யார் இந்த வடகரை வேலன்?

இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது நான் பதிவெழுதத் துவங்கி. ஒரு வருடத்தில் சில குறிப்பிட்டுச் சொல்லும் பதிவுகள் எழுதியிருந்தாலும், கதம்பத்திற்கு எனக்குக் கிடைத்த வரவேற்பு நான் எதிர்பாராதது. இப்பொழுதும் சில பதிவர்கள் என்னைக் கதம்பம் வேலனா என வினவுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தனிப்பட்ட முறையில் அடைந்த மகிழ்ச்சி எனில் விகடனில் என் கதை வந்ததைச் சொல்ல வேண்டும். ஜெயகாந்தன் போன்ற எழுத்துலக ஜாம்பவான்கள் எழுதிய இடத்தில் ஒரு ஓரத்தில் என் எழுத்தும் இடம்பெற்றதை நான் பெருமையாகக் கருதுகிறேன். திருமண மண்டபங்களில் மணமக்களைவிட மகிழ்ச்சியாக பட்டுப்பாவாடையில் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டும் எல்லோர் மீதும் பன்னீர் தெளிக்கும் சிறுமியினது பெருமிதத்தை ஒத்ததெனது.

ராஜேந்திரன் என்ற இயற்பெயர் துறந்து வடகரை வேலனானது ஒரு நிமித்தம் கருதித்தான். வேலுச்சாமி என்பதென் தந்தையின் பெயர். அவரது ஜன்ம ஸ்தலம் வடகரை. எனவே வடகரை வேலனென்ற புனைபெயரில் கவிதை, கட்டுரை மற்றும் நாட்கங்கள் எழுதி அரங்கேற்றியிருக்கிறார்.

ஒரு உத்வேகத்துடன் சினிமாவில் கால் பதிக்கும் முயற்சியாக அவரெழுதி வெற்றி பெற்ற நாடகம் ஒன்றைச் செப்பனிட்டு தயாரிப்பாளர் ஒருவரையும் இதரக் கலைஞர்களையும் ஒருங்கிணைத்துச் செயல்பட்டார். அவரது பாடல் ஒன்றும் ரிக்கர்டிஙக் ஆகியது, சங்கர் கனேஷ் இசையில் எல் ஆர் ஈஸ்வரி பாட. திரைப்படத்தின் பெயர் ”ப்ரியமுள்ள பிரேமா”. ரோஜா ரமணி கதாநாயகி என ஞாபகம்.

எல்லா அரும்புகளும் மலர்வதில்லை என்ற இயற்கையின் நியதிக்கேற்ப, இந்த முயற்சியும் கருகிய மொட்டுக்கள் வரிசையில் இடம்பெற்றது. அதன் பின் பிரபல இயக்குனர்களிடன் துனை இயக்குனராகச் சேர முயற்சித்தார். ஒரு ஆறு மாத காலச் சென்னை வாசத்திற்குப் பிறகு அந்த முயற்சிகளை ஏறக்கட்டிவிட்டு வேலையில் மும்முரமாக ஈடுபடவாரம்பித்தார். அவர் சொன்ன காரணம் இன்னும் என் மனதிலிருக்கிறது. “ ஒருவன் கலைஞனாகவும் தன்மானமுள்ளவனாகவும் ஒரு சேர இருப்பதியலாது”.

அப்பொழுது பிரபல பாடலாசிர்யியராக வளர்ந்து கொண்டிருந்தவர் இவரது கவிதை நோட்டுக்களை மொத்த விலை பேசிய நாளன்று அவரடைந்த மனவேதனை ஆற்றமுடியாதது.

பத்திரிக்கைகளில் அவர் சேர எடுத்த முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. அந்தக் காலகட்டத்தில் பத்திரிக்கைத் தொழிலும் பரவலாக இல்லை. மேலும் ஒரு சிலரால் மட்டுமே ஆளப்பட்டு வந்தது.

அவரது நினைவுநாளைக் கொண்டாடிய சில நாட்களிலேயே அவரது பெயர் பத்திரிக்கையில் வந்ததை அவருக்கு நான் செய்த அஞ்சலியாகக் கருதுகிறேன். அந்த வெப் ஆப்செட் மெஷின் ஒவ்வொருமுறை வடகரை வேலன் என்ற பெயரை அச்சடித்திருக்கும் பொழுதெல்லாம் ஒரு ரோஜா ஒன்றை என் தந்தைக்குக் காணிக்கையாகச் செலுத்தியதாக உணருகிறேன்.

எனக்குக் கிடைத்தவைகளிலேயே ஆகச்சிறந்ததாக, ஆரோக்கியமான பதிவுலக நண்பர்கள் வட்டத்தை எனக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறதெனதெழுத்து.

அந்த நண்பர்களைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன். இந்தப் பதிவின் நீளம் கருதி முடிக்கிறேனிப்போது.

.

Advertisements

64 comments

 1. வாழ்த்துகள் அண்ணாச்சி… விரைவில் உங்கள் தொடர்கதை(கள்) அனைத்து இதழ்களிலும் வெளியாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

 2. ஒரு வருடத்திற்கு

  வாழ்த்துகள்

 3. வாழ்த்துகள் அண்ணாச்சி…

  நெகிழ்ச்சியுடன்
  மஹேஷ்

 4. போன வர்ஷம் இத்தே டய்ம்ல எம்மாம் பேரு வந்திகிறோம் :))

  நானும் வாழ்த்திகிறேன் அண்ணாத்த.

 5. //விரைவில் உங்கள் தொடர்கதை(கள்) அனைத்து இதழ்களிலும் வெளியாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது//

  கள் என்ற பெயரில் தொடர்கதை எழுதியுள்ளீரா? சொல்லவேல்ல? கள் இறக்கும் போராட்டம் பற்றியா?

  வாழ்த்துகள்!

 6. அண்ணாச்சி,

  அந்த கல்யாண மண்டப சிறுமி உவமை – ஓஹோ!

  அடி பின்றீங்க!

 7. // எம்.எம்.அப்துல்லா said…
  போன வர்ஷம் இத்தே டய்ம்ல எம்மாம் பேரு வந்திகிறோம் :))

  //

  எவ்ளோ பெரிய செட்டு நாம? அக்காங்…

 8. என்னோட தாத்தா அடிக்கடி சொல்வாரு, தொடரும் தலை முறை கனவுகள்னு. ஒவ்வொருத்தரோட அடிமனதின் ஆழத்தில் முன் தலைமுறையினரால் தொட முடியாத உயரத்தையோ/கைவிட்ட விஷயத்தையோ செய்து முடிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கும்.

  உங்கள் பதிவைப் படித்தவுடன் எனக்கு தோன்றியது.

 9. வாழ்த்துக்கள் வேலன் அவர்களே! இந்த கட்டுரை எனது மனதை தொட்டது. நான் தொடர்ந்து வரும் தளங்களில் உங்களுடையதும் ஒன்று. தந்தையின் முயற்சியை வலைப்பதிவின் மூலம் நீங்கள் நிறைவேற்றி வருகிறீர்கள். உங்கள் தந்தையின் ஆசி என்றும் உங்களுக்கு கிடைக்கும்.

  மதுரைக்காரத்தம்பி
  http://maduraikarathambi.blogspot.com/

 10. வாழ்த்துக்கள் வேலன்

  //பரிசல்காரன்
  May 28, 2009 1:12 PM
  // எம்.எம்.அப்துல்லா said…
  போன வர்ஷம் இத்தே டய்ம்ல எம்மாம் பேரு வந்திகிறோம் :))

  //

  எவ்ளோ பெரிய செட்டு நாம? அக்காங்…//

  🙂

 11. வாவ், இன்றோடு ஒரு வருடமா? வாழ்த்துகள். கலக்குறீங்க அண்ணாச்சி.

  அனுஜன்யா

 12. ரொம்ப நெகிழ்ச்சியாக உணர்கிறேன்.

 13. பதிவு, ‘மகன் தந்தைக்காற்றும் உதவி’ நினைவு படுத்தியது. ரொம்ப நெகிழ்ச்சியா எழுதியிருக்கீங்க வேலன்.

  அனுஜன்யா

 14. நெகிழ்ந்துவிட்டேன் அண்ணாச்சி. உங்க பேருக்குப் பின்னாடி இவ்வளவு இருக்குன்னு தெரிந்தபின் உங்கள் மேல் உள்ள மதிப்பு இன்னும் அதிகமாகி விட்டது.

  // “ ஒருவன் கலைஞனாகவும் தன்மானமுள்ளவனாகவும் ஒரு சேர இருப்பதியலாது”.//

  சரியான அவதானிப்பு.

  // அப்பொழுது பிரபல பாடலாசிர்யியராக வளர்ந்து கொண்டிருந்தவர் இவரது கவிதை நோட்டுக்களை மொத்த விலை பேசிய நாளன்று அவரடைந்த மனவேதனை ஆற்றமுடியாதது. //

  கன்னாபின்னா வென்று திட்ட நினைக்கின்றேன். தங்கள் வலைப்பூ என்பதால் அடக்கிக் கொண்டு இருக்கின்றேன்.

 15. என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணாச்சி!!!!

 16. வாவ், இன்றோடு ஒரு வருடமா? வாழ்த்துகள். கலக்குறீங்க அண்ணாச்சி.

  அனுஜன்யா

  அண்ணா உங்களுக்கும் தான் இன்றோடு
  ஒரு வருடம்
  வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்

 17. வாழ்த்துக்கள் அண்ணாச்சி.

  மிக நெகிழ்ச்சியாக இருந்தது படிக்கையில்

 18. வாழ்த்துக்கள்.. வேலன்

 19. நெகிழ்ச்சியான பதிவு

  வாழ்த்துக்கள்

 20. // ஒருவன் கலைஞனாகவும் தன்மானமுள்ளவனாகவும் ஒரு சேர இருப்பதியலாது”.//

  என் கதையும் இதுதான் வேலன்.

  படிவு உலகில் ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்

 21. இரண்டாம் ஆண்டு துவக்கவிழா வாழ்த்துகள் அண்ணாச்சி.

 22. உங்கள் தந்தை சினிமாவை பற்றி சொன்ன வார்த்தைகள் நிஜம்..

  இந்த பேருக்கு பின்னாடி ஒருவரது வாழ்க்கையே இருக்கிறதா..? கிட்டத்தட்ட உங்கள் தந்தையின் நிலைதான் என் தந்தையின் நிலையும், அவரால் முடியாததை.. நான் முடித்து காட்டுவேன் என்கிற நம்பிக்கையில். நடை போட்டு கொண்டிருக்கிறேன்.

  அந்த கல்யாண வீட்டு சிறுமி உதாரணம்.. சூப்பர்.. வடகரை வேலன் அவர்களே…

 23. வாழ்த்துக்கள் அண்ணாச்சி..!

  தந்தையின் பெயரைக் காப்பாற்றும் உங்களை என்னவென்று சொல்லி அழைப்பது..?

 24. வாழ்த்துகள் அண்ணாச்சி.. விகடனில் பெரிய சிறுகதை விரைவில் வெளிவர வாழ்த்துகள். 🙂

 25. அண்ணாச்சி, நைட் எங்க மீட் பண்றது? ஹரிபவனா? பாட்டியம்மா மெஸ்ஸா?

 26. வாழ்த்துக்கள்.

  நானும் உங்களைப்போல ஒரு வருடமாக தமிழ் ப்ளாக் எழுதுகிறேன். ( அப்துல்லா அண்ணன், பரிசல் அண்ணன் செட் ) 😉

 27. //அந்த வெப் ஆப்செட் மெஷின் ஒவ்வொருமுறை வடகரை வேலன் என்ற பெயரை அச்சடித்திருக்கும் பொழுதெல்லாம் ஒரு ரோஜா ஒன்றை என் தந்தைக்குக் காணிக்கையாகச் செலுத்தியதாக உணருகிறேன்//

  இந்த வரிகள் அருமை

 28. /திருமண மண்டபங்களில் மணமக்களைவிட மகிழ்ச்சியாக பட்டுப்பாவாடையில் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டும் எல்லோர் மீதும் பன்னீர் தெளிக்கும் சிறுமியினது பெருமிதத்தை ஒத்ததெனது./

  ச்சே! எப்படி அண்ணாச்சி. அடுத்தவரியப் படிக்காமக்கூட அவசர அவசரமா ஆர்வத்துல பின்னூட்டம் போடுறேன் முதன் முறையா. அண்ணாச்சி ட்ச்.

 29. ரொம்ப உருக்கமாயிருந்துச்சி அண்ணாச்சி. நீங்கள் எனக்கு அனுப்பியிருந்த ஒரு மின்னஞ்சலில் உங்களின் தந்தையின் வார்த்தகளாக சொல்லியிருந்தது என் நெஞ்சில் நிலைத்திருக்கும் ஒன்று.

  புலிக்குப் பிறந்த புலி. பேர் சொல்ல வைத்த பிள்ளை. இப்போ வடகரை வேலன்னு பேர் சொல்லவே ரொம்ப சந்தோசமாவும் , அர்த்தத்தோடுமிருப்பதாய் உணர்கிறேன்.

  மறக்க முடியாத பதிவு அண்ணாச்சி.

 30. ஒரு வருடந்தானா ஆகியிருக்குது! நான் இன்னும் அதிகமுன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்.ஏன்னா , அவ்வளவு வளர்ச்சி.

 31. நீங்க எழுத ஆரம்பிச்சி ஒரு வருஷம் தான் ஆகுதுனு நினைக்கும் போது ஆச்சர்யமா இருக்கு.

  நான் அதிகமா வாசிச்சது உங்களோட கதம்பம் தான். இப்பவும் அதை தான் தொடர்ந்து வாசிக்கறேன். பதிவுலகத்தைப் பத்தி எழுதாம சொந்த வாழ்க்கைல பார்க்கற நல்ல விஷயங்களை எழுதறதால தான் கதம்பம் இவ்வளவு பேரை கவர்ந்தது.

  இந்த பதிவு ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது.

 32. தந்தை குறித்த பகிர்வுகள் நெகிழச்செய்தன. அவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலிகள்.

 33. வாழ்த்துகள் அண்ணாச்சி,

  //“ ஒருவன் கலைஞனாகவும் தன்மானமுள்ளவனாகவும் ஒரு சேர இருப்பதியலாது”.//

  மிக நிதர்சனமான வரிகள் அண்ணாச்சி,

  ஒரு இரண்டு வருடங்கள் அண்ணாச்சி, இந்த பாழாப் போன சினிமாவை பிடித்தலைந்திருக்கிறேன், உங்கள் அப்பா குறித்த பதிவுகள், என் கடந்த காலத்தை மிகவும் கிளறி விட்டு விட்டது, வாய்ப்பு தேடி அலைந்து எவ்வளவு தான் அவநம்பிக்கையோட மாலைகள் முடிந்தாலும் அடுத்த நாள் காலை மிகுந்த நம்பிக்கையோடு உதிக்கும்,

  இப்படி கடைசியில் வாய்ப்பு கிடைத்தால் தன்மானம் சுயமரியாதை பிரச்சனை, மீண்டும் தேடல்
  ம்…. இரு ஒரு காலம், ஆனால் அது குறித்து எந்த கவலைகளும் இப்போது எனக்கில்லை, ஏனெனில் அந்த வாழ்க்கை எனக்களித்த வரங்கள் அனேகம்.

 34. வலைச்சரத்தில் வாத்தியாரா
  வந்த பொழுதிலிருந்து
  மேய்கிறேன்
  உங்களை…

  கலக்குது கதம்பம்!!!
  அப்புறம்….நானும் அண்ணாச்சின்னு கூப்பிடலாமா?!

 35. வாழ்த்துக்கள் நண்பரே…

  வாழ்க வளமுடன்,
  வேலன்.

 36. வாழ்த்துக்கள்… உங்கள் பணி சிறக்கட்டும்…

 37. வாழ்த்துகள் அண்ணாச்சி, குறுகிய காலகட்டத்தில் வலையில் புகழடைந்தவர்களில் உங்கள் இடம் தனிச்சிறப்பானது.

 38. அண்ணாச்சி,
  நாம எல்லாம் ஒரு செட்டு. நீங்க, நானு, அப்து அண்ணா, பரிசல் கூட இதே செட்டுத்தான்னு நினைக்கிறேன். ஒரு வருசம் முடிஞ்சுருச்சா? வாழ்த்துக்கள் அண்ணாச்சி.

  இப்போ தான் உங்க உண்மையான பெயரே எனக்கு தெரிஞ்சது. ஆனா நினைவில இருக்கப் போவது அண்ணாச்சி தான்.

  தந்தைக்கு மகனாற்றும் உதவி ‍ இந்த பதிவு.

  வாழ்த்துக்கள்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s