நன்றி நவிலல்

ஒரு வாரம் தமிழ்மண நட்சத்திரமாக இருந்தது ஒரு மாறுபட்ட அனுபவம். நட்சத்திரப் பதிவென பெரிதாகப் பேர் சொல்லும்படி எதையும் எழுதிவிடவில்லையெனினும் சோடை போகவில்லை என்பதொரு ஆறுதல். ஆனால் இவ்வாய்ப்பின் மூலம் ஒன்றைப் புரிந்துகொள்ள முடிந்தது; பத்திரிக்கைக்குத் தொடர்கதையோ, கட்டுரையோ அல்லது பத்தியோ ஏதோவொன்றை எழுதுபவர்கள் அனுபவிக்கும் நேரக்கெடுதரும் அழுத்தம் என்ன எனபதை.

நமது வலைப்பூவில் எழுதும்போது எந்தவித நேரக்கட்டுப்பாடுகளுமில்லை. எழுதினால் தொடர்ந்து எழுதலாம் எழுதாமலும் இருக்கலாம், ஒரு மாதம் போல இடைவெளியும் விடலாம்; சித்தன் போக்குச் சிவன் போக்கென. ஆனால் நட்சத்திரமாக ஆகும்போது நம்மீதான(சரியாகப் படிக்கவும் நமீதா மீதான அல்ல) எதிர்பார்ப்பு அதிகரித்து விடுகிறது. கூடவே அழுத்தமும்.

எபோதுமிருந்ததை விட இவ்வாரம் பணி நெருக்கடியும் அதிகம். நெருங்கிய உறவினர் வீட்டுக் காது குத்து (கெடா வெட்டு) இன்று. முடித்தே ஆக வேண்டிய வேலை நிமித்தம் போக முடியாமற் போயிற்று.

இடையே பதிவெழுதக் கொஞ்சம் நேரத்தையும் திருடிக் கொள்ள வேண்டியதாயிற்று, ஓரளவுக்கு நிறைவாகவே செய்திருக்கிறேன் என நினைக்கிறேன்.

அரசியல் மேடைகளில் முக்கியத் தலைவர் வருமுன் சேர்ந்திருக்கும் கூட்டம் கலைந்து போகாமல் இருக்க உள்ளூர் பிரமுகர் மொக்கையாகப் பேசுவது நியமம். அது போல் நாளை வர இருக்கும் பெரும் பதிவருக்கு முன் என்னை அழைத்ததின் பின்னணியில் இருக்கும் தமிழ்மணத்தின் உள் குத்தையும் ரசித்தேன்.

இந்நல் வாய்ப்பைத் ஈந்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு சொல்ல நன்றியல்லாது வேறேதுமில்லை என்னிடம் .

பதிவைப் படித்தும், பின்னூட்டமிட்டும், மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும், நேரிலும் பாராட்டி ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.

பின் குறிப்பு : ஒரு மொக்கைப் பதிவு எழுதியிருக்கலாமே என மொபைலில் கேட்டவரைக் குறித்து அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. நான் எழுதுவதெல்லாம் மொக்கையல்லாது பின் வேறென்ன? (இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது?)

பின் பின் குறிப்பு : வெயிலானின் நேர்மையான் விமர்சனம்.

14:09 நட்சத்திர வாரத்துல வெறும் மொக்கைப் பதிவுகளாவே வந்துட்டிருக்கு. ஏன்?

9 minutes
14:19 me: இதுக்கே நாக்கு தள்ளுது, தினமும் காலை 4 மணி வரை பிரஸ்ல இருக்கேன். மெஷின் இன்னும் முழு ஓட்டம் வரலை.

பின் பின் பின் குறிப்பு : என்னைத் திட்ட ஆனந்தமா ஒரு அனானி கிளம்பியிருக்காரு அவருக்காக அனானி ஆப்சன் தடை செய்யப் படுகிறது. நேர்மையாக என்னை விமர்சிக்கும் அனானிகள் மன்னிக்கவும்.

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s