பொதுவில் வை(த்)தல்

Blogging is a public activity with no right to anonymity

வலையில் எழுதுவது சுலபமாகவும், அதன் எதிர்வினைகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள வசதி இருப்பதாலும் மேலும் மேலும் புதியவர்கள் எழுத வருகிறார்கள். மகிழ்கிறேன். ஆயின் தமக்கான எல்லைகள் எது என்பதைக் கொஞ்சம் தெரிந்து தெளிதல் நலம் . பின்னூட்டம், ஹிட்ஸ், ஃபாலோயர்ஸ் போன்றவற்றை நோக்கமாக வைத்தெழுதாது நேர்மையாகத் தோன்றுவதை எழுதுவது உத்தமம்.

இங்கிலாந்து காவலர் ஒருவர் பிளாக் பற்றிக் கேள்விப்பட்டு, கவரப்பட்டு தனெக்கென ஒரு வலைப்பூ தொடங்கி, அதில் தனது பணிக்காலத்தில் சந்தித்த சவாலான குற்றங்களையும், அதை அவர் துப்பறிந்த விதத்தையும் எழுதுகிறார். அதிகாரிகள் அவ்வாறு அரசாங்க ரகசியங்களை வெளியிடக்கூடாதென்பதால் தனதடையாளத்தை மறைத்து புனைபெயரொன்றில் எழுதுகிறார்.

ஒவ்வொரு குற்ற நடவடிக்கையிலும் அரசியல்வாதிகள் தலையீடு, மஃபியாக்கள் தலையீடு போன்றவற்றை எவ்வித ஒளிவு மறைவேதுமின்றி எழுதுகிறார். மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகுகிறது. யாரவர் என எல்லோருமாவலுடன் தேடத்தலைபடுகின்றனர்.

இவரைக் கண்டறிய முயலும் டைம்ஸ் பத்திரிக்கை நிருபர், முதலில் அவரது பதிவு ஒன்றிற்குப் பின்னூட்டம் இடுகிறார். தானும் ஒரு வலைப்பதிவரென அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார். அவரை ஆகா ஓகோவெனப் புகழ்கிறார். பிறிதொரு நாளில் வலைப்பதிவர்கள் சந்திப்பெனச் கூறி இடமொன்றைக் குறித்து வரச் சொல்லி, அவரை அடையாளம் காட்டுகிறார் உலகிற்கு.

நைட் ஜேக் என்ற பெயரில் வலைத்தளம் வைத்திருந்த
ரிச்சர்ட் ஹார்டன் – லங்காஷையர் காவலர்.

பொதுவாக வலையில் எழுதுவது தனிமனித சுதந்திரம் அதை நீதிமன்றம் தடை செய்ய முடியாதென்று அவரது வக்கீல் வாதாட, நீதிபதி சொன்ன தீர்ப்பு, “ வலையில் எழுதுவது தனிப்பட்ட செயல் அல்ல. அது ஒரு பொதுச் செயல். எனவே எழுதப்பட்டதற்கு எழுதியவர்தான் பொறுப்பேற்கவேண்டும்.”

எழுதியவன் இறந்துவிட்டான் இனிப் பேசுவது எழுத்துத்தான் என்று பி ந வாதிகள ஜல்லியடிப்பதை வலைக்குச் சொல்ல முடியாது. எழுதப்பட்ட ஒவ்வொரு வார்த்தைக்கும் எழுதியவரே பொறுப்பாளர். எனவே எழுதுமுன் யோசியுங்கள். எழுதி்யபின் வருத்தப் படுவதைக் காட்டிலும் அது சுலபமல்லவா? உங்களது அலைவரிசையில் உள்ளவர்களுக்கு பதிவை மின்ஞ்சல் செய்து கருத்து கேட்டபின், தேவையான திருத்தங்களைச் செய்து பதிவிடல் சாலச்சிறந்தது. குறிப்பாக அரசாங்க வேலையில் இருப்பவர்கள் அதிக விழிப்புடன் இருத்தல் ஆகச் சிறந்தது.

நீங்கள் எழுதியதற்கு ஒருவர் எதிர்ப் பதிவு எழுதி பின் ”அவனைத் தூக்கச் சொல் நான் தூக்குகிறேன்” என்பது போன்ற வீர வசனங்களும் அறைக்கூவல்களும் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கா. மாறாக உங்களை வீழ்த்திவிடக்கூடும்.

அதுதான் பிரச்சினைக்குரிய பதிவையே நீக்கி விட்டோமே என நீங்கள் நிம்மதியாக இருக்கவும் வழியில்லை. உங்களுக்கே தெரியாமல் உங்களை ரீடரில் வாசிப்போர் அனேகம் பேர். அவர்களதை அதை நீக்கும்வரை இருக்கக்கூடும்; ஒரு மெளனசாட்சியாக அவர்களது கணினியில்.

பொதுவில் ஒன்றை வைக்குமுன் மனதிலிதை வைப்பது நலம்.

Courtesy : news.bbc.co.uk
.

பி.கு : வைதல் – திட்டுதல்.

.

Advertisements

58 comments

  1. //பின்னூட்டம், ஹிட்ஸ், ஃபாலோயர்ஸ் போன்றவற்றை நோக்கமாக வைத்தெழுதாது நேர்மையாகத் தோன்றுவதை எழுதுவது உத்தமம்.///

    நட்சத்திர வாழ்த்துகள்

  2. நட்சத்திர வாழ்த்துகள் 🙂

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

  3. நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணாச்சி.
    மிகப் பொறுப்பான பதிவு. அருமையான வழிகாட்டி.

    பொறுப்பை உணர்த்த நீங்கள் சொல்லிய எடுத்துக்காட்டு மிக அருமை.

  4. ஆஹா…….நம்ம அண்ணாச்சி நட்சத்திரம் !

    வாழ்த்துகள் அண்ணாச்சி !

  5. நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணாச்சி 🙂

  6. நட்சத்திர அண்ணாச்சிக்கு வாழ்த்துகள்!

  7. வாழ்த்துகள் அண்ணாச்சி. மிக முக்கியமான விடயம். எல்லாப் பதிவர்களும் மனதில் கொள்ள வேண்டியது. இந்தியாவிலும் கூட இது போன்ற நீதி மன்றத் தீர்ப்பு வந்தது என்று ஞாபகம்.

    அனுஜன்யா

  8. நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணன்…

  9. நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணாச்சி

  10. நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணாச்சி!!!

    முதல்லயே டெரரா ஒரு பதிவு போட்டிருக்கீங்க. யாருக்கு இது?

  11. நட்சதிரமானதற்கு வாழ்த்துகள் அண்ணாச்சி.

  12. எழுத்து நட்சத்திரம் நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்

  13. வாழ்த்துக்கள் அண்ணாச்சி! முதல் பதிவே கருத்துகுத்தாக இருப்பது அருமை!

  14. நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

    இந்த பிரச்சனையே வேண்டாம்னுதான் நிறையபேர் கவுஜ எழுதி கொல்லுறாய்ங்களோ!?!?
    :))))

  15. நட்சத்திரமானதிற்கு வாழ்த்துக்கள்

  16. மிக அருமையான பதிவு.
    நட்சத்திர வாழ்த்துக்கள்…

  17. நட்சத்திர வாழ்த்துக்கள்!
    இந்தக் காலகட்டத்தில் மிகவும் அவசியமான பதிவு. நன்றி.

  18. நட்சத்திர வாத்துகள் அண்ணாச்சி.!

    முதல் பதிவே நச்சுன்னு வச்சீங்க பாருங்க பொதுவுல.. பிரமாதம்ல..

  19. நட்சத்திர வாழ்த்துகள். அவசியமான கருத்து.

  20. வாழ்த்துக்கள்

    அருமையான பதிவு

  21. இந்த விஷயத்தை நீங்கள் சொன்ன விதம் மிக அருமை. வாழைப் பழத்தில் ஊசி?

  22. மனதில் கொள்ளவேண்டிய நல்ல கருத்து. நட்சத்திர வாழ்த்துக்கள்!

  23. நட்சத்திர வாழ்த்துக்கள்!
    மிக அருமையான பதிவு.

  24. அவசியமான பதிவு… அப்பறம் ஸ்டார் ஆனதற்கு வாழ்த்துகள்…

  25. நட்சத்திர வாழ்த்துக்கள்.
    துவக்க பதிவே நல்ல விசயத்தை வலியுறுத்தி..!! நன்று,.

  26. பதிவர்களின் பொறுப்பை சுட்டிக்காட்டும் பதிவு அருமை.,

    வாழ்த்துக்கள் நண்பருக்கு

  27. நட்சத்திரத்தில் ஒரு முத்து..!

  28. //நீங்கள் எழுதியதற்கு ஒருவர் எதிர்ப் பதிவு எழுதி பின் ”அவனைத் தூக்கச் சொல் நான் தூக்குகிறேன்” என்பது போன்ற வீர வசனங்களும் அறைக்கூவல்களும் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கா. மாறாக உங்களை வீழ்த்திவிடக்கூடும்.//

    எவ்வளவு நல்லவர் நீங்கள்? நம் சுதந்திரம் அடுத்தர் மூக்குக்கு முன் முடிந்துவிடும் என்பது ஒரு ஆங்கில பழமொழி.

    இக்காரணத்தால், கலகலப்பான ஆண்பதிவர் வட்டத்துக்குள் நுழையவே நான் சில சமயம் அஞ்சுகிறேன்.

    ‘போங்கு’ ‘தாக்கு’ ‘வெள்ளாட்டு’ அதிகமாகியிருக்கும் இந்நாளில் இப்படி ஒரு பதிவு நிச்சயம் தேவை!

  29. இந்தப் பதிவின் பின்னால் இருக்கும் உழைப்பிற்கு முதல் வணக்கம். அப்புறம்தான் வாழ்த்துக்கள் எல்லாம்!

  30. நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணாச்சி!
    (பதிவில் நட்சத்திரம் பற்றி ஒன்னும் சொல்லலியே? வழக்கம் போல் ரீடரில் படிச்சிட்டு போய்ட்டேன். முதலில் வாழ்த்த வேண்டிய நாங்க கடைசியில் வந்திருக்கோம்… 😉 )

  31. நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள் அண்ணாச்சி

    //பின்னூட்டம், ஹிட்ஸ், ஃபாலோயர்ஸ் போன்றவற்றை நோக்கமாக வைத்தெழுதாது நேர்மையாகத் தோன்றுவதை எழுதுவது உத்தமம்.///

    ஒண்று சொன்னீர் அதுவும் நன்றே சொன்னீர்..

    //சந்திப்பெனச் கூறி இடமொன்றைக் குறித்து வரச் சொல்லி, அவரை அடையாளம் காட்டுகிறார் உலகிற்கு. //

    நம்ப வைத்து கழுத்தறுத்திருக்காங்க..

    தீர்ப்பு போலீசுக்கு சாதகமா வந்ததா இல்லையா ?

    //நீங்கள் எழுதியதற்கு ஒருவர் எதிர்ப் பதிவு எழுதி பின் ”அவனைத் தூக்கச் சொல் நான் தூக்குகிறேன்” என்பது போன்ற வீர வசனங்களும் அறைக்கூவல்களும் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கா. மாறாக உங்களை வீழ்த்திவிடக்கூடும்.
    //

    இது எந்த அளவுக்கு நம் நாட்டில் சாத்தியம் ? இன்று கூட இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஒரு ப்ளாக்கை சர்வ சாதரணமாய் திறக்க முடிகிறது. அதற்கு ஆதரவு வலைப்பூன்னு எல்லாமே திறக்க முடிகிறது ..

  32. நல்ல பகிர்வு … தமிழ்மணம் நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்

  33. நட்சத்திர வாழ்த்துக்கள்
    சகாதேவன்

  34. நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்

    நீங்கள் எழுதிய விடயமும் சுவாரசியமானது தான்

  35. அண்ணாச்சி..

    மிக்க மகிழ்ச்சி.. மனமார்ந்த வாழ்த்துகள்… அதே எளிமையான எழுத்துகள்.. அவைதானே உங்கள் பலம்!!!!

    மிக்க அன்புடன்
    ரங்ஸ்

  36. வாழ்த்திய உங்களனைவருக்கும் நன்றிகள்.

  37. அண்ணாச்சிக்கு என் அன்பான நட்சத்திர வாழ்த்துக்கள். சரியான பதிவு. இந்தவாரம் முழுக்க கலக்குங்க!!

  38. நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணா..

    முத்தான முதல் நட்சத்திர பதிவு..

  39. நட்சத்திர வாழ்த்துகள் அண்ணாச்சி

    இடுகை வலியுறுத்தும் அறிவுரை கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று

    தமிழிலும் ஒரு வலைப்பூவினில் காவலர் ஒருவர் இதே மாதிரி எழுதியதைப் படித்தாக நினைவு

  40. அண்ணாச்சி

    இது நட்சத்திர வாரத்தில் வராவிட்டாலும் நட்சத்திரப் பதிவுதான்!

    க்ரேட் ரைட் அப்!

  41. என் எழுத்தைக் கொண்டு என்னைப் படிக்க முயலாதீர்கள் என்பது பற்றி…?

  42. நட்சத்திரமா மின்னுவதற்கு இனிய வாழ்த்து(க்)கள்.

    கொஞ்சம் பிந்திப்போயிட்டேன் போல.

  43. பழமை பேசி, அபிஅப்பா, சீனா சார், அபிஅப்பா, பட்டிக்காட்டான், ராஜா,சுல்தான், துளசி டீச்சர் அனைவருக்கும் நன்றி.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s