நனையாத நிழல்

குல தெய்வம் கருப்பசாமி
கும்பிடுவது குமரனை
காரியசித்திக்கு கணபதி
காசு சேர பாலாஜி
காவலுக்கு அய்யனார்
எந்தச் சாமியிடமும்
வேண்டினாலும்
தீருவதாயில்லை
என் பாவம்.

கங்கையோ காவிரியோ
ராமேஸ்வரம் கடலோ
எதில் முங்கினாலும்
ஒரு போதும் நனையாத
என் நிழல் போல.

.

22 comments

  1. நிழல்‍-பாவம்..!

    நிழலுக்கு வெயில் வேண்டும்..!
    பாவத்துக்கு..?!!?!

  2. //ஒரு போதும் நனையாத
    என் நிழல் போல//

    இந்த படிமம் ரொம்ப நல்லா இருக்கு.

  3. //ரமேஸ்வரம்//

    அண்ணாச்சி அது ராமேஸ்வரம்..

    எபப்டியோ பழி தீர்த்தாச்சு :))))))

  4. நல்லா இருக்கு அண்ணாச்சி. நம்மோடு உடன் கட்டை ஏறும் வரையில் நிழல் நமது பாவங்களின் குறியீடாக வருகிறது போலும். நல்ல கவிதை.

    @ கார்க்கி

    //எபப்டியோ பழி தீர்த்தாச்சு :))))))//

    அபப்டியா சாரி, அப்படியா? :))))

    அனுஜன்யா

  5. அட்டகாசம் என்பது குறைவான வார்த்தை இந்தக் கவிதைக்கு.

  6. நல்லா இருக்குங்க கவிதை.

  7. :-))

    கடைசி ரெண்டு வரி ரொம்ப நல்லாயிருக்குது!

  8. கவிதை நல்லா இருக்கு

    நனையாத நிழல் – வார்த்தை ப்ரயோகமும் நல்லா இருக்கு

    ஆனா ஏதோ ஒன்று குறையறாப்பல இருக்கு,

  9. நல்லா வந்திருக்கு.
    மிக எளிமையான வார்த்தைகளில், ஆழமாகச் சொல்ல முடிந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

  10. வேற என்ன அண்ணாச்சி, சுந்தர்ஜியே சொல்லிட்டாரு. நான் சொல்றதெல்லம் பெரிசு இல்ல.

  11. அண்ணாச்சி கவிதை நல்லாயிருக்கு

  12. டக்ளஸ், மண்குதிரை கார்க்கி அனுஜன்யா, முரளிகண்ணன் ஜ்யோவ்ராம் சுந்தர், சென்ஷி, அமிர்தவர்ஷினி அம்மா, மாதவராஜ், ச.முத்துவேல், அத்திரி, ஆதிமூலகிருஷ்ணன், starjan, J, தாரணி பிரியா, yathra & Cable Sankar வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  13. //கங்கையோ காவிரியோ
    ராமேஸ்வரம் கடலோ
    எதில் முங்கினாலும்
    ஒரு போதும் நனையாத
    என் நிழல் போல.//

    வாவ்.. இப்டி யோசிக்கக் கூட உங்களுக்கு நேரம் இருக்கா? க்ரேட் அண்ணாச்சி. 🙂

  14. நனையாத நிழல் போல என்று பாவத்தை உருவகப்படுத்திய விதம் அருமை.
    பாவமானது எந்த தெய்வத்தை வணங்கினாலும், எந்த நீரில் நீராடினாலும் போகாது என்கிற கருத்தை ” என் நிழல்போல” என்று கூறாமல் பொதுவானதாகக் கூறியிருக்கலாம்.

  15. அண்ணாச்சி அடிக்கடி மும்பை போவாதீங்க! இது ஆரம்ப ஸ்டேஜ்! அப்புறம் பினா வானாகிடுவீங்க!

    இந்த கவிதை அருமை!