பேசாத பேச்செல்ல்லாம்….

நெடுநாட்களாகப் பிரிந்திருந்த
நண்பனைச் சத்திந்த
பொழுதொன்றில்…

கலைந்து செல்லும்
மழை மேகங்களையும்
சுழன்றடிக்கும் காற்றையும்
பூத்தூறல் மழையையும்
ரசித்தவாறே உரையாடினோம்

பங்குச்சந்தை, பணவீக்கம்
பெட்ரோல் விலை
மாருதி ரிட்ஸ்
பொருளாதாரத் தேக்கம்
பொறியியல் அட்மிசன்
மெட்ரோ ரயில்
விமானக் கட்டண ஏற்றம்
என எல்லாம்

நானாகக்
கேட்கவில்லையென்றாலும்
அவனாவது
சொல்லிச் சென்ன்றிருக்கலாம்

எனது
முன்னாள் காதலி
அவனது
இன்னாள் மனைவி்
பற்றி
ஒற்றை வார்த்தையேனும்.

.

Advertisements

32 comments

 1. விடுபடுபவைதானே தேங்கி விடுகிடறன. கவிதை நல்லா இருக்கு.

 2. கவிதையெனச் சொல்ல முடியவில்லை. அருமையான சொற்சித்திரம். (நான் இப்படி தப்பித்துக் கொள்வது வழக்கம்)

 3. அருமை அண்ணாச்சி..

  (’வாங்கிய கடனை
  எப்போது தருவானென’ – இப்படி முடியும்னு நெனைச்சேன்!)

 4. முடிவை வேறுவிதமான சொற்களில் எழுதியிருக்கலாம் போல உணர்கிறேன்…

 5. மனதின் இறுக்கம்… பல வருடங்களுக்குப் பிறகும்… 😦

 6. //(’வாங்கிய கடனை
  எப்போது தருவானென//

  அண்ணாச்சி முடிவையும், உங்க முடிவையும் சேர்த்தா ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 7. நன்றி ஆ.முத்துராமலிங்க. நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.

  நன்றி சென்ஷி

  நன்றி மாதவராஜ். ரோஜாவை எந்தப் பெயரில் அழைத்தாலென்ன?

  நன்றி பரிசல். அசலை எடுத்துக் கொண்டவனிடம் கடனாக நினைத்துக் கேட்கமுடியவில்லை.

  நன்றி மயில்.

  நன்றி தமிழன். அப்படி உணரவைப்பதுதான் கவிதையின் பலம். பார்க்க பரிசலாரின் பின்னூட்டம்

  நன்றி மகேஷ். இதெல்லாம் ஒரு வடிகால்தானே.

 8. அருமையான கவிதை.

  ஆமா, ஒரு நண்பனைப் பார்த்தா இத்தனை மேட்டரா பேசுவீங்க??????

 9. கவிதை நல்லாருக்கு…!!

  உங்க முன்னாள் காதலியாக இருந்தாலும் … இப்போ உங்க நண்பனோட மனைவியாயிட்டாங்களே…..!!

 10. //எனது
  முன்னாள் காதலி
  அவனது
  இன்னாள் மனைவி்
  பற்றி
  ஒற்றை வார்த்தையேனும்.//

  அவரோட சோகத்தை சொல்ல போய் உங்களுக்கும் சோகம் தொத்திகிச்சுனா!

 11. அண்ணாச்சி, அருமையான கவிதை, கடைசி சில வரிகளில் அப்படியே சில கணம் உறைந்து போய்விட்டேன்.
  இப்படித்தான் உள்ளே ஒன்றை ஒளித்து வைத்துக் கொண்டு, அது வெளியே தெரிந்து விடாமலிருக்க, வேறு எதையெதையோ பேசிக்கொண்டிருக்கிறோம்.

 12. /
  நானாகக்
  கேட்கவில்லையென்றாலும்
  அவனாவது
  சொல்லிச் சென்ன்றிருக்கலாம்

  எனது
  முன்னாள் காதலி
  அவனது
  இன்னாள் மனைவி்
  பற்றி
  ஒற்றை வார்த்தையேனும்.
  /

  முழுகாம இருக்கா
  :)))))))))))))))))

 13. கவிதையோட படமெல்லாம் போட்டு பட்டாசு கெளப்பறீங்களே அண்ணாச்சி!

 14. சார், நீங்கள் இதுபோன்ற மிக சாதரணமான கவிதைகள் கூட எழுதுவீர்கள் என்பதே ஆச்சர்யமாக இருக்கு.

 15. //"எனது
  முன்னாள் காதலி
  அவனது
  இன்னாள் மனைவி்
  பற்றி
  ஒற்றை வார்த்தையேனும்."//

  முதல்ல இந்த விஷயம் அவருக்கு தெரியுமா தல…….

 16. வெண்பூவின் மின்னஞ்சல்

  உங்கள் கவிதை அருமை.. அருமையான ஒரு சிறுகதையை அழகாக சுருக்கிக் கொடுத்திருக்கிறீர்கள்.. பாராட்டுகள் அண்ணாச்சி..
  என் அலுவலகத்தில் உங்கள் வலைப்பூ (மட்டும்) திறக்க முடியவில்லை. அதனால்தான் பின்னூட்டம் இங்கே..

 17. ///நன்றி பரிசல். அசலை எடுத்துக் கொண்டவனிடம் கடனாக நினைத்துக் கேட்கமுடியவில்லை.///

  மிக ரசித்தேன். உங்கள் கவிதையையும், இந்த வாசகத்தையும்…..

 18. அண்ணாச்சி. SIMPLY SUPERB. அதானே நம்ம ஸ்டைல்!

 19. பேசாத பேச்செல்லாம்… 🙂 கலக்கல் அண்ணாச்சி..!
  ஒரு பெண் தனது முன்னாள் காதலனின் மனைவியை சந்தித்தால் இதைவிட நிறைய ஃபீலிங் காட்டுவாங்கன்னு யோசிக்கத் தோணுது.. 😉

 20. உங்க சுய அனுபவமா..??!!

  //.. அசலை எடுத்துக் கொண்டவனிடம் கடனாக நினைத்துக் கேட்கமுடியவில்லை..//

  எனக்கும் பிடித்த வரிகள்..

  கார்க்கி யும் இதே கருவில் ஒரு கதை எழுதி இருந்தார் என்று நினைக்கிறேன்(அதையும் வேறு யாரோ ஆட்டைய போட்டுடாங்க..)..

 21. //நன்றி பரிசல். அசலை எடுத்துக் கொண்டவனிடம் கடனாக நினைத்துக் கேட்கமுடியவில்லை. //

  மொத்தப் பதிவையும் விட இந்த ஒற்றை வரி பதில் மிக அருமை.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s