பால்யம் இழந்தவள்

அடியுரமாக ஆட்டுப் புழுக்கை
ரத்த நிறத்தில் செம்மண்
ஆற்றுமணல் எல்லாம்
கலந்து நிரப்பிய
தொட்டியிலிட்ட செடி
பூத்தது
மூன்றே மாதத்தில்
எல்லோரும் மகிழ.

முதல் பூவைச் சூடிச்சென்ற
ஏழாவது படிக்கும்
சின்னவள்
இன்று மாலை
பெரியவளானாள்

ஏனோ வலித்தது மனது.

.

Advertisements

28 comments

 1. ம் 😦

  உணவு வழக்கங்கள் தான் காரணம்
  சொல்றாங்க

 2. நான் சொல்ல வருவது, பால்யத்தைத் தொலைத்த அந்தக் குழந்தையின் பரிதாபத்தை. இதற்கான மருத்துவ மற்றும் நடைமுறைக் காரணங்களல்ல விவாதிக்கப்படுவது.

  இன்று மாலை என் நண்பனின் குழந்தை பற்றி கேள்விப்பட்டது முதல் மனது வலிக்கிறது.

 3. உண்மை..சில நேரங்களில் பாராபட்சமான இயற்கையின் மீதும் கோபம் வரத்தான் செய்கிறது.

 4. முதலிரவில் ஒரு கன்னியை அழித்தேன் அப்படிங்கிற மாதிரி ஒரு கவிதை எங்கவோ எப்பவோ படிச்சேன்.பொதுப்புத்திக்கு மலர்வு தான் தெரியுதே தவிர பின்னால இருக்க உதிர்வு தெரில.

  நல்ல சிந்தனை 🙂

 5. அய்யனார் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன் … ஆனாலும் இன்று செத்தால் தான் தானே நாளை பிறக்கும் … I think things like these are about viewpoints and perspectives …

 6. கவிதை நல்லாதான் இருக்குது….!! ஆனா நீங்கெல்லாம் என்ன பேசிகிரீங்கன்னே தெரியல….!!!!!

 7. ’ஏனோ வலித்தது மனது’ – இது இல்லாம கவிதை இன்னமும் சிறப்பா இருக்கும்னு தோணுது. 🙂

 8. நல்ல கவிதை…
  /ஏனோ வலித்தது மனது/.. a bit refined words here could have been better?!

 9. எனக்குப் பிடிச்சுருக்கு அண்ணாச்சி, கவிதை.
  /ஏனோ வலித்தது மனது./
  என்கிற கடைசி வரியும் , தலைப்பும் சேர்ந்து இக் கவிதையை இன்னொரு கவிதையாக்குகிறது.

  இவ் வரிகள் கவிஞரின் சிந்தனை, உணர்வுகள்.

  மீதமிருக்கும் வரிகள் மட்டுமே ஒரு தனிக்கவிதை.இவ் வரிகளில் இருக்கும் தற்செயல் நேர்ச்சி ஒரு நவீனக் கவிதைக்கான தளம்(எனக்கு இந்தக் கவிதை அதிகமாகப் பிடித்திருக்கிறது)

  இரண்டும் சேர்ந்தும் ஒரு கவிதையாகிறது.

 10. சொல்ல மறந்துவிட்டேன். என் அறிவுக்கு எட்டியவரை, நான் படித்தவரை இக் கவிதை தேவதேவனை எனக்கு நினைவுபடுத்திவிட்டது.

 11. நன்றி தமிழன் கறுப்பி. வயசானால்ஒரு வேளை உங்களுக்குப் புரியலாம்.

  நன்றி TVRK சார்.

  நன்றி அய்யனார், சரியான புரிதலுக்கு. எல்லா நிகழ்வுக்கும் வலி வெளித்தெரியாத ஒரு புறம் இருக்கு என்பதை உணர மறந்து அல்ல மரத்து விடுகிறோம்.

  நன்றி நந்தா. நீங்கள் சொன்னது போல எல்லவற்றையும் பகுத்தறிந்தால் பொருள் சார்ந்த வாழ்வாகிவிடும். அதேலும் சுவை இருக்கச் சாத்தியமில்லையல்லவா?

  நன்றி லவ்டேல் மேடி. இன்றில்லாவிட்டாலும் நாளை உங்களுக்குப் புரியக்கூடும்.

  நன்றி ஸ்ரீதர். ஆனா மனது வலிப்பதுதான் நான் பதிய நினைத்தது.

  நன்றி கர்டின். உணர்வுக்கு முன்னால் சொல்லாடல் முக்கியமில்லையென எழுதி விட்டேன்.

  ஊற்றெடுத்த கவிதையை
  வார்த்தெடுக்க தேடினேன்
  பேப்பரும் பேனாவும்
  கிடைக்கவில்லை
  கிடைத்தபோது
  கவிதை தொலைந்திருந்தது!
  வால் பையனின் கவிதை இது. இது போன்ற மனநிலைக்கு நான் அதிக முறை ஆட்பட்டிருக்கிறேன்.

  நன்றி சென்ஷி.

  நன்றி முத்துவேல். கவிதை உங்களை அதிகம் பாதித்திருக்கிறது என்பது புரிகிறது. இவ்வாறு அதீதமாக உணர்ந்தால் தனி மடலில் எழுதி விடுங்கள். ஏற்கனவே முதுகு சொரிதல் அதிகம் எனப் பேசுகிறார்கள்.

  நான் சொல்ல வந்தது அய்யனார், சென்ஷி, முத்துவேல் போன்ற கவிமனசுக்காரர்களுக்கு விளங்கியிருக்கிறது.

  பிறந்தது முதல் நீங்கள் பார்த்து வளர்ந்த பென். தனது அறியாமையிலிருந்து இன்னும் முற்றிலும் வெளிவராத ஒரு கூட்டுப் புழு திடீரென்று வேறொரு உலகத்திற்குள் வலிந்து தினிக்கப் படுவதைத்தான் சொல்ல விழைந்தேன். எல்லோருக்கும் புரியும் வண்ணம் சொல்லும் கலை இன்னும் எனக்கு வசப்படவில்லை.

  I become handicapped when i am emotional.

 12. தந்தையின் பொறுப்பு சுமை அசாதாரணமானது தானே!

 13. சாரி.. கவுஜைக்கும் எனக்கும் 3545674733858 ஆவது பொருத்தம்..

  ஆகவே..
  நான் வெளிய இருந்து ஆதரவு தர்றேன் அண்ணாச்சி..

 14. சுரேஷ்,

  உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு.

 15. எனக்கு ஒரு சராசரி தகப்பனோட தவிப்புகள் தெரிகின்றன. பெண் பெரியவளாகி விட்டால் அப்பா என்ற முறையில் கூடும் பொறுப்பு, சமூகக் கட்டமைப்பின் நன்மை தீமைகளின் சாத்தியப்பாடுகள் குறித்து அதிகரிக்க வேண்டிய கவனம், திருமணத்திற்கு சேர்க்க வேண்டிய பணம்… என்று.

  உங்கள் அபிப்ராயப்படி, தொலைந்த பால்யமும், இனி மேல் வீட்டுப் பரணில் சுருண்டு கிடக்கப் போகும் ஸ்கிப்பிங் கயிறும் கூடப் புரிகின்றன..

 16. அண்ணாச்சி நான் சொல்ல வந்ததும்
  அது தான்
  7வது படிக்கும் போதே வருவதற்கு
  தற்போதைய உணவு பழக்கவழக்கங்கள்
  காரணம் சொல்ல முயற்சித்தேன்
  மன்னிக்கவும் அண்ணாச்சி
  தவறா சொல்லியிருந்தா

 17. நன்றி வால்பையன்.
  நன்றி மதன். நான் வருந்துவது இரண்டாம் விஷயத்திற்காகத்தான். முதல் விஷய்ம் இன்ரில்லவிட்டாலும் நாளை நடந்தே தீரும். ஆனால் இழக்கும் பால்யம் பின்னெப்போதும் அடைய முடியாதது.

  ஜே. நீங்கள் சொல்லுவது ஒரு கூறு நான் பார்ப்பது வேறு கூறு. அதற்காக நீங்கள் சொல்லுவைத்த் தவறென்று எப்படிச் சொல்ல முடியும்?

 18. இப்போதுதான் யாத்ராவின் வலைப்பக்கத்தில், கவிஞர் இசையின் கவிதைகள் பற்றி படித்தேன். அதில் வரும் சௌம்யாக்குட்டி, இங்கும் இருக்கிறாள். பூவும் இருக்கிறது. சொன்னவிதங்கள் வேறு வேறு.

 19. இந்த காலத்தில் இது நார்மல்தான் நண்பரே..

 20. இழப்பு என்ற வகையில் உங்கள் வரிகள் விளங்குகிறது.

  நல்ல ஒப்பீடு …

 21. நண்பரே..அது இயற்கை நியதி..ஆனால் பள்ளி இறுதி வரை பால்யம் உண்டு…அதன் பின் தான் குழந்தைதனம் மாறுகிறது..(என் மகளை அடிப்படையாக கொண்டு)

 22. அண்ணே உண்மையில் பால்யம் ஒரு வரம்,எந்த ஒரு கவலையும் இல்லாமல் அது ஒரு ஏகாந்தம்…..
  தொலைத்தப்பின் தான் அதன் வலி தெரிகிறது…..கவிதை அருமை….

 23. நன்றி மாதவ். நானும் பார்த்தேன்.

  நன்றி வெங்கட்.

  நன்றி ஜமால்

  நன்றி மணி.

  நன்றி கார்த்தி

 24. நல்லா வந்திருக்கு வேலன். விவாதங்களும் பார்த்தேன். நானும் ரவுடி தான். அதனால அய்ஸ், சென்ஷி, முத்துவேல் இவர்களுடன் ஒத்துப்போகிறேன் 🙂

  அனுஜன்யா

 25. //
  Suresh Says:
  July 7, 2009 11:33 PM

  சாரி.. கவுஜைக்கும் எனக்கும் 3545674733858 ஆவது பொருத்தம்..

  ஆகவே..
  நான் வெளிய இருந்து ஆதரவு தர்றேன் அண்ணாச்சி..
  //
  அண்ணாச்சி.. இது நான் தான்..
  தவறுதலா ஜீ' டாக் ஐடி'ல இருந்து பின்னூட்டிட்டேன்..

 26. அண்ணாச்சி, கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s