வார்த்தைகளில் வழியும்

அவசரப் பொழுதொன்றில்
தவறி விழுந்த வார்த்தை

தெறித்துச் சிதறியதில்
எங்கும் ரணம்;
குருதி கொப்பளிக்க.
தடித்தெழுந்த வார்த்தைகளில்

பொதிந்திருந்தது காயப்பட்ட
வலியும் வேதனையும்;
கூடவே குருதி வாடையும்.

எதிரெதிர் வாக்கியங்களில்
நிறுவப்பட்டதெல்லாம் இருவரும்
யோக்கயமில்லையென்பதன்றி
பிறிதொன்றில்லை.

பின்மாலைப் பொழுதில்
குற்றவுணர்ச்சி ததும்பும் வார்த்தைகளில்
தோய்ந்திருந்த மருந்து

குணமாக்குறது ரணங்களை
காயமாக்குவதும்,

காயமாற்றுவதும்
வார்த்தைகளே.

எதைப் பேசுகிறோம்

என்பதிலிருக்கிறது

வாழ்க்கை.

Image courtesy : © Keeweeboy | Dreamstime.com

.

Advertisements

22 comments

 1. //எதைப் பேசுகிறோம்
  என்பதிலிருக்கிறது
  வாழ்க்கை.//

  உண்மை.

  அருமை.

 2. அசத்தல். வார்த்தைகள் உருவாக்கும் குரூரம் இருக்கிறதே

  தீயினால் சுட்ட புண்

 3. எனது நேற்றைய தினத்தை நினைவு படுத்தும் கவிதை. வார்த்தைகளில்தான் வாழ்க்கை. புன்சிரிப்பும், முகச்சுளிப்பும் பிறப்பது வார்த்தைகளிள் இருந்துதான்.

 4. நல்லா இருக்கு.வழக்கமான காதலர் ஊடல் கவிதை வார்த்தைகள். ஆனால்

  //காயமாக்குவதும், காயமாற்றுவதும்
  வார்த்தைகளே.//

  //எதைப் பேசுகிறோம் என்பதிலிருக்கிறது
  வாழ்க்கை.//

  இந்த வார்த்தைகளால் கவிதை எழுந்து நின்று விட்டது.

  வாழ்த்துக்கள்.

  நம்ம “அடுத்த சந்தில் திரும்பினேன்”
  கவிதை படிச்சீங்களா? கருத்துச் சொல்லுங்க.

 5. அண்ணாச்சி இந்த வாரம் நல்ல மூட்ல இருக்கீங்க போல…. அருமையான கவிதைகளா வடிக்கிறீங்களே !!

 6. //பின்மாலைப் பொழுதில்
  குற்றவுணர்ச்சி ததும்பும் வார்த்தைகளில்
  தோய்ந்திருந்த மருந்து
  குணமாக்குறது ரணங்களை

  காயமாக்குவதும்,
  காயமாற்றுவதும்
  வார்த்தைகளே.

  எதைப் பேசுகிறோம்
  என்பதிலிருக்கிறது
  வாழ்க்கை.//

  கவிதை நல்லா இருக்குங்க..!

  இவ்வார்த்தைகளில் கவிதை உயர்ந்து விட்டது.

 7. வார்த்தைகள் வழிகின்றன இல்லை
  கொட்டுகிறது அருவிபோல
  உங்களது கவிதையில்
  அருமையா இருக்கு அண்ணாச்சி

 8. அருமையா இருக்கு அண்ணாச்சி!

  வாழ்த்துக்கள்.

 9. அட்டகாசம் அண்ணாச்சி. ஏதோ, மும்பை பெயரைக் காப்பாற்றி விட்டீர்கள் 🙂

  அனுஜன்யா

 10. அருமையான கவிதை..

  “யாகவராயினும் நாகாக்க” அப்டிங்கிறீங்க..!
  ரைட்டு..

 11. அவசியமானதொரு கவிதை. கவிதையினால் பயன் இருக்கவேண்டுமா என்ன? என்று கேள்விவரலாம். பயன் இருந்தால் நல்லதுதானே.மொழி நன்றாகக் கூடி வந்திருப்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

 12. //எதைப் பேசுகிறோம்
  என்பதிலிருக்கிறது
  வாழ்க்கை.//

  ”நான்” பேசாமல் இன்னும் சிறப்பாக வாழலாம்னு திருப்பூர்காரர் சொல்றாரே!

 13. என் சூழலுக்கான கவிதை போலிருந்தது, கொஞ்சம் சோகத்தையும், கொஞ்சம் ஆறுதலையும் தந்தது வேலன்.!

 14. etha kurippittu solrathu
  nu puriyala anna
  காயமாக்குவதும்,
  காயமாற்றுவதும்
  வார்த்தைகளே.

  unmaithaan anna
  எதைப் பேசுகிறோம்
  என்பதிலிருக்கிறது
  வாழ்க்கை.//
  ithukku naan enna solla
  onnum solla mudiyaathu

 15. // பின்மாலைப் பொழுதில்
  குற்றவுணர்ச்சி ததும்பும் வார்த்தைகளில்
  தோய்ந்திருந்த மருந்து
  குணமாக்குறது ரணங்களை //

  இத்தோடு நிறுத்தியிந்தால் எனக்கு இது கவிதை. பின்னால் வரும் moral of the story … எதற்கு …

 16. //பின்மாலைப் பொழுதில்
  குற்றவுணர்ச்சி ததும்பும் வார்த்தைகளில்
  தோய்ந்திருந்த மருந்து
  குணமாக்குறது ரணங்களை//

  அருமை. கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.

 17. நன்றி ராமலஷ்மி. கவிதைப் பதிவு போட்டதும் முதல் ஆளா வந்துடறீங்களே எப்படி?

  நன்றி முரளி

  நன்றி சிவா. உடம்பு எப்படி இருக்கு?

  நன்றி மகேஷ். பயணங்களால் விளையும் நன்மைகள்தான் இது.

  நன்றி முத்துராமலிங்கம்.

  நன்றி புன்னகை.

  நன்றி வினிதா

  நன்றி அனுஜன்யா.

  நன்றி டக்ளஸ்.

  நன்றி மண்குதிரை.

  நன்றி முத்துவேல்.

  நன்றி வால். வால்த்தனமா பேசாம இருந்தாலே போதும்.

  நன்றி ஆதி.வீட்டுக்கு வீடு வாசப்படி?

  நன்றி சாய்ராபாலா. உங்க பேருக்கு அர்த்தம் என்ன?

  நன்றி ரதி செல்வன்

  நன்றி நந்தா. அப்படிச் செஞ்சா கவிதை பாதியில தொக்குன மாதிரி ஆகிடாது?

  நன்றி யாத்ரா

 18. தொக்கினால் தொக்கட்டுமே …

  கவிதையா … இலக்கணமா … ?

 19. //எதைப் பேசுகிறோம்
  என்பதிலிருக்கிறது
  வாழ்க்கை.//

  அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டிய வரிகள். அருமை.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s