சுட்ட அப்பளமும் ரசஞ்சாதமும்

காலை 10 மணிக்கே வெயில் சுள்ளென்று அடித்தது. காலையில் இருந்தே இன்றைக்கு நாள் நரகமாக இருக்கும் என சூசகமாச் சொல்லிக் கொண்டே இருக்கிறது ரம்யாவின் மனது.

காலையில் நடந்த சண்டையைத் தவிர்த்திருக்க முடியும்தான் இருந்தாலும் காலை நேர டென்ஷனில்ல் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யும் கணவனை என்ன செய்வது?

ரம்யா நாச்சிமுத்துப் பாலிடெக்னிகில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேசனில் டிஸ்டிங்க்சனில் பாஸ் பண்ணியவள். திருமணம் ஆகும்வரை வேலைக்குச் செல்லவில்லை. செல்லவும் விரும்பவில்லை. தனக்கென ஒரு குடும்பம் அதைப் பராமரிப்பது, மாலை வரும் கணவனுக்காக காந்திருப்பது என அவளது கனவுகள் வேறு விதமாக இருந்தன. ஆனால் கடவுள் அவளுக்கு விதித்திருந்த வாழ்க்கை மாறாக இருந்தது. திருமணம் ஆன இரண்டாவது வாரத்திலேயே வேலைக்கான உத்திரவு வந்தது. செண்ட்ரல் கவர்ன்மெண்ட் உத்தியோகம் நல்ல சம்பளம் என எல்லோரும் ஓதியதால் அவளும் சம்மதித்தாள். கூடுதல் சம்பளம் நினைத்தை வாங்க உதவ, மகிழ்ச்சியாக ஓடியது வாழ்க்கை.

15 வருடங்களில் எல்லாமே தலைகீழ் மாற்றங்களாகி விட்டது. இரு முறை உத்தியோக உயர்வும், இரு குழந்தைகளும் அவர்களைத் தயார் செய்து பள்ளிக்கு அனுப்பி, தானும் சாப்பிட்டு, இருவருக்கும் மதிய உணவும் தயாரித்து, மாலை மீண்டும் விட்ட இடத்திலிருந்து சமையலைத் தொடர்வது என செக்குமாடு போல ஆகிவிட்டது வாழ்க்கை. கணவன் சுகுமாரனுக்கு தனியார் கம்பெனி ஒன்றில் மேனேஜர் உத்தியோகம். இரவு எந்நேரம் திரும்புவான் என்பது அவனுக்கே தெரியாது. நன்பர்கள் வட்டமும் அதிகம்.

முதல் கஸ்டமர். 45 வயதிருக்கும். வணக்கம் மேடம்

சொல்லுங்க

லோக்கல் ஷிஃப்டிங் ரிக்வெஸ்ட் ஒண்ணு கொடுத்திருந்தேன்

உங்க டெலிபோன் நம்பரச் சொல்லுங்க

நம்பரைச் சொன்னார்.

சிஸ்டத்தில் அடித்துப் பார்த்து வொர்க் ஆர்டர் போட்டாச்சுங்களே! லை மேன் யாரும் வரலியா?”

இது வரைக்கும் வரலிங்களே

ஜே டி ஓவுக்கு டயல் செய்து , “2213 ஷிஃப்டிங் யாருக்குப் போட்டிருக்கீங்க மோகனுக்கா? ஸ்ரீனிவாசனுக்கா?. ….. சரி. ஸ்ரீனிவாசன எங்கிட்டப் பேசச் சொல்லுங்க

ஐந்து நிமிடத்தில் ஸ்ரீனிவாசனே நேரில் வந்தார் ஏம்ப்பா அந்த 2213 லோக்கல் ஷிஃப்டிங் என்ன ஆச்சு?”

டெக்னிக்கல் ஃபீசிபிலிட்டி இல்லை மேடம்

எதுனால?”

சார் வீட்டுப் பக்கத்துல நம்ம கணெக்சன் ஏதும் இல்லை மேடம். டி பி தள்ளி இருக்கு இவருக்கு லைன் இழுக்க 2 போஸ்ட் போடணும். ஸ்விட்ச்ல எம்ப்டி பேரும் இல்லை

சரி வாங்க பார்த்துடலாம். சார் நீங்க எதுல வந்தீங்க?”

பரவாயில்லை, என் கார்லயே போயிட்டு வந்திடலாம் மேடம்

சென்று பார்த்துவிட்டு முடியாதென்பதை அந்தக் கஸ்டமருக்கு விளக்கிவிட்டு அவருக்கு ஒரு வில் போன் பரிந்துரைத்தாள்.

”இவருக்கொரு வில் போன் அப்ளிக்கேசன் கொடுங்கஎன்றவாறே, உள்ளே வந்த ஸ்டோர் கீப்பரைப் பார்த்து ராமச்சந்திரன் எல் ஜே இ எவ்வளவு ஸ்டாக் இருக்கு?”

அது இருக்கும் மேடம் 50, 60”

“50 60ஆ D E ரிப்போர்ட் கேட்டிருக்கார். சரியா எண்ணிச் சொல்லுங்க. ஸ்டாக் நோட்டக் கொண்டாங்க”. சரி எனத் தலையாட்டிச் சென்ற ராமச்சந்திரன் நோட்டை நீட்டியவாறே, “45 இருக்கு மேடம்

அப்ப ஸ்டாக் நோட்டுல 55ன்னு இருக்கு

“10 ஷார்ட்டேஜ் மேடம். கண்டுபிடிக்கணும்

“எப்பக் கண்டுபிடிப்பீங்க? உங்களுக்காக ஒவ்வொரு மாசமும் நான் பொய் சொல்லிட்டு இருக்கேன். சரி வில் போன் வொர்க்கிங்க் கண்டிசன்ல எவ்வளவு இருக்கு?என ஸ்டாக்கில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஸ்டாக் நோட்டைப் பார்த்து 10 நிமிடத்தில் முடிய வேண்டிய வேலை. நோட்டில் இருப்பதும், பிஸிக்கலாக இருப்பதும் அவர் சொல்வதும் டேலி ஆகவில்லை. உடையெல்லாம் அழுக்கானது மட்டுமல்லாமல், உடலெங்கும் பிசுபிசுப்பு எரிச்சலை அதிகரித்தது.

அதற்கிடையில் இன்னொரு கஸ்டமரிடமிருந்து ஒரு போன். ஹலோ இண்டெர்னெட் கனெக்ட் ஆக மாட்டேங்குது மேடம்

கனக்சன் ஐகான் விட்டு விட்டு எரியுதுங்களா?”

எதுங்க?”

அதாங்க உங்க கம்ப்யூட்டரோட ரைட் சைடுல கீழ ரெண்டு சின்ன கம்பூட்டர் ப்ளிங்க் ஆகுதா?”

ஆமாங்க

அப்ப கனெக்சன் சரியாத்தான் இருக்கு உங்க செட்டிங்கச் செக் பண்ணுங்க

மற்றொரு கஸ்டமர், “மேடம் ஷிஃப்டிங் ஒண்ணு அப்ளிக்கேசன் கொடுத்திருந்தேன் உடுமலையில இருந்து

வொர்க் ஆர்டர் நம்பரச் சொல்லுங்க

”CB122401”

வொர்க் ஆர்டரை கம்ப்யூட்டரில் தேடியெடுத்து, “கண்ணனா? பேமெண்ட் ட்யூ இருக்குன்னு உங்களுக்கு நோட்டீஸ் வந்திருக்குமே?”

கட்டியாச்சு மேடம். கிளியர்னு AO நோட்டீஸ்லயே எழுதிக் கொடுத்திருக்கார் பாருங்க

அதை வாங்கிப் பார்த்துவிட்டு, D E க்குப் போன் செய்தாள், “ சார் நல்லா இருக்கீங்களா?”

நல்ல இருக்கேம்மா நீ எப்படி இருக்கே?”

நல்லா இருக்கேன் சார். உங்க இயர் எண்ட் ரிப்போர்ட் எல்லாம் ரெடியா?”

எங்கம்மா இன்னும் முடியல உங்க ரிப்போர்ட் எல்லாம் வந்தாத்தானே? மொத்தமா கம்பைல் பன்ணனும்.

அப்புறம் அன்னைக்கு G M கேட்டப்ப உடனே தர்ரேன்னு ஒத்துக்கிட்டீங்க சார்?”

அவரு கேட்டாச் சரின்னுதானே சொல்லனும்

சரி சார் ஒரு கேஸ், ஷிஃப்டிங். ட்யூ இருந்தத கட்டீட்டாங்க. A O க்ளியரன்ஸ் கொடுத்திருக்கார். ஆனா எனக்கு இங்க வொர்க் ஆர்டர்ல ரிலீஸ் ஆகல

வொர்க் ஆர்டர் நம்பர் சொல்லுங்க

சொன்னாள்

அது D E க்ளியரன்ஸுக்காக நிக்குதும்மா

சார் இதெல்லாமா D E கிளியர் பண்ணுவார்? சாப்ட்வேர்ல அப்டேட் பண்ணச் சொல்லுங்க. பணம் கட்டியாச்சுன்னு A O சர்டிபை பண்ணுனா A E க்கு வர்ர மாதிரிச் செய்யச் சொல்லுங்க சார்

சரிம்மா நோட் பண்ணி வச்சுக்கிறேன். அடுத்த I T ரெவ்யூவில இதச் சொல்லலாம்

சரி சார். இத மட்டும் D E கிட்டச் சொல்லி ரிலீஸ் பண்ணுங்க நான் கஸ்டமர்கிட்ட டைம் வாங்குறேன்

தொடர்ந்து கஸ்டமர்கள் வருகையினால் மதிய உணவு 3 மனிக்குத்தான் சாப்பிட முடிந்தது.

இதற்கிடையில் கோடை விடுமுறையில் இருக்கும் குழந்தைகள் இருவரிடமும் போனில் பேசி. மற்ற எக்ஸ்சேஞ்சிலிருந்து வந்த போன்களுக்கு பதிலளித்து என நாள் முழுவதும் வேலை தன் ஆக்டோபஸ் கரங்களால் அவளை விழுங்கியது.

மாலை வீடு சேர மணி 7.00 ஆகி விட்டது உடம்பெல்லாம் அடித்துப் போட்டதுபோல் வலி. போன மாதம் எத்தனாம் தேதி என யோசித்ததில் நாள் நெருங்கி விட்டது புரிந்தது. அதற்கான வலியாகத்தான் இருக்கும். ஒரு பிராக்ஸிவான் போட்டுக்கொண்டாள். “பிராக்ஸிவான் அடிக்கடி சாப்பிடாதீங்க மேடம், பின்னால கிட்னி பிராப்ளம் வரும்என்ற மெடிக்கல் ஷாப் பையனின் அட்வைஸ் ஞாபகம் வந்தது. வேறென்ன செய்ய?

சுகுமாரனைப் போனில் அழைத்து ஏதாவது டிபன் வாங்கி வரச் சொல்லலாம் என செல்லை எடுத்தாள்.

sukku calling என அலறியது செல்.

“ரம்மு நம்ம கோபாலன் வந்திருக்கான். உங்கையால சுட்ட அப்பளமும் ரசஞ்சாதமும் சாப்பிடனும்னு அடம் பிடிக்கிறான். ரெண்டு பேரும் வீட்டுக்குத்தான் வந்திட்டிருக்கோம். 10 நிமிசத்துல வந்திருவோம்” என செல்லைக் கட் செய்தான்.

Advertisements

27 comments

 1. தலைப்பைப் பார்த்ததும் இனைக்கும் எதோ புது ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போகப் போறிங்கன்னு நினைச்சேன்.. ;))

 2. தலைப்பைப் பார்த்ததும் இன்னைக்கு அண்ணாச்சிக்கு வீட்டுல இதுதான் போலன்னு நினைச்சேன்.. ;))

 3. ரசஞ்சாதமும் சுட்ட அப்பளமும் நல்ல காம்பினேஷந்தான் இருங்க வீட்டுக்கு போன் செஞ்சிட்டு வரேன் :))

 4. ரொம்ப நல்ல இருக்குங்க கதை ப்ளோ.

  எதோ ஒரு பழைய பாலசந்தர் படத்தில் சுஜாதா வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வரும் காட்சியை நினைவு படுத்தியது!

  அப்புறம், அவுங்க வீட்டில் எல்லாம் வேலையும் சரி செஞ்சிருப்பாங்களா அப்படின்னு, ஒரு எண்ணம் வாசகர்க்கு வரும். அதுக்கு, சுகுமாரன், “நம்ம போன் பில் கட்டுனியா?” “சே”, மிஸ் பண்ணிடோம்னு ரம்யா நினைத்துக்கொண்டாள், அப்படினு முடிச்சிருக்கலாம்! இல்லீங்களா?


  விஜயஷங்கர்
  பெங்களூரு

 5. காட்சிகள் கண் முன் நடந்துகொண்டிருக்கும் தோரணை.. தூர்தர்ஷனின் நாடகம் போல முடிச்சிருக்கீங்க… ஹிஹி.. அண்ணாச்சி நல்லாயிருக்குங்கோவ்!

 6. நல்லாயிருக்கு. தத்ரூபமா சொல்றீங்க. ஒரு கதைக்குள்ள இத்தனைப் பயனுள்ள தகவல்களைக்கூட கொடுக்கிறது ஆச்சரியமாயிருக்கு.எவ்ளொ உபயோகம் பாருங்க.

 7. அண்ணாச்சி நேரடி அனுபவம் மாதிரி உண்மைக்கு அத்தனை நெருக்கம். அருமையா இருந்தது. ஆனால், இத்தனை அவதிகளுக்குப் பின்னும் தொடர்கிற நெருக்கடிக்கு ரசஞ்சாதம், சுட்ட அப்பளம் பொருந்தவில்லை. முடிவு கொஞ்சம் சுமார்தான் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம்.

 8. உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

  பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

 9. நன்றி சஞ்சய், சிவா, விஜய், தீபா, வெங்கி, முத்து.

  செல்வா, நான் சொல்ல வந்ததை அழுத்தமாச் சொல்லல. அந்த பொண்ணு அவ்வளவு சிரமத்திற்குப் பின்னும் விடுதலை வேண்டுகையில், கூடுதல் சுமையாக கணவனின் நண்பன்.

  நான் யார் வீட்டுகுச் சென்றாலும், குறிபாக இருவரும் பனியாற்றும் இடங்களுக்குச் சென்றால் உணவை முடிந்த அளவு வெளியே நன்பர்களுடன் சாப்பிட்டுவிட்டு பார்சலும் வாங்கி விடுவேன். என் தங்கமணியும் வேலைக்குச் செல்வதால் அந்தச் சிரமம் என்னவெனத் தெரியும்.

  சுட்ட அப்பளமும், ரசஞ்சாதமும் செய்வதற்கு எளிது போலத் தோன்றினாலும், ஒரு உப்புமாச் செய்து சமாளிப்பதைவிட அதிக வேலை.

  மேலும் அவளால் முடியுமா எனக் கேட்காமல், அது ஏதோ அவளுக்குப் பெருமைபோல பேசும் சுகுமாரனின் மனநிலையைக் கவனிக்க வேண்டும்.

  வீட்டிலும், வெளியிலும் பிழிந்தெடுக்கப்படும் பெண்ணின் நிலைதான் கதையின் மையக் கருத்து.

  அலுவலகத்தில் பேனுக்கு கீழே உட்கார்ந்து அரட்டை அடிப்பவர்தானே என சாதாரணமாக எல்லோரும் நினைக்கிறார்கள்.

  முட்டை வைக்கும் கோழிக்குத்தான் தெரியும் அதன் வேதனை.

 10. கதையின் உரையாடல் லாவகம் அசத்தலாக இருக்கிறது

 11. சுட்ட அப்பளம், ரசம்… ரொம்ப நல்லா இருக்குங்க. அதுக்கு ஈடு இணை கிடையாதுங்க..

 12. அண்ணே.. பக்கத்துல இருந்து பார்தது போல இருந்தது
  அந்த காண்வெர்ஷேசன்…சூப்பருக்கு மேல எதாவது வார்தை இருந்தா சொல்லுங்க!

 13. இரண்டு (இல்லம், வலை இல்லம்) புதுவீட்டுக்கும் நல்வாழ்த்துகள் !

 14. அருமையா இருக்கு. (தங்கமணி தாமிரா ஆதிமூலகிருஷ்ணன் இன்னும் இதைப்படிக்கல போல இருக்கு) 🙂

 15. நல்ல ஃபாம்ல இருக்கீங்க வேலன். அடிச்சு ஆடுங்க. நல்லா வந்திருக்கு.

  அனுஜன்யா

 16. நந்தா, ராகவன், அருணா, கலை, கோவி, முத்து, அம்மினி, அத்திரி, அனுஜ்ன்யா உங்களனைவருக்கும் நன்றி.

 17. அந்த மேடத்தோட துறை சார்ந்த தகவல்கள் அருமை….நானும் டெலிகாம் துறையை சேர்ந்தவந்தான்…முடிவு நச்…ஏன் இந்த ஆண்கள் இப்படி இருக்கிறாங்க

 18. 😦

  ம்ஹூம்

  கதையோட்டத்தில் நல்லா டெக்னிக்கலா பின்னியிருக்கீங்க.

  அருமை

 19. நாச்சிமுத்து பாலிடெக்னிக்..உடுமலை…

  ரெண்டும் நான் புரண்டு வளந்த எடங்க…

  நன்றி அண்ணாச்சி..

  – உடுமலை ரங்கா..

 20. அருமை..

  உண்மையிலேயே நல்லா சுவாரஸ்யமா இருந்துச்சுங்க..
  அப்படியே ஒரு பெண்ணின் பிரதிபலிப்பு..

 21. அருமையாக வந்திருக்குங்க! முடிவு எனக்கு பிடிச்சிருக்கு.

 22. சிறப்பான இயல்பான கதை வேலன். ஆனால் தவிர்க்கவே இயலாத வாழ்க்கைச்சூழல்தான் இது. இதைப்போலவே சுகுவும் மிகுந்த சிரமத்துக்கிடையில் தவிர்க்க இயலாத ஆறுதலான ஒரு நட்பை வீட்டிற்கு அழைத்து வரும் சூழலில் இருந்திருக்கலாம்.

  வெளிவேலைக்கெல்லாம் போகாத ரமா போல பட்டென கோபப்படாமல், ரம்யா ரசஞ்சாதம் செய்து தந்துவிட்டு அமைதியான இரவுகளில் சுகுவிடம் தன்நிலை விளக்கியிருப்பார் என நாம் நம்புவோமாக..

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s