தேக்கமும் ஏக்கமும்

பொருளாதாரத் தேக்க நிலை குறித்து வந்த மெயில்களில் சிறந்ததாக நான் கருதுவது உங்கள் பார்வைக்கு.

சொந்தமாக வாகனம்…
சொகுசான பங்களா வீடு…
வங்கிக்கணக்கிலும்
பங்கு மார்க்கெட்டிலும்
வற்றிப்போகாத சேமிப்புகள்…

சமூகத்திலும்
சமூக மன்றங்களிலும்
சரியாத செல்வாக்கு…

அன்பான மனைவி…
அழகான குழந்தைகள்…

இப்ப்டியாக,
கைகூடிய கனவுகளெல்லாமே
அளவான ஆசைகள்தான்…
பேராசை என்று எதையுமே
பேரிட முடியாது…

திவாலாகப் போகிற
சேதி தெரியாமல்
கூடுதல் சம்பளம்
கொடுப்பதாகச் சொன்ன
புது நிறுவனத்தை நம்பி
இருந்த வேலையை
அண்மையில் விட்ட அந்த
அசட்டுத் தனத்தைத தவிர
வேறெதையுமே
பேராசை என்று பேரிடமுடியாது…

– ந. வி. விசய பாரதி

நன்றி திகழ்மிளிர்.

15 comments

  1. பிரணாப் முகர்ஜி சரி பன்னுடுவார்.

  2. படத்தைப் பார்க்கும்போது பேராசை என்னும் தலைப்பில்
    ந.வீ.விசய பாரதி அவர்களின் கவிதை
    நினைவிற்கு வருகிறது. அது இந்தப் படத்திற்கு இன்னும் பொருத்தமாக
    அமையும்

    ………………

    சொந்தமாக வாகனம்…
    சொகுசான பங்களா வீடு…
    வங்கிக்கணக்கிலும்
    பங்கு மார்க்கெட்டிலும்
    வற்றிப்போகாத சேமிப்புகள்…

    சமூகத்திலும்
    சமூக மன்றங்களிலும்
    சரியாத செல்வாக்கு…

    அன்பான மனைவி…
    அழகான குழந்தைகள்…

    இப்ப்டியாக,
    கைகூடிய கனவுகளெல்லாமே
    அளவான ஆசைகள்தான்…
    பேராசை என்று எதையுமே
    பேரிட முடியாது…

    திவாலாகப் போகிற
    சேதி தெரியாமல்
    கூடுதல் சம்பளம்
    கொடுப்பதாகச் சொன்ன
    புது நிறுவனத்தை நம்பி
    இருந்த வேலையை
    அண்மையில் விட்ட அந்த
    அசட்டுத் தனத்தைத தவிர
    வேறெதையுமே
    பேராசை என்று பேரிடமுடியாது…

  3. படம் அருமையா இருக்கு…..

  4. நல்ல இருக்குங்க கவிதை. கோவையில் இப்போ ஐ.டி. படுத்துவிட்டது என்று நண்பர் மூலம் கேளிவிப்படுகிறேன். அங்கே என்ன தொழில் செய்தால், கொஞ்சம் நல்ல வாழ்க்கை பார்க்கலாம்? எவ்வளவு மூலதனம் வேண்டும்? பத்து லட்ச ரூபாயில் என்ன தொழில் செய்ய முடியும்?

  5. நல்ல கவிதை!

    அருமையான கார்ட்டூன்!


    விஜயஷங்கர்
    பெங்களூரு

  6. கருத்துப் படம் மிகவும் கவர்ந்தது. புது டெம்ப்ளேட் அருமை. அதுலயிருக்கிற இன்னொரு சிறப்பு வகைதொகை.இதில நிறைய இனிமேல்தான் படிக்கணும்.

  7. நிசம் தான்.

    …கடைல காசு குடுத்து வாங்கறவங்க வராதது கூட கவலை இல்ல.. ஆனால், காசே குடுக்காம டபாய்க்கிறவங்க கூட எதும் வாங்க வர மாட்டேன்றாங்களாம்… :))

  8. உண்மையானது. நல்லக் கவி, படமும் நல்லத் தேர்வு.

Leave a reply to Cable Sankar Cancel reply