மெட்ரோ மேன் ஸ்ரீதரன்

metro-man-sreedharan-inner

கொங்கன் ரயில்வே பற்றித் தெரிந்திருக்கும் உங்களுக்கு. கொச்சியிலிருந்து மும்பை வரை மேற்குக் கடறகரையை ஒட்டி மலையைக் குடைந்தும் உயரமான பாலங்களமைத்தும் கட்டி முடிக்கப்பட்ட சிறப்பான ஒரு திட்டம்.

1990ல் ரயில்வே மந்திரியாக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் மனதில் உதித்த திட்டம். ஆனால் சாத்தியமில்லாத ஒன்று எனக் கைவிடப்பட்ட திட்டமும் கூட. திட்டம் கைவிடப்பட்ட செய்தி நாளிதழ்களில் வெளியான மூன்றாம் நாள் ஸ்ரீதரன் ஜார்ஜைச் சந்திக்கிறார். புதிய திட்டமொன்றைக் கொடுக்கிறார். “வழக்கமான முறைகளிலிருந்து வேறுபட்ட செயலமுறை அவசியமென்பதையும் உணர்த்துகிறார். அவரது திட்டம் பிடித்துப்போக மூன்றே நாட்களில் கேபினெட் ஒப்புதல் பெற்றுத் திட்டத்தைத் துவக்குகிறார்.

ரயில்வேயிலிருந்து ஓய்வுபெற்ற சில மாதங்களிலேயே மீண்டும் கொங்கன் ரயில் கார்ப்பொரேசனில் தனது பணியைத் துவங்கினார் ஸ்ரீதரன்.

மொத்தம் 760 கிமி தூரமுள்ள இத்திட்டம் 93 மலைக்குகைகளையும் (குகை மொத்த நீளம் மட்டும் 82 கி மி) 150 பாலங்களையும் உள்ளடக்கியது. இந்தியாவில் இதற்கு முன் இப்படி ஒருதிட்டம் செயல்படுத்தப் படவில்லை. மேலும் கட்டு, செயல்படுத்து, மாற்று (BOT – Build-Operate-Transfer) முறையில் கட்டப்பட்ட மத்திய அரசுத் திட்டமும் ஆகும். சொன்ன நேரத்திலும் திட்டமிட்ட செலவுக்குள்ளும் கட்டிமுடிக்கப்பட்டது இன்னுமொரு சிறப்பு.

ஸ்ரீதரன் இத்துடன் திருப்தியடைந்துவிடவில்லை. அடுத்த திட்டமாக டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தை முழுவதும் தயாரித்து அளித்தார். ஆரமபத்தில் சாத்தியமற்றது என எதிர்ப்பு இருந்தது, குறிப்பாக சாந்தினி சவுக் பகுதியில் இருப்பவர்களிடமிருந்தும் தெற்கு டெல்லிவாசிகளிடமிருந்தும். அவ்விடங்களில் தரையடி ரயில் பாதைகளை ஏற்படுத்தி திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான டெல்லிவாசிகள் இந்த 75 வயது இளைஞரை நன்றியுடன் வாழ்த்துகிறார்கள். பேருந்து நிலையங்களில் காத்திருந்த நாட்களெல்லாம் கனவாய்ப் போய்விட்டது அவர்களுக்கு. ஒரு மணிநேர பயணதூரம் அவர்களுக்கிப்போது பத்து நிமிடங்களாகக் குறைந்து விட்டது.

ஸ்ரீதரனின் தாரக மந்திரம்.

1. நேரம் தவறாமை

2. சரியான ஆட்தேர்வு

3. குழுவாகச் செயல்படுவது

4. காலகெடுவைக் கடைபிடித்தல்

தனது குழுவிலிருக்கும் ஓவ்வொருத்தரைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பார். அவர்களுடன் நெருக்கமாகச் செயல்படுவார். அவர் குழுவிலிருக்கும் அனைவரிடமும் ஒரு டிஜிட்டல் காலண்டர் இருக்கும். அவர்கள் திட்டம் முடிய் இன்னும் எவ்வளவு நாட்கள் அவகாசம் இருக்கிறது என்பதை அது காட்டும்.

பாலக்காடு மாவட்டம், கருகாபுத்தூர் கிரமாத்தைச் சேர்ந்த எலாட்டுவலபில் ஸ்ரீதரனுடன் படித்தவர் நமது முன்னாள் தேர்தல் ஆணைஆளர் டி என் சேஷன். படிப்பில் இருவருக்கும் போட்டி மிகப் பலமாக இருக்கும். காக்கிநாடா பொறியியல் கல்லூரியில் படித்து முடித்த ஸ்ரீதரன் சிறு சிறு வேலைகளில் இருந்து பின் 1954 ல் இந்திய ரயிவேக்குத் தேர்வு செய்யப் பட்டார்.

அவரது திறமை முதன்முதலில் வெளியே தெரியவாரம்பித்தது 1963ல். புயலில் சிக்கிய பாம்பன் பாலத்தை மீட்டுச் செப்பனிட 6 மாத கால அவகாசமே இருந்தது. ஸ்ரீதரன் அதை வெறும் 46 நாட்களிலேயே திறம்படச் செய்து முடித்தார்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்

திண்ணிய ராகப் பெறின்

என்ற வள்ளுவனின் வாக்கை மெய்ப்பித்திருக்கும் ஸ்ரீதரனை இந்திய அரசு உயரிய விருதான பத்ம விபூஷன் கொடுத்துக் மரியாதை செய்திருக்கிறது.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s