கட்டவண்டி

மாலை 5.00 மணி. கரூர் பேருந்து நிலையம். குளிர்ந்த காற்று பகலில்
அடித்த வெப்பத்திற்குப் பிராயச்சித்தம்போல இருந்தது. கோவை செல்லும்
பேருந்து ஒன்றில் நானும் எனது இளைய மகளும், முன் பக்கம் ஒட்டுனர்
அருகிலுள்ள இருக்கையிலமர்ந்தோம்.

“எத்தனை மணிக்கு எடுப்பீங்க சார்?”

“5.05 க்கு கிளம்பிடும் சார். இன்னும் ரெண்டு சீட்டுத்தான் காலி ”
கண்டக்டர் ஆள் தேத்தும் மும்முரத்திலிருந்தார்.

”எத்தன மணிக்கு கோவை போவீங்க.?” டிரைவரை நோக்கி அடுத்த கேள்வியை வீசினேன்.

“8:25க்கு சிங்காநல்லூர் போகும். இது காந்திபுரம் போகாது தெரியுமில்ல?”

சொன்னபடி 5.05க்கு கிளப்பினார்கள். மெதுவாக ஊர்ந்த பேருந்த்து மேம்பாலம்
தாண்டியதும் சற்று வேகமெடுத்தது. தென்னிலை வரை ஒரே சீரான வேகத்தில்
செலுத்தினார் ஓட்டுநர்.

டிரைவருக்குப் பின் மூன்று இளைஞர்கள் அமர்ந்து தத்தமது செல்லில்
இருக்கும் வசதிகள், வசதிக் குறைபாடுகள் பற்றி அரட்டையடித்தவாறிருந்தனர்.

மூவரில் ஒருவர் வந்த அழைப்பொன்றுக்குப் பதில் சொல்லும்போது, “மெதுவா
கட்டைவண்டி மாதிரித்தான் வருதுடா. லேட்டாகும்னு நினைக்கிறேன்.”
ஓட்டுனரைக் கவனித்தேன் தனக்குச் சம்பந்தமில்லாதது போல ஒட்டிக்
கொண்டிருந்தார் பேருந்தை.

வெள்ளகோவில் வரை ஏதும் மாற்றமில்லை வேகத்தில். ஒரு வேளை வெள்ளகோவில் தாண்டியதும் வேகமெடுப்பாரோ என நினைத்தேன்.

மீண்டும் அதே வேகம்தான். இரண்டாமவருக்கு வந்த அழைப்பிற்குப் பதில்
சொன்னார், “ ஃபோர்த் கியர்னு ஒண்ணு இருப்பதை மறந்துட்டாரு போல”

ஓட்டுனர் ஏதும் பேசவில்லை. குறைந்தபட்சம அவர்களை முறைப்பார் எனப்
பார்த்தால் அதுவுமில்லை.

காங்கேயம் வரும்பொழுது இருட்டிவிட்டது. ஆனால் அதே சீரான வேகம். கூடவும் இல்லை குறையவுமில்லை.

பல்லடம் தாண்டியதும் சாந்தாமணி பஸ் ஓவர்டேக் செய்தது. மூன்றாமவர் யாரையோ போனில் அழைத்துச் சொன்னார், “டேய் டவுன் பஸ்ஸெல்லாம் ஓவர்டேக் பண்ணுதுறா”

சிங்காநல்லூர் வரும்வரை கிண்டலின் தீவிரம் அதிகரித்தது. ஓட்டுனர் சட்டை
செய்யவில்லை. சிங்காநல்லூர் சிக்னலில் திரும்பும்போது கைக்கடிகாரத்தைப்
பார்த்தேன். மணி 8:20.

பிளாட்பாரத்தில் நிறுத்தியதும் எழுந்து ஓட்டுனரிடம் சொன்னேன், “ சார்
பத்திரமாக்வும் அலுப்பில்லாமலும் எங்களைக் கொண்டுவந்து சேர்த்ததற்கு
நன்றி.” ஒரு புன்னகையைப் பதிலாக வீசிச்சென்றார்.

ஸ்டேண்டில் விட்டிருந்த காரை எடுக்கும்போது மகள் கேட்டாள், “காலையில்
போகும்போதுகூட அந்த டிரைவரும் இதேபோல நிதானமாத்தான் ஓட்டுனாரு. ஆனா அவர
நீங்க பாராட்டலையே?”

“நிதானமா ஓட்டணும்ங்கிறது அவர் கடமை. ஆனா சீண்டிக்கிட்டே
இருக்கும்போதுகூட நிதானமிழக்காமல் அவரு கண்ணும் கருத்துமா ஓட்டீட்டு
வந்தாரே அதுதான் பாராட்டுக்குரிய விஷயம். அத நம்ம பாராட்டணுமில்லை?”

டிஸ்கி : உண்மை கலந்த புனைவு.

.

Advertisements

69 comments

 1. நல்ல டிரைவர்…

  பாராட்டியது ரொம்ப நல்ல விஷயம்…

 2. நல்ல டிரைவர்…

  பாராட்டியது ரொம்ப நல்ல விஷயம்…

 3. பாராட்டியது ரொம்ப நல்ல விஷயம்…

 4. பாராட்டியது ரொம்ப நல்ல விஷயம்…

 5. சென்னை டூ கும்பகோணம் 6 மணி நேர பயணத்தை 11 மணி நேர பயணமாக்கிய டிரைவரை அடிக்க போனது நினைவுக்கு வருகிறது!

 6. சென்னை டூ கும்பகோணம் 6 மணி நேர பயணத்தை 11 மணி நேர பயணமாக்கிய டிரைவரை அடிக்க போனது நினைவுக்கு வருகிறது!

 7. சீண்டினாலும் தன்னிலை மாறாதிருப்பது சொல்வது சுலபம். செய்வது கடினம். நீங்க பாராட்டினது நல்ல காரியம்.

  ஆனால், சில சமயம் பஸ் ஓட்டுனர்கள் ஏதோ சண்டையில் (பயணிகள் அல்லது நிர்வாகத்துடன்) 'போட்டுப் பார்க்கவென்றே' மெதுவாக ஓட்டுவதும் பார்த்திருக்கிறேன். அண்மையில் எனக்கு நடந்த அனுபவம் அது.

  அனுஜன்யா

 8. சீண்டினாலும் தன்னிலை மாறாதிருப்பது சொல்வது சுலபம். செய்வது கடினம். நீங்க பாராட்டினது நல்ல காரியம்.

  ஆனால், சில சமயம் பஸ் ஓட்டுனர்கள் ஏதோ சண்டையில் (பயணிகள் அல்லது நிர்வாகத்துடன்) 'போட்டுப் பார்க்கவென்றே' மெதுவாக ஓட்டுவதும் பார்த்திருக்கிறேன். அண்மையில் எனக்கு நடந்த அனுபவம் அது.

  அனுஜன்யா

 9. இப்பல்லாம் அரசுப் பேருந்துகள்ல வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டதாக செய்திகள் படித்தேன். விபத்துகளைத்ட் தவிர்ப்பதற்கும், எரிபொருளை மிச்சப்படுத்தவும்.

  ட்ரைவர் பொறுமைசாலியோ அல்லது வண்டியே அவ்வளவு வேகம்தான் போகுமா… எதுவாயிருந்தாலும் நீங்கள் வாய்விட்டுப் பாராட்டுயது பாரட்டத்தக்கது.

 10. இப்பல்லாம் அரசுப் பேருந்துகள்ல வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டதாக செய்திகள் படித்தேன். விபத்துகளைத்ட் தவிர்ப்பதற்கும், எரிபொருளை மிச்சப்படுத்தவும்.

  ட்ரைவர் பொறுமைசாலியோ அல்லது வண்டியே அவ்வளவு வேகம்தான் போகுமா… எதுவாயிருந்தாலும் நீங்கள் வாய்விட்டுப் பாராட்டுயது பாரட்டத்தக்கது.

 11. /மெதுவாக ஓட்டுவதும் பார்த்திருக்கிறேன். அண்மையில் எனக்கு நடந்த அனுபவம் அது.
  //

  உடனே ஒரு கவிதையை சொல்ல வேண்டியதுதானே தல.. பிய்ச்சுக்கிட்டு ஓட்டி இருப்பானே..

 12. /மெதுவாக ஓட்டுவதும் பார்த்திருக்கிறேன். அண்மையில் எனக்கு நடந்த அனுபவம் அது.
  //

  உடனே ஒரு கவிதையை சொல்ல வேண்டியதுதானே தல.. பிய்ச்சுக்கிட்டு ஓட்டி இருப்பானே..

 13. வணக்கம்,

  உங்கள் பாராட்டு அந்த மனிதரை நிச்சயம் நெகிழ வைத்து இருக்கும். இனிமேலும் அவர் சீரான வேகத்தில் செலுத்தி விலை மதிப்பிலா உயிர்களை காப்பார் என்று நம்புவோம்.

  இதே போல் கோவை மாநகர மற்றும் தனியார் பேருந்து ட்ரைவர் பெருமக்கள் மெதுவாக சென்றால் நகரில் நடக்கும் பெரும் விபத்துகள் தவிற்கப்பட்டு எண்ணற்ற மனித உயிர்கள் காக்கப்படும்.
  (சமீபத்திய உதாரணம் சில மாதங்களுக்கு முன் 100 அடி பேருந்து நிலயத்தில் நின்று இருந்த பயணிகள் கூட்டத்தில் பேருந்து புகுந்து பலர் உயிரை விட்டது)

  என்னதான் சட்டம் இருந்தாலும் அவரவர் மனது வைத்தால் மட்டுமே விபத்துகள் தவிர்க்கப்படும்.

  நம்மில் குற்றம் சொல்ல பலர் உண்டு, பாராட்ட பரந்த மனது வேண்டும். உங்கள் பாராட்டு பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

 14. வணக்கம்,

 15. /// Mahesh said…

  இப்பல்லாம் அரசுப் பேருந்துகள்ல வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டதாக செய்திகள் படித்தேன். விபத்துகளைத்ட் தவிர்ப்பதற்கும், எரிபொருளை மிச்சப்படுத்தவும்.

  ட்ரைவர் பொறுமைசாலியோ அல்லது வண்டியே அவ்வளவு வேகம்தான் போகுமா… எதுவாயிருந்தாலும் நீங்கள் வாய்விட்டுப் பாராட்டுயது பாரட்டத்தக்கது.///

  உண்மைதான், விரைவுப் போக்குவரத்துப் பேருந்துகளில் நாற்பதில் இருந்து ஐம்பது கிலோ மீட்டர் வேகம் வரை மட்டுமே செல்வது போல வைத்து இருக்கிறார்கள். கோவையில் இருந்து சேலம் 170 கிலோமீட்டர் மட்டுமே. இந்த தூரத்தை கடக்க அவர்கள் எடுத்துக் கொள்ளும் நேரம் நான்கிலிருந்து நான்கரை மணி நேரம்.

 16. /// Mahesh said…

 17. பாராட்டியது நல்ல விஷயம். பொது இடங்களில் பார்க்க நேரும் பலரினை ‘இது அவர் பணி, செய்யட்டுமே’ எனச் சென்றிடாமல் பாராட்டுவதை, நன்றி கூறுவதை நான் வழக்கமாகவே வைத்திருக்கிறேன்.

  அந்த ட்ரைவர் போல எல்லோரும் இருந்து விட்டால் எத்தனையோ சாலை விபத்துக்கள் தவிர்க்கப் படும்.

  நல்ல கதை. நன்றி வேலன்.

 18. பாராட்டியது நல்ல விஷயம். பொது இடங்களில் பார்க்க நேரும் பலரினை ‘இது அவர் பணி, செய்யட்டுமே’ எனச் சென்றிடாமல் பாராட்டுவதை, நன்றி கூறுவதை நான் வழக்கமாகவே வைத்திருக்கிறேன்.

  அந்த ட்ரைவர் போல எல்லோரும் இருந்து விட்டால் எத்தனையோ சாலை விபத்துக்கள் தவிர்க்கப் படும்.

  நல்ல கதை. நன்றி வேலன்.

 19. பாராட்டியது ரொம்ப நல்ல விஷயம்…

  சீண்டும் போதும் நிதானமிழக்காமல் ஓட்டினாரென்றால் நல்ல விஷயம்தான்.

  ஆனால் சமீபத்தில் திருவண்ணாமலை செல்லும் பேருந்து ஓட்டுநர், ஓட்டுனது கட்டவண்டியேதான்.

 20. பாராட்டியது ரொம்ப நல்ல விஷயம்…

  சீண்டும் போதும் நிதானமிழக்காமல் ஓட்டினாரென்றால் நல்ல விஷயம்தான்.

  ஆனால் சமீபத்தில் திருவண்ணாமலை செல்லும் பேருந்து ஓட்டுநர், ஓட்டுனது கட்டவண்டியேதான்.

 21. கார்க்கி said…
  /மெதுவாக ஓட்டுவதும் பார்த்திருக்கிறேன். அண்மையில் எனக்கு நடந்த அனுபவம் அது.
  //

  உடனே ஒரு கவிதையை சொல்ல வேண்டியதுதானே தல.. பிய்ச்சுக்கிட்டு ஓட்டி இருப்பானே..

  :)-

 22. கார்க்கி said…
  /மெதுவாக ஓட்டுவதும் பார்த்திருக்கிறேன். அண்மையில் எனக்கு நடந்த அனுபவம் அது.
  //

  உடனே ஒரு கவிதையை சொல்ல வேண்டியதுதானே தல.. பிய்ச்சுக்கிட்டு ஓட்டி இருப்பானே..

  :)-

 23. “நிதானமா ஓட்டனும்ங்கிறது அவர் கடமை. ஆனா சீண்டிக்கிட்டே
  இருக்கும்போதுகூட நிதானமிழக்காமல் அவரு கண்ணும் கருத்துமா ஓட்டீட்டு
  வந்தாரே அதுதான் பாராட்டுக்குரிய விஷயம். அத நம்ம பாராட்டனுமில்லை?”

  அண்ணாச்சி ….

  கொஞ்சம் திருப்பூர் , தனியார் பேருந்து ஓட்டுனர்கள் கவனிச்சா நல்லாஇருக்கும்… சும்மா பறக்குறாங்க …

 24. “நிதானமா ஓட்டனும்ங்கிறது அவர் கடமை. ஆனா சீண்டிக்கிட்டே
  இருக்கும்போதுகூட நிதானமிழக்காமல் அவரு கண்ணும் கருத்துமா ஓட்டீட்டு
  வந்தாரே அதுதான் பாராட்டுக்குரிய விஷயம். அத நம்ம பாராட்டனுமில்லை?”

  அண்ணாச்சி ….

  கொஞ்சம் திருப்பூர் , தனியார் பேருந்து ஓட்டுனர்கள் கவனிச்சா நல்லாஇருக்கும்… சும்மா பறக்குறாங்க …

 25. நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்தான். நீங்கள் செய்தது மிகச்சரி

 26. நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்தான். நீங்கள் செய்தது மிகச்சரி

 27. நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்தான். நீங்கள் செய்தது மிகச்சரி

 28. நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்தான். நீங்கள் செய்தது மிகச்சரி

 29. //குசும்பன் Says:
  June 15, 2009 11:53 AM

  சென்னை டூ கும்பகோணம் 6 மணி நேர பயணத்தை 11 மணி நேர பயணமாக்கிய டிரைவரை அடிக்க போனது நினைவுக்கு வருகிறது!///

  அவ்ளோ கோவக்கார புள்ளையாப்பா நீ!

  சொல்லவேயில்ல்ல்ல்ல!

 30. //குசும்பன் Says:
  June 15, 2009 11:53 AM

  சென்னை டூ கும்பகோணம் 6 மணி நேர பயணத்தை 11 மணி நேர பயணமாக்கிய டிரைவரை அடிக்க போனது நினைவுக்கு வருகிறது!///

  அவ்ளோ கோவக்கார புள்ளையாப்பா நீ!

  சொல்லவேயில்ல்ல்ல்ல!

 31. கார்க்கி, உனக்கு கவிதை எழுத வரல என்றாலும், ரசிக்கவாவது கற்றுக்கொள். இப்படி கலாய்ப்பதே ஒரு தொழிலா செய்யுற. உனக்கு ஒரு ரசிகர் மன்றம் வேற – அமித்து.அம்மா மாதிரி – கிர்ர்ர்ர்ர்ர் – :))))))))

  ஆனா, உண்மையில் அந்த ஓட்டுனருக்குக் கோவம் வந்ததே நான் ஆவலில் ஒரு கவிதைய சொன்னதாலதான் :((

  அனுஜன்யா

 32. கார்க்கி, உனக்கு கவிதை எழுத வரல என்றாலும், ரசிக்கவாவது கற்றுக்கொள். இப்படி கலாய்ப்பதே ஒரு தொழிலா செய்யுற. உனக்கு ஒரு ரசிகர் மன்றம் வேற – அமித்து.அம்மா மாதிரி – கிர்ர்ர்ர்ர்ர் – :))))))))

  ஆனா, உண்மையில் அந்த ஓட்டுனருக்குக் கோவம் வந்ததே நான் ஆவலில் ஒரு கவிதைய சொன்னதாலதான் :((

  அனுஜன்யா

 33. " ஸ்லோ அண்ட் ஸ்டடி வின்ஸ் த ரேஸ் " என்பதற்கு முன் உதாரணம் தான் அந்த ஓட்டுனர். இருந்தாலும் மிகவும் பொறுமையாய் எப்போ ஸ்பீட்,,,,, எப்போ ஸ்பீட்,,,,, என்று காத்திருந்த பொறுமை திலகம் சார் நீங்கள்.

 34. " ஸ்லோ அண்ட் ஸ்டடி வின்ஸ் த ரேஸ் " என்பதற்கு முன் உதாரணம் தான் அந்த ஓட்டுனர். இருந்தாலும் மிகவும் பொறுமையாய் எப்போ ஸ்பீட்,,,,, எப்போ ஸ்பீட்,,,,, என்று காத்திருந்த பொறுமை திலகம் சார் நீங்கள்.

 35. சில ஓட்டுநர்கள் வேகமாக ஓட்டாமல் நிதானமாக ஓட்டி சரியான நேரத்தில் செல்வார்கள். ஆனால் சிலர் கட்ட வண்டி கூட ஓவர்டேக் செய்யிறமாதிரியும் ஓட்டுவாங்க.

  திருச்சி – தஞ்சை பேருந்து பயண நேரம் 1.15 மணி நேரம். தனியார் பேருந்துகள் 1 மணி நேரத்திலும் சில நேரங்களில் அதற்கு குறைவாகவும் செல்வார்கள். ஒரு முறை திருச்சியில் இருந்து மன்னார்குடி செல்லும் பேருந்தில் தஞ்சைக்கு சென்றேன். ஓட்டுநரு ஓட்டோ ஓட்டுன்னு ஓட்டி திருச்சி – தஞ்சை சாலையில் பாதி தொலைவில் உள்ள செங்கிப்பட்டி என்ற ஊருக்கு வர 1.45 மணி நேரம் எடுத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் அங்கு வண்டியை நிறுத்தி டீ குடிக்க செல்ல முயன்றார். அதுவரை கொந்தளித்துக்கொண்டிருந்த பயணிகள் எல்லோரும் அடிக்கவே போயிட்டாங்க. அதுக்கப்பறம் ஒரு அரை மணி நேரத்துல தஞ்சாவூரு போயி சேர்ந்தாரு.

 36. சில ஓட்டுநர்கள் வேகமாக ஓட்டாமல் நிதானமாக ஓட்டி சரியான நேரத்தில் செல்வார்கள். ஆனால் சிலர் கட்ட வண்டி கூட ஓவர்டேக் செய்யிறமாதிரியும் ஓட்டுவாங்க.

  திருச்சி – தஞ்சை பேருந்து பயண நேரம் 1.15 மணி நேரம். தனியார் பேருந்துகள் 1 மணி நேரத்திலும் சில நேரங்களில் அதற்கு குறைவாகவும் செல்வார்கள். ஒரு முறை திருச்சியில் இருந்து மன்னார்குடி செல்லும் பேருந்தில் தஞ்சைக்கு சென்றேன். ஓட்டுநரு ஓட்டோ ஓட்டுன்னு ஓட்டி திருச்சி – தஞ்சை சாலையில் பாதி தொலைவில் உள்ள செங்கிப்பட்டி என்ற ஊருக்கு வர 1.45 மணி நேரம் எடுத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் அங்கு வண்டியை நிறுத்தி டீ குடிக்க செல்ல முயன்றார். அதுவரை கொந்தளித்துக்கொண்டிருந்த பயணிகள் எல்லோரும் அடிக்கவே போயிட்டாங்க. அதுக்கப்பறம் ஒரு அரை மணி நேரத்துல தஞ்சாவூரு போயி சேர்ந்தாரு.

 37. கெவுருமெண்டு பஸ்ல இதெல்லாம் சாதாரணம் அண்ணாச்சி.. 🙂

  மதுரைல சரியா 6 மணிக்கு கிளம்பின பச் ட்ரைவர் கிட்ட கேட்டேன் “ அண்ணே கோவை எப்போ போய் சேரும்?”.. நாலரை மணி நேரத்துல போகும்னார்.. 12.10 மணிக்கு சிங்கா நல்லூர் வந்து சேர்ந்தது. :))

 38. கெவுருமெண்டு பஸ்ல இதெல்லாம் சாதாரணம் அண்ணாச்சி.. 🙂

  மதுரைல சரியா 6 மணிக்கு கிளம்பின பச் ட்ரைவர் கிட்ட கேட்டேன் “ அண்ணே கோவை எப்போ போய் சேரும்?”.. நாலரை மணி நேரத்துல போகும்னார்.. 12.10 மணிக்கு சிங்கா நல்லூர் வந்து சேர்ந்தது. :))

 39. //கொஞ்சம் திருப்பூர் , தனியார் பேருந்து ஓட்டுனர்கள் கவனிச்சா நல்லாஇருக்கும்… சும்மா பறக்குறாங்க …//

  திருப்பூர்ல சைக்கிள் ஓட்றவங்க கூட பறப்பாங்களே.. :))

 40. //கொஞ்சம் திருப்பூர் , தனியார் பேருந்து ஓட்டுனர்கள் கவனிச்சா நல்லாஇருக்கும்… சும்மா பறக்குறாங்க …//

  திருப்பூர்ல சைக்கிள் ஓட்றவங்க கூட பறப்பாங்களே.. :))

 41. நல்ல பழக்கவ‌ழக்கம் ஏற்படுத்தும் நீதிக்கதை.! (அவரை நீங்கள் பாராட்டியது மட்டும்தானே கதையில் புனைவாக அமைந்த பகுதி.?)

 42. நல்ல பழக்கவ‌ழக்கம் ஏற்படுத்தும் நீதிக்கதை.! (அவரை நீங்கள் பாராட்டியது மட்டும்தானே கதையில் புனைவாக அமைந்த பகுதி.?)

 43. அருமையான பதிவு அண்ணாச்சி.. உங்க பதிலும் அற்புதம்..

 44. அருமையான பதிவு அண்ணாச்சி.. உங்க பதிலும் அற்புதம்..

 45. அன்பின் வேலன்

  நல்ல செயல் நன்றி கூறியது பாராட்டியது எல்லாம். அதற்கான காரணமும் அருமை

  நல்வாழ்த்துகள்

 46. அன்பின் வேலன்

  நல்ல செயல் நன்றி கூறியது பாராட்டியது எல்லாம். அதற்கான காரணமும் அருமை

  நல்வாழ்த்துகள்

 47. உங்க கோணத்துலயும் பார்க்கலாம்.
  ஆனா இதுல நீங்க நன்றி சொன்ன ஒரு விஷயம் மட்டுந்தான் நல்ல பழக்கம்.

  அண்ணே., அரசு பேருந்துகள்ள டீசல் சிக்கனம் என்ற போர்வையில பயணிகளை காய்ச்சு எடுக்கிறாங்க.அந்த ட்ரைவர் தான் போறது அநியாயத்துக்கு ஸ்லோ என்பதால்தான் கண்டுக்காம போயிருந்திருப்பார்.எந்த மனிதனுக்கும் கிண்டலும் கேலியும் உடனே கோபத்தை வரவழைத்துவிடும்.ஆனா தம்மீது தவறு இருக்கும் பட்சத்தில் பொறுமையாக காட்டிக்கொண்டிருந்திருப்பார்.
  தினசரி அல்லது அடிக்கடி பேருந்து பயணம் செல்பவரை கவனித்தீர்களானால் தனியார் பேருந்துகளில் நின்றுகொண்டேனும் செல்வதை தேர்ந்தெடுப்பார்கள்.ஏனெனில் இவர்கள் படுத்தும் பாடுதான்.
  அதிவேகம் ஆபத்துதான் என்றாலும் கூட ஓரளவேனும் செல்கின்ற ஊரின் தொலைவு கருதியேனும் மிதமான வேகத்தில் போகலாம்.ஒரு 20டன் பாரமேற்றிய லாரி 70லிருந்து80கிமீ வேகத்தில் செல்லும்போது இவர்கள்50கிமீ வேகத்தில் சென்றால் கோபம் வருமா வராதா? உண்மையில் இப்போதுள்ள அரசு பேருந்து பயணம் என்பது பெரும் தன்டனைதான்.

  சகிப்புத்தன்மையின் உச்சத்திற்க்கு சென்றபின் நமக்கும் வேறு வழியில்லை என்றால் சஞ்ஜெய் கவிதையில் ஒன்றை எடுத்து விட்டு பழிதீர்க்க வேண்டியதுதான்.

 48. உங்க கோணத்துலயும் பார்க்கலாம்.

 49. /சகிப்புத்தன்மையின் உச்சத்திற்க்கு சென்றபின் நமக்கும் வேறு வழியில்லை என்றால் சஞ்ஜெய் கவிதையில் ஒன்றை எடுத்து விட்டு பழிதீர்க்க வேண்டியதுதான்.//

  சிங்கத்த சீண்டிபாக்கறதே சிலருக்கு வேலையாப் போச்சி.. 😉

 50. /சகிப்புத்தன்மையின் உச்சத்திற்க்கு சென்றபின் நமக்கும் வேறு வழியில்லை என்றால் சஞ்ஜெய் கவிதையில் ஒன்றை எடுத்து விட்டு பழிதீர்க்க வேண்டியதுதான்.//

  சிங்கத்த சீண்டிபாக்கறதே சிலருக்கு வேலையாப் போச்சி.. 😉

 51. டிஸ்கி என்ற பெயரில் நீங்கள் இடும் படைப்பின் சமையல் குறிப்பு தான் ஸ்வாரஸ்யமாக இல்லை – என்ன செய்வது jackie chan-இன் பட இறுதியில் வரும் behind the scenes-இல் இருக்கும் ஸ்வாரஸ்யத்தைப் பார்த்து வளர்ந்துவிட்டேன் …

 52. டிஸ்கி என்ற பெயரில் நீங்கள் இடும் படைப்பின் சமையல் குறிப்பு தான் ஸ்வாரஸ்யமாக இல்லை – என்ன செய்வது jackie chan-இன் பட இறுதியில் வரும் behind the scenes-இல் இருக்கும் ஸ்வாரஸ்யத்தைப் பார்த்து வளர்ந்துவிட்டேன் …

 53. அருமை. ரசித்தேன். எழுத்தில் உங்களுக்கென்று ஒரு இயல்பான நகைச்சுவை இழை ஓடிக்கொண்டு இருக்கிறது.

 54. அருமை. ரசித்தேன். எழுத்தில் உங்களுக்கென்று ஒரு இயல்பான நகைச்சுவை இழை ஓடிக்கொண்டு இருக்கிறது.

 55. அண்ணே.. வண்டி கட்டை வண்டி மாதிரி ஓடிச்சா.. இல்லா ஸ்லோவா.. சீரான வேகத்தில ஓடிச்சா..?

 56. அண்ணே.. வண்டி கட்டை வண்டி மாதிரி ஓடிச்சா.. இல்லா ஸ்லோவா.. சீரான வேகத்தில ஓடிச்சா..?

 57. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

  நான் சொன்ன கருத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாவில்லை.

  சொன்ன நேரத்திற்கு எடுத்து சொன்ன நேரத்திற்கு கொண்டு சேர்த்தாரல்லவா?

 58. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

  நான் சொன்ன கருத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாவில்லை.

  சொன்ன நேரத்திற்கு எடுத்து சொன்ன நேரத்திற்கு கொண்டு சேர்த்தாரல்லவா?

 59. //சொன்ன நேரத்திற்கு எடுத்து சொன்ன நேரத்திற்கு கொண்டு சேர்த்தாரல்லவா?//

  That is very important and also a safe journey. Now a days some bus traveling is also not in safe..
  I appreciated your goodness.
  -Vibin

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s