வார்த்தைகளில் வழியும்

அவசரப் பொழுதொன்றில்
தவறி விழுந்த வார்த்தை

தெறித்துச் சிதறியதில்
எங்கும் ரணம்;
குருதி கொப்பளிக்க.
தடித்தெழுந்த வார்த்தைகளில்

பொதிந்திருந்தது காயப்பட்ட
வலியும் வேதனையும்;
கூடவே குருதி வாடையும்.

எதிரெதிர் வாக்கியங்களில்
நிறுவப்பட்டதெல்லாம் இருவரும்
யோக்கயமில்லையென்பதன்றி
பிறிதொன்றில்லை.

பின்மாலைப் பொழுதில்
குற்றவுணர்ச்சி ததும்பும் வார்த்தைகளில்
தோய்ந்திருந்த மருந்து

குணமாக்குறது ரணங்களை
காயமாக்குவதும்,

காயமாற்றுவதும்
வார்த்தைகளே.

எதைப் பேசுகிறோம்

என்பதிலிருக்கிறது

வாழ்க்கை.

Image courtesy : © Keeweeboy | Dreamstime.com

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s