கதம்பம் – 5/5/09

”அண்ணாச்சி”

“சொல்லு சஞ்சய்”

“முரளிக்கண்ணன் லைன்ல இருக்காரு. அவருகிட்ட இவ்வளவு நேரம் நாந்தான் வடகரை வேலன்னு பேசிகிட்டு இருக்கேன். அவரு சஞ்சய்கிட்டப் பேசனும்னு சொன்னதால உங்களக் கான்ஃப்ரன்ஸ்ல போடுறேன். அப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க”

“சரி சரி “

“அலோ சஞ்சய் எப்படி இருக்கீங்க?” கேட்டது முரளிக்கண்ணன் எங்கிட்ட(!?)

“நல்லா இருக்கேன் முரளி. என்னல்லாம் சின்னப்பையன்னுதானே வந்ததும் அண்ணாச்சிகிட்டப் பேசுறீங்க?” நான்

“சேச்சே அப்படியெல்லாம் இல்லைங்க எங்கிட்ட அண்ணாச்சி நம்பர் இருந்திச்சி பேசினேன் ஞாபகமா உங்க நம்பர் வாங்கிப் பேசுறேன் பாருங்க”ன்னாரு முரளி.

இதுக்கு மேல அவரக் கலாய்க்கிறது நல்லால்லன்னு. “ அலோ முரளி அவ்வளவு அப்பாவியா நீங்க? இவ்வளவு நேரமும் நீங்க சஞ்சய் கிட்டத்தான் பேசிட்டிருந்தீங்க, அண்ணாச்சின்னு நெனைச்சு”

“அடப்பாவிகளா”ன்னு சிரிக்க ஆரம்பிச்ச முரளி வெகு நேரம் சிரிச்சிகிட்டே இருந்தாரு.

***********************************************************

தொண்டாமுத்தூர் எம் எல் ஏ கண்ணப்பன்(முன்னாள் மதிமுக இன்னாள் திமுக) கட்சி மாறியதால் அவரது பதவி பறி போகுது. அவரைத் தேர்ந்தெடுக்க அரசாங்கம் செலவிட்ட பணத்தை இப்பொழுது யாரிடம் வசூல் செய்வது?

இதுபோலத்தான் கம்பம் ராமகிருஷ்ணனும் இன்னும் சிலரும். இது குறித்து ஒரு விவாதம் நடத்த வேண்டும்.

இடைத் தேர்தல்ல என்ன கூத்துக்கள் அரங்கேறப் போகுதோ?

***********************************************************

ஜெயமோகனின் ”ஊமைச் செந்நாய்” சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். அதில் இரு கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. இரண்டுமே வலைத்தளத்தில் வாசித்திருந்தாலும் புத்தகமாகப் படிக்கும் அனுபவம் வலை வாசிப்பில் கிடைப்பதில்லை.

”ஊமைச் செந்நாய்”, ”மத்தகம்” இரு கதைகளும் வேறு வேறு தளமெனுனிம் வாசிக்க ஆரம்பித்த உடன் நம்மை உள்ளே இழுத்துக் கொள்வன. வாசித்துப் பாருங்கள்.

***********************************************************

மதுரை வட்டார வழக்குல ஒரு நல்ல கதை ரெஜோவாசனோட கம்பிகளுக்குப் பின்னாலுறங்கும் கடவுள்

***********************************************************

துன்பம்

இறைச்சிக் கடையைக் கடக்கும்பொழுது
கூடுதலாகத் துடிக்கிறது இதயம்
மலரைக் கிள்ளும்பொழுது
கூசுகிறது எலும்பு
விபத்துக் களத்தின் உறைந்த ரத்தம்
துயிலிரவைக் கலைக்கிறது
ஒழுகும் தர்மங்கள்
மீது அசூயை ஊட்டுகிறது
வதைபடும் கைதியின் நொய்ந்த உடல்
வரவரபொறுக்க முடியாமலாகிவிட்டது
மனசாட்சியின் அழுகை.

– மகுடேஸ்வரன்

***********************************************************

தேர்தல் சமத்துல நம்ம ஜோக்கு எதுவும் எடுபடாது போல இருக்கு.

”இந்தத் தேர்தலில் நான்தோல்வியுற்றால், அது தமிழக மக்களுக்குக் கிடைத்த தோல்வி” – ஈ வி கே எஸ் இளங்கோவன்.

.

Advertisements

31 comments

 1. ஊமைச் செந்நாயும் மத்தகமும் எனக்கும் பிடித்திருந்தன. இரு கலைஞர்கள் என்ற தலைப்பில் இளையராஜா, ஜெயகாந்தனைப் பற்றி (பெயர் குறிப்பிடாமல்) எழுத முயற்சித்திருப்பார் – தோல்விக் கதை அது. எதற்காகப் புத்தகத்தில் சேர்த்தார்களோ தெரியவில்லை 😦

 2. ஆமா சுந்தர் அது ஒரு மொக்கைக் கதை. எனக்கு இருவர் படம்தான் ஞாபகம் வந்தது.

 3. அருமை.

  இந்த வார குமுதம் அரசு பதிலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை செருப்பால் அடித்திருக்கிறார்கள்.

 4. //”இந்தத் தேர்தலில் நான்தோல்வியுற்றால், அது தமிழக மக்களுக்குக் கிடைத்த தோல்வி” – ஈ வி கே எஸ் இளங்கோவன்.//

  ஈரோட்ல தான் இருக்கேன்!
  இவரு பண்றது எல்லாமே காமெடியா இருக்கு!

 5. மத்தகம்.. அந்த யானைக் கதைதானே?

  எனக்கு பிடிக்கல அண்ணாச்சி.. :((.. ஊமை செந்நாய் நர்சிம் தரேன்னாரு.. படிக்கனும்

 6. //”இந்தத் தேர்தலில் நான்தோல்வியுற்றால், அது தமிழக மக்களுக்குக் கிடைத்த தோல்வி” – ஈ வி கே எஸ் இளங்கோவன்.//

  :-))

 7. ஜெமோவின் இந்த இரு கதைகளும், என்னைப் பொறுத்தவரையில், சமீப காலங்களின் மிகச் சிறந்த கதைகள். மொழி, வர்ணனை, விவரங்கள், குறியீடுகள் என்று பல தளங்களில் சிறந்த படைப்பு.

  முரளி தங்கமான மனுஷன். அவரையும் விட்டு வைக்கலியா சஞ்சய் 🙂

  அனுஜன்யா

 8. ரெஜோவாசனின் கதை ரொம்ப நல்லாருந்தது.

 9. அண்ணாச்சி வழக்கம் போல கதம்பம் அபார மணம்.

  @கார்கி

  ஊமை செந்நாய் ஜெயமோகனின் தளத்தில் இருக்கிறதே

 10. அறிமுகங்களுக்கு நன்றி அண்ணாச்சி! படிச்சிப் பார்க்கிறேன்.

 11. எல்லாமே சூப்பர்.! இறுதி ஜோக்கு டாப்பு..

 12. ரொம்ப நாளா ஊமைச்செந்நாய் மேஜை மேலேயே உக்காந்துகொண்டிருக்கிறது. என்னைக்கு கடிச்சு வெக்கப்போகுதோ தெரியலை..

 13. நல்ல கவிதை / நல்ல ஜோக்

  கதம்பம் – அரசியல் வாசம் கொஞ்சம்.

 14. ஜெயமோகனின் ஊமைச் செந்நாயும் மத்தகமும் நல்ல தகவல். நன்றி.

 15. ரெஜோவின் கதை ரொம்ப நல்லா இருக்கு. நன்றி வேலன். முத்துவேல் மாதிரி ரெஜோவும் உங்க ‘ஆளு’ இல்ல?

  அனுஜன்யா

 16. நீங்கள் சொன்ன கதைகளை இன்னும் படிக்கவில்லை.அறிமுகத்திற்கு நன்றி.
  கதம்பம் வழக்கம்போலவே நல்லா இருக்கு 🙂

 17. முரளி கண்ணன்.. ஹா ஹா ஹாஹ்.

  /இது குறித்து ஒரு விவாதம் நடத்த வேண்டும்./
  ஆமா. அக்கறையுள்ள சமூக சிந்தனை.

  ஜெமோவின் சிறுகதைத்தொகுப்பு நிழல்வெளிக்கதைகள் மற்றும் பழைய குறு நாவல்கள் தொகுப்பும்தான் இன்றைக்குப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.இரு கலைஞர்கள் கதை பற்றி அப்படியா சொல்றீங்க? எனக்குப் பிடித்திருந்தது அண்ணாச்சி,மற்றும் குருஜி.

  ரெஜோவாசனோடக் கதையப் படிக்கிறேன் அண்ணாச்சி. கதை அறிமுகத்திற்கு நன்றி.உயிரோசை கதை படிச்சுட்டேன். நேரமின்மையாலும்,வாசிப்பிலிருக்கும் போதாமையை சரிசெய்யவும் முயன்று நிறைய இதுபோல நண்பர்களின் எழுத்துக்களை இழக்கிறேன்.
  மகுடேஸ்வரன் கவிதை-இப்படி எழுத ஒரு நல்ல இதயம் வேண்டும்.அருமை

  செம காமெடி இளங்கோவனோட.

  ஈரோட்டு(தமிழக) மக்களே! தோற்கத் தயார்தானே!

  /தேர்தல் சமயத்துல நம்ம ஜோக்கு எதுவும் எடுபடாது போல இருக்கு./

  இது ஜோக்.

 18. @அனுஜன்யா
  /முத்துவேல் மாதிரி ரெஜோவும் உங்க ‘ஆளு’ இல்ல? /

  நீங்க மட்டும் என்னவாம்? 🙂

 19. கடைசிலே இருக்கறது பயங்கர ஜோக்காச்சே!! சிச்சி சிச்சி வயிறு வலிக்குது…:-))))

 20. ஆகா ஆகா சஞ்செய் பொடியன் அண்ணாச்சி வேலன் – சூப்பர் ஆள்மாறாட்டம்

  ரெஜோ கத – ரசிச்சுப் படிச்ச – சிரிச்சுப் படிச்ச – புள்ளாரெயே கம்பி எண்ண வச்ச கத – அரும அரும

 21. Vazhakam poala irukura swarasiyam missing… ungaloada payana anubavam ethavathu sethirukalamoa?

 22. 1. 🙂

  2. எனக்கு ஒரு நாள் லீவு கிடைக்கும்.

  3. அறிமுகத்துக்கு நன்றி அண்ணாச்சி.

  4. கவிதை ரெண்டாவது தடவைதான் புரிஞ்சது

  5. ஜோக் இதுதான் இருக்கறதுலயே சூப்பர்.

 23. ஜ்யோவ்ராம் சுந்தர், செல்வேந்திரன், வால்பையன், கார்க்கி, சென்ஷி, டக்ளஸ், அனுஜன்யா, ☼ வெயிலான், murali தமிழ் பிரியன் ஆதிமூலகிருஷ்ணன், அமிர்தவர்ஷினி அம்மா, மாதேவி, Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ , பட்டாம்பூச்சி, ச.முத்துவேல், ச்சின்னப் பையன், cheena (சீனா), வெட்டிப்பயல், தாரணி பிரியா, narsim, yathra & Cable Sankar வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 24. ஜெ.மோ வாசிக்கவில்லை.

  எவ்ளோ கேனயங்களாக்குறாங்க பாருங்க.

  கவிதை அருமை.

 25. வடகரை அண்ணா,வாங்க… நாங்களும் புதுசா கம்பெனி தொடங்கி இருக்கோம். அப்படியே வந்து பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

 26. கட்சி மாறினால் தேர்தலில் நிற்க தடை செய்தாலொழிய… மரம் தாவும் குரங்கை போல், கட்சி மாறும் பழக்கம் விட போவதில்லை…..
  கதம்பம் கலக்கல்.. அண்ணாச்சி…

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s