கதம்பம் – 27/05/09

சமீபத்தில் நண்பரின் இரு வயது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். குழந்தையின் எடையைக் குறித்துவரச் சொன்னார் மருத்துவர். பெற்றோர், தாதியர் அனைவரும் போராடினர் அக் குழந்தையை எடை பார்க்கும் எந்திரத்தில் நிற்கவோ, உட்காரவோ குறைந்த பட்சம் படுக்கவோ வைக்க. குழந்தையின் எதிர்ப்பின் தீவிரம் ஏறுமுகமாகவே இருந்தது.

எல்லோரையும் விலகச் சொல்லி விட்டு, முதலில் குழந்தையின் அம்மாவின் எடையைப் பார்க்கச் சொன்னேன். பின்பு, குழந்தையுடன் அவரது எடையைப் பார்க்கச் சொன்னேன். கழித்து பார்த்து குழந்தையின் எடையைத் தாதியிடம் சொன்னேன்.

நண்பன், தாதியர் உட்பட அனைவரும் நான் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டேன் என்பது போல கூச்சப்படுமளவுக்குப் புகழ்ந்து தள்ளிவிட்டனர். இதை 5 ஆம் வகுப்பிலேயே படித்திருக்கிறோம்; கணக்குப் பாடத்தில். அதெல்லாம் வாழக்கைக் கல்வி அல்ல என்பதாக ஆகிவிட்டது.

*****************************************************************************

”மூன்றாம் பாலின் முகம்” என்றொரு புத்தகம். மூன்றாம் பாலினர் உள்ளாக்கப்படும் நிராரி்த்தல், பகடி, ஏளனம், எள்ளல், வன்முறை அதனால் அவர்களடையும் வேதனை, மன உளைச்சல், தன்னம்பிக்கை இழத்தல் எல்லாவற்றையும் பேசுகிறது.

இந்தப் புத்தகத்தின் சிறப்பு, எழுதியவரே ஒரு மூன்றாம் பாலினர் – ப்ரியா பாபு.

மூன்றாம் பாலினர் உங்களிடம் வேண்டுவது காசு பணமல்ல, அவர்களின் இயலாமையைப் புரிந்து கொண்டு அவர்கள் தங்களை இயல்பாக வெளிப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு. அவர்களை அறுவெறுப்புடன் நோக்காமல், அவர்கலின் குறைபாட்டை உள்ளுணர்தல். இதை அழுத்தமாக முன் வைக்கிறது இந்த நாவல்.

பதிப்பகம் : சந்தியா பதிப்பகம், கதவு எண் 57, 53 ஆம் வீதி, அசோக் ந்கர், சென்னை – 600083. தொலை பேசி : 24896979, 65855704

விலை : ரூ. 50.00

*****************************************************************************

சிலரது வீ்டு சுத்தமாக, தூசு தும்பு ஏதுமின்றி, பளிசென்று இருக்கும். அந்த வீடுகளில் நான் மிகவும லஜ்ஜையாக உணர்வேன். ஆரம்ப காலங்களிலிருந்தே எனக்கு மிலிட்டரி டைப் சுத்தம், கட்டுப்பாடு ஏதும் ஒத்துவருவதில்லை.

சமீபத்தில் செல்வேந்திரன் அறைக்குச் சென்றிருந்தேன். ஓரிரவு தங்கவும் செய்தேன். அறை நேர்த்தியாக இல்லையே என்ற குற்றவுணர்ச்சியுடனே பேசிக் கொண்டிருந்தார் செல்வேந்திரன். பிரம்மச்சாரியின் அறை வேறெவ்வாறாக இருக்க முடியும்? என்ன சொல்லியும் சமாதானப் படுத்த முடியவில்லை. நினைவுகளின் அடியாழத்தில் புதைந்திருந்த என் ஹாஸ்டல் தினங்களைத் திருப்பித் தந்ததற்கு நன்றி சொன்னேன்.

*****************************************************************************

கவிதைகள் என்பது ஒரு வெளிப்பாடு. நீங்கள் பார்த்த, ரசித்த, உணர்ந்த ஒன்றின் ஒரு பின்னத் துணுக்கு.

சமீபத்தில் பதிவர் ஒருவருடன் மின்னரட்டையில் இருந்த போது கவிதையாக ஒரு ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டிருந்தார். அவரைக் கூப்பிட்டுப் பாராட்டினால் ”நான் எழுதுவதெல்லாம் கவிதையா? சும்மா கேலி பேசாதீர்கள்” என்றார் ஒருவேளை பகடி செய்கிறேனோ என்ற சம்சயத்துடன்.

”எனக்குப் பிடித்திருக்கிறது” என்றேன்.

உங்களுக்கும் பிடித்திருந்தால் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள் blogsking@gmail.com என்ற முகவரிக்கு.

ரயில் பயணம்

எப்போதும் சுவாரஸ்யம் தான்
எதிர் திசை ஓடும் ஜல்லிக்கற்கள்
கூடவே பயணிக்கும்
பக்கத்துத் தண்டவாளம்
பச்சைக்கே தானம் தர தயாராய்
தென்னந்தோப்புகள்
கவனம் சிதறாத
சோளக்காட்டு பொம்மை
கோடையிலும்
தண்ணீர் சுமக்கும் குட்டைகள்
வானம் பார்த்த பூமிகளில்
வரிசையாய்க் கோரைப்புற்கள்
ஆங்கிலேயரை மறக்கவிடாத
கிராமத்து ரயில் நிலையங்கள்
சுவாரஸ்யமாய்
புது உலகத்தில் நான்..
“அண்ணா..”
கவனம் கலைக்கிறான்
கையேந்தி நிற்கும் சிறுவன்..

– சஞசய் காந்தி.

******************************************************************

மின்னரட்டையில் பதிவர் ஒருவர் என்னைக் குண்டன் என்றார் நான் கோபப்படுவேன் என்று. மாறாக நான் மகிழ்ந்தேன்.

குண்டர்கள் கேபினெட் மந்திரியாகப் பதவியேற்கும் போது, அதென்ன இழிச் சொல்லா? உண்மையில் அவரென்னை ஒரு மந்திரி உயரத்திற்குப் புகழ்ந்திருக்கிறார்.

******************************************************************

.

Advertisements

41 comments

 1. //எல்லோரையும் விலகச் சொல்லி விட்டு, முதலில் குழந்தையின் அம்மாவின் எடையைப் பார்க்கச் சொன்னேன். பின்பு, குழந்தையுடன் அவரது எடையைப் பார்க்கச் சொன்னேன். கழித்து பார்த்து குழந்தையின் எடையைத் தாதியிடம் சொன்னேன்.//

  அதற்கென இருக்கும் உபகரணங்கள் இல்லாத நிலையில் (உதாரணம் ஆரம்ப சுகாதார நிலையங்களில்) மூன்று வயது வரை குழந்தையின் எடையை பார்க்கும் முறையே இது தானே

 2. //நண்பன், தாதியர் உட்பட அனைவரும் நான் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டேன் என்பது போல கூச்சப்படுமளவுக்குப் புகழ்ந்து தள்ளிவிட்டனர். இதை 5 ஆம் வகுப்பிலேயே படித்திருக்கிறோம்; கணக்குப் பாடத்தில். அதெல்லாம் வாழக்கைக் கல்வி அல்ல என்பதாக ஆகிவிட்டது.///

  எஜுகேஷனும் உபயோகப்படுத்தலாம் !

  இன்னும் கொஞ்சம் டெரராகி போட்டு நாலு சாத்து சாத்தி படுக்கப்போடலாம் !

  நான் குழந்தையா இருக்கறச்ச அதான் செஞ்சாங்க (உட்வார்ட்ஸ் ரைமிங்க்ல கேட்டுக்குதா…?)

  :)))))))))))

 3. //உங்களுக்கும் பிடித்திருந்தால் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள் blogsking@gmail.com என்ற முகவரிக்கு.///

  பாவம்ங்க அவுரு நிறைய எக்ஸ்பெக்ட்டேஷனோட இருக்காரு எதோ பார்த்து மெயில் அனுப்புங்க :))))))))))))

 4. நம்ம அறையும் அப்படித்தான் கந்தர கோலமா இருக்கும் சுத்தம் செய்யும் நாள் தவிர.. 😉

  ஓ.. அவர் கவிஞராயிட்டாரா? .. இப்பமே இம்புட்டு கொலவெறியோட இருக்காரு.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ.. ;-))

 5. அண்ணாச்சி கலக்கல் கதம்பம்.

  பிரசன்ஸ் ஆப் மைண்ட் உங்களுக்கு கொஞ்சம் அதிகம்தான்.

  நம்ம சஞ்சய்கிட்ட என்னமோ இருக்கு.

  அருமையான கவிதை.

 6. //தமிழ் பிரியன் said…

  நம்ம அறையும் அப்படித்தான் கந்தர கோலமா இருக்கும் சுத்தம் செய்யும் நாள் தவிர.. ;-)//

  தம்பி மீ டூ ஸேம் ஸேம்!

  பட் ஒன் கொஸ்டீன்?

  ஆமாம் நீங்க மாசத்துக்கு ஒரு தடவை அல்லது டூ மன் த்ஸ் ஒரு வாட்டியா கிளீன் பண்ணுவீங்க :)))))))

 7. //எல்லோரையும் விலகச் சொல்லி விட்டு, முதலில் குழந்தையின் அம்மாவின் எடையைப் பார்க்கச் சொன்னேன். பின்பு, குழந்தையுடன் அவரது எடையைப் பார்க்கச் சொன்னேன். கழித்து பார்த்து குழந்தையின் எடையைத் தாதியிடம் சொன்னேன்.//

  மூளைகாரருங்க நீங்க …

 8. அண்ணாச்சி என்ன இது இன்ப அதிர்ச்சி? என்னால உணர்ச்சிவசப் படாம இருக்கவே முடியலை.. இதெல்லாம் நிஜமாவே கவிதையா?. அதும் உங்க பதிவுல இடம் புடிக்கிற அளவுக்கா?…

  கடைசில என்னையும் ரவுடி ஆக்கிட்டிங்களே அண்ணாச்சி.. :))

 9. //நம்ம அறையும் அப்படித்தான் கந்தர கோலமா இருக்கும் சுத்தம் செய்யும் நாள் தவிர.. ;-)//

  நம்ம அறையும் அப்படித்தான் , ஆனால் சுத்தம் செய்யும் நாள்தான் இன்னும் வரலை ஒரு வருடமா என்னைக்கு அந்த நாள் வரும்னு பாத்துக்கிட்டே இருக்கேன்…

 10. புதுக்கவிஞர் வரிசையில் சஞ்சயுமா :))

  கலக்கல்ஸ் ஆஃப் இந்தியா!

 11. அருமையான கதம்பம்.
  என்னடா சஞ்சூ ஸ்டேட்டஸ்ல அண்ணாச்சியோட பதிவுக்கு லிங்க் இருக்கேன்னு பார்த்தா அருமையான கவிதைய எழுதிருக்காரு மாப்ள.

  சுத்தமா வைச்சது வைச்ச இடத்துல இருந்தா அதுக்கு பேரு ம்யூசியம் , கலைஞ்சு கிடந்தா தான் மக்கள் குடியிருக்க வீடு அப்டின்னு ஸ்ரீ காந்த பார்தீபானந்தா அப்டிங்கிற மகான் சொல்லியிருக்காரு. என் ரூம் எப்பவுமே அப்டித்தான் இருக்கும்.

 12. எல்லோரும் ஓடிவாங்கடோய்ய்ய்.. இங்க அண்ணாச்சி கடையில புதுசா ஒரு கவுஞர் சிக்கிருக்காரு.!

 13. உண்மையில் பகுதிகளும், கவிதையும் ரசனை.! குறிப்பாக முதல் பகுதிக்காக கொஞ்சம் அசடு வழிந்துகொள்கிறேன். சமீபத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கும். ஆபீஸில் இந்த லட்சணத்துல ‘டெக்னிகல் சொல்யூஷன்’லாம் கொடுக்குறோம். வெளங்கிரும்.!

 14. கோவையிலேயே வீடிருக்க செல்வா அறையில் தங்கியது ஏனோ?? பதிவு வருமா??

  :))))))))

 15. /
  ஆயில்யன் said…

  இன்னும் கொஞ்சம் டெரராகி போட்டு நாலு சாத்து சாத்தி படுக்கப்போடலாம் !

  நான் குழந்தையா இருக்கறச்ச அதான் செஞ்சாங்க (உட்வார்ட்ஸ் ரைமிங்க்ல கேட்டுக்குதா…?)
  /

  :)))))))))))
  ROTFL

 16. /
  ஆதிமூலகிருஷ்ணன் said…

  எல்லோரும் ஓடிவாங்கடோய்ய்ய்.. இங்க அண்ணாச்சி கடையில புதுசா ஒரு கவுஞர் சிக்கிருக்காரு.!
  /

  ஆமா வந்துட்டு சும்மா போகக்கூடாது கவுஜர் தலையில சிதறு தேங்கா உடைச்சிட்டு கற்பூரம் ஏத்தி வைச்சிட்டுதான் போகணும் நாந்தான் மொதல்ல நாந்தான் மொதல்ல
  :))))))))))))

 17. ///மூன்றாம் பாலினர் உங்களிடம் வேண்டுவது காசு பணமல்ல, அவர்களின் இயலாமையைப் புரிந்து கொண்டு அவர்கள் தங்களை இயல்பாக வெளிப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு. அவர்களை அறுவெறுப்புடன் நோக்காமல், அவர்கலின் குறைபாட்டை உள்ளுணர்தல்.///

  இந்த விஷயத்துல என்னால ஒத்து போக முடியல அண்ணாச்சி. அவங்கள்ட்ட எனக்கு கிடைச்ச அனுபவங்கள் எல்லாமே ரொம்ப மோசம், நான் ஒரு மூணு வருஷமா சென்னை-மும்பை, கோவை-மும்பை, இரயில்ல போய்ட்டும் வந்துகிட்டும் இருக்கிறவன். ஒவ்வொரு முறை போகும்போதும், வரும்போதும், அவங்க காசு கேட்டு பண்ற சேட்டைகள் சொல்லத் தரமன்று. காசு கொடுத்தாலும் வாங்கிட்டு போயிற மாட்டங்க. நாம குடுக்கிற காச விட அதிகமா கேப்பாங்க. நீங்க கொடுக்க மாட்டேன்னு சொன்னதுக்கு அப்புறம் அவங்க பண்றத தாங்கிக்க உங்களுக்கு தனி மனோ பலம் வேணும். ஒரு வேளை, நீங்க சொல்ற மாதிரி அதிலையும் காசு,பணம் கேக்கதவங்க இருக்கலாம். ஆனா இது வரையிலும் நான் அதுமாதிரி யாரையும் சந்திக்கலை.(நான் இருக்கிறது சந்தைப் படுத்துதல் துறையில, நான் ஊர் ஊரா சுத்தி கிட்டே இருக்கிறவன்.)

 18. நன்றி டாக்டர். ஆனா நாங்க போனது தனியார் மருத்துவமனை. அங்கெல்லாம் இருக்கும் தாதியர் பாவம். தகுதி பெறாத குறைந்த சம்பளத்திற்கு உழைக்கும் வெள்ளுடை தரித்த சாதாரணர்களே.

  நன்றி ஆயில்யன். ஏன் இந்தக் கொல வெறி?

  நன்றி பாலாஜி.

  நன்றி தமிழ்.

  நன்றி முரளி

  நன்றி ஆயில்ஸ்.

  நன்றி சூரியன்.

  சஞ்சய் நல்லா இருந்திச்சு அதான்.

  நன்றி TVRK சார்.

  நன்றி சென்ஷி. உங்களுக்குப் போட்டியா எப்படி ஆளை இறக்கி இருக்கோம் பாருங்க.

  நன்றி பால்ராஜ். அது யாரு அந்த மகான்?

  நன்றி ஆதி. உன்னைப் போல அறிஞர்களெல்லாம் இது போல சின்ன விஷயத்திற்கு தங்கள் மூளையை உபயோகப் படுத்த மாட்டார்கள்.

  நன்றி சிவா

 19. இல்லை சிவக் குமரன். நான் மாறுபடுகிறேன். நான் 1999 முதல் மும்பை சென்று வந்து கொண்டிருக்கிறேன். எனக்கும் நீங்கள் சொன்ன அனுபவம் இருக்கு.

  ஆனால் நான் தயாராக இங்கிருந்தே 5 ரூபாய் நோட்டுக்கள் 10 எடுத்துச் சென்று விடுவேன். 5 ரூபாய் கொடுத்தால் போய் விடுவார்கள். ஆனால் அவர்கள் நம் பார்வையைப் படிப்பதில் வல்லவர்கள். தங்கள் உடம்பில் எந்தப் பகுதியில் நம் பார்வை படுகிறது என்பதை பொறுத்தே நம்மை எடை போடுகிறார்கள். அவர்கள் கண்களை நோக்கிச் சிரித்த முகத்துடன் பேசிப் பாருங்கள் சில்லறை இல்லை எனச் சொன்னாலும் நம்புவர்.

  ஆனால் அவர்களைப் பார்த்ததும் நம் மனதில் எழும் அசூயை நம்மைக் காட்டிக் கொடுத்து விடும்.

  ஒரு முறை என் முழங்கால் வலிக்கு மொத்த ரயிலிலும் அலைந்து திரிந்து வலி நிவாரணி மாத்திரைகள் இரண்டை வாங்கித் தந்து கூடவே பேண்ட்ரியிலிருந்த் தண்ணீர் பாட்டிலும் வங்கித் தந்தனர்.

  நீங்கள் சொல்லும் வகையிலும் உண்டு எனினும் மொத்தமாகக் குறை சொல்லுவதைக் குறைக்கலாம். மேலும் நம் தலைமுறையிலாவது அவர்களுக்கு ஒரு விடிவு வரட்டுமே.

  இப்பொழுதான் அவர்களுக்கு அரவாணி, மூன்றாம் பாலினம் என மரியாதையான் பெயரிட்டு அழைக்கிறோம். இதற்கு முன்? சொல்லவே கூசுகிறது. திரைப் படத்தில் அவர்களை எப்படியெல்லாம் கேவலப் படுத்தியிருக்கிறோம் – பருத்தி வீரன் உட்பட.

  எங்கு சென்றாலும் அரவாணி செய்த பிரியானி சுப்பராக இருக்குமெனக் கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறோம். ஆனால் அவர்களை மனித நேயத்தோடுதான் பார்க்க மறுக்கிரோம்.

  பார்வைகள் மாறினால் மாற்றங்கள் நிகழும்.

 20. நிச்சயம் நான் இதை ஒப்புக் கொள்கிறேன். நம் பார்வைகள் மாற வேண்டும். எனக்கு சொல்ல வெட்கமாகத்தான் இருக்கிறது. நான் இதைப பற்றி நண்பர்களிடத்தில் பேசும்போது வீராவேசமாக அவர்களை மதிக்க வேண்டும்,…இன்ன பிறவும் பேசத்தான் செய்கிறேன்…ஆனால் நேரில் பார்க்கும்போது…ஏனோ?

 21. சிவா,

  பேச்சுக்கும் செயலுக்குமான் இடைவெளியைக் கடப்பவன் மனிதனாக வளர்கிறான். முடியாதவன் தேங்குகிறான்.

  ஓடினால்தான் ஆறு. தேங்கினால் குட்டை.

  ஓடுவதும் தேங்குவதும் அவரவர் கையில் அல்லது மனதில்.

 22. நல்ல கதம்பம்… அண்ணாச்சி சஞ்சய் படம் புடிக்கிறாரு, பாட்டு படிக்கிறார், அரசியல் பேசுறாரு.. ஆயகலைகளையும் அறிஞ்சு புரிஞ்சு வச்சிருக்காரே!

  மங்களூர் சிவா அண்ணனின் கமெண்ட்டுக்கு ஒரு ரிப்பீட்டேய்!

 23. கதம்பம் நன்றாக இருந்தது வேலன். அதிலும், சஞ்சயின் கவிதை வரிகள்..மாறாத நிதர்சனத்தை சுட்டிக்காட்டியது..

 24. அண்ணே புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு. ஆனால் பிரச்சனை இருக்குன்னு நினைக்கின்றேன்.

  கூகுள் கிரோமில் திறக்கவில்லை. மால்வேர் அபெக்டட் என்று வருகின்றது. ஃபயர் பாக்சில் திறக்க நிறைய நேரம் எடுக்கின்றது. பின்னூட்டம் போடவும் வரவில்லை. நிறைய தடவை முயற்ச்சித்த பின்னர்தான் பின்னூட்டம் போட முடிந்தது. சற்று பாருங்க எதாவது பிரச்சனையா என்று.

  கதம்பம் சூப்பர் அண்ணே. அதிலும் சஞ்சய் கவிதை அட்டகாசம்.

 25. அண்ணாச்சி கதம்பம் அருமை…….சஞ்சயின் கவிதை சூப்பர்

 26. எடை பார்க்கும் இம்முறை பலமுறை நர்ஸ்கள் எல்லாருக்கும் செயல்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன்.. போனமுறை ஒரு சின்ன க்ளினிக்கில் நானும் இது போல சொல்லிகொடுத்தேன்..அங்க இருந்த நர்ஸ் அல்லது நர்ஸ் போல வேலைக்கு அமர்த்தப்பட்ட பெண்ணுக்கு அது தெரியாதது எனக்கும் ஆச்சரியமாத்தான் இருந்தது..

 27. ///சமீபத்தில் பதிவர் ஒருவருடன் மின்னரட்டையில் இருந்த போது கவிதையாக ஒரு ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டிருந்தார். அவரைக் கூப்பிட்டுப் பாராட்டினால் ”நான் எழுதுவதெல்லாம் கவிதையா? சும்மா கேலி பேசாதீர்கள்” என்றார் ஒருவேளை பகடி செய்கிறேனோ என்ற சம்சயத்துடன்.//

  ச‌ஞ்ச‌ய் காந்தி..பிற‌விக்க‌விஞ‌ர்ங்க‌..ஆனால் த‌ன்ன‌ட‌க்க‌ம் அதிக‌ம்:‍)

 28. நான் குழந்தை எடை பார்ப்பது சம்பந்தமா ஒரு கதை படிச்சிருக்கேன்.

  இப்படித்தான் ஒரு இளம்பெண் கையில் குழந்தையை வைத்து கொண்டு அதன் எடையை எப்படி எடுப்பது எனத் தெரியாமல் பேய்முழி முழித்த வண்ணம் நின்று கொண்டிருந்தாள்.

  அவளிடம் ஒரு தாதி இம்மாதிரி குழந்தையின் அன்னை தனியாக நின்று எடை எடுத்து கொள்ள வேண்டும் என்றும், பிறகு குழந்தையை கையில் ஏந்தி எடை எடுக்க வேண்டும், எடை வித்தியாசம்தான் குழந்தையின் எடை எனக் கூறினாளாம்.

  அப்பெண் கூறினாளாம், “அதெல்லாம் சரிதான், ஆனால் குழந்தையின் அன்னை நான் இல்லையே, நான் அதன் அத்தை” என்றாளாம்.

  இது எப்படி இருக்கு?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 29. இந்த கதம்பம் சும்மா கில்லி (விஜய் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ்) கணக்கா இருக்கு.

  முதலில் சஞ்சய் ! – என்ன ஆச்சரியம். இதில் தெரியும் ஆணவம் போன்ற ஒன்றை மன்னித்து விடுங்கள். யோவ் சஞ்சய், இப்படி எழுத வரும்னா, தாராளமா நிறைய எழுதித் தள்ளு, தயவு செய்து. சூப்பர்.

  திருநங்கைகள் – கண்களைப் பார்த்து பேசச் சொன்னது அற்புதம். என் அனுபவத்திலும் அது உண்மை. ஆனாலும், மும்பை வந்த புதிதில் அவர்களைப் பார்த்து இனம் தெரியாத பயத்தில் அருவறுத்ததும் உண்மை.

  டோண்டு சார் – செம்ம குசும்பு உங்களுக்கு.

  அனுஜன்யா

 30. நன்றி வெங்கிராஜா. சஞ்சய் இதுபோலத் திறமைகள் பல வைத்திருக்கிறார்.

  நன்றி மணிநரேன்

  நன்றி ராகவன் நைஜீரியா. அந்தப் பிரச்சினை க்ரோமில்தான் இருக்கிறது. வேரு உலவிகளில் இல்லை. எதற்கும் என் சிஸ்டம் எஞினியரிடம் பேசியிருக்கிறேன்.

  நன்றி அத்திரி. என்ன சொல்லுகிறீர்கள் சஞ்சய் கவிதை வந்ததால் என் கதம்பம் சூப்பரா?

  நன்றி முத்துலெச்சுமி.

  நன்றி இயற்கை.

  நன்ரி ராகவன். இதுதான் முதல் வருகை?

 31. நன்றி அனுஜன்யா. உங்க வாயயால சஞ்சயைய்ப் புகழ்ந்ததால் அவரை விட நான் மகிழ்ந்தேன்.

  மற்றபடி அரவாணிகள் அவரகளுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதால்தான் பிழைப்பின் நிமித்தம் அதுபோன்ற அடாத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

  சென்ற ஆண்டு வரை நான் வொடஃபோன் ஷோ ரூம் ஒன்றை வைத்திருந்தேன். அங்கும் அரவானிகள் வாடிக்கையாக வருவார்கள். நான் அவர்களை கஸ்டமர் அமரும் இடங்களைல் அமர வைத்து பெயர் மற்ற் விவரங்களைக் கேட்டு பின் அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுப்பேன். அதிகப்ப்டசம் 10ரூபாய்தான் அவர்கள் இலக்கு.

  என்னுடைய அனுகுமுறையால் என்னுடன் எப்பொழுதும் நட்பாகவே இருப்பர்.

  என்னுடைய ஷோ ரூமின் பூஜை அறைக்கு வந்து சில மந்திரங்களைச் சொல்லி வாழ்த்திவிட்டுச் செல்வர்.

  நீ பிறருக்கு என்ன கொடுக்கிறாயோ அதுவே உனக்குக் கிடைக்கும்; சில சமயம் கூதலாக.

 32. என் கவிதையை ரசித்துப் பாராட்டியவர்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன். நட்புக்காக பாராட்டறாங்களா? இல்லை நிஜமாவே வொர்த்தா?.. ஒன்னும் புரியலை.. ஏன்னா எனக்கு இதெல்லாம் ரொம்ப புதுசு.. பாராட்டிய யாரும் சும்மா போற போக்குல புகழறவங்களும் இல்லை. எல்லாரும் ரொம்ப வொர்த்தான ஆட்களா இருக்கிறது ரொம்பவே பரவசப் படுத்துது.

  கல்லூரி ஆண்டு மலர்கள்ல 3 வருடம் தொடர்ந்து என் கவிதைகள் வந்திருக்கு. முதல் ஆண்டு மலரில் தமிழன்னை என்ற தலைப்பில் எழுதிய கவிதைக்கு கிடைத்த பாராட்டில் எப்படி திக்குமுக்காடினேனோ அதை விட எக்ஸைட்டிங்கா உணர்கிறேன். நன்றி அண்ணாச்சி.. சும்மா டைம்பாசுக்கு எழுதின ஒன்றை இவ்வளவு பேர் பாராட்ட வச்சிட்டிங்க. ரொம்ப நன்றி. 🙂

  அனுஜன்யா மாமா.. உங்களால பாராட்டப் படும் ஒரு கவிதையை எழுதி இருக்கிறேன் என்பதை நினைத்தாலே மிக உயரத்தில் பறக்கும் உணர்வு. 🙂

  ( மாம்ஸ், அந்த பாலோயர் பத்தின கமெண்டுக்கு பதில் கமெண்ட் இல்லையே இது? :))) )

 33. டேய் காந்தி, ஊரையே உசுப்பேத்தி விட்டு வேடிக்கைப் பார்க்கிறவன் நீ. இப்போ ஊரே சேர்ந்து உன்னை உசுப்பேத்தி விடப் பாக்குது.. உஷாரா இருந்துக்கோ… :))

  -/மன்சாட்சி.


 34. You Are Posting Really Great Articles… Keep It Up…

  We recently have launched a Tamil Bookmarking site called “Tamilers”…

  http://www.Tamilers.com
  தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

  நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

 35. கதம்பம் மணக்குது!!!…அப்புறம் சஞ்செய் கவிஞருக்கு வாழ்த்துக்கள்!!அன்புடன் அருணா

 36. // ச‌ஞ்ச‌ய் காந்தி.. பிற‌விக் க‌விஞ‌ர்ங்க‌.. ஆனால் த‌ன்ன‌ட‌க்க‌ம் அதிக‌ம் :‍) //

  ஆள் வைத்து பின்னூட்டம் போடும் கலாச்சாரத்தை உருவாக்கிய கவிஞர் சஞ்சய்காந்தியை வன்முறையாக கண்டிக்கிறோம்.

  கவிதை அருமை சஞ்சய்!!!

  அதுவும் ஒரு பதிப்பாளர் மூலமா வெளியாகியிருக்கு 😉

 37. அந்த குழந்தை எடை விஷயம் அருமை, எனக்கு, ஒரு கால கட்ட பணியில் nett wt. gross wt என daily imposition மாதிரி எழுதிக் கொண்டிருந்தது நினைவு வந்து விட்டது, அந்த டைமிங்கில் அது உங்களுக்கு தோன்றியது அருமை.

  மூன்றாம் பாலின் முகம் படித்திருக்கிறேன், வித்யா, பாலபாரதி அவர்களுடைய நாவல், என தொடர்ந்து பதிவுகள் சரியான புரிதலை, சமூக மாற்றங்களை ஏற்படுத்தி வருவதில் மகிழ்ச்சி.

  பேச்சலர் அறை எனக்கு ஐந்து வருட அனுபவம்.

  சஞ்சய் அவர்களுடைய கவிதை அருமை. நல்ல அவதானிப்பு.

 38. “ஒருவனின் அறை என்பது அவன் மனமே” – யாரோ

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s