மறுகூட்டலும் முதலிடமும்.

வருவதையெதிர் கொண்டு வாழ்வதென்பது வேறு. வைராக்கியத்துடன் வாழ்ந்து சாதிப்பது வேறு. பெரும்பாலோர் முதல்வகையினரெனினும், மேட்டூரைச் சேர்ந்த மாணவி பிரதிபா இரண்டாம் வகை.

வருடம் முழுவது சொல்லி வந்திருக்கிறார் மாநில அளவில் முதல் மூன்று இடங்களிலொன்று நிச்சயமென்று. சொல்லியதோடு நிறுத்திவிடாமல் முனைப்புடன் முயன்றிருக்கிறார். கவனம் அனைத்தையும் அவ்விலக்கை நோக்கியே குவித்திருக்கிறார். பெற்றோரும் ஆசிரியர்களும் அவரெண்ணத்தை அடைகாத்தவண்ணம் இருந்திருக்கின்றனர்.

தேர்வுகளை எழுதி முடித்தவுடன் அலசிப் பார்த்து ஒவ்வொரு பாடத்திலும் வரும் மதிபெண்களைத் துல்லியமாகச் சொல்லியிருக்கிறார். தேர்வு முடிவுகள் அவரது கணிப்புச் சரியென நிரூபித்தாலும் தமிழில் மட்டுமவரது மதிப்பெண் குறைந்திருக்கிறது.

தமிழ் – 183
ஆங்கிலம் – 194
கனிதம் – 200
இயற்பியல் – 200
உயிரியல் – 200
வேதியியல் – 199

ஆக மொத்தம் அவர் பெற்றது 1176. முதல் மூன்று இடங்கள் முறையே 1183, 1182 மற்றும் 1181 ஆகிய மதிபெண்கள் பெற்றவர்களது.

மாநில அளவில் இடங்களைப் பெற வேண்டியவர் மாவட்ட அளவில்கூட வரவில்லை. துவளவில்லை அவர். மறு மதிபீட்டுக்கு விண்ணப்பிக்கிறார். அவர் சந்தேகப்பட்டதைப் போலவே தமிழில் கூட்டல் பிழை இருந்திருக்கிறது. ஐந்து மதிப்பெண்களை கவனப்பிசகாகக் கூட்ட மறந்துவிட்டனர்.

விடுபட்ட ஐந்து மதிப்பெண்களைக் கூட்டினால் அவரது தற்போதைய மொத்த மதிப்பெண் 1181 மாநில அளவில் மூன்றாம் இடம்.

மதிபெண் எடுப்பதுதான் முக்கியமா? நம் கல்வித்திட்டமே தவறு என்பன போன்ற வாதங்களை விலக்கி வைத்து யோசிப்போம். பம்புக்கறி தின்னும் ஊர் சென்றால் நடுக்கறி எனக்கென்பதோர் சித்தாந்தம் வாழ்வியலின் ஆதாரமாகவிருக்கிறது.

நேற்றே எழுதிய இப்பதிவை இன்றுபதிவேற்றலாமென இருந்துவிட்டேன். காலை நாளிதழில் வந்த செய்தியொன்று இன்னும் மோசமாக இருக்கிறது.


கிருஷ்ணகிரி ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவன் பாலமுருகன் 1176 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். மறுகூட்டலுக்கு விண்ணப்பித்ததில் தமிழில் 8 மதிப்பெண்கள் குறைவாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. அவரது தற்போதைய மதிபெண் 1184.

1183 மாநில முதல் மதிப்பெண். அதை விட ஒரு மதிப்பெண் கூடுதலாகப் பெற்றிருந்தும் இவருக்கான எல்லா பெருமைகளும் மறுக்கப் பட்டிருக்கிறது. எனவே முதலிடம் இரண்டாமிடமாகவும் இரண்டாமிடம் மூன்றாமிடமாகவும் ஆகிறது. மூன்றாம் இடமென்று முதல்வர் கையில் மடிக்கணினி பெற்ற அனைவரும் தகுதியற்றவர்களாகிறார்கள்.அடுத்த முறையாவது இந்தப் பரிசுகளை மறு மதிப்பீடு/மறுகூட்டலுக்குப் பின் வழங்கலாமே?

ஏற்கனவே நன்மதிப்பை இழந்துவரும் ஆசிரியர் சமுதாயத்திற்கு இது பெரும் கரும்புள்ளி. இனியாவது கவனத்துடன் இருப்பார்களா?

பாலமுருகனுக்கும், பிரதிபாவுக்கும் எனது வாழ்த்துக்கள்.

நன்றி : தினமலர்.
.

Advertisements

34 comments

 1. நட்சத்திர வாரம்
  நட்சத்திரங்களின் தொகுப்பாக
  நட்சத்திரங்களாக மின்னுவதற்கு
  அறிவுரைகளும்
  வாழ்த்துக்கள் அண்ணாச்சி (ரொம்ப லேட்) மற்றும் நீங்க அறிமுகபடுத்திய
  நட்சத்திரங்களுக்கும்

 2. நட்சத்திரமாக மின்னும் உங்களுக்கு வாழ்த்து. மாணவர்களை இந்தக் கல்வித்திட்டங்கள் மரிக்கவே செய்கின்றன.உங்களின் பதிவின் அடியொற்றி என்
  பதிவில் அதைப்பற்றிச் சேர்த்துள்ளேன்.
  வாழ்த்துக்கள்.
  தமிழ்சித்தன்

 3. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மதிப்பும் மரியாதையும், கிடைக்கும் என நம்புகிறேன்!


  அன்புடன்
  விஜயஷங்கர்
  பெங்களூரு
  http://www.vijayashankar.in

 4. அடுத்த முறையாவது இந்தப் பரிசுகளை மறு மதிப்பீடு/மறுகூட்டலுக்குப் பின் வழங்கலாமே?//

  நீங்கள் சொல்வது மிக சரி…

 5. அவருடைய தன்னம்பிக்கைக்கும் பாராட்டுகள்.

 6. இதில் மற்றுமொரு விஷயம். நாளிதழ்களில் தேர்வு முடிவு வெளியாகும் நாளன்று முதல் பக்கத்தில் வெளியாகும் முதலிடம் பிடித்தவரை பற்றிய செய்தி, இந்த செய்தியை வெளியிடும் பக்கத்தை பாருங்கள். மறு மதிப்பீடு செய்யவேண்டிய விஷயம்.

 7. அவ்விருவருடைய உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.. மாற்றங்கள் நிறைய தேவை.

  பாலமுருகனுக்கும், பிரதிபாவுக்கும் எனது வாழ்த்துக்கள்.

 8. ம்ம்.. ஊடகங்கள் செய்ய தவறுவதை நீஙக்ள் செய்றீங்க.. அவரக்ளுக்கும் உஙக்ளுக்கும் பாராட்டுகள்..

 9. நன்றி ஜே
  நன்றி ஒரு அகதியின் நாட்குறிப்பு
  நன்றி விஜயசங்கர்.
  நன்றி மயில்.
  நன்றி ஜமால்
  நன்றி சிவா. கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்க. எனக்குப் புரியல.
  நன்றி தமிழ்.
  நன்ரி கார்க்கி.

 10. நேற்று பிரதீபாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி கண்டு கடும் சினத்தில் இருந்தேன். எரியிற கொள்ளியில நெய் ஊத்துன மாதிரி இன்னைக்கு பாலமுருகன் செய்தி வந்துருக்கு.
  என்ன தான் வேலை செய்யிறானுங்களோ தெரியல,
  அந்த மாணவர்கள் கடுமையா உழைச்சதுக்கு சரியான பலன் கிடைக்கலையே, இவங்களுக்கு கிடைக்க வேண்டிய பாராட்டும், பரிசும், புகழும் வேற யாருக்கோல்ல கிடைச்சுருக்கு?

  பேப்பர்ல செய்தி வந்துருச்சு, ஆனா இது குறித்து கல்வி அமைச்சரோ , அரசாங்கமோ எதையும் சொல்லக் காணோம். இன்னைக்கு சட்டசபையில யாராச்சும் பேசுனா உண்டு. சட்டசபையில பாத்ரூம் போற மாதிரி வெளிநடப்பு செய்யிற எதிரிகட்சிகள் இருக்கப்ப இந்த விவாதம் எல்லாம் வருமான்னு தெரியல.
  தவறு செஞ்சவங்க மேல கடுமையான நடவடிக்கை எடுக்கனும்.

 11. //Vijayashankar said…
  அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மதிப்பும் மரியாதையும், கிடைக்கும் என நம்புகிறேன்!

  //

  தாமதமாக வழங்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்.

  அது இந்த விசயத்துக்கும் பொருந்தும்.

 12. நிறைய மாறனும். எதாவது சீர்திருத்தம் செய்யப் போனா சுயாட்சி புண்ணாக்குன்னு அதுக்கும் ஆயிரத்தெட்டு தடை.. விடைத்தாள்களுக்கு முன் இந்த தடைஆள்களை திருத்த வேண்டும்.

 13. யோசிக்க வேண்டிய விடயம். நல்ல பதிவு வேலன்.

  அனுஜன்யா

 14. பாலமுருகனுக்கும், பிரதிபாவுக்கும் எனது வாழ்த்துக்கள்.

  மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  அடுத்த முறையாவது இந்தப் பரிசுகளை மறு மதிப்பீடு/மறுகூட்டலுக்குப் பின் வழங்கலாமே?

  இதுதான் சரியான முறை. வெற்றி பெற்றவர்களை மட்டும் அறிவித்து விட்டு. முதல் மூன்று இடங்களை (மாநில / மாவட்ட) மறுமதிப்பீட்டுக்கு பிறகு அறிவிப்பதே சிறந்த முறை.

 15. நம்பிக்கையும், அதைத் தொடர்ந்த நல்ல முயற்சியும். பாராட்ட மட்டும் அல்ல போற்றத் தக்கது.

 16. வாழ்த்துக்கள் அண்ணா,
  நானும் காலையில்
  இதை பார்த்து யோசித்தேன்.

 17. அண்ணா பல்கலையில் நான் படிக்கும் போது நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. தேர்வு முடிவின் போது ஒரு மாணவன் பெற்ற மதிப்பெண் முப்பதுக்கும் குறைவு; மறுமதிப்பீட்டின் பின் கிடைத்தது என்பதுக்கும் மேல். அப்போதைய துணை வேந்தர் திரு.பால குருசாமி ஒரு சட்டம் கொண்டு வந்தார்; மறுமதிப்பீட்டில் கிடைத்த மதிப்பெண்ணின் வித்தியாசம் முதலில் கிடைத்த மதிப்பெண்ணை விட ஒரு குறிப்பிட்ட அளவு அதிகமாக இருந்தால் முதலில் அந்த வினாத்தாளை திருத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று.

  ஆனால் இதன் விளைவோ யாரும் கற்பனை பண்ண முடியாதது. ஆசிரியர்கள் அனைவரும் மற்ற ஆசிரியர்களைக் காப்பாற்றுவதற்காக மறுமதிப்பீட்டில் அந்த சட்டத்தில் குறிப்பிட்ட அளவைக்காட்டிலும் மேல் மதிப்பெண் பெற்றிருந்தாலும் குறைவாகவே இட்டனர் 🙂

 18. மன்னிக்கவும். நான் சொல்ல வந்த கருத்து இதுதான். தேர்வு முடிவுகள் வெளியான உடனேயே முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தவர்களை பற்றிய செய்திகளை வெளியிடுவதில் ஆர்வம் காட்டும் தினசரி பத்திரிகைகள், இப்போது முதல் இடம் பிடித்த மாணவரைப் பற்றிய செய்தியை ஒரு சிறு பத்தி செய்தியாக வெளியிடுகின்றன. இதுதான் நான் சொல்ல வந்தது.

 19. அண்ணே…
  உள் விவகாரங்களை கவனிக்கலாம்.
  முதலில் மூன்று இடங்களை பெற்ற பள்ளிகள் எவையெவை..அதற்க்காக அவர்கள் செலவிட்ட தொகை எவ்வளவு…அதன் மூலமாக அடுத்த ஆண்டிற்க்கான வியாபாரத்தில் எவ்வளவு வருவாய்….?
  இது தொழில் தானே…முதல் போட்டு முதலிடத்திலிருந்தால் மட்டுமே தொடர்ந்து தொழிலில் முன்னேறவும் வருவாயை பெருக்கவும் முடியுமல்லவா?
  தேர்வுகள் முடிந்தவுடன் மாணவர்களின், பெற்றோர்களின் கனவு மதிப்பெண் குறித்த எதிர்ப்பார்ப்போடு நின்று விடுகிறது.அதன் பின்னர் நடக்கும் நிறுவனங்களுக்கிடையேயான ஓட்டப்பந்தயங்களில்தான் இம்மாதிரி திறமையான மாணாக்கர்கள் கவனக்குறைவு என்னும் போர்வையில் பின்னுக்கு தள்ளப்பட்டு, தொடர்ந்த ஆண்டாண்டுகளாக முன்னனியில் உள்ள நிறுவனங்களே சில லகரங்களின் அடிப்படையில் ஒரு மார்க் அல்லது இரண்டு மார்க் அதிகம் பெற்று தமது நிலையினை தக்க வைத்துக்கொள்கின்றன.

  தன்னம்பிக்கையுடன் போராடி வென்ற இரு மாணவச்செல்வங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும்,பதிவிட்ட உங்களுக்கு நன்றிகளும்.

 20. கிடைக்கவேண்டிய மரியாதைகளும் பாராட்டுக்களும் கிடைக்காமல் போனது வருந்தக்கூடியதே.. இருவருக்கும் வாழ்த்துக்கள்

 21. இப்போது பெற்றாலும் பாலமுருகனுக்கு இழப்பு இழப்புதான் கடைசிவரை. நாம் இத்துடன் மறந்துவிடுவதுபோலில்லாமல்.இது
  போன்ற பதிவை அவர் படிக்க நேர்ந்தால் ஆறுதல் கூடும்.கவனிக்க வேண்டியவர்கள் கவனிப்பார்களா(க)?!

  நல்ல பதிவு அண்ணாச்சி. நட்சத்திர வாரத்தில் அழுத்தமாக பதிவிடுகிறீர்கள்

 22. என்ன சொல்வதென்றே தெரியவில்லை…குழந்தைகள் இருவரும் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்..

 23. அட பாவமே…!! ரம்யா அக்கா மாதிரி இருக்குற டீச்சருங்க பண்ற வேல….. !! பதிவு போடுறேன்னு அவசர … அவசரமா இப்புடி ஒண்ணா… ரெண்டா மார்க்க கூட்டி …. பேப்பருல நூத்துக்கு ஒன்னு' நு போட்டுற வேண்டியது….!!!

  எப்படியோ… பிரதீபாவுக்கும் , பால முருகனுக்கும் என் வாழ்த்துக்கள்..!! வாழ்க வளமுடன்…!!!!

 24. பிரதீபாவுக்கும் , பால முருகனுக்கும் என் வாழ்த்துக்கள்..!!

 25. நன்றி ஜோ. யார் முதலில் செய்தியைத் தருகிறார்கள் என்பதில்தான் ஊடகங்களுக்குள் போட்டியே தவிர யார் சரியான தகவலைத் தருகிறார்கள் என்பதில் இல்லை.

  நன்றி சஞ்சய்.
  நன்றி அனுஜன்யா
  நன்றி நவாஸ்
  நன்றி கோவி
  நன்றி வாசு
  நன்றி சிவா. ஜோவுக்குச் சொன்னதுதான் உங்களுக்க்கும்.

  நன்றி கும்க்கி. ஆனால் இதில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. நேரில் விவாதிப்போம். அல்லது தனிப் பதிவாக எழுதுகிறேன்.

  நன்றி உழவன்
  நன்றி யாத்ரா
  நன்றி முத்துவேல்
  நன்றி அருணா
  நன்றி TVRK சார்.
  நன்றி நியாஸ்
  நன்றி மேடி
  நன்றி சிவா

 26. படிக்கவே வருத்தமாக இருக்கிறது… அவசியமான பதிவு 🙂

 27. பாலமுருகனுக்கும், பிரதிபாவுக்கும் வாழ்த்துக்கள்.

  //அடுத்த முறையாவது இந்தப் பரிசுகளை மறு மதிப்பீடு/மறுகூட்டலுக்குப் பின் வழங்கலாமே?//

  அரசு அவசியம் கவனிக்க வேண்டிய ஒன்று. இது மாதிரியான தவறுகளால் அங்கீகாரம் மறுக்கப் பட்டவர் மட்டுமின்றி, அளிக்கப் பட்ட பரிசுக்கு தகுதியானவரில்லை என அறிவிக்கப் படுபவரும் சேர்ந்தே மன உளைச்சலுக்கு ஆளாவர். நல்ல பதிவு வேலன்.

 28. வேதனை தரும் நிகழ்ச்சிகள். மாணவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.!

 29. என்ன செய்வது – தவறுகள் தவிர்க்க இயலாதவை. எத்துறையிலும் தவறு நடக்க வாய்ப்புண்டு – இயன்ற வரை தவிர்க்க முயல் வேண்டும்.

  பாலமுருகனுக்கும் பிரதீபாவிற்கும் நல்வாழ்த்துகள் கலந்த மனங்கனிந்த பாராட்டுகள்

 30. மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  அடுத்த முறையாவது அரசு இதை சரி செய்ய வேண்டும்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s