ஜென் என்றால் என்ன?

ஜென் என்றால் என்ன?

ஜென் என்றால் என்ன?..” கேள்வி எழுந்தது ஒரு மாணவனிடமிருந்து.

துறவி அவனைச் சற்று நேரம் ஆழ்ந்து பார்த்துவிட்டுச் சொன்னார், “யாரும் அதைத் தெரியும் என்று சொன்னாலும் அல்லது தெரியாது என்று சொன்னாலும் அது பொய்யாகத்தான் இருக்கும்”

மாணவன் விடுவதாய் இல்லை “அப்படியனால் சுவாமி. ஜென் என்னதான் சொல்லுகிறது?”

“zen teaches nothing. ஜென் சொல்லித்தருவது எதுவுமில்லை”.

“அப்படியானால்…..” மாணவன் இழுத்தான்…

“சும்மாயிரு..” வெகு வேகமாய் குருவின் குரல்.

மாணவன் தெளிந்தான்.

கடல்

ஒரு பெரிய கடலில் மீன்கள் உலவி கொண்டு இருந்தது. சிறிய மீன் தாய் மீனிடம் கேட்டது.”எல்லோரும் கடல் கடல் என்று பேசுகிறார்கள்… அப்படியென்றால் என்ன? அது எங்கு இருக்கிறது?”

“உனக்கு உள்ளேயும் உனக்கு வெளியேயும் இருக்கிறது”.

“எதனால் என்னால் அதைக் காணமுடியவில்லை?”

“ஏனென்றால் நீ பிறந்தது அங்கே தான், ஒரு வேளை உன் இறப்பும் அங்கேயே நிச்சயிக்கப்பட்டு இருக்கலாம்”.

கோப்பையைக் காலிசெய்

ஒரு ஜென் ஆசிரியர் வெகு அமைதியாய் மக்களுக்கு ஜென் பற்றி போதித்துக் கொண்டு இருந்தார். அதனால் அவருக்கு அந்த வட்டாரத்தில் தனிப்பெருமையும் செல்வாக்கும் இருந்தது.

அந்த நாட்டு பேரறிஞர் என அரசனிடம் பட்டம் வாங்கிய ஒருவருக்கு இது பொறுக்கவில்லை. உடனே அவர் ”ஜென் என்பது வெறும் பம்மாத்து வேலை. அதை பொய் என்று நிருபித்து காண்பிக்கிறேன்” என்று கூறி ஆசிரியரை வாதுக்கு அழைத்து, “ஜென் என்றால் என்ன என்று சொல்லுங்கள்”என்றார்.

ஆசிரியரும் அந்த அறிஞரைத் தன் குடிலுக்கு அழைத்து சென்று அமரவைத்து ஜப்பானிய முறையில் டீ உபச்சாரம் செய்ய ஆரம்பித்தார். தேவையான எல்லா பொருள்களையும் அவர் முன்னே வைத்து கோப்பையில் முறைப்படி தேநீர் வார்க்க ஆரம்பித்தார். கோப்பை நிரம்பிய பின்னும் ஊற்றிகொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க இயலாத அந்த அறிஞர் “நிரம்பிய பின்னும் ஊற்றுகிறீர்களே இது எப்படி சரி பட்டு வரும் முதலில் கோப்பையில் இருப்பதை நான் காலி செய்த பிறகு ஏன் மறுபடி நிரப்ப கூடாது?” எனக் கேட்க..

ஜென் ஆசான் பதிலிறுத்தார்.”அய்யா நீங்களும் இந்தக் கோப்பையும் ஒன்று, முதலில் உள்ளே உள்ளதை வெறுமையாக்குங்கள் அப்புறம் நிரப்பத் துவங்கலாம்” என்றார்

இந்த மூன்று கதைகளையும் மெயிலில் அனுப்பிய ஜீவ்ஸ்க்கு நன்றி.
கிளையை பிடித்து
தொங்காதே.
கிட்டத்தட்ட 127 ஆண்டுகள்
பழையது இந்த மரம்.
ஆனால் அதன் இலைகள்
அப்படி இல்லை

சுவரும் இல்லாமல்
ஆணியும் இல்லாமல்
பிடிமானமும் இல்லாமல்
தொங்குகிறது கண்ணாடி
நீ சிரிக்கிறாய்
உன் எதிரில் இருப்பவனும்
சிரிக்கிறான்.
கவிதை & ஜென் படம் உதவி நரன் . நன்றி.
.

Advertisements

39 comments

 1. நரனின் முதல் கவிதை அசத்தல்!

  பகிர்விற்கு நன்றி அண்ணாச்சி

 2. நரனின் முதல் கவிதை அசத்தல்!

  பகிர்விற்கு நன்றி அண்ணாச்சி

 3. அருமையான கவிதை அண்ணாச்சி. பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி.

 4. அருமையான கவிதை அண்ணாச்சி. பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி.

 5. உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்

  உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

  இதில் குறிப்பாக
  1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
  2-ஓட்டளிப்புப் பட்டை
  3-இவ்வார கிரீடம்
  4-சிறப்புப் பரிசு
  5-புத்தம்புதிய அழகிய templates
  6-கண்ணை கவரும் gadgets
  ஒரு முறை வந்து பாருங்கள்
  முகவரி http://tamil10.com/tools.html

 6. உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்

  உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

  இதில் குறிப்பாக
  1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
  2-ஓட்டளிப்புப் பட்டை
  3-இவ்வார கிரீடம்
  4-சிறப்புப் பரிசு
  5-புத்தம்புதிய அழகிய templates
  6-கண்ணை கவரும் gadgets
  ஒரு முறை வந்து பாருங்கள்
  முகவரி http://tamil10.com/tools.html

 7. வணக்கம் அண்ணாச்சி, இரண்டு கவிதைகளும் அருமை

 8. வணக்கம் அண்ணாச்சி, இரண்டு கவிதைகளும் அருமை

 9. அண்ணாச்சி தமிழ் சினிமாப் பாடல்களிலே பல இடங்களில் ஜென் கூற்றுகளை காண முடியும்.

  எனக்கு மிகவும் பிடித்த ஜென் ஹைக்கூ

  பழைய குளம்
  தவளை குதிக்கிறது
  க்ளக் க்ளக்..

  ஜென் என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவுக்கு ஒரு ஸ்மால் வெலம்பரம்.

  http://www.karkibava.com/2008/08/4_28.html

 10. அண்ணாச்சி தமிழ் சினிமாப் பாடல்களிலே பல இடங்களில் ஜென் கூற்றுகளை காண முடியும்.

  எனக்கு மிகவும் பிடித்த ஜென் ஹைக்கூ

  பழைய குளம்
  தவளை குதிக்கிறது
  க்ளக் க்ளக்..

  ஜென் என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவுக்கு ஒரு ஸ்மால் வெலம்பரம்.

  http://www.karkibava.com/2008/08/4_28.html

 11. எப்போது படித்தாலும் புதிய புதிய அர்தங்களை தரவல்லவை ஜென் கவிதைகள்.
  அண்ணே கிட்டத்தட்ட இதேபோல நம்ம ஸ்டைல்ல இருக்கும் குஞ்சுன்னியின் கவிதைகள்…கிடைத்தால் படித்து பதிவிடலாம்.

 12. எப்போது படித்தாலும் புதிய புதிய அர்தங்களை தரவல்லவை ஜென் கவிதைகள்.
  அண்ணே கிட்டத்தட்ட இதேபோல நம்ம ஸ்டைல்ல இருக்கும் குஞ்சுன்னியின் கவிதைகள்…கிடைத்தால் படித்து பதிவிடலாம்.

 13. ஜென் என்பது இவ்ளோதானா..?

  ப்ச்.. ஒண்ணுமேயில்லை..

  வேலன் ஸார்..

  வர வர உங்களது தளம் அநியாயத்திற்கு இலக்கியமாகிக் கொண்டிருக்கிறது..!

 14. ஜென் என்பது இவ்ளோதானா..?

  ப்ச்.. ஒண்ணுமேயில்லை..

  வேலன் ஸார்..

  வர வர உங்களது தளம் அநியாயத்திற்கு இலக்கியமாகிக் கொண்டிருக்கிறது..!

 15. அதாவது அவர் என்ன சொல்ல வர்ராருன்னா…..
  இவ்ளோ சுருக்கமா சொல்லி புரியவைக்க முடியுமா?
  அத எத்தன பேர் புரிஞ்சுப்பாங்க?
  அதனால என்னாகும்னு கேக்கறாரு.

 16. அதாவது அவர் என்ன சொல்ல வர்ராருன்னா…..
  இவ்ளோ சுருக்கமா சொல்லி புரியவைக்க முடியுமா?
  அத எத்தன பேர் புரிஞ்சுப்பாங்க?
  அதனால என்னாகும்னு கேக்கறாரு.

 17. கடைசிக் கதையும், கவிதையும் அருமை..

  எழுதியவர்களுக்கும், பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துகள்..

 18. கடைசிக் கதையும், கவிதையும் அருமை..

  எழுதியவர்களுக்கும், பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துகள்..

 19. நெம்ப நல்லாருக்குங்கோவ்….!!!

  வாழ்க வளமுடன்….!!!

 20. நெம்ப நல்லாருக்குங்கோவ்….!!!

  வாழ்க வளமுடன்….!!!

 21. அண்னே கடைசி வரை சொல்லவே இல்ல!!
  ஆமா ஜென் அப்படீன்னா என்ன?

 22. அண்னே கடைசி வரை சொல்லவே இல்ல!!
  ஆமா ஜென் அப்படீன்னா என்ன?

 23. நன்றாக இருந்தது. பகிர்விற்கு நன்றி.

 24. நன்றாக இருந்தது. பகிர்விற்கு நன்றி.

 25. ஞானசேகரன், சென்ஷி, ஜீவ்ஸ், முரளிக்குமார், கார்க்கி, முரளிக்கண்ணன், டக்ளஸ், கும்க்கி, உண்மைத்தமிழன், பட்டிகாட்டான், மேடி, யாத்ரா, குறையொன்றுமில்லை, மணிநரேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 26. ஞானசேகரன், சென்ஷி, ஜீவ்ஸ், முரளிக்குமார், கார்க்கி, முரளிக்கண்ணன், டக்ளஸ், கும்க்கி, உண்மைத்தமிழன், பட்டிகாட்டான், மேடி, யாத்ரா, குறையொன்றுமில்லை, மணிநரேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 27. /"யாரும் அதைத் தெரியும் என்று சொன்னாலும் அல்லது தெரியாது என்று சொன்னாலும் அது பொய்யாகத்தான் இருக்கும்"/

  என் நிலையும் இதுதான்.அட! இதுதான் ஜென் சிறப்பா!

  நரன் கவிதைகள் கலக்கல் .

 28. /"யாரும் அதைத் தெரியும் என்று சொன்னாலும் அல்லது தெரியாது என்று சொன்னாலும் அது பொய்யாகத்தான் இருக்கும்"/

  என் நிலையும் இதுதான்.அட! இதுதான் ஜென் சிறப்பா!

  நரன் கவிதைகள் கலக்கல் .

 29. மூன்றையுமே ஏற்கனவே படித்தும், கேள்விப்பட்டும் இருக்கிறேன். இருப்பினும் ரசித்தேன்.

 30. மூன்றையுமே ஏற்கனவே படித்தும், கேள்விப்பட்டும் இருக்கிறேன். இருப்பினும் ரசித்தேன்.

 31. //பழையது இந்த மரம். ஆனால் அதன் இலைகள் அப்படி இல்லை//

  super, suuuuuuuuuper… na..

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s