டெக்னாலஜி ஹேஸ் ஹெல்ப்டு


அந்த ரயில் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. நம் பதிவர் ஒருவரும் பயணிக்கிறார். எதிரே இரு அழகிய யுவதிகள் (கல்லூரி மாணவிகள்).

வந்ததிலிருந்து நம் பதிவரைப் மதிக்காமல் தங்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அடிக்கண்ணால் ஒரு பார்வை பார்ப்பார்களே அது கூட இல்லை. இவரும் பொறுமையாக இருக்கிறார்.

ஈரோடு வரை பொறுமை காத்தவருக்கு அதற்கு மேல் தாங்காது எனத் தோன்றுகிறது. காரணம் இருவரும் தங்கள் மொபைலை எடுத்து ஒருவரிடமிருந்து மற்றவருக்கு அனுப்பவும் பெறவுமாக இருக்கிறார்கள்.

திடீரென்று இருவரின் முகங்களும் கலவரமாகிறது. தங்கள் செல்போனை விசித்திரமாகப் பார்க்கின்றனர். ஸ்விட்ச் ஆப் செய்து மீண்டும் உயிர்ப்பிக்கின்றனர். கலவரம் குறைந்தபாடில்லை.

இருவரில் ஒருவர் தனது மொபைலில் நண்பர்(நண்பி?) ஒருவரை அழைத்து “டேய் என் செல் போன்ல வைரஸ் ஃபவுன்ட்னு வருதுடா என்ன பண்ண?”

அந்த முனையிலிருந்து உடனே ஸ்விட்ச் ஆஃப் செய்யச் சொல்லி உத்திரவு வந்திருக்கும் போல, “ அதெப்படிடா ஹொசூர்ல அம்மா வந்து காத்திருப்பாங்க , நாட் ரீச்சபிள்னா பதட்டமாயிடுவாங்களே?”

எதிர்முனையிலிருந்து என்ன சொன்னார்களோ தெரியவில்லை இருவரும் மொபைலைக் கையிலேயே வைத்துக் கொண்டு பார்த்தவாறிருந்தனர்.

“எப்படிடீ ரெண்டு மொபைல்லயும் ஒரே சமயத்துல வைரஸ் வந்திருக்கும்? இவ்வளவு நேரமா இல்லாம?”

“வேற யாரு மொபைல்ல இருந்தும் வந்திருக்குமோ?”

“அதெப்படி நாமதான் நம்மளுதத் தவிர வேற எதையும் ரிசீவ் பண்ணலையே?”

இதப் பார்த்து நம்மாள் நமுட்டுச் சிரிப்பு சிரித்தவாறே அவர்கள் மொபைலை வாங்கி சரி செய்து கொடுத்து குறைப் பயணத்தையும் கடலை போட்டவாறே முடித்தார்.

அவர் யாருன்னு பூடகமாகத்தான் சொல்ல முடியும்.
1. ரயில் கோவையிலிருந்து பெங்களூர் செல்கிறது
2. அவர் ஒரு தொழிலதிபர்.
3. அவருக்கு இன்னும் கல்யாணமாகவில்லை.

அது சரி அவரு அந்தப் பெண்களை கவர்ந்தவிதம் எப்படி?

பொதுவாக ஒரு மொபைலில் ப்ளூடூத் ஆன் செய்தால் பக்கத்தில் ப்ளூ டூத் ஆன் செய்யப் பட்டிருக்கும் மொபைலின் மாடல் எண் அல்லது அதன் பெயர் வரும்.

பதிவர் மொபைலில் ப்ளூ டூத் ஆன் செய்து அவரது மொபைல் பெயரை “virus found”னு வைத்துக் கொண்டார். அந்த பென்கள் ப்ளூ டூத்தும் ஆனில் இருப்பதால் அவர்கள் மொபைலில் “virus found னு வந்திருக்கு.

ஆண் மயிலுக்குத் தோகை, சேவலுக்குக் கொண்டை போல அந்தப் பதிவருக்கு ப்ளூ டூத். டெக்னாலஜி எப்படியெல்லாம் உதவுது பாருங்க.

கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல எதிர்ப் பதிவு
.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s