என்ன தவம் செய்தேனோ?

பதிவர் ஒருவரின் குழந்தையை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது அவசரம் கருதி. பதிவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சென்னையில் அவருக்கு யாரையும் தெரியாது. நண்பர்களுமில்லை, உறவினருமில்லை. கையில் காசுமில்லை. என்ன செய்வது?

குறைந்த மாதங்களே அறிமுகமாகி இருக்கும் இன்னொரு பதிவருக்குத் தொலைபேசினார். அடுத்த 10 நிமிடத்தில் அந்தப் பதிவர் மருத்துவமனைக்கு வந்து குழந்தையை சேர்க்க எல்லா உதவிகளும் செய்துவிட்டுக் கிளம்பும்போது செய்த காரியம் இன்னும் பிரமிப்பூட்டுவதானது.

தனது வங்கி அட்டையைக் கொடுத்து அதற்கான பின்(PIN) என்னவென்பதையும் சொல்லி,

“எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தை முக்கியம்” என்றவாரே காரில் ஏறிப் போனார்.

அடுத்த நாளிரவு தவிர்க்க முடியாத ஒரு வேலை காரணமாக 4 மணி நேரம் வெளியே செல்ல வேண்டி இருந்தது. இன்னொரு பதிவர் இவர் முக வாட்டத்தைக் கவனித்து விவரமறிந்து தானே குழந்தை அருகிலிருந்து கவனித்துக் கொண்டார்.

இன்னொரு பதிவர்(மருத்துவர்) குழந்தைக்கு கொடுக்கப் படும் சிகிட்சை சரியானதுதான் சீக்கிரம் சரியாகி விடுமென ஆறுதல் படுத்தினார்.

இவர் வெளிநாடுவாழ் பதிவர். அவரது தந்தை சமீபத்தில் காலமாகி விட்டார். உடனே கிளம்பமுடியாத சிக்கல் ஒன்றில் இருந்தாரவர். எனக்கு விஷயம் தெரிந்ததும் இரண்டு பதிவர்களிடம் அவரது நிலை பற்றிச் சொன்னேன். சில மணி நேரத்திலேயே அவரது நாட்டுத் தூதரகத்தில் பேசி, அவருக்கு விமான டிக்கட் புக் செய்து, சென்னையிலிருந்து அவரது ஊர் செல்லக் கார் என எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டு எனக்குத் தகவல் தந்தனர். அவர் கிளம்பய்தில் இருந்து அவரது பயணம் குறித்த நேர்முகத் தகவல் அரை மணிக்கொரு முறை என் செல் பேசிக்கு வந்தவாறே இருந்தது.

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ வேலை செய்யும் ஒருவருக்கு அவரை நேர்முகமாகக் கூட சந்தித்திராத பலர், அவரது நிலை குறித்த கவலையும் அக்கறையும் பட்டது என்னை நெகிழச் செய்தது.

இன்னொரு பதிவரின் அன்னை சென்னையில் ஒரு அறுவை சிகிட்சைக்காக் இருந்த பொழுது அவருக்கு உதவி செய்தவர்கள் எண்ணிக்கை அவரது பதிவிற்கு வரும் கும்மிப் பின்னூட்டங்களைவிட அதிகம்.

இறுதியாக என் நேரடி அனுபவம். நான் சமீபத்தில் வீடு வாங்கியது உங்கள் அனைவருக்கும் தெரியும். தெரியாதது நான் பணம் போதாமல் தவித்தது. கட்டிய வீட்டை வாங்கியதால் சொன்ன தேதியில் பணம் கொடுத்தே ஆக வேண்டிய சூழ் நிலை. வேறொரு பதிவரிடம் இதைக் குறித்து வருத்தமாகப் பேசிக் கொண்டிருந்தேன். இதைத் தெரிந்து கொண்ட இன்னொரு பதிவர் தானே முன் வந்து எனக்குப் பணம் கொடுத்து உதவினார் சரியான சமயத்தில். உடுக்கை இழந்தவனின் இடுக்கன் களைந்த நட்பது.

பதிவரின் கதை பத்திரிக்கையில் வந்தால் உடனே அழைப்புகள் பறக்கின்றன, இன்னாருடைய பதிவு இத்தனாம் பக்கம் என. குழும மெயிலில் வாழ்த்துக்கள் பதியப் படுகின்றன. வாழ்த்துப் பதிவு உடனே இடப்படுகிறது. எவருக்கும் இன்னொருவர் மீது கிஞ்சித்தும் பொறாமை இல்லை. ஏதோ தன்னுடைய பதிவே வந்ததுபோல் ஒரு கொண்டாட்டம். இதெல்லாம் வேறிடத்தில் சாத்தியமா?

சிறுகதைப் போட்டிக்கு நானும் கதை அனுப்பலாமென்றிருக்கையில் என் மெயிலில் அபிப்ராயம் கேட்டு வரும் கதைகள் என்னை ஆச்சர்யப் பட வைக்கின்றன. சக போட்டியாளரிடமே போட்டிக்கான கதையைச் சொல்லுவது முதிர்ந்த எழுத்தாளர்களே செய்யாத ஒன்று. என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி.

இவர்களெல்லாம் யாரார் என நான் நேரடியாகச் சொல்லாமல் பூடகமாகச் சொன்னதின் நோக்கம் இரண்டு.

1. அவர்களே அதை விரும்பவில்லை. நமக்கு அது பெரிய விசயம் அவர்களுக்கு அது சாதாரணம் போலும்.

2. அவர்கள் யாரெனத் தெரிந்தால் கடவுள் ரேஞ்சுக்கு அவர்களை உயர்த்தி விடும் அபாயமும் உள்ளது. பின் அவர்கள் நம்முடன் சகஜமாகப் பழக இடமில்லாமல் போய்விடக் கூடும்.

உண்டென்றும்
இல்லையென்றும்
இருக்கலாமென்றும்
உணரப்படும் கடவுள்
அவருக்கும்
அவர் சார்ந்த குடும்பத்தினருக்கும்
இறையருள் பெய்யட்டும்
எல்லா வளமும் அருளட்டும்.

டிஸ்கி : பதிவர்கள் யாரெனத் தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்ல வேண்டாம்… ப்ளீஸ்

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s