மெட்ரோ மேன் ஸ்ரீதரன்

metro-man-sreedharan-inner

கொங்கன் ரயில்வே பற்றித் தெரிந்திருக்கும் உங்களுக்கு. கொச்சியிலிருந்து மும்பை வரை மேற்குக் கடறகரையை ஒட்டி மலையைக் குடைந்தும் உயரமான பாலங்களமைத்தும் கட்டி முடிக்கப்பட்ட சிறப்பான ஒரு திட்டம்.

1990ல் ரயில்வே மந்திரியாக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் மனதில் உதித்த திட்டம். ஆனால் சாத்தியமில்லாத ஒன்று எனக் கைவிடப்பட்ட திட்டமும் கூட. திட்டம் கைவிடப்பட்ட செய்தி நாளிதழ்களில் வெளியான மூன்றாம் நாள் ஸ்ரீதரன் ஜார்ஜைச் சந்திக்கிறார். புதிய திட்டமொன்றைக் கொடுக்கிறார். “வழக்கமான முறைகளிலிருந்து வேறுபட்ட செயலமுறை அவசியமென்பதையும் உணர்த்துகிறார். அவரது திட்டம் பிடித்துப்போக மூன்றே நாட்களில் கேபினெட் ஒப்புதல் பெற்றுத் திட்டத்தைத் துவக்குகிறார்.

ரயில்வேயிலிருந்து ஓய்வுபெற்ற சில மாதங்களிலேயே மீண்டும் கொங்கன் ரயில் கார்ப்பொரேசனில் தனது பணியைத் துவங்கினார் ஸ்ரீதரன்.

மொத்தம் 760 கிமி தூரமுள்ள இத்திட்டம் 93 மலைக்குகைகளையும் (குகை மொத்த நீளம் மட்டும் 82 கி மி) 150 பாலங்களையும் உள்ளடக்கியது. இந்தியாவில் இதற்கு முன் இப்படி ஒருதிட்டம் செயல்படுத்தப் படவில்லை. மேலும் கட்டு, செயல்படுத்து, மாற்று (BOT – Build-Operate-Transfer) முறையில் கட்டப்பட்ட மத்திய அரசுத் திட்டமும் ஆகும். சொன்ன நேரத்திலும் திட்டமிட்ட செலவுக்குள்ளும் கட்டிமுடிக்கப்பட்டது இன்னுமொரு சிறப்பு.

ஸ்ரீதரன் இத்துடன் திருப்தியடைந்துவிடவில்லை. அடுத்த திட்டமாக டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தை முழுவதும் தயாரித்து அளித்தார். ஆரமபத்தில் சாத்தியமற்றது என எதிர்ப்பு இருந்தது, குறிப்பாக சாந்தினி சவுக் பகுதியில் இருப்பவர்களிடமிருந்தும் தெற்கு டெல்லிவாசிகளிடமிருந்தும். அவ்விடங்களில் தரையடி ரயில் பாதைகளை ஏற்படுத்தி திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான டெல்லிவாசிகள் இந்த 75 வயது இளைஞரை நன்றியுடன் வாழ்த்துகிறார்கள். பேருந்து நிலையங்களில் காத்திருந்த நாட்களெல்லாம் கனவாய்ப் போய்விட்டது அவர்களுக்கு. ஒரு மணிநேர பயணதூரம் அவர்களுக்கிப்போது பத்து நிமிடங்களாகக் குறைந்து விட்டது.

ஸ்ரீதரனின் தாரக மந்திரம்.

1. நேரம் தவறாமை

2. சரியான ஆட்தேர்வு

3. குழுவாகச் செயல்படுவது

4. காலகெடுவைக் கடைபிடித்தல்

தனது குழுவிலிருக்கும் ஓவ்வொருத்தரைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பார். அவர்களுடன் நெருக்கமாகச் செயல்படுவார். அவர் குழுவிலிருக்கும் அனைவரிடமும் ஒரு டிஜிட்டல் காலண்டர் இருக்கும். அவர்கள் திட்டம் முடிய் இன்னும் எவ்வளவு நாட்கள் அவகாசம் இருக்கிறது என்பதை அது காட்டும்.

பாலக்காடு மாவட்டம், கருகாபுத்தூர் கிரமாத்தைச் சேர்ந்த எலாட்டுவலபில் ஸ்ரீதரனுடன் படித்தவர் நமது முன்னாள் தேர்தல் ஆணைஆளர் டி என் சேஷன். படிப்பில் இருவருக்கும் போட்டி மிகப் பலமாக இருக்கும். காக்கிநாடா பொறியியல் கல்லூரியில் படித்து முடித்த ஸ்ரீதரன் சிறு சிறு வேலைகளில் இருந்து பின் 1954 ல் இந்திய ரயிவேக்குத் தேர்வு செய்யப் பட்டார்.

அவரது திறமை முதன்முதலில் வெளியே தெரியவாரம்பித்தது 1963ல். புயலில் சிக்கிய பாம்பன் பாலத்தை மீட்டுச் செப்பனிட 6 மாத கால அவகாசமே இருந்தது. ஸ்ரீதரன் அதை வெறும் 46 நாட்களிலேயே திறம்படச் செய்து முடித்தார்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்

திண்ணிய ராகப் பெறின்

என்ற வள்ளுவனின் வாக்கை மெய்ப்பித்திருக்கும் ஸ்ரீதரனை இந்திய அரசு உயரிய விருதான பத்ம விபூஷன் கொடுத்துக் மரியாதை செய்திருக்கிறது.

Advertisements

29 comments

 1. ஸ்ரீதரன் அவர்கள் வருங்காலத் தலைமுறைக்கு மிக முக்கியமான வழிகாட்டி.
  சரியாக திட்டமிடலும், விடாமுயற்சியும், நேரம் தவறாமையும் மற்றும் கடின உழைப்பும் நாம் தொடந்து கற்க வேண்டியவை.

  அவரை பதிவு மூலம் மிகச்சரியான முறையில் அடையாளம் காட்டியுள்ளீர்கள். நன்றி

 2. படிக்கறதுக்கு பெருமையா இருக்குதண்ணே,

  இந்த மாமனிதரை பதிவுலகுக்கு அறிமுகப்படுத்திய இன்னொரு மாமனிதருக்கு ஒரு சல்யூட்.

 3. அவரை பற்றி கேள்விபட்டிருக்கிறேன்..முழுமையான அறிமுகத்திற்கு நன்றி…

 4. // கொங்கன் ரயில்வே பற்றித் தெரிந்திருக்கும் உங்களுக்கு. //

  தெரியாதா பின்ன…… என் நைனா கொங்கன் ரயில்வேயிலதான்
  வேல பாக்குறாரு….!!!

  கொங்கன் ரயில்வேயானது மங்களூரில் துவங்கி , கோவா வழியாக மும்பை கல்யான் ரயில் மிளையம் வரை உள்ளது….!!!

  அருமை…!! ஸ்ரீ தார் சார் போல ஒரு மனிதன் கிடைக்காமல் இருந்தால் , கோவாவின் வளர்ச்சி சற்று பின்னோக்கி இருந்திருக்கும் …!!

  மும்பையிலிருந்து கோவாவிற்கு சாலை வழி மிகவும் அதிகத் தொலைவு . ஆதலால் மும்பையிலிருந்து கோவாவுக்கு சரக்குடன் கூடிய லாரிகளை ரயிலில் ஏற்றி சுலபமாக கோவா கொண்டுவந்து விடுவார்கள் .. இதனால் சில நூறு மயில்கள் குறைவதுடன் , எரி பொருள் மற்றும் பணம் எலாமே மிச்சம்தான் ..!!!!

  நல்ல பதிவு…!! அருமை….!!!!!

 5. படித்திருக்கிறேன். பதிவு அருமை. நன்றி.

 6. திரு இ. ஸ்ரீதரன் அவர்களை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

 7. நம்ம சென்னை மெட்ரோ ரயில் இவர் பொறுப்பில் தான் வருகிறதா??

 8. எனக்கு தெரியாத விசயம். நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்.
  நன்றி.

 9. திறமையான ஆளை அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி!

 10. நுட்பமான பதிவு அருமையான காலத் தேர்வு அதுவும் நம்ம மெட்ரோ ரயில் திட்டம் ஆறுமுக நாளில் வாழ்த்துக்கள்.

 11. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திலும் இவரது பங்கு உண்டா? நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விவரங்களை வைத்துப் பார்க்கும்போது சென்னை மெட்ரோ ரயில் புறத்திட்டுகளிலும் இவரது பங்கு இருந்தால் குறித்த காலக்கெடுவில் செயலாக்க முடியும்.

 12. டெல்லி மெட்ரோ வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது கனாட் ப்ளேஸ் ஸ்டேஷனில் திரு.ஸ்ரீதரனை நான் சந்தித்தது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சந்திப்பு. 15 நிமிட சந்திப்பில் அவரது எளிமையும் உறுதியும் கண்டு மிக வியந்தேன். One of the best program managers.

 13. அவருடனான இரண்டாவது சந்திப்பு திரு.அருண் ஷோரியுடன்.NDTV walk the talk நேர்காணலின்போது. முடிந்தபோது you tube-ல் அந்த நேர்காணலைப் பாருங்கள்.

 14. மனசு நிறைவா இருக்கு அண்ணாச்சி, இதைப் படிக்கும்போது.

 15. நிறைய்யச் சேதிகளோடு ஒரு நல்ல பதிவு.
  ஒரு உழைப்பாளிக்கு வலைத்தளம் காட்டும்
  மிக முக்ய மரியாதை.

 16. யார் யாருக்கெல்லாமோ மத்திய, மாநில அரசுகள் பட்டங்கள் தருகிறார்களே, ஸ்ரீதரனுக்கு பட்டம் தந்தார்களா?

  சகாதேவன்

 17. எனக்கு தெரியாத விசயம். அறிமுகத்திற்கு நன்றி.பதிவு அருமை.

  நன்றி.. நன்றி …

 18. சே! கத்திப்பாரா பாலம் ஏன் இவரிடம் கொடுக்கப்படவில்லை???
  சிங்கப்பூர் வந்து ரயில் மற்றும் நிலையங்களை பார்க்கமுடியாதவர்கள் டெல்லி போய் பார்த்தால் போதும் அப்படியே கார்பன் காப்பியோ என்ற எண்ணம் வரும்.ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்திருப்பது பாராட்டுக்குறியது என்றாலும் பயணச்சீட்டுக்கு பதில் நெகிழி காயின் கொடுப்பது கண்றாவியாக இருக்கு.

 19. நல்ல பதிவு; சிறந்த செயல்வீரராகத் திகழும் மனிதரின் அறிமுகத்துக்கு நன்றி.

 20. நட்சத்திர வாரத்தில இவரை அடையாளம் காட்டிருக்கீங்க. நன்றி

 21. நான் ஒவ்வொரு முறை மும்பை செல்லும்பொழுதும் வியந்து பார்க்கும் குகைப் பாலங்கள் அவை. இவ்வளவு நாட்கள் அதைப் பற்றிய எந்த தகவலும் தெரிந்து கொள்ளாமலே இருந்துவிட்டேன். இனி ஒவ்வொரு முறையும் அந்தப் பாதையில் பயணிக்கும்போதும் நிச்சயம் ஸ்ரீதரன் ஞாபகம் வரும். மிக்க நன்றி அண்ணாச்சி. உபயோகமுள்ள தகவலுக்கு.

  /// கதிர் said…

  ஸ்ரீதரன் அவர்கள் வருங்காலத் தலைமுறைக்கு மிக முக்கியமான வழிகாட்டி.
  சரியாக திட்டமிடலும், விடாமுயற்சியும், நேரம் தவறாமையும் மற்றும் கடின உழைப்பும் நாம் தொடந்து கற்க வேண்டியவை.///

  நிச்சயமாய்!!

 22. நன்றி கதிர்
  நன்றி தராசு
  நன்றி மணி
  நன்றி மேடி
  நன்றி சிவா
  நன்றி இந்தியன்

  நன்றி சித்து. இவரது அடுத்த திட்டம் மும்பையிலிருந்து பூனா வரைக்கும்.

  நன்றி முத்துராமலிங்கம்
  நன்றி சரவணா
  நன்றி நியாஸ்.

  நன்றி ராஜா. சென்னை திட்டத்தில் இவர் இல்லை.

  நன்றி முரளி

  நன்றி மகேஷ். இவரிடம் வேலை செய்த ஒருவர் சொன்ன தகவல் இவரைப் பற்றி மேலும் படிக்கத் தூண்டியது.

  நன்றி முத்துவேல்
  நன்றி காமராஜ்

  நன்றி சகாதேவன். பதிவிலேயே சொல்லியிருக்கிறேனே அவருக்கு பதமவிபூஷன் வழங்கப்பட்டிருக்கிறது.

  நன்றி தாம்ஸ்.
  நன்றி குமார்.
  நன்றி தீபா
  நன்றி சின்ன அம்மினி.
  நன்ரி சிவா.

 23. மிக அருமையான செயல்வீரரைக் குறித்தப் பதிவு.

  அண்ணாச்சி, இன்னும் இந்த மயிலாடுதுறை ‍ விழுப்புரம் பாதை முடியாம இருக்கு பார்த்திங்களா? இப்டி செயல்வீரர்கள் இருக்க அதே நாட்டுல எப்டிப் பட்ட கால தாமதங்களும் நடக்குது பாருங்க.

 24. இது போன்ற தகவல்கள் நமக்கு ஏற்படும் அவ நம்பிக்கையை சற்று குறைக்கிறது

 25. பாராட்டுக்குரியவரை பாராட்டியதற்கு பாராட்டுகள்.!

 26. அண்ணாச்சி

  இன்னும் அரசுத்துறைகளில் உள்ள தகுதியானவர்களைத் தேடிக் கண்டுபிடித்து பயன்படுத்தினால் நல்ல செயல்கள் பல நடக்கும்.

  இவரைப்பற்றிய பதிவிற்கு நன்றி

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s