியலை. ஆனா வாரம் முழுவதும் அந்த வீட்டுக்குள்ள வளைய வர்ரவங்களை வெளியே அழைச்சுட்டுப் போனா என்ன?

//*’ஹோட்ட‌ல் சாப்பாடே வேண்டாம். ஹைஜீனிக் இல்லை’ என்பாள். நீங்க‌ள் உள்ளூர‌ ம‌கிழ்வீர்க‌ள். ஆனால் உடல் ந‌ல‌மில்லாம‌ல் போகும்போதும், ப‌ய‌ண‌ங்க‌ளின் போதும் தெரியும் சேதி. ஒரு நாள் அவளுக்கு உட‌ல் ந‌ல‌மில்லாம‌ல் இருக்கையில் நீங்க‌ள் மிக்ஸியில் தேங்காய் அரைத்துக் கொண்டிருப்பீர்க‌ள். (சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் மூடி சரியாக நிற்காம‌ல், முக‌மெங்கும் பாதி அரைபட்ட தேங்காய்,மிள‌காய் அப்பியிருக்க‌ அல‌றுவீர்க‌ள்) //

ஒரு சட்னி கூட ஒழுங்க அரைக்கத் தெரியாத உங்களை அட்ஜஸ்ட் பண்ணிக் குடும்பம் நடத்துறதே பெரிய விஷயமில்லையா? எத்தனை முறை கடைக்குப் போய் வரச் சோம்பேறித்தனப் பட்டுட்டு நானே செய்யுறேனேன்னு சொல்லி கலவரத்தை உண்டு பண்ணியிருக்கீங்க. கடைசியில உடம்பு முடியாத ரமாவே சமைச்சு, நீங்க பண்ணி வச்ச குளறுபடிகளைச் சரி பண்ணின்னு அது சித்திரவதை இல்லையா?

//* இரண்டு வகை கறிகள், குழம்பு, ரசம், தயிர் என மதிய உணவுக்கு அடுக்கிவைப்பாள். நீங்கள் விரும்பும் வத்தலோ, அப்பளமோ அவளுக்கு நினைவே வராது. //

கஷ்டப்பட்டு ஆசையா ஆசையா அத்தனை அய்ட்டம் பண்ணி வச்சிருக்காங்க அதப் பாராட்ட மனசு வரலை. அப்பளமும் வடகமும்தான் கண்ணுல நிக்கிது. என்னிக்காவது அவளுக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு அதச் செஞ்சு அல்லது குறைந்தபட்சம் வாங்கியாவது கொடுத்திருக்கீங்களா?

//*’இன்னிக்கு ஆடிட் இருக்குது, அவசியமில்லாமல் போன் பண்ணாதே’ என்று படித்து படித்து சொல்லிவிட்டு சென்றிருப்பீர்கள். ஏதோ நீங்கள் சொல்வதைத்தான் தினமும் சமையல் பண்ணுவதைப்போல ‘சாய்ங்காலம் என்ன குழம்பு வைக்கலாம்?’ என்று மூன்று முறை போன் செய்து கேட்டுக்கொள்வாள். //

என்ன பெரிய ஆடிட்? செய்ய வேண்டிய வேலைகளை சொதப்பலாச் செஞ்சு வச்சிருப்பீங்க, அத ஆடிட் பண்ணுறவன குத்திக் காட்டி உங்க உண்மையான யோக்கியதை என்னன்னு டிரவுசரக் கழட்டுவான். கோபத்தைக் காட்ட முடியாம, போன் வந்தா, அவகிட்ட எரிஞ்சு விழுவீங்க. என்ன வேணும்னு சிம்பிளாச் சொல்ல வேண்டியதுதானே? இல்லைன்னா அவ ஒண்ண சமைச்சு வச்சிட்டுக் காத்திருக்க. இந்த டென்சன்ல ஏன் அதச் செஞ்சிருக்கலாமே இது எனக்குப் பிடிக்கலைன்னு நீங்கதான கத்துவீங்க.

/*உங்களுக்கு கடிதங்கள், பிரிஸ்கிரிப்ஷன்கள், ரெசிப்டுகள், முக்கிய பொருட்களின் பில்கள், பேங்க்,எல்ஐஸி,டாக்ஸ் பேப்பர்கள் முக்கியமானவைகளாக தோன்றும். அவளுக்கு அப்படித் தோன்றாது. சில சமயங்களில் கிரெடிட் கார்டு ஸ்டேட்மெண்ட் குப்பையில் காணக்கிடைக்கும். //

ஏதோ ரமாவுக்கு வேலை இல்லாம எல்லாத்தையும் குப்பையில போடுறதுதான் முழுநேர வேலைங்கிறமாதிரி இருக்கு. உண்மையில் நீங்க போட்ட குப்பைய ஒழிக்கவே நேரம் பத்துறதில்லை. எதை எங்க வச்சேன்னு தெரியாமத் தவிக்க்கிறதும் அத ரமா கரெக்டா எடுத்துக் கொடுக்கிறதும்தானே வழக்கம்.

//*முட்டையோ, நான்‍வெஜ்ஜோ எல்லாம் ஒன்றுதான் என்பீர்கள் நீங்கள். அவள் அவற்றை தனியாக ட்ரீட் செய்ய தனித் தனி பிளாஸ்டிக் தட்டுகளை வைத்திருப்பாள்.//

எப்படின்னாலும் அந்தத் தட்ட நீங்க கழுவப் போறதில்ல. உங்களுக்கு என்ன க்‌ஷ்டம். நல்ல நாளும் அதுவுமா கவிச்சி பொழங்குன பாத்திரத்தை தனியா வச்சிக்கிடலாம்ங்கிறது நல்ல பழக்கம்தானே. அப்படி இல்லன்னு குத்தம் சொன்னாக் கூடச் சரி. சுத்தபத்தமா இருக்கது ஒரு குத்தமாய்யா?

//* நீங்களும் துவைத்த மற்றும் துவைக்காத துணிகளை தனித்தனியாகத்தான் ட்ரீட் செய்வீர்கள். அவள் உங்களை விடவும் இரண்டும் தொட்டுவிடவே கூடாது என்பதில் சர்வ நிச்சயமாக இருப்பாள். //

ஆமா போட்ட டிரஸையே அயர்ன் பண்ணிப் போட்டுட்டுப் போற ஆளுக்கு இதுமாதிரி வகுப்புப் பிரிச்சு வச்சாத்தேனே வெளங்கும். போட்டதக் கழட்டிக் கண்ட எடத்துல போடுறதும் இன்னொரு நாள் அதைத் தேடுறதும், வழக்கம்தானே?. பீரோவுல அடுக்கி வச்ச துணிகளை கலைக்காம உங்க டிரஸ்ஸை எடுத்துப் போட்டுட்டுப் போனதா என்னைக்காவதுசரித்திரம் இருக்கா?

//* சில சமயங்களில் கோபத்தில் இரைந்து கத்துவாள். சமயங்களில் காதிலேயே விழாதவாறு முனங்கிக் கொண்டிருப்பாள். //

எப்படின்னாலும் உங்க ரியாக்சன் ஒண்ணுதானே. கல்லுளிமங்கன் மாதிரி ஒண்ணுமே கேட்காத மாதிரி இருக்கது. மீறிப் போனா சட்டைய எடுத்து மாட்டீட்டு ஜூட் விட்டுடுவீங்க.

//*பார்த்துப் பார்த்து எஸ்ரா புத்த‌க‌ம் ஒன்றை வாங்கி வந்திருப்பீர்க‌ள். போனில் பேசிக்கொண்டே அத‌ன் அட்டையில் கிறுக்கிவைப்பாள்.//

அவ்வளவு முக்கியமான புத்தகம்னா பத்திரமா வைக்க வேண்டியதுதானே. எதுக்கு கண்ட இடத்துல வைக்கிறீங்க. அவள் விகடனையோ, சினேகிதியையீ நீங்களும் அப்படித்தானே உபயோகப் படுத்துறீங்க. என்னைக்காவது அதுல வந்த எழுத்துக்களப் பத்தி ரமாகிட்டப் பேசியிருக்கீங்களா?

உங்களோட எல்லக் கிறுக்குத்தனத்தையும் தாங்கிகிட்டு வாழ்ந்தா உங்களோடதான் வாழ்வேன்னு இருக்க ரமாவப் புரிஞ்சுக்க ஒரு ஆயுள் போதாது உங்களுக்கு.

டிஸ்கி : எனக்கும் என் தங்கமணிக்கும் இருந்த உரசலைச் சரி பண்ண ஒரு சான்ஸ் கொடுத்த ஆதி வாழ்க.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s