ஒரு துப்பறியும் கதை

இந்தக் கதைய எழுதுற நான் நீங்களாகக்கூட இருக்கலாம், அது முக்கியமில்லை. ஆனா நானோ நீங்களோ இப்படி ஒரு சிக்கல்ல சிக்காம இருப்பதுதான் முக்கியம்.

என்ன நடந்துச்சுன்னு சொல்லுன்னு கோபமாக் கேக்குறீங்க. சரி சரி. புரியுது. ஆனா நீங்களும் என்னை மாதிரி போலீஸ் ஸ்டேசனுக்கெல்லாம் போய்ட்டு அவமானப் பட்டு வந்திருந்தீங்கன்னா நான் பட்ட கஷ்டம் உங்களுக்குப் புரியும்.

போன வாரம் ஒரு நாள் மதியம் சாப்பாட்டுக்கப்புறம் கட்டையச் சாய்க்கலாம்னு யோசிச்சிட்டிருக்கப்பத்தான் போன் வந்தது என் மனைவிகிட்ட இருந்து, “ஏங்க கொஞ்சம் ஸ்கூல் வரைக்கும் வர முடியுமா?”

“ஏம்ப்பா என்ன ஆச்சு?”

“ஒரு சின்னப் பிரச்சினைங்க”

“ஏன் உங்க ஹெச் எம் இல்லையா?”

“இருக்காரு. நீங்க வாங்க உடனே”

சரின்னு கிளம்பிப் போனா ஹெச் எம் கூட இன்னும் நாலஞ்சு டீச்சர்களும் இருக்காங்க. ஹெச் எம்முக்கு எதிரா ஒரு 35 வயசு மதிக்கிறாப்ல ஒரு பெண்மணி உக்காந்திருக்காங்க. நல்ல பணக்காரக் களை முகத்திலயும் உடையிலயும்.

“என்ன சார்”னு ஹெச் எம்மப் பார்த்துக் கேட்டேன்.

அதுக்கு அவரு பதில் சொல்லுறதுக்கு முன்னாடியே , “இவரு யாரு?”ன்னாங்க அந்தம்மா.

“டீச்சர் ஹஸ்பெண்டு”ன்னாரு ஹெச் எம்.

“இதுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? ஏன் வெளியாளுங்கள எல்லாம் இதில நுழைக்கிறீங்க?”

“அவரு எங்க வெல்விஷர்மா. ஸ்கூலுக்கு நெறைய உதவி பண்ணியிருக்காரு. அதனாலதான்.”

ஹெச் எம் என்னப் பார்த்து, “ சார் நம்ம ஸ்கூல் பசங்க ரெண்டு பேரு இவங்க வீட்டுக்குப் போய் தண்ணி குடிச்சிருக்காங்க. அதுக்கப்புறம் அவங்க செல் போனக் காணோம்னு புகார் தர்ராங்க”

“என்ன மாடல் மேடம்?”

“ சோனி எரிக்ஸன் கே 750 ஐ”

“எப்ப இருந்து காணோம்?”

“10.30 மணிக்கு ரெண்டு பசங்க வந்தாங்க. குடிக்கத் தண்ணி வேணும்னாங்க. குடுத்தேன். இன்னும் வேணும்னாங்க. உள்ள போயிட்டு வர்ரதுக்குள்ள போயிட்டாங்க. நான் வேற வேலைகளைப் பாத்துட்டிருந்தேன். அரை மணி நேரமா போனே வரலை. பார்த்தா போனையே காணோம்.”

“சார் பசங்க ரெண்டு பேரையும் வீட்டுல பார்த்தீங்களா?”

“வீட்டுக்கு ஆளனுப்பிப் பார்த்தாச்சு. ரெண்டு பசங்களும் வீட்டுல இல்லை”

“அப்ப நிச்சயம் ஆட்டையப் போட்டுட்டாங்க. சரி மேடம் ஈவினிங் வரைக்கும் டயம் கொடுங்க. கிடைக்கலைன்னா அவங்க பேரண்ட்ஸ் கிட்டச் சொல்லிப் புதுசு வாங்கித்தாரோம்”

அவங்க மனசில்லாமத்தான் போனாங்க. ஆனா போகும்போதே “சாயங்காலம் வரைக்கும்தான் காத்திருப்பேன். கிடைக்கலைன்னா போலீசுக்குப் போயிடுவேன். அது மட்டும் இல்லை டைரக்டரேட் வரைக்கும் புகார் பண்ணுவேன்”ன்னு மிரட்டிட்டுப் போனாங்க.

“சார் பணம் போனாலும் போகுது. ஆனா நம்ம ஸ்கூல் மானம் போயிறக் கூடாது. முக்கியமா பசங்க. ஏதோ தப்புப் பண்ணீட்டாங்க. அதுக்காக அவங்க ஃப்யூச்சர ஸ்பாயில் பண்ணக் கூடாது.” அப்படின்னு ஆதங்கப்பட்டாரு ஹெச் எம்.

அதுக்கப்புறம் நம்ம ஆபரேசன் மொபைல் செர்ச்ச ஆரம்பிச்சேன். ” சார் இந்த ஊர்ல மொத்தம் 10 இல்லன்னா 12 செல்போன் கடைதான் இருக்கும். நாம் ஒரு செகன் ஹேண்ட் மொபைல் வாங்குற மாதிரி கடைகடையா ஏறி இறங்கி இந்த மாடல்தான் வேணும்னா, நிச்சயமா மாட்டும். நாம ஒரு நாலு பிரி்வா பிரிஞ்சு போனா சீக்கிரமா கவர் பண்ணிடலாம்”னு ஆரம்பிச்சோம்.

ஒரு மணி நேரத்துல பி டி மாஸ்டர் என்னைக் கூப்பிட்டார், “ சார் கொஞ்சம் செல் ப்ளானெட்டுக்கு வாங்க.” அந்தக் க்டையில போய் விசாரிக்கிற மாதிரி விசாரிச்சா பையன் உண்மையச் சொல்லீட்டான். “ரெண்டு பசங்க கொண்டு வந்தாங்க சார். ரெண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கினேன்”ன்னு சொன்னான். “சரிப்பா அந்தப் பணத்த நாங்க கொடுக்குறோம் நீ செல்லத் தா”ன்னு கேட்டுட்டு இருக்கப்பவே போலீசு வந்திச்சு கடைக்குள்ள.

“இங்க யார்ரா சரவணன்?”

”நாந்தான் சார்”ன்னு பவ்யமா சொன்னான் கடைக்காரன்.

“ஏண்டா திருட்டு மொபைலா வாங்குறே”ன்னு ரெண்டு அடி போட்டாரு.

“இல்ல சார் இல்ல சார்”

“என்ன நொள்ள சார். நடரா ஸ்டேசனுக்குன்னு” அவனத்தள்ளீட்டுப் போயிட்டாங்க.

”என்ன சார் இது?”ன்னாரு ஹெச் எம். “அந்தம்மாதான் கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கணும் சார். சரி விடுங்க அவங்களே பாத்துப்பாங்க”ன்னு நாங்க வீட்டுக்குப் போயிட்டோம்

மொபைல் தொலைஞ்சு போச்சு அதுகிடைச்சிடுச்சுன்னு இதோட சுபம்னு போடலாம்னு பார்த்தா முடியல.

ரெண்டு நாள் கழிச்சு ஒரு கான்ஸ்டபிள் எங்க ஆபீசுக்கு வந்து, “ சார் கொஞ்சம் ஸ்டேசனுக்கு வர முடியுமா?”ன்னாரு

“எதுக்குங்க?”

“வாங்க எஸ் ஐ சொல்லுவாரு”ன்னாரு

சரின்னு அவருகூட ஸ்டேசனுக்குப் போனா, “நீங்கதான் துப்பறியும் சங்கர்லாலோ?”ன்னு நக்கலாக் கேட்டாரு எஸ் ஐ.

“சார் எனக்கு ஒண்ணும் புரியலை”

“செல் போன் திருடு போனா எங்க கிட்ட புகார் கொடுக்கணும் நாங்க விசாரிப்போம். அத விட்டுட்டு நீங்களா அதச் செய்யக் கூடாது”ன்னாரு

“இல்ல சார். படிக்கிற பசங்க பாழாயிடக் கூடாதுன்னுதான்”

“இப்படி விடக்கூடாது. இவனுங்கதான் பினாடி பெரிய பெரிய கேடியா வருவாங்க”

“சரி சார் இப்ப நான் என்ன பண்ணனும்?”

“நீங்க எல்லாம் இதுல உள் கையோன்னு எங்க டிபார்ட்மெண்டுல இப்ப டாக் இருக்கு. இனிமேல் இப்படிச் செய்யாதீங்க. சரியா?”

“சரி சார்”னு சொல்லீட்டு வந்திட்டேன்.

இந்த இடத்துல கூட இப்படியே நிறுத்திவிடலாம். எல்லாம் சுலபமா முடிஞ்சுதுன்னு எழுதி முடிக்கலாம் . ஆனா நாம நினைக்கிற மாதிரியா இருக்கு?

அந்தம்மாவுக்கு மொபைலும் கிடைக்கல(ஏட்டு அமுக்கீட்டாரு). அதுக்குப் பதிலா ஒரு டப்பா செட்டக் காமிச்சு இதுதான்ன்னு சொல்லியிருகாங்க. வெறுத்துப் போய் அவங்க புதுசாவே வாங்கீட்டாங்க.

ஸ்டேசன்ல பசங்களோட பேரன்ஸ்கிட்ட இருந்து மொபைல் வித்த பணம்னு ரெண்டாயிரத்தையும் கறந்துட்டாங்க.

பசங்க ரெண்டு பேரையும் டி சி வாங்கி வேற பள்ளிக்கூடத்துல சேத்துட்டாங்க.

இந்த மாதிரின்னு ஏ இ ஓ வுக்கும் புகார் கொடுத்துட்டாங்க, ஸ்கூலுக்கு என்கொயரி போட்டிருக்காங்க.

அந்தம்மா மட்டும் ஒரு அரை மணி நேரம் பொறுமையா இருந்த்திருக்கலாமேன்னு நீங்க பெருமூச்சு விடுறது எனக்கு இங்க கேக்குது என்ன செய்ய?

Life is a game of ifs and buts.

.

Advertisements

28 comments

 1. இது நிஜமாவே கதையா இருக்iகும் பட்சத்தில் பிரச்சினை இல்லை. ஆனா நிசத்தில் நடந்திருந்தா?

  ஆனாலும் நாம? அடுத்த முறை இப்பிடி ஏதாவது நடந்தா, நாம மாறமாட்டோம்.

  (ஒரு ஜென் கதை ஞாபகத்துக்கு வருது. உங்களுக்கும் தெரிஞ்ச கதைதான். ஒரு ஜென் ஞானியும் தண்ணியில விழுந்த தேளும். அவர் தேளை காப்பாத்த போவாரு, அது கொட்டும். இவரு கையை உதறுவாரு. திரும்பவும் எடுப்பாரு. கொட்டும். அப்போ ஒரு வழிப்போக்கன், இதைப் பார்த்துட்டு, தேள்தான் கொட்டுதே வேற வேலையை பாருங்களேன்னு சொல்வாரு. ஞானி சொல்வாரு, கொட்டறது அதோட இயல்பு, காப்பாத்தறது என்னோட இயல்புன்னு.

 2. /// இரா.சிவக்குமரன் said…

  இது நிஜமாவே கதையா இருக்iகும் பட்சத்தில் பிரச்சினை இல்லை. ஆனா நிசத்தில் நடந்திருந்தா?

  ஆனாலும் நாம? அடுத்த முறை இப்பிடி ஏதாவது நடந்தா, நாம மாறமாட்டோம்.///

  நாம மாறமட்டோம்னு நான் சொல்ல வர்றது,'இன்னொரு முறை இப்படி ஒரு சூழ்நிலை வந்தால், என்னால உதவ முடியாதுன்னு மறுக்க மாட்டோம்.

 3. சிறுவர்களின் உலகம் சாதனங்களால் நிறைந்தது. சாதனங்களை சேர்க்கும் அல்லது சேமிக்கும் படலங்களிலிருந்து சாகசங்கள் (திருட்டு கூட)பிறக்கின்றன. எனக்கொரு யோசனை மொபைலைத் திருடிய நண்பர்கள் என்னென்ன செய்திருப்பார்கள், எங்கெங்கெல்லாம் சுற்றியிருப்பார்கள் என்று. திருட்டு என்றவுடன் ஒரு விறுவிறுப்பு வந்துவிடுவது திருடர்களின் சாமார்த்தியமாவும் இருக்கக்கூடும்! ஒருமுறை (25 வருடங்கள் முன்பு) எங்கள் வீட்டில் பணத்தைத் திருடிக்​கொண்டு ஊரை விட்டு சென்றனர் என் மாமா பையன்கள் இருவர். சில மாதங்கள் கழித்து ஊர் ஒரு மாமா ​பையன் நேராக எங்கள் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டுக் குடித்துவிட்டுப் போனார் – எதுவும் நடக்காதது ​போல். அம்மா அவரிடம் எதுவும் ​கேட்கவேயில்லை. அதற்கப்புறம் மாமா அவர்களை வெளுத்துக்கட்டிவிட்டார். ஆயினும் எனக்கு திருட்டுக்குப் பின் காணாமல் ​போகும் திருடர்களின் நாட்களை அதிசயிப்பதாகவே இருந்து வருகிறது. இந்த உணர்வை உங்கள் கதை ஞாபகப் படுத்திவிட்டது. நன்றி!

 4. ////அந்தம்மா மட்டும் ஒரு அரை மணி நேரம் பொறுமையா இருந்த்திருக்கலாமேன்னு நீங்க பெருமூச்சு விடுறது எனக்கு இங்க கேக்குது என்ன செய்ய?/////

  உண்மைதான் நண்பரே!

 5. கொடும….
  இந்த மாதிரி மிருகங்கள நம்பித்தான் நம்ம சமுதாய பாதுகாப்பு இருக்கு.
  வேட்டை நாய்களின் இயல்பை மாத்தவே முடியாதாட்ட இருக்கு.

 6. /
  கும்க்கி said…

  கொடும….
  இந்த மாதிரி மிருகங்கள நம்பித்தான் நம்ம சமுதாய பாதுகாப்பு இருக்கு.
  வேட்டை நாய்களின் இயல்பை மாத்தவே முடியாதாட்ட இருக்கு.
  /

  ரிப்பீட்டு
  😦

 7. அண்ணாச்சி என்னோட செல்போன் திருட்டு போச்சின்னு உங்க காலடில கண்ணீர் உட்டு கதறினேன். அப்பல்லாம் எங்க போனீங்களாம் 🙂

 8. அனானி option தேவையா! எடுத்துவிடலாமே

  வாழ்த்துக்கள்

 9. நன்றி சிவா.
  நன்றி ஜெகநாதன். உங்க எழுத்து எனக்குப் பிடிச்சிருக்கு.

  நன்றி சுப்பையா சார்.

 10. நன்றி அனானி.

  ஆனால் உங்களுடைய பின்னூட்டத்தை நான் ரிலீஸ் செய்ய முடியாது. அது செல்வேந்திரன் பேர்ல இருப்பது எனக்கும் செல்வாவுக்கும் இடையே பிரச்சினை உண்டுபண்ண வேண்டும் என்ற நோக்கத்திற்காக இடப்பட்டதுதானே? உங்களைப் பார்த்துப் பரிதாபப் படுகிறேன். வலையில் எனக்கு எதிரிகள் யாருமில்லை என்பதும் அப்படியே கருத்து மோதல் இருப்பின் அவர்களுடன் நான் இன்னும் நெருக்கமாக இருப்பேன் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. கருவிலிருக்கும் குழைந்தகூட அறியுமிதை.

  ஆனால் நீங்கள் யாரென்பதை சென்ற பதிவில் நீங்கள் பின்னூட்டம் இட்டபோதே நான் கண்டுகொண்டேன்.

  மேலும் என்னுடைய வலைப்பூவை அமைத்து பராமரிக்கும் திரு.கனகராஜிடம் என் வலைப்பூவிற்கு வரும் பின்னூட்டம் அனைத்தையும் ட்ரேஸ் செய்வதற்கான மென்பொருளும் அதன் ஆதி அந்தம் பற்றிய தகவல்களும் உள்ளன. விரைவில் உங்களுக்கு அதை அனுப்பி வைக்கிறேன்.

  உங்க வயசுக்கும், பதவிக்கும் நீங்க
  இப்படி புகழ் போதைக்காக அலைய வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.

  இது மேலும் தொடர்ந்தால் சைபர் கிரைம்தான் ஒரே வழி என்பதையும் எச்சரிக்கிறேன்.

 11. நன்றி கும்க்கி
  நன்றி சிவா
  நன்றி செல்வா
  நன்றி நிகழ்காலத்தில். அப்படியே செய்துவிட்டேன். உங்கள் அன்புக்கு நன்றி.
  நன்றி பரிசல்.

 12. சுவாரசியம்னு சொல்றதா? வித்தியாசமான நடைனு சொல்றதா? உண்மைனு நினைச்சு வருந்தறதா.?

 13. துப்பறிந்த கதையில் உள்ள நிதர்சனம்
  சற்று கஷ்டமாகத்தான் இருக்கிறது

 14. படிப்பதற்கு ஸ்வாரஸ்யமாகத் தான் இருக்கிறது … ஆனாலும் ரொம்ப எளிமைப்படுத்தப்பட்ட நடையால் வீரியம் குறைந்த மாதிரி இருக்கிறது …

 15. நல்ல பதிவு.

  இது நிஜமாவே கதையா?அல்லது உண்மை நிகழ்வா!

 16. அண்ணாச்சி இது புனைவுன்னு சொன்னீங்கன்னா நிம்மதியா இருக்கும்

 17. உண்மையான.. கதை!!!
  ரொம்ப நல்லா இருக்கு

 18. என்ன செய்வது அண்ணாச்சி – சில சமயங்களில் காவல் துறை நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது. நல்லது செய்யக் கூட விட மாட்டேன் என்கிறது.

  ம்ம்ம்ம்ம்

  கதை நல்லா இருக்கு

 19. சார் சூப்பரா துப்பரிஞ்சிருக்கீங்க……

 20. எனக்கும் செல்வாவுக்கும் இடையே பிரச்சினை உண்டுபண்ண வேண்டும் என்ற நோக்கத்திற்காக இடப்பட்டதுதானே? //

  அண்ணாச்சி, நீங்க தெளிவானவர் என்பதால் தப்பித்தேன். இதுவே வேறு யாருக்காவது வந்திருந்தால் என்னைப் பற்றிய தப்பர்த்தம் வந்திருக்கும். என்னையும் குறிவைக்க ஆட்கள் இருப்பது நகைப்பைத் தருகிறது.

 21. பெரிய பெரிய ஆளுங்களுக்குத்தான் இதுமாதிரி பெரிய சம்பவங்கள், ஏண்ணங்கள் எல்லாம் ஏற்படுமோ?

  /அந்தம்மாவுக்கு மொபைலும் கிடைக்கல(ஏட்டு அமுக்கீட்டாரு). /

  திருட்டுத்…

 22. இது உண்மை நிகழ்வா கற்பனையா என்பதல்ல முக்கியம். இப்படியொரு நிகழ்வு யார் வாழ்விலும் நடக்கக் கூடும். எனக்கும் நடந்துள்ளது. காவல்துறையினரின் அகங்கரா நடைமுறைக்கு இதுவும் ஒரு சாம்பிள், அவ்வளவே..

 23. பெருமூச்சு இல்லை வெறுப்புதான் வருது…

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s