தேர்தல்


எட்டுக்கெட்டு
சதுரக் கட்டங்கள்
பாதி வெள்ளை
மீதி கறுப்பாக.

ராஜா, ராணி, மந்திரி,
குதிரைப்படை, காலாட்படை
இரு புறமும் அணிவகுத்து நிற்க
துவங்குகிறது யுத்தம்.

மந்திராலோசன, சதித்திட்டம்,
ராஜதந்திரம், நம்பிக்கைத் துரோகம்
விதிகள், மீறல்கள்
என ஆக்ரோஷப் போர்

வெற்றிக்களிப்பும்
அவமானங்களும்
வலிகளும்
வேதனைகளுமாக

ராஜாவோ சிப்பாயோ
ஆட்டம் முடிந்ததும்
அடைபடப் போவது
ஒரே பெட்டியில்
என்பதறியாமல்

.

Advertisements

26 comments

 1. மிக நன்று. அதுவும் அந்தக் கடைசிப் பத்தி அற்புதம்.

  வாழ்த்துக்கள்.

 2. சமரசம் உலாவும் இடமே… இதுதான்.. நாம் வாழ்வில் காணா…

 3. ///ராஜாவோ சிப்பாயோ
  ஆட்டம் முடிந்ததும்
  அடைபடப் போவது
  ஒரே பெட்டியில்
  என்பதறியாமல்///

  என்னா ஒரு சிந்தனை.

 4. //
  ராஜோவோ சிப்பாயோ
  ஆட்டம் முடிந்ததும்
  அடைபடப் போவது
  ஒரே பெட்டியில்
  என்பதறியாமல்//

  நச்சுனு இருக்கு கவிதை

 5. நிஜத்தை அழகாய்ச் சொல்லி இருக்கின்றீர்கள்..!

 6. அனுஜன்யா வீட்டுக்கு போகும் பொழுதே நினைச்சேன்! அண்ணாச்சி நல்லபடியா போன மாதிரியே திரும்பி வர என் பிராத்தனைகள்:)

 7. பரிசல் கார்க்கி மாதிரி நீங்களும் அனுஜன்யாவுமா?

  இருந்தாலும் வடகரைவேலன் அண்ணாச்சி & அனுஜன்யா உங்க கவிதை அருமை:)

 8. கடைசி வரிகளில் உங்க முத்திரை. நல்லா வந்திருக்கு அண்ணாச்சி. எப்பய்யா எழுதினீங்க?

  அனுஜன்யா

 9. குசும்பா, அதான் கவிதை எல்லாருக்கும் புரியுது இல்ல? அப்புறம் நா எப்பிடி எழுதியிருக்க முடியும்? லாஜிக் பாயிண்டு 🙂

  அனுஜன்யா

 10. kavithaiyai rasiththeen

  //குசும்பா, அதான் கவிதை எல்லாருக்கும் புரியுது இல்ல? அப்புறம் நா எப்பிடி எழுதியிருக்க முடியும்? லாஜிக் பாயிண்டு :)// 🙂

  mankuthiray.

 11. ராஜாவோ சிப்பாயோ
  ஆட்டம் முடிந்ததும்
  அடைபடப் போவது
  ஒரே பெட்டியில்
  என்பதறியாமல்//

  மிக அருமை நண்பரே..

 12. அண்ணாச்சி, நான் சொல்றதெல்லாம் ஒன்னுமேயில்ல. தல நந்தாவே சொல்லிட்டாரு. அதான் பெரிசு.அதைவிட வேற எதுவும் வேணாம்.

 13. /கவிஞர்
  ராஜேந்திரன் வாழ்க/

  வழிமொழிகிறேன்.

 14. ராமலக்ஷ்மி, TVRK சார், மகேஷ், புன்னகை, சிவா, முத்துராமலிங்கம், கிருஷ்ணா, வெயிலான், குசும்பன், அனுஜன்யா, மண்குதிரை, நந்தா, ச்சின்னப்பையன், உழவன், முத்துவேல், மங்களூரார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

 15. அண்ணாச்சி , உங்களுடைய blog பற்றி குங்குமம் புக்ல வந்து இருந்தது , அதை பார்ததும் விசிட் பன்னுணன், உங்களோட blog பார்ததும் என்னோட பள்ளி , கல்லூரி கால கவிதை கலை எல்லாம் இணையத்துல பதுவு பண்ணுறதுன்னு முடிவு பண்ணி நானும் களத்துள் என்ட்ரி பண்ணியாச்சு , எனக்குள் இருந்த ஆர்வத்தை மீண்டும் கொடுத்தற்கு நன்றி.
  பதிவை பார்த்து சப்போர்ட் பண்ணுங்கோ …….
  http://mannaibharathi.blogspot.com/

 16. மிக அருமை…
  உங்களது கவிதை பயனம் தொடர வாழ்த்துகள்….

  பாரதி.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s