நன்றி நவிலல்

ஒரு வாரம் தமிழ்மண நட்சத்திரமாக இருந்தது ஒரு மாறுபட்ட அனுபவம். நட்சத்திரப் பதிவென பெரிதாகப் பேர் சொல்லும்படி எதையும் எழுதிவிடவில்லையெனினும் சோடை போகவில்லை என்பதொரு ஆறுதல். ஆனால் இவ்வாய்ப்பின் மூலம் ஒன்றைப் புரிந்துகொள்ள முடிந்தது; பத்திரிக்கைக்குத் தொடர்கதையோ, கட்டுரையோ அல்லது பத்தியோ ஏதோவொன்றை எழுதுபவர்கள் அனுபவிக்கும் நேரக்கெடுதரும் அழுத்தம் என்ன எனபதை.

நமது வலைப்பூவில் எழுதும்போது எந்தவித நேரக்கட்டுப்பாடுகளுமில்லை. எழுதினால் தொடர்ந்து எழுதலாம் எழுதாமலும் இருக்கலாம், ஒரு மாதம் போல இடைவெளியும் விடலாம்; சித்தன் போக்குச் சிவன் போக்கென. ஆனால் நட்சத்திரமாக ஆகும்போது நம்மீதான(சரியாகப் படிக்கவும் நமீதா மீதான அல்ல) எதிர்பார்ப்பு அதிகரித்து விடுகிறது. கூடவே அழுத்தமும்.

எபோதுமிருந்ததை விட இவ்வாரம் பணி நெருக்கடியும் அதிகம். நெருங்கிய உறவினர் வீட்டுக் காது குத்து (கெடா வெட்டு) இன்று. முடித்தே ஆக வேண்டிய வேலை நிமித்தம் போக முடியாமற் போயிற்று.

இடையே பதிவெழுதக் கொஞ்சம் நேரத்தையும் திருடிக் கொள்ள வேண்டியதாயிற்று, ஓரளவுக்கு நிறைவாகவே செய்திருக்கிறேன் என நினைக்கிறேன்.

அரசியல் மேடைகளில் முக்கியத் தலைவர் வருமுன் சேர்ந்திருக்கும் கூட்டம் கலைந்து போகாமல் இருக்க உள்ளூர் பிரமுகர் மொக்கையாகப் பேசுவது நியமம். அது போல் நாளை வர இருக்கும் பெரும் பதிவருக்கு முன் என்னை அழைத்ததின் பின்னணியில் இருக்கும் தமிழ்மணத்தின் உள் குத்தையும் ரசித்தேன்.

இந்நல் வாய்ப்பைத் ஈந்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு சொல்ல நன்றியல்லாது வேறேதுமில்லை என்னிடம் .

பதிவைப் படித்தும், பின்னூட்டமிட்டும், மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும், நேரிலும் பாராட்டி ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.

பின் குறிப்பு : ஒரு மொக்கைப் பதிவு எழுதியிருக்கலாமே என மொபைலில் கேட்டவரைக் குறித்து அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. நான் எழுதுவதெல்லாம் மொக்கையல்லாது பின் வேறென்ன? (இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது?)

பின் பின் குறிப்பு : வெயிலானின் நேர்மையான் விமர்சனம்.

14:09 நட்சத்திர வாரத்துல வெறும் மொக்கைப் பதிவுகளாவே வந்துட்டிருக்கு. ஏன்?

9 minutes
14:19 me: இதுக்கே நாக்கு தள்ளுது, தினமும் காலை 4 மணி வரை பிரஸ்ல இருக்கேன். மெஷின் இன்னும் முழு ஓட்டம் வரலை.

பின் பின் பின் குறிப்பு : என்னைத் திட்ட ஆனந்தமா ஒரு அனானி கிளம்பியிருக்காரு அவருக்காக அனானி ஆப்சன் தடை செய்யப் படுகிறது. நேர்மையாக என்னை விமர்சிக்கும் அனானிகள் மன்னிக்கவும்.

.

Advertisements

39 comments

 1. //என்னைத் திட்ட ஆனந்தமா ஒரு அனானி கிளம்பியிருக்காரு அவருக்காக அனானி ஆப்சன் தடை செய்யப் படுகிறது. நேர்மையாக என்னை விமர்சிக்கும் அனானிகள் மன்னிக்கவும்.//

  உங்களைப்பத்தி அவருக்கு தெரியாது போலருக்குது 🙂

  மொக்கை பதிவு எழுதறது அவ்வளவு எளிதானது இல்லை அண்ணாச்சி.. வெயிலான்கிட்ட சொல்லி வைங்க!

 2. //ஒரு மொக்கைப் பதிவு எழுதியிருக்கலாமே என மொபைலில் கேட்டவரைக் குறித்து அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. நான் எழுதுவதெல்லாம் மொக்கையல்லாது பின் வேறென்ன?//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  :))

 3. //
  மொக்கை பதிவு எழுதறது அவ்வளவு எளிதானது இல்லை அண்ணாச்சி.. வெயிலான்கிட்ட சொல்லி வைங்க!//

  🙂

  எஸு!

  ச்சே ரிப்பிட்டேய்ய்ய்ய் போடணும் :)))

 4. உங்கள் பணியை சரியாகவே செய்தீர்கள் என எண்ணுகிறேன்.
  குறிப்பிட்ட காலஅளவில் நிறைவான எழுத்துக்களை தரவேண்டுமென்பது சாத்தியமல்ல!
  எப்பவும் போல் உங்கள் எழுத்து உங்கள் பானியில்!! எல்லாம் நலமே.

  (மொககைகளையும் படிச்சு ரசிச்சு பிண்ணூட்டம் வேர போடுற நாங்க எவ்வளவு பெரிய மொக்கையா இருப்போம்!!!! )

 5. திரு வேலன்,

  உங்கள் நட்சத்திர வாரம் சிறப்பு.

  வாரம் முழுவதும் இயங்க அழுத்தமாக தெரிந்தாலும், சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்.

  முழு நட்சத்திரமாக இல்லை என்றாலும் அரை நட்சத்திரமாக நினைத்து முடிந்தவரை அதிகமாக எழுதவும்.

  நன்றி.

 6. வெயிலானை தெரியாமத்தான் கேக்குறேன்.. அண்ணாச்சி எழுதறதே மொக்கைன்னா அப்ப நான் எழுதறதை என்ன சொல்லுவீங்க.. நல்ல கதையா இருக்குதே.. இவுரு எழுதவே மாட்டாராம். நாம எழுதுனா மொக்கைம்பாராம்.. அடடே..

 7. வாழ்த்துகள் அண்ணாச்சி

  நட்சத்திரம் நன்றாக மின்னியது

 8. //
  பின் பின் பின் குறிப்பு : என்னைத் திட்ட ஆனந்தமா ஒரு அனானி கிளம்பியிருக்காரு
  //

  அண்ணாச்சி… இது நானில்லை… :)))

 9. நிறைவாகச் செய்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!

 10. // இதுக்கே நாக்கு தள்ளுது, தினமும் காலை 4 மணி வரை பிரஸ்ல இருக்கேன். //

  பெயிண்ட் பிரஸ்ஸா? இல்லை டூத் பிரஸ்ஸா?

 11. நட்சத்திர வாரத்தில் ஜொலித்த அண்ணாச்சிக்கு பாராட்டுகள் – பணி அழுத்தம் என்றும் தானிருக்கிறது – இடையிடையே எழுத வேண்டியது தான்.

  நன்கு சென்ற நடசத்திர வாரம்

 12. //பின் பின் பின் குறிப்பு : என்னைத் திட்ட ஆனந்தமா ஒரு அனானி கிளம்பியிருக்காரு அவருக்காக அனானி ஆப்சன் தடை செய்யப் படுகிறது. நேர்மையாக என்னை விமர்சிக்கும் அனானிகள் மன்னிக்கவும்.//

  😦

 13. அனானிகளிடமும் மன்னிப்பு கேட்கும் அண்ணாச்சி வாழ்க.. வாழ்க!!

 14. நீங்கள் ரொம்பவே வருத்தப்பட்டிருக்கும் அளாவுக்கு நட்சத்திர வாரமொன்றும் சோடை போகவில்லை அண்ணாச்சி!

 15. "எழுத்துவதெல்லாம் எழுத்தல்ல மொக்கை எழுத்துக்களே எழுத்து" அப்படின்னு நினைச்சுகோங்க!

  பிரஸ் தொழில் பற்றி கொஞ்சம் விரிவாக எழுதலாமே?

  அப்புறம் எப்படி சிவகாசி மட்டும் அதில் கொடி கட்டி பறக்குது?

 16. நேரம் – எழுத்து பற்றி அனுபவம் சார்ந்த அருமையான பகிர்தல் – நல்ல பத்தி … மொக்கையோ பொக்கையொ (bouquet எனக் கொள்க) படிக்க ஸ்வாரஸ்யமாக எழுதுகிறீர்கள் 🙂 – வாழ்துக்கள்

 17. எப்போதும் பிரியமான நட்சத்திரம் தான் நீங்கள்.
  பதிவுகள் வித்தியாசமானவைகளாகவும், வித விதமானவைகளாகவும் இருந்தன.

  பி.கு: இப்போதுதான் போட்டாவில், உங்களை மாதிரியே இருக்கிறீர்கள்.

 18. // ஒரு மொக்கைப் பதிவு எழுதியிருக்கலாமே என மொபைலில் கேட்டவரைக் குறித்து அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. ///

  போங்க பாஸ்…. இப்புடி கம்பேனி ரகசியத்த வெளியில சொல்லீட்டிங்களே…..!!!!

 19. அண்ணாச்சி,
  நட்சத்திர வாரம் நல்லாவே போச்சு.. கதம்பம் இன்னும் கொஞ்சம் அதிகமா போட்டிருக்கலாம் 🙂

 20. ////நெருங்கிய உறவினர் வீட்டுக் காது குத்து (கெடா வெட்டு) இன்று. முடித்தே ஆக வேண்டிய வேலை நிமித்தம் போக முடியாமற் போயிற்று.//
  கெடா போச்சே…..//

 21. நடசத்திர வாரம் அருமை……அண்ணாச்சி நிறைய பதிவர்களை அறிமுகபடுத்தியதற்கு நன்றிகள் பல…..

 22. //ஒரு மொக்கைப் பதிவு எழுதியிருக்கலாமே என மொபைலில் கேட்டவரைக் குறித்து அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. நான் எழுதுவதெல்லாம் மொக்கையல்லாது பின் வேறென்ன?//

  You may be 100% right here…

 23. இப்படி சிக்கவுட்டுட்டீங்களே அண்ணாச்சி! 🙂

  சென்ஷி, ஆயில்ஸ், ஆதி – எதாருந்தாலும் அங்க வாங்க! பேசிக்கலாம். இங்க வேண்டாம்.

 24. நிறைவான ஒரு நட்சத்திரவாரத்தை தந்ததற்கு நன்றி.

 25. நன்றி சென்ஷி. இப்பத்தான் நிம்மதி.

  நன்றி ஆயில்ஸ்.

  நன்றி முத்துராமலிங்கம்

  நன்றி ஸ்நாமி ஒம்கார்.

  நன்றி ஆதி. வெயிலான் உங்கள சண்டைக்குக் கூப்பிட்டிருக்கார் பாருங்க.

  நன்றி ஜமால்

  நன்றி பட்டாம்பூச்சி

  நன்றி வெண்பூ. அந்தக் கமெண்ட்ல பிரியானி வாசம் இல்லை. அப்ப நீங்க இல்ல.

  நன்றி ராமு.

  நன்றி குசும்பா.

  நன்றி சீனா சார்.

  நன்றி சஞ்சய்.

  நன்றி பரிசல். சில பதிவர்கள் நேர்மையா விமர்சிக்க அனானியாக் கூட வருவாங்க.

  நன்றி விஜயசங்கர். சிவகாசி பற்றி ஒரு பதிவு எழுதனும்.

  நன்றி நந்தா.

  நன்றி மாதவ்.

  நன்றி மேடி.

  நன்றி பாலாஜி.

  நன்றி TVRK சார்.

  நன்றி RR

  நன்றி சிவா.

  நன்றி வெயிலான். நீங்க சொன்ன நேர்மையான் விமர்சனம் எனக்குப் பிடித்திருந்தது. அம்புட்டுத்தான்.

  நன்றி ம.சிவா.

 26. //பின் பின் பின் குறிப்பு : என்னைத் திட்ட ஆனந்தமா ஒரு அனானி கிளம்பியிருக்காரு அவருக்காக அனானி ஆப்சன் தடை செய்யப் படுகிறது. நேர்மையாக என்னை விமர்சிக்கும் அனானிகள் மன்னிக்கவும்.//

  மூத்த பதிவரனாதுக்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி… 🙂

 27. //அது போல் நாளை வர இருக்கும் பெரும் பதிவருக்கு முன் என்னை அழைத்ததின் பின்னணியில் இருக்கும் தமிழ்மணத்தின் உள் குத்தையும் ரசித்தேன்//.

  உங்கள் நகைச்சுவையையும், உங்கள் தன்னடக்கத்தையும் ரசித்தேன்.

 28. //அது போல் நாளை வர இருக்கும் பெரும் பதிவருக்கு முன் என்னை அழைத்ததின் பின்னணியில் இருக்கும் தமிழ்மணத்தின் உள் குத்தையும் ரசித்தேன்//.

  உங்கள் நகைச்சுவையையும், உங்கள் தன்னடக்கத்தையும் ரசித்தேன்.

 29. நட்சத்திரமாக ஆகும்போது நமீதா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விடுகிறது. கூடவே அழுத்தமும்.

  இதுவும் சரியே. நீங்களும் நட்சத்திரம்தானே.

  உள்ளபடியே நல்ல நட்சத்திர பதிவுகள்தான் எல்லாமே.

  தமிழ்மணம் உள்குத்து பற்றியதை ரசித்துச் சிரித்தேன்.

 30. அன்புள்ள திரு.வடகரை வேலன் அவர்களுக்கு,
  அந்த ஆனந்தமான அனானி நானா எனச் சில நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள் இதுவரை யாருக்கும் அனானியாய் நான் பதில் போட்டதில்லை. எனவே
  ”நான் அவன் இல்லை!”

 31. நன்றி இராம்.
  நன்றி உலகநாதன்.
  நன்றி முத்துவேல்.

  நன்றி திரு லதானந்த் அவர்களே.
  அந்தப் பின்னுட்டத்தில் anand என்றிருக்கிறது. நீங்கள் lathaananth என்றுதானே போடுவீர்கள்.

  மேலும் அது நீங்களாக இருந்தால் ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியிருப்பேன். என் வலையைப் பராமரிக்கும் கனகராஜ்(iknox) வசம் துப்பறியும் வேலையை ஒப்படைத்திருக்கிறேன். சீக்கிரம் தெரியவரும் யார் என்பது. நீண்ட நாட்களுக்குப் பின்னான உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

 32. //மொக்கை பதிவு எழுதறது அவ்வளவு எளிதானது இல்லை அண்ணாச்சி.. வெயிலான்கிட்ட சொல்லி வைங்க!//

  மொக்கை புலி சொன்னா சரியாத்தான் இருக்கும்…

  ;))

 33. இராம்/Raam said…
  //பின் பின் பின் குறிப்பு : என்னைத் திட்ட ஆனந்தமா ஒரு அனானி கிளம்பியிருக்காரு அவருக்காக அனானி ஆப்சன் தடை செய்யப் படுகிறது. நேர்மையாக என்னை விமர்சிக்கும் அனானிகள் மன்னிக்கவும்.//

  மூத்த பதிவரனாதுக்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி… 🙂
  \\

  ரிப்பீட்டு.. 🙂

 34. நானும் கூடுதலான பதிவுகள் எதிர்பார்த்தேன்,மற்றும் படி பதிவுகள் சுவாரஸ்யம்தான்…

  நன்றி!

 35. சுவாரஸ்யமான எழுத்து நடை உங்களுடையது
  நட்சத்திரவாரம் நன்றாகவே கழிந்தது

 36. //ஒரு மொக்கைப் பதிவு எழுதியிருக்கலாமே என மொபைலில் கேட்டவரைக் குறித்து அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. //

  தமிழகத்தில் மழை பெய்ய காரணமே இவர் தான்! திட்டி கிட்டி புடாதிங்க!

 37. //என்னைத் திட்ட ஆனந்தமா ஒரு அனானி கிளம்பியிருக்காரு அவருக்காக அனானி ஆப்சன் தடை செய்யப் படுகிறது. நேர்மையாக என்னை விமர்சிக்கும் அனானிகள் மன்னிக்கவும்.//

  உங்களை கூடவா! 😦

  வேலன் நீங்க முன்பு என் பதிவுகளில் சமூக பிரச்சனைகள் பற்றி அதிகம் விவாதம் செய்வீங்க… அதனால நட்ச்சத்திர வாரத்தில் அதை போல பதிவுகள் வரும் என்று எதிர்பார்த்தேன்…. எனக்கு ஏமாற்றம் தான்.

  அதிக வேலை பளு காரணமாக உங்களால் முடிந்து இருக்காது என்றே நம்புகிறேன். தினமும் ஒரு பதிவு என்பது எளிதான விசயமாக தெரியவில்லை (வேலை உள்ளவர்களுக்கு)

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s