கத்திக் கப்பல்


பெருமழை நாளொன்றில்
முற்றத்தில் தேங்கிய
மழை நீரில்
கத்திக்கப்பல் விட
சென்ற வருட
கணக்கு நோட்டிலிருந்து
தாள்களைக் கிழித்து வைத்துக்
காத்திருந்தாள் அச்சிறுமி

வேலையாளை வரச்சொல்லி
அடைப்பைச் சரிசெய்ததில்
சட்டென வடிந்தது

சிறுமியின் உற்சாகம்.

.

Advertisements

20 comments

 1. அருமையானக் கவிதை, வேலன் ஸார்.

 2. வேலையாளை வரச்சொல்லி
  அடைப்பைச் சரிசெய்ததில்
  சட்டென வடிந்தது

  சிறுமியின் உற்சாகம்.

  kalakkal annachi

  naanum kathi kappal vekama vanthen

  enakkum வடிந்தது உற்சாகம்.

  sorry tamil font illa

 3. நல்லா இருக்கு.அண்ணாச்சி நாம ஒரு ஒரு கவிதை எழுதி இருக்கோம். படிச்சுச் சொல்லுங்க.

  ''டீவி பார்க்கும் போது கவலைகள்''

 4. நல்லா இருக்கு வேலன். போன கவிதையில் தொலைந்த 'சிறுமி' சற்று எமாற்றங்களுடனாவது கிடைத்திருக்கிராளே. நல்ல கவிதை.

  அனுஜன்யா

 5. //வேலையாளை வரச்சொல்லி
  அடைப்பைச் சரிசெய்ததில்
  சட்டென வடிந்தது//

  இதுக்கும் முன்னாடி!

  முதலாளி போட்ட கணக்கில்

 6. வடகரை வேலன் அண்ணன் அவர்களுக்கு,
  அருமையான கவிதை,
  ஒரு சிறுகதையாக வந்திருக்க வேண்டியது.

  ‘அகநாழிகை‘
  பொன்.வாசுதேவன்

 7. இயல்பாக வருகிறது கவிதை..படித்துக் கொண்டே இருக்கலாம் இன்றும் !!

  சில நாட்களாய் பரிசல்காரனும் எழுதிக் கொண்டிருக்கிறார்..

  நீங்களெல்லாம் இந்த அவியல் பொரியலில் ஊறுகாய்க்காவது கொஞ்சம் இதுபோல் எழுதிவிடுங்களேன் :))

 8. ஜூப்பர் கவிதை…!!! அழகு….. அருமை….. வாழ்த்துக்கள்…!!!!

 9. நல்லாயிருக்கு அண்ணாச்சி.

  இப்போத்தான் கார்த்தியோட வலைப்பூவில் “மொன்னை மனசு” கவிதை படித்தேன்.இரண்டும் ஒரு சாயலில் ஒன்றேபோல் இருந்த ஆச்சரிய நேர்ச்சியை ஆராய்ச்சி மனப்பான்மையோடு படித்தேன். பிறகு, கார்த்தியின் பின்னூட்டம் என் ஆராய்ச்சியை நிறுத்திவிட்டது.

  இருவருமே கலக்கிவிட்டீர்கள்.

 10. முதல்தரமான கவிதைகளில் ஒன்று.

  (அடுத்த பதிவின் அடைப்பினை எடுத்து விட யாராவது வந்தால் தேவலையோ!)

 11. சாரலும், கூதலும், ஈரமும்..
  கவிதையிலும்..! 🙂

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s