டெக்னாலஜி ஹேஸ் ஹெல்ப்டு


அந்த ரயில் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. நம் பதிவர் ஒருவரும் பயணிக்கிறார். எதிரே இரு அழகிய யுவதிகள் (கல்லூரி மாணவிகள்).

வந்ததிலிருந்து நம் பதிவரைப் மதிக்காமல் தங்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அடிக்கண்ணால் ஒரு பார்வை பார்ப்பார்களே அது கூட இல்லை. இவரும் பொறுமையாக இருக்கிறார்.

ஈரோடு வரை பொறுமை காத்தவருக்கு அதற்கு மேல் தாங்காது எனத் தோன்றுகிறது. காரணம் இருவரும் தங்கள் மொபைலை எடுத்து ஒருவரிடமிருந்து மற்றவருக்கு அனுப்பவும் பெறவுமாக இருக்கிறார்கள்.

திடீரென்று இருவரின் முகங்களும் கலவரமாகிறது. தங்கள் செல்போனை விசித்திரமாகப் பார்க்கின்றனர். ஸ்விட்ச் ஆப் செய்து மீண்டும் உயிர்ப்பிக்கின்றனர். கலவரம் குறைந்தபாடில்லை.

இருவரில் ஒருவர் தனது மொபைலில் நண்பர்(நண்பி?) ஒருவரை அழைத்து “டேய் என் செல் போன்ல வைரஸ் ஃபவுன்ட்னு வருதுடா என்ன பண்ண?”

அந்த முனையிலிருந்து உடனே ஸ்விட்ச் ஆஃப் செய்யச் சொல்லி உத்திரவு வந்திருக்கும் போல, “ அதெப்படிடா ஹொசூர்ல அம்மா வந்து காத்திருப்பாங்க , நாட் ரீச்சபிள்னா பதட்டமாயிடுவாங்களே?”

எதிர்முனையிலிருந்து என்ன சொன்னார்களோ தெரியவில்லை இருவரும் மொபைலைக் கையிலேயே வைத்துக் கொண்டு பார்த்தவாறிருந்தனர்.

“எப்படிடீ ரெண்டு மொபைல்லயும் ஒரே சமயத்துல வைரஸ் வந்திருக்கும்? இவ்வளவு நேரமா இல்லாம?”

“வேற யாரு மொபைல்ல இருந்தும் வந்திருக்குமோ?”

“அதெப்படி நாமதான் நம்மளுதத் தவிர வேற எதையும் ரிசீவ் பண்ணலையே?”

இதப் பார்த்து நம்மாள் நமுட்டுச் சிரிப்பு சிரித்தவாறே அவர்கள் மொபைலை வாங்கி சரி செய்து கொடுத்து குறைப் பயணத்தையும் கடலை போட்டவாறே முடித்தார்.

அவர் யாருன்னு பூடகமாகத்தான் சொல்ல முடியும்.
1. ரயில் கோவையிலிருந்து பெங்களூர் செல்கிறது
2. அவர் ஒரு தொழிலதிபர்.
3. அவருக்கு இன்னும் கல்யாணமாகவில்லை.

அது சரி அவரு அந்தப் பெண்களை கவர்ந்தவிதம் எப்படி?

பொதுவாக ஒரு மொபைலில் ப்ளூடூத் ஆன் செய்தால் பக்கத்தில் ப்ளூ டூத் ஆன் செய்யப் பட்டிருக்கும் மொபைலின் மாடல் எண் அல்லது அதன் பெயர் வரும்.

பதிவர் மொபைலில் ப்ளூ டூத் ஆன் செய்து அவரது மொபைல் பெயரை “virus found”னு வைத்துக் கொண்டார். அந்த பென்கள் ப்ளூ டூத்தும் ஆனில் இருப்பதால் அவர்கள் மொபைலில் “virus found னு வந்திருக்கு.

ஆண் மயிலுக்குத் தோகை, சேவலுக்குக் கொண்டை போல அந்தப் பதிவருக்கு ப்ளூ டூத். டெக்னாலஜி எப்படியெல்லாம் உதவுது பாருங்க.

கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல எதிர்ப் பதிவு
.

Advertisements

41 comments

 1. இப்பிடியெல்லாமா? அந்தக் காலத்துல தங்கப் பல் கட்டி கவுப்பாங்க. இப்ப நீலப்பல்லா? :)))))))))))

 2. ///ஆண் மயிலுக்குத் தோகை, சேவலுக்குக் கொண்டை போல அந்தப் பதிவருக்கு ப்ளூ டூத். டெக்னாலஜி எப்படியெல்லாம் உதவுது பாருங்க.//

  :-))))

 3. தொழிலதிபர் சாதாரண விவசாயி இல்லை. அரசியல்வாதி

 4. தகவலுக்கு நன்றி. புதுசா ஏமாத்த ஒரு டெக்னிக்கை சொல்லித்தந்ததுக்கு…

 5. //சேவலுக்குக் கொண்டை போல அந்தப் பதிவருக்கு ப்ளூ டூத் //

  ஆமாங், அவருக்கு தலையில முடிவேற இல்லீங்ளா, அதான் நீலப்பல்ல வைச்சு விளையாடிருக்காரு.

 6. //பரிசல்காரன் said…
  தகவலுக்கு நன்றி. புதுசா ஏமாத்த ஒரு டெக்னிக்கை சொல்லித்தந்ததுக்கு… //

  ஆமங், இவருக்கு ஒன்னியும் தெரியாதுங்.
  நீங் சொல்லிக்குடுக்றது வைச்சுத்தான் ஏமாத்தப்போறாராமா.
  இவருகிட்ட இருக்க டெக்னிக்க வைச்சே ஒரு புத்தகம் போடலாம்னு திருப்பூர்ல திரும்புறபக்கம்லாம் பேசிக்குறாய்ங்க.

 7. /////ஆண் மயிலுக்குத் தோகை, சேவலுக்குக் கொண்டை போல//

  நல்ல வேளை அண்ணாச்சி.. ரெண்டோட நிறுத்திட்டீங்க :))

 8. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…:((

  தவறான தகவலை அவைக்கு தர வேண்டாம். அது கோவை டூ சென்னை எக்ஸ்பிரஸ்.. கிகிகி..

  விரைவில் பதில் பதிவு வரும்ல.. 100% உண்மை சம்பவத்துடன்.. :))

 9. ஹா ஹா ஹா. செம்ம குறும்புப் பதிவு. வாழ்த்துகள் வேலன். வாழ்த்துகள் உங்களுக்கு இல்ல. அதை அப்படியே நம்ம ‘தொழிலதிபருக்குக்’ கொடுத்துடுங்க.

  அனுஜன்யா

 10. வைரஸ் கிளியர் செஞ்சு கொடுத்ததுக்கு அப்புறம் தேங்க்ஸ் அங்கிள் என்று அவுங்க சொன்னதை மட்டும் சென்சார் செஞ்சு இருப்பாரே!!!

  //ஆண் மயிலுக்குத் தோகை, சேவலுக்குக் கொண்டை போல அந்தப் பதிவருக்கு ப்ளூ டூத்.//

  ஆமா அந்த சேவல் கொண்டைய மறைக்க ஏன் எப்பவும் தொப்பி போட்டுக்கிட்டே அலையுது?:)))

 11. ஹா ஹா

  சிறு துரும்பும் ‘பல’ குத்த உதவும்

  :))))))))))))))

 12. // அவர் ஒரு தொழிலதிபர் //

  இளந்தொழிலதிபர் என்று குறிப்பிடாததை கன்னாபின்னாவென்று கண்டிக்கிறேன் 🙂

 13. :))))))))))

  great idea. hope all guys mobile name will be changed to ‘virus found’

  at crowded place, girls’ mobiles will be flooded with
  ‘virus found’
  ‘virus found’
  ‘virus found’
  ‘virus found’
  ‘virus found’
  ………………

  ha ha

 14. இதையெல்லாமா பதிவாக்குவாங்க!! பாருங்க இதை படிக்கிற மயில்/குயில் எல்லாம் உஷாராயிடுவாங்க இல்ல!!

 15. //Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ says:
  April 20, 2009 9:47 AM

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…:((

  தவறான தகவலை அவைக்கு தர வேண்டாம். அது கோவை டூ சென்னை எக்ஸ்பிரஸ்.. கிகிகி..

  விரைவில் பதில் பதிவு வரும்ல.. 100% உண்மை சம்பவத்துடன்.. :))
  //

  இப்படியா எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்னு வந்து நிக்கறது. 🙂

 16. //இப்படியா எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்னு வந்து நிக்கறது. 🙂 //

  நீங்க பேசாதிங்க.

 17. மகேஷ், TVRK சார், ஜி, V.Ramachandran, srini, குடுகுடுப்பை, பரிசல், சென்ஷி, சஞ்சய், அனுஜன்யா, குசும்பா, மங்களூர் சிவா, வெயிலான், தூயா, பட்டாம்பூச்சி, பிஸ்கோத்துபயல், ஸ்ரீமதி, நர்சிம், பூக்காதலன், சிவா, சுரெஷ், செந்தில், சின்ன அம்மினி வருகைகும் கருத்துக்கும் நன்றி.

 18. ///
  ஆண் மயிலுக்குத் தோகை, சேவலுக்குக் கொண்டை போல அந்தப் பதிவருக்கு ப்ளூ டூத். டெக்னாலஜி எப்படியெல்லாம் உதவுது பாருங்க.
  ///

  aahaa
  ஆஹா
  இது எனக்கு தெரியாம போச்சே……..

 19. ///
  கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல எதிர்ப் பதிவு
  ////

  என்ன ஒரு வில்லத்தனம்?? :))

 20. குங்குமத்தில் அண்ணாச்சி! கும். கும்!
  வாழ்த்துகள்.பூக்காதலனுக்கு இ.வா.பூ.
  /ஹொசூர்ல அம்மா /
  ஹொசூர் பத்தி தெரிஞ்சவங்க ஹொசூர்னுதான் சொல்வாங்க. ஓசூர்னு சொல்றதில்ல.
  அப்புறம் பதிவு.. நன்கு ரசித்தேன்.கலக்கல்.

 21. Kalakal…
  ippadi panniruntha, nijamave avar sema talented thaan.

  aana ithai padichitu enna enna ellam nadaka poaguthoa 🙂

 22. BTW, annachi.. mobileku Virus nu thaan peru vechirukanum. “Virus Found”nu vecha messagela “Virus Found Found”nu thaane kodukum :-/

 23. // வெட்டிப்பயல் said…

  BTW, annachi.. mobileku Virus nu thaan peru vechirukanum. “Virus Found”nu vecha messagela “Virus Found Found”nu thaane kodukum :-///

  இல்லை பாலாஜி.. சர்ச் பண்ணும் போது ப்ளூடூத் ஆன் பண்ணி இருக்கும் போன்களின் பட்டியலைத் தான் காட்டும். அதனுடன் Found என்று வராது. மொபைலின் பெயர் மட்டுமே வரும். virus என்று மட்டும் பேர் இருந்தால் virus என்று மட்டும் தான் வரும். virus found என்று வராது. வெட்டிபயன் என்று இருந்தால் வெட்டிபயல் என்று மட்டும் தான் காட்டும். வெட்டிபயல் ஃபவுண்ட் என்று காட்டாது. 🙂

 24. // Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said…
  // வெட்டிப்பயல் said…

  BTW, annachi.. mobileku Virus nu thaan peru vechirukanum. “Virus Found”nu vecha messagela “Virus Found Found”nu thaane kodukum :-///

  இல்லை பாலாஜி.. சர்ச் பண்ணும் போது ப்ளூடூத் ஆன் பண்ணி இருக்கும் போன்களின் பட்டியலைத் தான் காட்டும். அதனுடன் Found என்று வராது. மொபைலின் பெயர் மட்டுமே வரும். virus என்று மட்டும் பேர் இருந்தால் virus என்று மட்டும் தான் வரும். virus found என்று வராது. வெட்டிபயன் என்று இருந்தால் வெட்டிபயல் என்று மட்டும் தான் காட்டும். வெட்டிபயல் ஃபவுண்ட் என்று காட்டாது. 🙂
  //

  Thanks for the info…

  Nalla example 🙂

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s