எள்ளும் எலிப் புழுக்கையும்

”அண்ணாச்சி”

”சொல்லுடே அய்யப்பா?”

”மனசே சரியில்ல அண்ணாச்சி”

“என்னடே இப்பத்தாம் அந்தபுள்ள முத்தம்மா உன்னக் காதலிக்கிறேன்னுட்டாளே. பின்ன என்ன? “

“அவங்கண்ணனுக்குத் தெரிஞ்சு போச்சுன்னு சொல்லுதா?”

“எப்படிடே?”

“பொஸ்தவத்துக்குள்ள எம்போட்டாவ வச்சிருக்கா. அத அவம் பாத்துட்டான்.”

“என்ன கேட்டாம்?”

“இதெல்லாம் நல்லதுக்கில்ல. அம்புட்டுத்தாம்னு சொல்லியிருக்காம்.”

“நல்ல வேலை, அந்தப் புள்ளைய பகவதிபுரத்துக்குக் கூட்டீட்டுப் போயி நீ செஞ்ச காரியமெல்லாம் அவனுக்குத் தெரியாது. தெரிஞ்சுதோ ஒங்க அம்மைகிட்டகுடிச்ச பாலக் கக்க வச்சிருவாம் பாத்துக்கிடு. ஏம்டே இப்படி மோசி குடிச்ச மாடு கணக்கா அலயுதிய?”

“அண்ணாச்சி ரெம்பத்தான் கிண்டல் பண்ணாதியோ”

“சரிடே இப்பம் என்னை என்ன செய்யச் சொல்லுதே?”

“நீங்கதான் நல்லபடியா முடிச்சு வைக்கணும்.”

”ஏதோ சின்னப் பயலுவ. என்னத்தையும் பேசுதீயன்னு கண்டுங்காணாம இருந்தா, இப்ப தோளுல ஏறி காதுல மோளுங்கற கதையாவுல்ல இருக்கு”

”அப்படியெல்லாஞ் சொல்லப்பிடாது அண்ணாச்சி”

“சரிடே. அந்தப் புள்ள ஸ்ட்ராங்க இருக்காளா? இல்ல அவங்கப்பா சுப்பையனக் கண்டு பாவாடையில மோண்டுறுவாளா?”

“அதெல்லாம் இல்ல அண்ணாச்சி. டபுள் ஸ்ட்ராங்கு”

“இதுல உங்கூட யாரெல்லாம் உண்டும்”

“வீரைய்யா, அய்யம்பெருமாள், இசக்கி மூணு பேரும் இருக்கானுவ”

“சரி ஒரு காரியஞ் செய். கொஞ்சம் துட்டு உண்டாக்கு. ஒரு வாரத்துக்குள்ள உனக்கு ஒரு வழி செய்யலாம். அதுக்குள்ள அங்கன அவளக் காங்கப் போனம் எசலியாயிடுச்சுன்னு ஆவலாதி கொண்டாராதா”

“அண்ணாச்சி, எம்புட்டுத் துட்டு வேணும்?”

“அது வேணும் லச்ச ரூபா. தாலி கட்டணும்னு ஆசை வச்சிருக்க நீதாம்டே சொல்லணும் அத. கூடக் கொறைய வச்சாலும் பெரிய நோட்டு அஞ்சாவும் பாத்துக்கிடு”

அண்ணாச்சி அப்படித்தாம். மிலிட்டேரியில இருந்து ரிடையராகி வந்திட்டாருன்னும், இல்ல இவர வச்சுச் சமாளிக்க முடியாம வடநாட்டுப் பயலுவ அனுப்பிட்டாங்கன்னும் ஊருக்குள்ள பேச்சு. 40 வயசுக்கு மேல அவருக்கு வாக்கப் பட ஒருத்தியும் தயாரா இல்லை. தயாராக இருந்த ஒரு சிலவளுவள இவருக்குப் பிடிக்கல. அப்படியே காலங் கடந்துருச்சு. குடும்பம் குட்டின்னு ஒண்ணுங் கெடையாதுல்லா, எப்பவும் வயசுப் பசங்களோடதான் சாவகாசம் எல்லாம்.

அடுத்த வாரம், முத்தம்மாவும், ராசாத்தியும் செங்கோட்டைக்குச் சினிமாவுக்குப் போறோம்னு சொல்லீட்டு தெக்குமேடு பஸ்ல ஏறிட்டாங்க. அதுக்கு முன்னால அவளோட பத்தாப்பு டி சி ஜெராக்ஸ் காப்பியும் முக்கியமான ட்ரெஸ் ரெண்டயும் ஒரு வொயர் கூடையில போட்டு அண்னாச்சிகிட்டக் கொடுத்து வச்சிருந்தா.

இலஞ்சியில் இறங்கிட்டாங்க. பின்னால வண்டியில வந்தானுவ சேக்காளிக. மாலை புது வேட்டி, சேலை எல்லாம் ரெடி. இலஞ்சிக் குமாரர் கோய்ல்ல வச்சுக் கல்யாணத்த முடிச்சுட்டு நேரா தெங்காசி பஸ் ஏறிட்டாங்க ரெண்டு பேரும். அங்கன எறங்கி மதுர பஸ்ல ஏறுர வரை அவங்க ரெண்டு பேரு உயிரும் அவங்ககிட்ட இல்ல. கடையநல்லூர் தாண்டுனதும்தான் மூச்சே வந்துச்சு.

அண்ணாச்சி கொடுத்த மதுரை அட்ரஸ்ல போய் ரெண்டு நாள் நல்லா தங்கி இருந்த பின்னாடி மதுரா கோட்ஸ்ல ஒரு வேலையும் கெடைச்சது. முதல் மாசச் சம்பளம் வாங்குனதும் தனியா ஒரு வீடு பாத்து போய்ட்டாங்க.

ஆறு மாசத்துல ஒரு தடவைகூட ஊர்ப் பக்கம் வரவேயில்லை. முத்தம்மா புள்ளையாண்டதும் அவங்கம்மை ஞாபகம் வந்திருச்சு.

“ஏங்க எங்க அம்மையப் பாக்கணும்போல இருக்குங்க. கண்ணுக்குள்ளேயே நிக்கா”

“அதுக்கென்ன அண்ணாச்சிகிட்ட நோட்டம் பாக்கச் சொல்லியிருக்கேன். இன்னைக்குப் போன் பண்ணுதம்னு சொல்லியிருக்காவ. உங்க அண்ணம்தாம் இன்னும் குதிக்கானாம்”

”அதெல்லாம் என்னப் பார்த்தா எல்லாத்தையும் மறந்துருவாம்”

“சரி பார்ப்போம”

அண்ணாச்சி நோட்டம் பாத்து , “ ஏலே அதிர்ஷடக் காரப் பெயலே எல்லாஞ்சரியாயிருச்சு. அவுக வீட்டுலயும் உங்க வீட்டுலயும் பேசியாச்சு. ஒரு 10 நாள் லீவு எடுத்துட்டு வந்தன்னா ஊரறியக் கல்யாணம்னு சொல்லிட்டாவ. பத்து களஞ்சும் பத்தாயிரம் ரொக்கமும் போடுதம்னு சொன்னாக”ன்னு சொன்னாரு.

ரெண்டு பேருக்கும் சந்தோஷம் அள்ளுது. 10 நாளு லீவு எடுத்துட்டு ஊருக்குப் போனாங்க. பஸ்டாண்டுல நின்னு வரவேத்து ஆரத்தி எல்லாம் எடுத்து வீட்டுக்குக் கூட்டீட்டுப் போனாங்க.

பாலும் பழமும் சாப்பிடச் சொல்லீட்டு, “மருமவனே நீங்க உங்க வீட்டுக்குப் போங்க முகூர்த்தம் முடிஞ்சதும் நாங்களே அனுப்பி வெக்கோம்”னாங்க.

இவனும் ரெண்டு நாளா சேக்காளிகளோட எசலிக்கிட்டு ஒரே கும்மளமடிக்காம். ஆதாளி பண்ணுதாம். எப்படிக் கடத்துனாம், மொதல்ல எங்க கூட்டீட்டு போனாம் என்ன செஞ்சாம்னு கதைகதையாச் சொல்லுதாம்.

மூணாநாளு இவன் அங்கன போயி அந்தப் பிள்ளயப் பாக்கலாம்னு போறான். எல்லாரும் கூடி உக்காந்துக்கிட்டு வேற மாதிரிப் பேசுதானுவ. ”எலே நீ என்ன ஜாதி எங்க பிள்ள என்ன ஜாதி. உனக்கு எங்க ஜாதிப் பிள்ள கேக்குதோ?”ங்கானுவ ஆளாளுக்கு.

இவனுக்கு ஒண்ணும் புரியல. பைய நவண்டு வந்து அண்ணாச்சி கிட்டப் பேசுதாம், “ என்ன நடக்குது அண்ணாச்சி. எனக்குப் பயமா இருக்கு” ங்கான்.

“நம்மள ஏமாத்திக் கழுத்தறுத்துட்டானுவடே. நம்ப வச்சு மோசம் பன்ணீட்டானுவ. அந்தப் புள்ள வவுத்துல இருந்ததக் கலச்சிட்டானுவ. புண்ணு ஆறுனதும் அம்பாசமுத்திரக்காரனுக்கு கட்டிக் கொடுக்கப் போறானுவளாம்”

முத்தம்மாவுக்கு இப்பம் மூணு புள்ளீவ பெரியவ எட்டு படிக்கா அடுத்தவம் ஆறாப்பு. கடைக்குட்டி இப்பத்தாம் ஒண்ணாப்பு. புள்ளீவள பள்ளியோடத்துக்குப் பத்தி விட்டுட்டு அவ புருசன் மாடசாமி வச்சிருக்க டீக்கடைக்கு மே வேலைக்குப் போயிருவா. 10 மணிக்கு மேல வடை பஜ்ஜி போண்டா எல்லாம் சுடச்சுடப் போட்டுத் தருவா. வியாபாரம் ஓரளவுக்கு நடக்குது. இடம் வாங்கிப் போட்டிருக்காவ ரெண்டு பேரும். சீக்கிரம் வீடும் எடுத்துருவாவ.

அய்யப்பன் இப்பம் திருச்சியில இருக்காம். தெங்காசியிலதாம் பெண்ணெடுத்தது. மாமனார் வழியில ரயில்வேல காங்க்மேன் வேலை வாங்கியாச்சு. 25 களஞ்சும் 25 ஆயிரம் ரொக்கமும் குடுத்து தன்னோட பொண்ணையும் கொடுத்தாரு புண்ணியவான். ரயில்வே கோட்டர்ஸ்ல எல்லா வசதியும் இருக்கு. ஒரே பையன் கான்வெண்ட்டுல படிக்காம்.

என்னது? அண்ணாச்சி என்ன ஆனாருன்னா கேக்கிய? இந்தா இப்பம் குளிக்க கூட்டீட்டு வருவாவ பாருங்க. அந்தா நாலாவதா வாராரு பாருங்க அவருதான். ஆளு மெலிஞ்சு போய் மொகமெல்லாம் வத்திப் போயி.

ஏம்னா கேக்கிய? அவரு சனக்கைய எடுத்துட்டானுவ ரெண்டு வீட்டுக் காரனுவளும்.

குற்றாலம் வந்தீகன்னா குளிக்க மட்டுமில்ல அண்ணாச்சியையும் பாக்கலாம். வாரீயளா?

.

Advertisements

25 comments

 1. அண்ணாச்சி வட்டார வழக்கு எழுத்து நடை சிறப்பாக இருக்கு

 2. வட்டார பேச்சி நல்லாயிருக்கு அண்ணாச்சி.

  \\இவனும் ரெண்டு நாளா சேக்காளிகளோட எசலிக்கிட்டு ஒரே கும்மளமடிக்காம். ஆதாளி பண்ணுதாம். எப்படிக் கடத்துனாம், மொதல்ல எங்க கூட்டீட்டு போனாம் என்ன செஞ்சாம்னு கதைகதையாச் சொல்லுதாம்.
  \\

  ஏனோ நாடோடிகள் படமும் ஞாபகம் வருது …

 3. நெல்லை வட்டார வழக்கு எழுத்து நடை நல்ல இருக்கு

  காதல் படம் மீண்டும் ஒரு முறை பார்த்த மாதிரி ஒரு எபெக்ட்

 4. வட்டார வழக்கில் மீண்டும் ஒரு 'காதல்' கதை.

 5. ஏ! அண்ணாச்சி கலக்குதீயளே!

  பின்னவீனத்துக்கு மாறீட்டிய போல! 🙂

 6. அண்ணே அடி தூள் கெளப்பிட்டிங்க…
  ஒரு வார்த்தைக்கு மட்டும் அர்த்தம் புரியல…..சனக்கை என்றால் என்ன?

 7. நன்றி கோவி.

  நன்றி Me

  நன்றி ஜமால்.

  நன்றி நாஞ்சில் நாதம்

  நன்றி அன்புமணி

  நன்றி வெயிலான்.

  நன்றி கும்க்கி.

  சனக்கை எடுத்துட்டாங்க அப்படின்னா அடி சவட்டிட்டானுவன்னு அர்த்தம்

 8. அண்ணாச்சி, கதை நல்லா இருக்கு.

 9. //
  அந்தபுள்ள முத்தம்மா உன்னக் காதலிக்கிறேன்னுட்டாளே
  //
  "முத்தம்மா" "மொத்தம்மா" காதலிக்கிறாளோ..!

 10. நா குத்தாலத்துக்கு பக்கத்துல மின்நகர்லதான் இருக்கேன். ஆபீசு பார்டர்ல இருக்கு. அண்ணாச்சி எங்கிட்டு இருக்காக? சொன்னம்முன்னா ஒரு நட விரசா பாத்துட்டு வந்துருவோம்லா ! !

  கத நல்லாவே இருக்குவே ! !

 11. /
  சனக்கை எடுத்துட்டாங்க அப்படின்னா அடி சவட்டிட்டானுவன்னு அர்த்தம்
  /
  :(((
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 12. நன்றி சுந்தர்
  நன்றி கதிரவன்
  நன்றி J
  நன்றி சுரேஷ் குமார்
  நன்றி பொன் சந்தர். எனக்கு சொந்த ஊர் ப்மபுளிப் பக்கமிருக்க வடகரை. இப்ப கோவையில இருக்கேன். சீசனுக்கு வரும்போது சந்திப்போம்.
  நன்றி சிவா

 13. அட அண்ணாச்சி – கலக்குறியளே ! நெல்லை வட்டார வழக்கில வெளையாடுறியளே ! நல்லா இருங்க !

  கதை முழுவதும் படித்தேன் – ரசித்தேன் – இயல்பான நடைமுறைக் கதை. இது தான் நடக்கிறது நாட்டில்

  ரெண்டு பேரும் சேந்து மொத்திட்டானுவளா !

 14. " பர்த் டே ", " சண் டே " வ தவிர எல்லா டே வையும் அண்ணாச்சி குத்தவைக்கு எடுத்துபுட்டாரு….!!!!

 15. வட்டார வழக்குல பின்னிட்டியளே.
  தின்னவேலிகாரவுக பேசுதத கேட்க்க மாதியில்ல இருக்கு

 16. வட்டார வழக்கில் கதை ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணாச்சி.

 17. கதையை, உங்கள் மொழி நடை விழுங்கி விட்டது….! நல்லயிருக்கு.

 18. /ஒரு வார்த்தைக்கு மட்டும் அர்த்தம் புரியல…..சனக்கை என்றால் என்ன?/

  /சனக்கை எடுத்துட்டாங்க அப்படின்னா அடி சவட்டிட்டானுவன்னு அர்த்தம்/

  ரைட்டு, சவட்டிட்டானுவன்னா என்ன அர்த்தம்? ச்சும்மாஆ.

  நாடோடிகள் பாத்ததும் ஞாபகம் வந்துருச்சோ. இது ரொம்ப நல்லாயிருக்கு.

 19. நல்லாயிருக்கு அண்ணாச்சி 🙂

 20. நல்லாயிருக்குங்க..

  எனக்கும் நாடோடிகள் படம் ஞாபகம்..

 21. மனச என்னவோ பண்ணுதுங்க அண்ணாச்சி. வாழ்க்கையின் நிதர்சனங்கள் சில நேரங்களில் எதிர்கொள்ள இயலாத உண்மை.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s