சைக்கிள் கூடை நிறையப் புன்னைகைகள்

எதிர்பாராத திருப்பத்தில்
இடது பக்கம் ஒடிக்க
அவளும் இடது பக்கம் ஒடிக்க
மாற்றி வலது பக்கம் ஒடிக்க
அவளும் வலது பக்கம் ஒடித்து
நேராக்கி அவளும் நேராக்கி
மறுபடியும்
இடது வலது நேர்
அவளும் இடது வலது நேர்
கடைசியாக
இருவரும் கால் ஊன்றி
தகவல் இடைவெளியை
ஒரு புன்னகையில்
சரி செய்துக்கொண்டே
கடந்து வந்து விட்ட
ஒரு திருப்பத்தில்
எந்த தகவல் இடைவெளியும் இல்லை
அவளும் திரும்ப
நானும் திரும்ப

ரவிஷங்கர்

நன்றி ரவி. தின வாழ்வின் இது போன்ற கணங்களைக் கவிதையாக்குதல் எனக்குப் பிடிக்கும். பாத்ரூமில் ஒட்டி வைத்த ஸ்டிக்கர் பொட்டுக்கள் பற்றி ஈரோடு தமிழன்பன் ஒரு கவிதை எழுதியிருப்பார். தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

.

Advertisements

16 comments

 1. Thursday, April 2, 2009
  கவிதை(கள்) – 2

  எதிர்பாராத திருப்பங்களில்
  சந்தித்துக்கொள்கிறோம்
  நீயும் நானும்…

  வழிவிட்டு விலகி
  நடக்க விரும்பி
  இருவரும்
  இடவலமாய் திண்டாட
  தடுமாறுகிறது மனசு!

  namadukural.blogspot.com -ல் நான் எழுதிய கவிதை.

 2. பாராட்டுக்கள் … வீரபாண்டி IAS, a living example for விடா முயற்சி

 3. சுவர்களும் சுமங்கலியாய் என்பது போல வரும். படித்த நினைவிருக்கிறது.

 4. /தின வாழ்வின் இது போன்ற கணங்களைக் கவிதையாக்குதல் எனக்குப் பிடிக்கும். /

  எனக்கும். கலக்கியிருக்காரு ரவிஷங்கர்.

 5. /
  எதிர்பாராத திருப்பத்தில்
  இடது பக்கம் ஒடிக்க
  அவளும் இடது பக்கம் ஒடிக்க
  மாற்றி வலது பக்கம் ஒடிக்க
  அவளும் வலது பக்கம் ஒடித்து
  நேராக்கி அவளும் நேராக்கி
  மறுபடியும்
  இடது வலது நேர்
  அவளும் இடது வலது நேர்
  கடைசியாக
  இருவரும் கால் ஊன்றி
  /

  அப்பிடியே இங்க கட் பண்ணி சுவிசர்லாந் போயிடறோம் அங்க ஒரு செம குத்து பாட்டு!

  :)))))))))))))

 6. // எதிர்பாராத திருப்பத்தில்
  இடது பக்கம் ஒடிக்க
  அவளும் இடது பக்கம் ஒடிக்க
  மாற்றி வலது பக்கம் ஒடிக்க
  அவளும் வலது பக்கம் ஒடித்து
  நேராக்கி அவளும் நேராக்கி
  மறுபடியும்
  இடது வலது நேர்
  அவளும் இடது வலது நேர் //

  அடங்கொன்னியா… !! ரெண்டு பெரும் சைகிள்ல 8 போட்டு காம்பிசுட்டாங்கலாட்ட …..????

  கவிதை நெம்ப சூப்பர்…!! அழகான கவிதை.!!!!!

 7. /தின வாழ்வின் இது போன்ற கணங்களைக் கவிதையாக்குதல் எனக்குப் பிடிக்கும். /

  எனக்கும்தான்….பூங்கொத்து!

 8. அண்ணாச்சி,

  புல்லரிக்க வைச்சுட்டீங்க.சைக்கிள் கூடை நிறைய இன்ப அதிர்ச்சி.

  நன்றி. இது உயிரோசைக்கு அனுப்பிப்
  பிரசுரமாகவில்லை.பிறகு வலையில்.

  உங்க “கத்திக் கப்பல்” கவிதை பின்னூட்டத்தில்் என் லேட்டஸ்ட் கவிதை “டீவி பார்க்கும் போது கவலைகள்” பற்றி கருத்துக் கேட்டிருந்தேன்.

  வேறு ஒரு பிரச்சனையில் third umpire ஆக பிசியாக இருந்ததால் கவனிக்க முடியவில்லை?

  மீண்டும் நன்றி.

 9. ரவிஷங்கருக்கு வாழ்த்துக்கள்.
  அண்ணாச்சி,
  அடுத்தவங்க எழுத்த உங்க வலையில பிரசுரிச்சு, அந்த எழுத்துகளுக்கான முழு பாராட்டும் அவங்களுக்கு போக செய்யிற உங்க பெருந்தன்மை போற்றுதலுக்குறியது.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s