எல்லோருக்குமான வாசனை


முன்கூட்டியே எடுத்த
தீர்மானங்களினூடான
உங்கள் பார்வைகள்
என்னைக்
காயப் படுத்துவதில்லை

எனக்கான உருவெளித்தோற்றம்
என் செயலகளிலிருந்தும்
நான் உதிர்த்த சொற்களிலிருந்தும்
உங்களால் கட்டமைக்கப்பட்டதல்ல
அது
பிறிதொன்றாகவே
இருக்கிறதெப்போதும்

நிஜமான என்னிலிருந்து
இல்லாத என்னைப் பிரித்தறிய
முயலும் உங்கள்
செயல்களின் மீதெனக்கேதும்
துவேஷமில்லை

என்றாலும்
மொட்டுக்கள்
மலர்கின்றன
எல்லோருக்குமான
வாசத்தைச்
சுமந்தபடி.

.

Advertisements

21 comments

 1. நட்சத்திர வாழ்த்துக்கள்… அண்ணாச்சி..

  எளிமையான அருமை…

 2. // என்றாலும்
  மொட்டுக்கள்
  மலர்கின்றன
  எல்லோருக்குமான
  வாசத்தைச்
  சுமந்தபடி. ///

  இந்த வரி நெம்ப டச் பன்னிபோடுச்சுங்க தலைவரே……!!!!!!

  சூப்பர் கவிதை…!! நீங்க நட்சத்திரம் ஆனதுக்கு வாழ்த்துக்கள்…!!!!

  வாழ்க வளமுடன்…!!!!!

 3. இப்போதுதான் பார்த்தேன்.
  நட்சத்திர வாழ்த்துக்கள் தோழரே!

 4. ////என்றாலும்
  மொட்டுக்கள்
  மலர்கின்றன
  எல்லோருக்குமான
  வாசத்தைச்
  சுமந்தபடி.///

  சகமனிதன் இல்லை
  வாசத்தை நுகரும்
  மனநிலையில்!
  அதுதான் சோகம்!

 5. நன்றி சென்ஷி
  நன்றி பேரரசன்
  நன்றி மேடி
  நன்றி நவாஸ்
  நன்றி TVRK சார்
  நன்றி அருணா
  நன்றி மாதவ்
  நன்றி சகாதேவன்
  நன்றி சுப்பையா சார்.

 6. நல்ல கவிதை அண்ணாச்சி, மிகவும் பிடித்திருக்கிறது.

 7. Congrats அண்ணாச்சி 4 Tamilmanam Star.

  நட்சத்திர வாழ்த்துகள் அண்ணாச்சி

 8. முதலில் நட்சத்திர வாழ்த்துக்கள்.

  கவிதை நன்றாக இருக்கிறது்.

 9. நல்ல கவிதை.. நட்சத்திர வாழ்த்துக்கள்!

 10. யாத்ரா, தமிழ்நெஞ்சம், மாதேவி, முத்துராமலிங்கம், கார்க்கி, ராஜ, உழவன், சிவா அனவருக்கும் நன்றி.

 11. நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணாச்சி 🙂

 12. நல்லாத்தான் இருக்கு – நல்வாழ்த்துகள்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s