நரனைச் சந்தித்தேன்

நடன ஒத்திகை

37, 38 எனக்
கடந்து கொண்டிருந்தது வயது
முந்தைய நாள்
பள்ளி ஆண்டு விழாவிற்கென
நடன ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த
பதினொன்றாவது படிக்கும் மகள்
காலையில் பள்ளிக்குப் போனதும்
வீட்டில் யாரும் இல்லை
அப்பாடலை ஒலிக்க விடுகிறாள்
தன் மகளைப் போலவே
உடலை அசைத்து அசைத்துச் சுழலுகிறாள்
அழைப்பு மணியை யாரோ அடிக்கும்
ஓசை கேட்டதும்
வெளியேறினாள் தன் 15 வயதிலிருந்து.

வண்ணத்துப் பூச்சி

17 வருடம் கழித்துப் பார்த்தேன்
எதிர்த்திசையில்
அவள் மகளோடு போய்க் கொண்டிருந்தாள்
பார்த்துவிட்டு எதுவுமே பேசவில்லை
அந்தக் கணம்
அவள் முகத்திலிருந்து
வயதான வண்ணத்துப் பூச்சியொன்று
வெளியேறிப் பறந்து செல்கிறது
வேகவேகமாய் இறக்கைகளை அசைத்தபடி
சற்றே பதட்டமாய்.

இவ்விரு கவிதைகளை எழுதிய கவிஞர்.நரனை நேற்றுச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. கவிஞர் என்றவுடன் ஒரு ஜிப்பாவும் ஜோலனாபையுனும் காட்சி தருவார் எனக் கறபனை செய்துகொண்டு காத்திருந்தால், மணிரத்தினத்தின் படத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் நேரில் வந்ததுபோல் வந்தார்.

ஆரம்பகட்ட அறிமுகத்திற்குப் பின் செல்வேந்த்திரனையும் அழத்துக் கொண்டு உரையாடலைத் தொடர்ந்தோம். தமிழ்ப் பரப்பில் சிறந்த படைப்புக்கள் மூலம் அழுத்தமான தடம்பதித்து வரும் நரனின் புத்தகமொன்றும் விரைவில் வெளிவரவிருக்கிறது. உயிர்மை, காலச்சுவடு, உயிர் எழுத்து போன்ற இலக்கியத்தரம் வாய்ந்த்த பத்திரிக்கைகளில் இவரது கவிதைகள் தொடர்ந்து வெளிவருகின்றன.

தமிழின் முக்கியமான ஆளுமைகள் பங்கேற்கும் கூடல் சங்கமம் நிகழ்ச்சிக்கு(ஜூன் 27,28) எங்களை அழத்தார். நானும் செல்வேந்திரனும் செல்வதாகத் திட்டம். கடவு அமைப்பு நடத்தும் இவ்விழா பற்றிய விவரமான அழைப்பிதழை நாளை பதிவிடுகிறேன்.

நரன் சுவராசியமான் இளைஞர். இலக்கியம், ஓவியம் என பல்துறைகளிலும் ஆர்வமும் முனைப்பும் உள்ளவர். அவரும் செல்வாவும் உரையாடுவதை மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நரன் சொன்னதில் முக்கியமாக இரு விஷயங்களைக் கவனித்தேன்.

ஆதிவாசிகளின் ஓவியங்கள் அனைத்தும் ஒரு பொதுத்தன்மையைக் கொண்டிருக்கிறது. இந்திய ஆதிவாசி, மானைக் குறிக்க உபயோகப்படுத்தும் கோடுகள்தான் பிற நாட்டு ஆதிவாசிகளாலும் உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது. இது ஒரு அதிசயக்கத்தக்க ஒற்றுமை.

ஜென் எதையும் நமக்குப் போதிப்பதில்லை. போகிற போக்கில் குறிப்பால் உணர்த்திச் செல்லும் விஷயங்கள் தத்துவமாகவோ அல்லது சித்தாந்தமாகவோ அவரவர் பார்வைக்கேற்ப எடுத்தாளப்படுகிறது. ஜென் சித்தாந்தம் இதுதான் என எவரும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது .

ஜென் கதைகள் மீண்டுமொருமுறை படிக்கவேண்டும்

Advertisements

40 comments

 1. அறிமுகத்திற்கு நன்றி.
  வாழ்த்துக்கள் நரேன்.

 2. அறிமுகத்திற்கு நன்றி.
  வாழ்த்துக்கள் நரேன்.

 3. அழைப்பு மணியை யாரோ அடிக்கும்
  ஓசை கேட்டதும்
  வெளியேறினாள் தன் 15 வயதிலிருந்து.
  \\

  அற்புதம்.

 4. அழைப்பு மணியை யாரோ அடிக்கும்
  ஓசை கேட்டதும்
  வெளியேறினாள் தன் 15 வயதிலிருந்து.
  \\

  அற்புதம்.

 5. நரனுடன் நேற்று உங்கள் மூலம் பேச முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இவர் தாயார் பிரபல கவிஞர் இன்பா சுப்ரமணியன் என்பதும் பலரும் அறிந்திருக்கக் கூடும்.

  கவிதைகள் முன்பே படித்திருந்தாலும், இன்னொருமுறை படிக்கையிலும் நல்லாவே இருக்கு. அதுதான் கவிதை போலும் 🙂

  அனுஜன்யா

 6. நரனுடன் நேற்று உங்கள் மூலம் பேச முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இவர் தாயார் பிரபல கவிஞர் இன்பா சுப்ரமணியன் என்பதும் பலரும் அறிந்திருக்கக் கூடும்.

  கவிதைகள் முன்பே படித்திருந்தாலும், இன்னொருமுறை படிக்கையிலும் நல்லாவே இருக்கு. அதுதான் கவிதை போலும் 🙂

  அனுஜன்யா

 7. வேலன் அண்ணா,
  நீங்கள் எழுதிய கவிதை என்ற எண்ணத்தில் வந்தேன். இரண்டு வரி படித்ததும் நினைவுக்கு வந்து விட்டது ஏற்கனவே வாசித்த நரனின் கவிதை என்பது. நரனைப் பற்றிய வர்ணணை (மணிரத்னம் பட கதாநாயகன் போல)பொருத்தமானதே. நரனும், அவரது அம்மா இன்பா சுப்ரமணியனும் கவிதை சார்ந்த விஷயங்களில் காட்டும் ஆர்வம் அதீதமானது. நான் நேரில் சந்திக்கையில் இதை அறிந்தேன். பகிர்விற்கு நன்றி.

  ‘அகநாழிகை‘
  பொன்.வாசுதேவன்

 8. வேலன் அண்ணா,
  நீங்கள் எழுதிய கவிதை என்ற எண்ணத்தில் வந்தேன். இரண்டு வரி படித்ததும் நினைவுக்கு வந்து விட்டது ஏற்கனவே வாசித்த நரனின் கவிதை என்பது. நரனைப் பற்றிய வர்ணணை (மணிரத்னம் பட கதாநாயகன் போல)பொருத்தமானதே. நரனும், அவரது அம்மா இன்பா சுப்ரமணியனும் கவிதை சார்ந்த விஷயங்களில் காட்டும் ஆர்வம் அதீதமானது. நான் நேரில் சந்திக்கையில் இதை அறிந்தேன். பகிர்விற்கு நன்றி.

  ‘அகநாழிகை‘
  பொன்.வாசுதேவன்

 9. இலக்கியத்தரம் வாய்ந்த்த பத்திரிக்கைகளில் இவரது கவிதைகள் தொடர்ந்து வெளிவருகின்றன.
  \\

  வாழ்த்துகள் நரேன்…

 10. இலக்கியத்தரம் வாய்ந்த்த பத்திரிக்கைகளில் இவரது கவிதைகள் தொடர்ந்து வெளிவருகின்றன.
  \\

  வாழ்த்துகள் நரேன்…

 11. சுவாரசியங்களுக்கு குறைவில்லாத நரன், செல்வாவின் உரையாடல் பற்றிய பகிர்வினை இன்னும் சற்று அதிகரித்திருக்கலாமோ என்று தோண வைக்கின்றது!

 12. சுவாரசியங்களுக்கு குறைவில்லாத நரன், செல்வாவின் உரையாடல் பற்றிய பகிர்வினை இன்னும் சற்று அதிகரித்திருக்கலாமோ என்று தோண வைக்கின்றது!

 13. இப்பதிவின் மூலம் தான் நரனைப் பற்றி அறிகிறேன்.

  நன்றி அண்ணாச்சி!

 14. இப்பதிவின் மூலம் தான் நரனைப் பற்றி அறிகிறேன்.

  நன்றி அண்ணாச்சி!

 15. அறிமுகத்திற்க்கு நன்றி அண்ணாச்சி..
  படித்தது போல நினைவில்லை.ஆனால் ஒரு ஓவியரின் பேர் நினைவுக்கு வந்தது.

 16. அறிமுகத்திற்க்கு நன்றி அண்ணாச்சி..
  படித்தது போல நினைவில்லை.ஆனால் ஒரு ஓவியரின் பேர் நினைவுக்கு வந்தது.

 17. அறிமுகத்திற்கு நன்றி.
  வாழ்த்துக்கள் நரன்.

 18. அறிமுகத்திற்கு நன்றி.
  வாழ்த்துக்கள் நரன்.

 19. ஒரு நல்ல கவிஞனை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..!

 20. ஒரு நல்ல கவிஞனை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..!

 21. வேகவேகமாய் இறக்கைகளை அசைத்தபடி
  சற்றே பதட்டமாய்.

  வாவ் அருமை, என்னமோ என்னவளை நான் 17 வருடம் கழித்து நான் பார்த்த மாதிரி ஓரு உணர்வு.

  வாழ்த்துக்கள் நரன்.

  முகபடுத்திய அண்ணாச்சிக்கு நன்றிகள்

 22. வேகவேகமாய் இறக்கைகளை அசைத்தபடி
  சற்றே பதட்டமாய்.

  வாவ் அருமை, என்னமோ என்னவளை நான் 17 வருடம் கழித்து நான் பார்த்த மாதிரி ஓரு உணர்வு.

  வாழ்த்துக்கள் நரன்.

  முகபடுத்திய அண்ணாச்சிக்கு நன்றிகள்

 23. அண்ணாச்சி, நான் ஒரு கால தாமத கழுதையென்றபோதும் என்னிடத்தில் எப்போதும் நீங்கள் கருணை காட்டுவது பூர்வஜென்ம புண்ணியம்.

  நரன் சொன்னதெல்லாமே ஆச்சர்ய தகவல்கள். அவற்றுள் சிலவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டபோது விழிகள் விரிய கேட்டார்கள்.

  அவரது வலைப்பூ முகவரியையும் போடுங்கள். நண்பர்கள் படிப்பார்கள்.

 24. அண்ணாச்சி, நான் ஒரு கால தாமத கழுதையென்றபோதும் என்னிடத்தில் எப்போதும் நீங்கள் கருணை காட்டுவது பூர்வஜென்ம புண்ணியம்.

  நரன் சொன்னதெல்லாமே ஆச்சர்ய தகவல்கள். அவற்றுள் சிலவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டபோது விழிகள் விரிய கேட்டார்கள்.

  அவரது வலைப்பூ முகவரியையும் போடுங்கள். நண்பர்கள் படிப்பார்கள்.

 25. இரண்டும் நல்ல தரமான கவிதைகள்..

  37, 38 வயதினரின் மன ஓட்டத்தை புரிந்து எழுதியிருக்கிறார்..

  வாழ்த்துகள் நரன்..

 26. இரண்டும் நல்ல தரமான கவிதைகள்..

  37, 38 வயதினரின் மன ஓட்டத்தை புரிந்து எழுதியிருக்கிறார்..

  வாழ்த்துகள் நரன்..

 27. நண்பர் நரனுக்கு நல்வாழ்த்துகள்

  நல்ல கவிதை – ரசித்தேன்

 28. நண்பர் நரனுக்கு நல்வாழ்த்துகள்

  நல்ல கவிதை – ரசித்தேன்

 29. // நடன ஒத்திகை //

  என்ன கொடும இது…. !! அந்த அம்முனி நெம்ப பொருமசாலி …!!! இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா.. அந்தக்கா கதவையே கழுட்டி வெச்சுபோடும்….!!!!

  // வண்ணத்துப் பூச்சி //

  அந்தம்முனிக் ஊட்டுகாரு நெம்ப பாவமுங்கன்னோவ்….!!!!!

  வாழ்த்துக்கள்…..!!! வாழ்க வளமுடன்……!!!!

 30. // நடன ஒத்திகை //

  என்ன கொடும இது…. !! அந்த அம்முனி நெம்ப பொருமசாலி …!!! இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா.. அந்தக்கா கதவையே கழுட்டி வெச்சுபோடும்….!!!!

  // வண்ணத்துப் பூச்சி //

  அந்தம்முனிக் ஊட்டுகாரு நெம்ப பாவமுங்கன்னோவ்….!!!!!

  வாழ்த்துக்கள்…..!!! வாழ்க வளமுடன்……!!!!

 31. நரன் பற்றிய பகிர்வுக்கு மிக்க நன்றி, இனிமையான மனிதர்.

 32. நரன் பற்றிய பகிர்வுக்கு மிக்க நன்றி, இனிமையான மனிதர்.

 33. பகிர்தலுக்கு நன்றி. ‘நடன ஒத்திகை’ வெகு அருமை.

 34. பகிர்தலுக்கு நன்றி. ‘நடன ஒத்திகை’ வெகு அருமை.

 35. நரனுடைய கவிதைகள் தரமான, வித்தியாசமான, நவீன சிந்தனைகளைக் கொண்டவை. இப்போதைக்கு நான் இவரை தேவதச்சன், ரமேஷ்-பிரேம் ஆகியோரோடு ஒப்பிட்டு உணர்கிறேன். நரன் பழகுவதற்கு இனிய நல்ல நண்பரும் கூட.

 36. நரனுடைய கவிதைகள் தரமான, வித்தியாசமான, நவீன சிந்தனைகளைக் கொண்டவை. இப்போதைக்கு நான் இவரை தேவதச்சன், ரமேஷ்-பிரேம் ஆகியோரோடு ஒப்பிட்டு உணர்கிறேன். நரன் பழகுவதற்கு இனிய நல்ல நண்பரும் கூட.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s