ரிமோட் கண்ட்ரோல்

096

காலை 6:05

“ஏங்க பால்காரன் பால் போட்டுட்டானா?”

“போட்டுட்டாம்ப்பா”

“சரி எவர்சில்வர் குக்கர்ல வையுங்க. ரெம்ப முறுக விடாதீங்க. அப்புறம் தீஞ்ச வாசனை வருதும்பீங்க”

088

காலை 7:30

“ஏங்க பேப்பர்காரன் ரெண்டு பேப்பரும் போட்டானா”

“ம் ம்”

“அவள் விகடன்?”

“போடலியே”

“ஏஜெண்டுக்கு போனப் போட்டுக் கேளுங்க. வரலைன்னு சும்மா உக்காந்தா ஆச்சா?”

“சரி கேக்குறேன். இல்லைன்னா சாயங்காலம் வீட்டுக்கு வரும்போது பாத்து வாங்கிட்டு வர்ரேன்”

093

காலை 8:30

“கிளம்பீட்டிங்களா?”

“கிளம்பீட்டே இருக்கேன்”

“பின்னாடிக் கதவச் சாத்தியாச்சா?”

“ஆச்சு”

“சமையல் ரூம் ஜன்னல்”

“ம் ம்”

“ஃபேன் லைட்டு எல்லாத்தையும் ஆப் பண்ணியாச்சா?”

“ஆச்சுப்பா”

“சரி சரி எதுக்கும் மெயின் ஸ்விட்ச ஆப் பண்ணிட்டுப் போங்க உங்கள நம்ப முடியாது”

097

காலை : 11.00 மணி

“ஏங்க கரண்ட் பில்லக் கட்டீட்டிங்களா?”

“கட்டீட்டுத்தான் ஆபீசுக்கே வந்தேம்ப்பா”

“இல்ல மறந்துட்டீங்கன்னா? அதுக்குத்தான். ஒவ்வொண்ணிஅயும் உங்களுக்கு ஞாபகப்படுத்தணுமே.”

089

மதியம் 1:00 மணி

“ஏங்க சாப்பிட்டாச்சா”

“இப்பத்தான் போயிட்டிருக்கேன்”

“கொறிச்சுக்கிட்டு இருக்காம நல்லாச் சாப்பிடுங்க. இது புடிக்கல அது புடிக்கலன்னு சொல்லி மிச்சம் வைக்காமச் சாப்பிடுங்க. உருளைக் கிழங்கு இருந்தா ஒதுக்கி வச்சுடுங்க. ஊறுகாய் போட்டுக்க வேணாம். தயிர் வேண்டாம் மோரே போதும். சரியா?”

“சரீஈஈ”

087

மாலை 4:00 மணி

“எத்தனை மணிக்குக் கிளம்புவீங்க?”

“மீட்டிங்க்ல இருக்கேன் அப்புறம் கூப்பிடுறேன்”

092

மாலை 6:00 மணி

“போகும்போது ஏஜண்ட் வீட்டுக்குப் போய் அவள்விகடன் வாங்கீட்டுப் போயிடுங்க. நாளைக்குப் போனா காப்பி இல்லைன்னு சொன்னாலும் சொல்லுவாங்க. மறந்துடாதீங்க.”

“சரிப்பா”

090

இரவு 7:30 மணி

“டிபன் சாப்பிட்டுட்டீங்களா?

“ஆச்சுப்பா”

“எங்க சாப்பிட்டீங்க?”

“அபிராமி மெஸ்”

“என்ன சாப்பிட்டீங்க?”

“சப்பாத்தி”

“ராத்திரிக்கு ஏங்க சப்பாத்தி? சரி சரி ஜெலுசில் ரெண்டு எடுத்துக்குங்க.”

“சரி”

094

இரவு 9:00 மணி

“ஏங்க தூங்கீட்டிங்களா?”

“இன்னும் இல்லை. ஆனா இப்ப ஒண்ணு தோனுது”

”என்னங்க?”

“இந்தக் கொடுமைக்கு நீ ஊருக்குப் போகாமலேயே இருந்திருக்கலாம்”

படங்கள் நரன் அனுப்பியவை. எதை? எப்படி? எதால்? எனச்சொல்ல முடியுமா?

பள்ளி வயதில் வெள்ளை காகிதத்தில் பேனா மையை தெளித்து பின் அதை நான்காய் , எட்டாய் மடித்த பின் கிடைக்கும் உருவத்தை போன்றவை, இவ்வகை புகைப்படங்கள்.

முழுவதும் இருட்டாக்கப்பட்ட அறையில் நாம் திருவிழாக்களுக்கு கட்டிவிடும் சீரியல் பல்ப்புகளை தொங்கவிட்டு கேமராவை வேகமாக ஆட்டியபடியே க்ளிக் செயும் பொழுது இது போன்ற படங்கள் கிடைகின்றன .

இம்மாதிரி புகைப்படங்கள் எடுக்கும் பொழுது நல்ல தரமான செல்போன் வகை கேமராக்கள் இருந்தால் நலம்.

அன்பும் ,நன்றியும்
நரன்


Advertisements

66 comments

 1. ஹா ஹா ஹா, நல்லா இருந்தது. ரொம்ப அக்கறையா இருக்காங்களாம்!!!!!!!

 2. ஹா ஹா ஹா, நல்லா இருந்தது. ரொம்ப அக்கறையா இருக்காங்களாம்!!!!!!!

 3. //“இந்தக் கொடுமைக்கு நீ ஊருக்குப் போகாமலேயே இருந்திருக்கலாம்” //

  அக்கறையா விசாரிக்கறது உங்களுக்கு கொடுமையா போச்சுதா?! :))

  நரன் புகைப்படங்கள் !! இன்னும் விளங்கலை. வேற யாரும் சொல்லலைன்னா நீங்களே சொல்லிடுங்க.

 4. //“இந்தக் கொடுமைக்கு நீ ஊருக்குப் போகாமலேயே இருந்திருக்கலாம்” //

  அக்கறையா விசாரிக்கறது உங்களுக்கு கொடுமையா போச்சுதா?! :))

  நரன் புகைப்படங்கள் !! இன்னும் விளங்கலை. வேற யாரும் சொல்லலைன்னா நீங்களே சொல்லிடுங்க.

 5. சரி சரி,

  புலம்பல்கள் டீம்ல இன்னொருத்தருமா???

 6. சரி சரி,

  புலம்பல்கள் டீம்ல இன்னொருத்தருமா???

 7. நல்ல நகைச்சுவை பதிவுங்கண்ணா!!!

 8. நல்ல நகைச்சுவை பதிவுங்கண்ணா!!!

 9. மா கோலங்கள்?

  ஜிலேபி டூடில்ஸ்?


  Regards
  விஜயஷங்கர்
  பெங்களூரு

 10. மா கோலங்கள்?

  ஜிலேபி டூடில்ஸ்?


  Regards
  விஜயஷங்கர்
  பெங்களூரு

 11. இதையே புலம்பல்களில் வேறு விதமா சொல்லியிருந்தாலும் அப்படியே ஒரு கவிதையா எழுதியிருக்கேன்றதும் ஆச்சரியம். அதுசரி.. இதென்ன அரிதா நமக்கு.?

 12. இதையே புலம்பல்களில் வேறு விதமா சொல்லியிருந்தாலும் அப்படியே ஒரு கவிதையா எழுதியிருக்கேன்றதும் ஆச்சரியம். அதுசரி.. இதென்ன அரிதா நமக்கு.?

 13. ரொம்ப கலக்கலா இருக்கு தல.. இது நான் ரொம்ப அனுபவ பட்டிருக்கேன்.

 14. ரொம்ப கலக்கலா இருக்கு தல.. இது நான் ரொம்ப அனுபவ பட்டிருக்கேன்.

 15. சூப்பர் பொலம்பல்கள்..!

 16. சூப்பர் பொலம்பல்கள்..!

 17. சென்ஷி said…

  அக்கறையா விசாரிக்கறது உங்களுக்கு கொடுமையா போச்சுதா?! :))

  வழிமொழிகிறேன்

 18. சென்ஷி said…

  அக்கறையா விசாரிக்கறது உங்களுக்கு கொடுமையா போச்சுதா?! :))

  வழிமொழிகிறேன்

 19. அனுபவிக்கிறிங்க அண்ணன்…

  🙂

 20. அனுபவிக்கிறிங்க அண்ணன்…

  🙂

 21. சித்து, சென்ஷி, தராசு, ஞானராஜசேகரன், குறை ஒன்றும் இல்லை, அனுஜன்யா, விஜய், நவாஸூதீன், ஆதி, இளையகவி, உண்மைத் தமிழன், அ.அருணா, அமித்து அம்மா, தமிழன் கறுப்பி, முரளி அனைவருக்கும் நன்றி.

 22. சித்து, சென்ஷி, தராசு, ஞானராஜசேகரன், குறை ஒன்றும் இல்லை, அனுஜன்யா, விஜய், நவாஸூதீன், ஆதி, இளையகவி, உண்மைத் தமிழன், அ.அருணா, அமித்து அம்மா, தமிழன் கறுப்பி, முரளி அனைவருக்கும் நன்றி.

 23. புகைப்படங்கள் எடுக்கப்பட்டவிதம் பற்றிய குறிப்பு பதிவின் இறுதியில் இணைக்கப் பட்டுள்ளாது.

 24. புகைப்படங்கள் எடுக்கப்பட்டவிதம் பற்றிய குறிப்பு பதிவின் இறுதியில் இணைக்கப் பட்டுள்ளாது.

 25. //வடகரை வேலன் said…

  புகைப்படங்கள் எடுக்கப்பட்டவிதம் பற்றிய குறிப்பு பதிவின் இறுதியில் இணைக்கப் பட்டுள்ளாது.//

  இதுக்காகவே டெய்லி வந்து பார்த்துட்டு இருந்தேன் 🙂

 26. //வடகரை வேலன் said…

  புகைப்படங்கள் எடுக்கப்பட்டவிதம் பற்றிய குறிப்பு பதிவின் இறுதியில் இணைக்கப் பட்டுள்ளாது.//

  இதுக்காகவே டெய்லி வந்து பார்த்துட்டு இருந்தேன் 🙂

 27. உங்கள பொறுப்பா பார்த்துக்கறதுக்கு நீங்க செய்யுற பரிகாரமா இது..??!!

 28. உங்கள பொறுப்பா பார்த்துக்கறதுக்கு நீங்க செய்யுற பரிகாரமா இது..??!!

 29. நாடு ஜாமம் 12:00 மணி

  " மாப்ள தூங்கீடீங்களா……? "

  " இந்த நேரத்துல எதுக்கு கூப்புடுறீங்க மாமா……..?? "

  " இல்ல பொண்ணு தூங்கும்போது சொன்னா… அவுரு 12 மணி 1 மணி வரைக்கும் ப்ளாக்கு… ப்ளாக்குன்னு கம்ப்யூட்டர்ல ஒக்காந்திருப்பாரு… நீங்க எதுக்கும் 12 மணிக்கு போன் பண்ணி பாருங்கன்னு சொன்னா…. , அதுனாலதானுங்க மாப்ள… , சரி தூங்குங்க….."

  இது குடும்பமே சேந்து இம்ச பண்ணுறது………!!!!!!

  இதையும் சேத்துக்கோங்க ………

 30. நாடு ஜாமம் 12:00 மணி

  " மாப்ள தூங்கீடீங்களா……? "

  " இந்த நேரத்துல எதுக்கு கூப்புடுறீங்க மாமா……..?? "

  " இல்ல பொண்ணு தூங்கும்போது சொன்னா… அவுரு 12 மணி 1 மணி வரைக்கும் ப்ளாக்கு… ப்ளாக்குன்னு கம்ப்யூட்டர்ல ஒக்காந்திருப்பாரு… நீங்க எதுக்கும் 12 மணிக்கு போன் பண்ணி பாருங்கன்னு சொன்னா…. , அதுனாலதானுங்க மாப்ள… , சரி தூங்குங்க….."

  இது குடும்பமே சேந்து இம்ச பண்ணுறது………!!!!!!

  இதையும் சேத்துக்கோங்க ………

 31. எங்களையும் கண்ரோல் பன்னுது கதை! நல்ல நகைச்சுவையோடு.
  படங்கள் அழகு!

 32. எங்களையும் கண்ரோல் பன்னுது கதை! நல்ல நகைச்சுவையோடு.
  படங்கள் அழகு!

 33. படங்கள் கலக்கல். ம்ம்ம்ம், கதையும்தான்:)!

  [குறிப்பா அந்த முதல் மற்றும் கடைசிப் படங்கள் ரொம்ப அருமை.]

 34. படங்கள் கலக்கல். ம்ம்ம்ம், கதையும்தான்:)!

  [குறிப்பா அந்த முதல் மற்றும் கடைசிப் படங்கள் ரொம்ப அருமை.]

 35. உங்களுக்கு தங்கமணி அனுபவம் ரொம்ப ஜாஸ்தி போல இருக்கு… டீச்சர் அம்மாவா??

 36. உங்களுக்கு தங்கமணி அனுபவம் ரொம்ப ஜாஸ்தி போல இருக்கு… டீச்சர் அம்மாவா??

 37. என்னா வில்லத்தனம் :))
  உங்கமேல எம்புட்டு அக்கறை இருந்தா அவங்க இப்படி சதா உங்களையே நெனச்சு கவலைப்படுவாங்க…..கிண்டலா போய்டுச்சு உங்களுக்கு……ம்ம்ம்ம்….இருக்கட்டும் இருக்கட்டும்.

 38. என்னா வில்லத்தனம் :))
  உங்கமேல எம்புட்டு அக்கறை இருந்தா அவங்க இப்படி சதா உங்களையே நெனச்சு கவலைப்படுவாங்க…..கிண்டலா போய்டுச்சு உங்களுக்கு……ம்ம்ம்ம்….இருக்கட்டும் இருக்கட்டும்.

 39. நல்லாயிருக்குண்ணா.

  அந்தப்படங்கள்ல ஏதோ சேதி இருக்கறதாப்பட்டது.. ஃபோட்டோன்னதும் பிரமிக்க வைச்சது!

 40. நல்லாயிருக்குண்ணா.

  அந்தப்படங்கள்ல ஏதோ சேதி இருக்கறதாப்பட்டது.. ஃபோட்டோன்னதும் பிரமிக்க வைச்சது!

 41. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா….

 42. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா….

 43. அண்ணாச்சி, இதை சிரிச்சிக்கிட்டே தான் படிச்சேன், ரொம்ப அருமை, படங்களும் அருமை, நவீன ஓவியங்கள் போல் பல மூட்களில் அருமையாக இருக்கிறது, அது எடுக்கப்பட்ட விதம் பற்றி தாங்கள் கூறிய இப்போது தான் எனக்கு தெரியும். அருமை.

 44. அண்ணாச்சி, இதை சிரிச்சிக்கிட்டே தான் படிச்சேன், ரொம்ப அருமை, படங்களும் அருமை, நவீன ஓவியங்கள் போல் பல மூட்களில் அருமையாக இருக்கிறது, அது எடுக்கப்பட்ட விதம் பற்றி தாங்கள் கூறிய இப்போது தான் எனக்கு தெரியும். அருமை.

 45. உங்களை மனுஷனா மதிச்சு ஒரு ஜீவன் பேசுதேன்னு சந்தோஷப்படாமே? 😉

 46. உங்களை மனுஷனா மதிச்சு ஒரு ஜீவன் பேசுதேன்னு சந்தோஷப்படாமே? 😉

 47. சமாளிக்கறது ரொம்ப கடினம்தான் போல இருக்கு…

 48. சமாளிக்கறது ரொம்ப கடினம்தான் போல இருக்கு…

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s