கொல்லும் தெய்வம்?

ஒரு மனிதன் எவ்வளவு கீழ்த்தரமானவனாக இருந்தாலும் அவனது மறைவு குறித்து பொதுவாக நல்லவிதமாகப் பேசாவிட்டாலும் கேவலமாகப் பேசமாட்டோம். அதுதானே குறைந்தபட்ச நாகரீகம்?
ஆனால் அதுவே ஒரு இனத்தைக் காக்க தன் வாழ்நாள் முழுவதும் காடுகளிலும் கரடுகளிலும் மறைந்து வாழ்ந்து தன் சுக துக்கங்களை தன் இனத்துக்காகவே அர்ப்பணித்த ஒரு இனப்போராளி எனில் இதைப் பற்றிக் கவலை இல்லாமல் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், எழுதலாம், பேசலாம் அவதூறு பரப்பலாம். அப்படித்தானே?
இறந்தது இன்னும் உறுதி செய்யப்படாத போதே இவ்வளவு விஷ(ம)மா?
இந்த போஸ்டர் எந்த விதத்தில் சரி? இவர்களா நம் நாட்டை
ஆளத்தகுதியுள்ளவர்கள்?

ராஜபக்‌ஷேவைத் தெய்வமெனச் சொல்வது என்ன விதமான குரூர மனப்பான்மை? இலங்கைப் பிரச்சினையில் இவர்கள் யார் பக்கம்?

இந்த கிளைக் கேள்விகள் எதற்கும் பதில் கிட்டாது.

படம் உதவி : http://enathu-pathivukal.blogspot.com/2009/05/blog-post_20.html

.
Advertisements

33 comments

 1. சோனியா வீட்டு நாய்களுக்கு (சஞ்செய் நீங்கலாக) வேறு என்ன தெரியும், யசமான விசுவாசம் வாலை ஆட்டுது.

  காங்கிரசு குடும்பம் பலரின் வயிற்றெரிச்சலால் அகால மரணம் அடைவதும் அதை வைத்து ஒப்பாறி வைத்து அரசியலில் மீள்வதும் இன்னும் எத்தனை காலத்துக்கு தொடருமோ.

 2. இந்த போஸ்டர் உண்மையானதே இல்லை.. தலைவரின்ர படத்தை எடிட் செய்து இலங்கை அரசாங்கம் செய்தது போல் நீங்க எடிட் செய்துள்ளீர்கள்….
  நீங்கள் (எடிட் செய்து) ஒட்டிய படம் அந்த கூரையையும் தண்டி கீழே சுவற்றில் பட்டுக்கொண்டிருக்கிறது.. நீங்கள் அந்த காங்கிரஸ் காரருக்கு எதிரானவரா?

 3. ச்ச்சீ.. என்ன மனிதர்கள் இவர்கள்

 4. //இந்த போஸ்டர் உண்மையானதே இல்லை.. தலைவரின்ர படத்தை எடிட் செய்து இலங்கை அரசாங்கம் செய்தது போல் நீங்க எடிட் செய்துள்ளீர்கள்….
  நீங்கள் (எடிட் செய்து) ஒட்டிய படம் அந்த கூரையையும் தண்டி கீழே சுவற்றில் பட்டுக்கொண்டிருக்கிறது.. நீங்கள் அந்த காங்கிரஸ் காரருக்கு எதிரானவரா?//

  வடகரை வேலன் அண்ணாச்சி எப்பவுமே பிசி. இந்த ஒட்டிங் கட்டிங் வேலை எல்லாம் செய்ய அவருக்கு நேரம் இருக்காது, அந்த சுவரொட்டி உண்மையான ஒட்டிதான்.

  statistics, சுவரொட்டி உண்மையாக இருந்தால் ஒட்டியவனை செருப்பால் அடிக்கலாம் என்கிற அளவுக்கு கோவம் வருதா ?

 5. இப்பத்தெரியுதா ஏன் தமிழன் தோத்துக்கிட்டேயிருக்கான்னு?
  இப்டி நம்ம இனத்துலயே துரோகிகளும், கயவன்களும் இருந்தா எப்டி அண்ணாச்சி நம்ம இனம் உருப்படும்?

 6. கோவி & பால்ராஜ்.

  இந்தப் போஸ்டர் இருக்கும் பதிவப் பார்த்ததும் எனக்கு மிக வேதனை. பிரபாகரன் செய்தது சரியா தவறா அவரது நோக்கம் முறையானதா என்ற கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு மனிதனின் இறப்பைக் கொண்டாடும் சீழ்பிடித்த மனதைத்தான் சுட்டிக் காட்ட நினைக்கிறேன்.

  இந்த கட்டிங் அண்ட் பேஸ்டிங் வேலை செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை. என்னுடைய பதிவுகள் எதிலும் எந்த அரசியல்வாதியையோ அல்லது இயக்கத்தைத் தாக்கியோ எழுதியிருக்கவில்லை. எழுதவும் மாட்டேன். முந்தைய பதிவில்கூட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தோல்வியுற்றது அதிர்ச்சி எனத்தான் எழுதியிருக்கிறேன்.

  இன்னொருவன் இறப்பைக் கொண்டாடுவதே தவறு அதிலும் அதை இவ்வளவு பகிரங்கமாகப் போஸ்டர் அடித்துக் கொண்டாடுவது? இதை ஒரு அமைப்பின் பெயரால் அதுவும் நூற்றாண்டு கண்ட காங்கிரஸின் பெயரால் செய்வது மிக வேதனை. ஏதோ ஒரு வட்டார அமைப்பெனில் பெருங்கவனம் பெறாதிது.

  பேய்கள் அரசாட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்.

 7. வேலன் அண்ணாச்சி..

  மனிதம் எந்த அளவில் நம்மிடையே உள்ளது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இதுதான்..

 8. சஞ்சய்,

  அதீதமா உணர்ச்சிவசப்படுறிங்கன்னு தோணுது.

  போஸ்டர் அடிக்கும்போது அடிக்கக் கொடுத்தவர் பெயர் மற்றும் முகவரி கண்டிப்பாக பிரஸ்காரர் வாங்கித்தான் செய்வார். இது சட்டபூர்வமான தேவை. காங்கிரஸ் கமிட்டின்னு போட்டிருக்கதாலதான் இதுல இவ்வளவு விவாதமே.

  நீங்க சொன்னதுபோல காங்கிரஸ்னாலே எனக்கு ஆகாதுன்னு நீங்களா நெனைச்சுகிட்டா என்னால ஒன்னும் பண்ணமுடியாது.

  எல்லா விஷயத்தையும் விவாதம் பண்ணனும். ஏன் பிரபாகரன் மறைவையே எத்தனை கேலிக்குரியதாக ஆக்குகிறார்கள்.

  ஆனா இதில் இருக்கும் ஸேடிஸ்ட் மனப்பான்மைதான் என் இலக்கு.

  இவர்களா நம் நாடை ஆளாத்தகுந்தவர்கள்? அப்படின்னா காங்கிரஸுன்னு அர்த்தம் நீங்க எடுத்துக்கிறீங்க. நான் சொல்ல வந்தது இது போன்ற அடிமுட்டாள்களான்னுதான். ஏன்னா இந்த வட்டம், மாவட்டமாகி, மானிலமாகி நாளை ஆட்சியில் உக்காருவான். அதனால்தான். இது ஏதோ சோனியாவையும், காங்கிரஸையும், சஞ்சயையும் தாக்கிப் போட்ட பதிவல்ல. அந்தப் போஸ்டரைத்தான் கேள்வி கேக்கிறேன்.

 9. //எவனோ செய்தால் காங்கிரஸ்காரன் நாயா?. இவ்வளவு நாள் பழகிவிட்டதாம் உங்களை அநாகரிகமாக எதும் சொல்ல வார்த்தை வரவில்லை கோவியாரே//

  நான் தான் சஞ்செய் நீங்கலாகன்னு சொல்லி இருக்கேன் இல்லையா ?

  உங்களுக்கு பாரதி ராஜாவை பன்றி ராஜா என்று சொல்லும் உரிமையை யார் கொடுத்தார்களோ அவர்களே எனக்கும் ‘நாய்’ என்று சொல்ல உரிமை கொடுத்தார்கள் என்று வைத்துக் கொள்ளுங்களே, அரசியல் ரீதியான விமர்சனத்துக்கு ஏன் குதிக்கிறீர்கள் ?

 10. அடுத்தவன் வீட்டு இழப்புகளை கொண்டாடுபவன் நிச்சயமாக மனிதனே
  இல்லை

 11. ஆனால் இதே வேதனை தானே அன்று ராஜிவ் மற்றும் கூட இருந்த காவல் துறை அதிகாரிகள் குடும்பத்திற்கும் இருந்து இருக்கும்.

  பிராபகரன் ஒன்றும் மகாத்மா இல்லை, அல்லது விமர்சனத்திற்கு அப்பார் பட்டவர் இல்லை. மாற்று கருத்தோ, ஜனநாயகமோ இலாத ஒரு இயக்கம் தான் பிராபகரன் இயக்கமும்.\

  குப்பன்_யாஹூ

 12. யாருடைய மனத்தையும் புண்படுத்த வேண்டுமில்லை.என்னுடைய எண்ணத்தை இங்கு பதிவுச் செய்கின்றேன்

  இழப்பு என்பது அனைவருக்கும் கொடுமை தான். அதை யாரும் மறுப்பதிற்கில்லை.

  பக்கத்து வீட்டில் ஒருவர் இறந்துவிட்டால்கூட
  நம்முடைய மனது எவ்வளவு கஷ்டப்படும் என்பது நமக்குதான் தெரியும்.
  ஒருவர் இறந்தவிட்டால்
  இனிப்பு கொடுப்பதைப்பார்க்கும்போது
  மனிதநேயம் எங்கே போய்விட்டது
  என்று கேட்க தோன்றுகிறது.

  ஒருவரின் அழிவு தான் ஆனந்தத்தைத் தருமெனில் அந்த மண்ணில் மனிதம் மரத்துவிட்டது என்று தான் பொருள்.

  ஈரம் உள்ள உள்ளங்கள் இல்லாத காரணத்தால் ஈழத்தில் இரத்தம் வடிகிறது.

  இந்த மாதிரி சுவரொட்டியை இராசீங் காந்தியின் மறைவு நாள் எதிர்ப்பார்த்தேன். அது நடந்துவிட்டது என்பது உண்மை.

  இதை ஒட்டியவர்கள் மனிதர்களா என்று தான் கருதுத் தோன்றுகின்றது.

 13. நன்றி யாத்ரா,
  நன்றி ஜே
  நன்றி திகழ்மிளிர்.

  குப்பன், ராஜிவ்காந்தி கொலையை யாரும் நியாயப் படுத்தவில்லை. அதே சமயம் IPKF கற்பழித்த எம் சகோதரிகளின் வேதனையை ஏன் மறந்தீர். அது அந்நாளையச் சிங்களச் சிப்பாய்களின் கொடூரத்திற்கும் மேலே.

  ஒன்று தொட்டு ஒன்று எனப் போனால் மொத்த உலகமும சுடுகாடுதான். ஆனால் நான் சொல்ல வருவது உங்களுக்கும் எனக்கும் கருத்து மோதல் என்பதால் நாளை என் இறப்புக்கும் நீர் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவீரோ? இதுதானோ நாம் கற்ற நாகரீகம்.

 14. இத்தகைய கீழ்த்தர மனோபாவமுடையவர்கள் குறித்து நாம்தான் கேவலப்பட வேண்டியிருக்கிறது.

  ‘அகநாழிகை‘
  பொன்.வாசுதேவன்

 15. – Tamilians do not have Unity
  – Tamilians are divided by Caste
  – Tamil is a language spoken by servants and poor people
  – Anybody can kill a Tamilian and nobody will ask why
  – Unless the people who love Tamil become economically strong Tamilians will be killed
  – The person on the poster will realize when he gets thrashed by a person from the neighbouring state no tamilian will care

 16. இந்த போஸ்டர் இன்றைய தினமலரிலும் வந்துள்ளது

 17. பிராபகரன் ஒன்றும் மகாத்மா இல்லை, அல்லது விமர்சனத்திற்கு அப்பார் பட்டவர் இல்லை. மாற்று கருத்தோ, ஜனநாயகமோ இலாத ஒரு இயக்கம் தான் பிராபகரன் இயக்கமும்.\

  super boss …..
  srilankan tamils comment is here
  we r the lankans knw whats happening there……….

 18. எத்தனை கீழ்த்தரமான செயல்

  வடந்திய ஊடகங்களும் இதைவிட அவர் ஏதோ சுக போக வாழ்க்கை வாழ்ந்தது போல் எழுதுகிறார்கள்.

  ராஜீவ் காந்தி மரணத்தை முன் வைத்து இப்படி பேசுகிறார்கள் என்றால் இந்தியாவின் உள்வுத் துறைக்கு பலியான பல ஆயிரம் மக்களின் தியாகங்களை ?????????

 19. prabakaran a crual d….g
  we r lankan tamils hate him lot
  he killed lot of civilians there in SRL same time u all are silent
  why only u guyz shout loud now keep quit save your family…

  con- hillal dj_hillal@yahoo.com

 20. இந்த மாதிரி ஆளுங்கள உசுரோட வெச்சு கொளுத்தனுங்க..

 21. it not stupid stupidly talk about what IPKF did in srilanka. Yes it is wrong, so who gave the authority to ltte to kill rajiv gandhi. u come to india kill our ex primeminister and make mockery of our security system and blame ..IPKF did it.

  so will you ppl support if iraqi’s go to US and kill for the war on terror conducted by US.
  dont justify LTTE’s arrogance …

  can anyone tell did India got thier independence thro violence. did mandela fight with arms. did martin luther king fight with weapons. these are the ppl who brought peace and equality to their ppl. why dont anyone see that. nothing can be acheived by violence.

  stop this stupidity of making prabhakaran a hero.

 22. வடகரை வேலன்!
  நான் எந்த கட்சியும் சேர்ந்தவனல்ல.

  உளவியல் ரீதியில் பார்த்தால் அவரவர் நியாங்கள் அவரவர்களுக்கு.

  காந்தி இறந்த அன்று கூட பட்டாசு வெடிக்கப்பட்டது பூனாவில்.

  முந்தியெல்லாம் தேசத் தலைவர் இறந்து விட்டால் டீவி/ரேடியோவில்
  “டொய்ங்””டொய்ங்” என்று சோக கீதம்தான் ஒரு வாரத்திற்கு.

  அப்போது வழக்கமாக கேட்கப்படும் வீடுகளில் வசனம் “நாய்ங்க மண்டையப் போட்டு
  நம்ம கழுத்த அறுக்குதுங்க”

  அவர்கள் வீட்டில் யாராவது இறந்தால்
  “நாய்ங்க மண்டையப் போட்டு
  நம்ம கழுத்த அறுக்குதுங்க” வசனம் வருமா. நியாயம் மாறும்.

 23. 30 வருடம் இலங்கையில் பல கொலைகள் தற்கொலைத்தாக்குதல்கள், என்று நடத்திவிட்டு இன்று அவர்களிடமிருந்து பரிதாபத்தை எதிர்ப்பார்ப்பவர்களை எப்படிவேண்டுமானலும் திட்டலாம். indians இலங்கை சிங்களவர்களின் தராதரத்தைப்பற்றிப் பேசுவதாக எண்ணி அவரையே அவர் தரம் தாழ்த்திக்கொள்கிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் (இது தமிழர்களுக்கு).

  சிங்களவர்கள் என்ன ஏசு க்களா ? ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டுவதற்கு ?

  அவர்களும் மனிதர்கள் தான். உங்களுக்கு வரும் ஆத்திரம், கோபம் எல்லாம் அவர்களுக்கும் வரும்.

  What is needed now is Reconciliation. Not empty rhetorics that are thrown by Pro-LTTE bloggers.

 24. 20 வயதே ஆன ஹிலால் உங்களுடைய 45 ஆவது வயதிலும் இதே உத்வேகத்துடன் இருப்பீர்களாவென உங்களை சுற்றி உள்ளாவர்களை கவனித்துப் பார்த்துப் பின் சொல்லுங்கள்.

  இந்த வயதில் இப்படித்தான் சொல்லத் தோணும்.

  IPKF செல்வதற்கு முன் சென்றபின் என புலிகளின் போராட்டத்தை இரு காலகட்டங்களாகப் பிரிக்கலாம். அதற்கு முன்னும் பின்னும் நடந்த சம்பவங்களைத் தொகுத்துப் படித்துப் பாருங்கள் உங்களுக்குப் புரியக்கூடும். அப்பொழுது உங்களுக்கு 10 வயதாக் இருந்திருக்கும்.

  எதிலும் அபிப்ராயம் சொல்லுவது எளிது அதை சப்ஸ்டேன்சியேட் செய்வது சிரமம். நான் திரும்பத் திரும்பச் சொல்லுகிறேன் ராஜிவ் கொலை சரியல்ல. அதற்காக இந்தப் போஸ்டர் சரியா?

  கருத்தை வெளிப்படுத்த ஒரு அடிப்படை நாகரிகம் உள்ளது என்பதை ஒத்துக் கொள்ள ஏன் மறுக்கிறீர்கள்?

 25. இந்த மாதிரி போஸ்டர் அடிக்க விடும் கட்சிகாரர்களை, எதற்கு ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி விட்டு வைக்கிறது? கட்டாயமாக, அவர்களை ராணுவத்தில் சேர்த்துவிட வேண்டும்!

  நாடு உருப்படும்!

 26. //நான் சொல்ல வந்தது இது போன்ற அடிமுட்டாள்களான்னுதான். ஏன்னா இந்த வட்டம், மாவட்டமாகி, மானிலமாகி நாளை ஆட்சியில் உக்காருவான். //

  It is no different ADMK cadres burning 3 girls alive in Dharmapuri. The underlying reason is to “showcase their utmost loyalty” to their leadership. The expection of getting “suitable rewards” for such display of loyalty motivates them to stoop to any bizarre level.

 27. //இதே வேதனை தானே அன்று ராஜிவ் மற்றும் கூட இருந்த காவல் துறை அதிகாரிகள் குடும்பத்திற்கும் இருந்து இருக்கும்.
  //

  I don’t remember the Eelam/LTTE supporters displaying any such glee during Rajiv’s death in 1991.

 28. இந்த நேரத்திலும் தன்னை பற்றி மக்கள் தப்பாகவோ சரியாகவும் பேச வேண்டும் என்று அந்த போஸ்டர் அடிச்சவன் நினைச்சி இருக்கக்கூடும்..

  ரொம்ப தப்பு அதை சரியாக பதிவின் மூலம் கண்டித்த உங்களுக்கு ரொம்ப நன்றி நண்பா

  வழக்கம் போல ச்சின்னப் பையன் பழக்கத்தில் :-)))) போடாம :-(((( போட்டாரே..

 29. வேலன் அண்ணாச்சி,

  இப்போது ராஜீவ் நினைவுநாளில் தானுவுக்கு வீரவணக்கம் என்று சொல்பவரை பற்றி என்ன சொல்கின்றீர்கள்.

  நான் பிரபாகரன் மறைவுக்கு நானும் மிகவும் வருந்துகின்றேன். அதை கொண்டாடுபவர்களை மிகவும் கண்டிக்கின்றேன்.

  ஆனால் நம் நாட்டு நேர்திட்ட இழப்பை நியப்படுத்துவர்களை பற்றி வேதனைபடுகின்றேன்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s