அந்நியன்


பக்கத்து வீடு குமார் குருக்கள்
அடுத்தது பால்கார மணி
அதற்கடுத்து ஐசிஐசிஐ சரவணன்
எதிர்வீடு வயதான தம்பதியர்
பிள்ளைகள் இருவரும் மேல்நாட்டில்
அதற்கடுத்து அகிலேஷ் அப்பா
அவங்க மாடியில டிசைனர் சிவா
எல்லோரையும் தெரிகிறது
என் மனைவிக்கு.

இங்கு வந்து
இரண்டு வருடமாகியும்
தெரியவில்லை
எனக்கு யாரையும்;
என்னை யாருக்கும்.

.

Advertisements

23 comments

 1. இப்படி இயந்திரத்தனமா, சுற்றத்துடன் தொடர்பற்று, பொருளாதாரம் துரத்துகிற வாழ்வு வாழ்வதை நினைக்கிறபோது மனதிற்கு மிகவும் கஷ்டமாயிருக்கிறது.

  தங்கள் கவிதையில் இதை மிகவும் வலியயோடு பதிவு செய்திருக்கிறீர்கள்.

 2. என்னை கூடத்தான் யாருக்கும் தெரியாம இருந்தது. ஆனா இப்ப எல்லாருக்குமே தெரிய ஆரம்பிச்சு இருக்கு 🙂

  நல்லா இருக்கு வேலன் சார் 🙂

 3. அந்நியனா இருக்கறதுதான் பிரச்சினையே. அம்பியா மாறிடுங்க. எல்லாருமே உங்களையும் தெரிஞ்சுக்குவாங்க‌

 4. // இங்கு வந்து
  இரண்டு வருடமாகியும்
  தெரியவில்லை
  எனக்கு யாரையும்;
  என்னை யாருக்கும். //

  இது என் வாழ்வில் உண்மையாக நடந்ததுங்க ஒரு சின்ன திருத்தத்துடன் தெரியவில்லை எனக்கு யாரையும்; தெரிந்தது என்னை எல்லாருக்கும்.

 5. வழக்கம் போல ஆஹா ஓஹோ இல்லண்ணா….இது அவ்வ்வ்வ் ரகம்.

 6. நன்றி யாத்ரா.
  நன்றி தாரணி.
  நன்றி ராகவன்.
  நன்றி கும்க்கி.

 7. அவங்க உலகம் தெரிஞ்சவங்க..
  நீங்க அவங்கள் வேலன் ஸார்..

 8. நீங்க அவங்கள் தெரிஞ்சவங்க.. வேலன் ஸார்..

  (பர்ஸ்ட் சொதப்பிருச்சு அதான்)

 9. மனதை வருந்தச்செய்த கவிதை.! (எங்கள் ஹவுஸ் ஓனரிடம் கூட எப்போதுதாவதுதான் பேச நேர்வதால் பெயர் மறந்துபோய் டைரியில் எழுதிவைத்திருக்கிறேன். மற்றபடி பக்கத்தில் யார் இருக்கிறார்கள் தெரியாது. மாலை நேரங்களில் எதிர்வீட்டு வாசலில் இரண்டு சிறு பெண்குழந்தைகள் விளையாடுவதை கண்டிருக்கிறேன். அவ்வளவுதான்..)

  (ஆமா.. அதுக்காக ஏன் இப்பிடி உங்க போட்டோவெல்லாம் போட்டு பயமுறித்துறீங்க..)

 10. இப்படித்தான் ஆண்களாகிய நாம் இருக்கிறோம்.

 11. மிக இயல்பான சொல்முறையில் அமைந்துள்ள, அழகான ஆழமான கவிதை. பல உண்மைகளை உணர்த்துகிறது.கலக்குறீங்க அண்ணாச்சி.

 12. வெகு இயல்பான நடையில் அழகான கவிதை. ரசித்தேன்.

 13. நல்லா பதிவு செய்திருக்கீங்க

  அந்நியன்
  பைத்தியக்காரன்

 14. இங்கு வந்து
  இரண்டு வருடமாகியும்
  தெரியவில்லை
  என்னை யாருக்கும் 🙂

 15. நன்றி டக்ளஸ்
  நன்றி ஆதி
  நன்றி மாதவ்
  நன்றி முத்துவேல்
  நன்றி மண்குதிரை
  நன்றி Deepa
  நன்றி பிரியமுடன் பிரபு
  நன்றி Mahesh
  நன்றி பைத்தியக்காரன்
  நன்றி வெயிலான்

 16. நாம் இன்னும் அதை அடுத்த வீட்டுப்
  புறணி என்று தானே சொல்கிறோம்.
  புரிதலல்லவா ?
  அருமை வேலன் சார்.

 17. யதார்தமான கவிதை சார்.

  இந்த கவிதை படிக்கும் பொழுது ஒரு சின்ன ஞாபகம். எங்க அடுக்குமாடி குடியிருப்பில ஒரு
  நாலு வயசு பொண்ணு மட்டும் தான் எங்க வீட்டுக்கு வந்து விளையாடிட்டு, சண்டை போட்டு போவா. ஆனா இப்ப அதற்கும் தடான்னு ஒரு நாளு ஜன்னல் ஒரத்தில இருந்து அந்த பொண்ணு சொன்னா. “பக்கத்து வீட்டுக்கு போககூடாதுன்ன்னு அம்மா சொன்னாங்க, ஆதானா உன் கூட டூக்கா(பேச மாட்டாலாம்),அந்த அண்ணன் கூடவும் டூக்கா”.

 18. சாதாரணமான சொற்களைப் பயன்படுத்தி நவீனத்தின் ஊனத்தை குறித்து எழுதியிருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது 😉

 19. உலகின் மிக வேதனையான மறுபக்கம் இது.

  என்னுடைய மாமா வெளிநாட்டில் இருந்து விட்டு வீடு திரும்புகையில் அவர் குழந்தையே அருகில் வர மறுத்து.

  வேலை,பணம் என நாம் அடையாலம் இழந்துக் கொண்டிருப்பதை அற்புதமாக படம் பிடித்துள்ளீர்கள்…

 20. இதுக்கே கவலைப்பட்டா எப்படி

  பரிசல்காரன்
  கார்க்கி
  நர்சிம்
  ஆதிமூலகிருஷ்ணன்
  சஞ்ஜய்
  செல்வேந்திரன்

  அப்புறம் இந்த வால்பையன்!

  இவங்க எல்லாத்தையும் உங்களுக்கு தெரிஞ்சி இருக்குதுல!
  ஆனா எங்களை உங்க மனைவிக்கு தெரியாதுல

  அதுக்கும் இதுக்கும் சரியா போச்சுன்னு விடுங்க அன்ணாச்சி!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s