தன்னெஞ்சறிவது பொய்யற்க

ஒட்டன்சத்திரம் அவுட்டர் தாண்டியதும் ரயில்வே கேட்டில் நிற்கும்படி ஆயிற்று. சரி என கார் எஞ்சினை அனைத்து விட்டு அருகிலிருந்த அக்கவுண்டண்ட் கார்த்தியிடம் கேட்டேன், “கார்த்தி போன மாசம் அனுப்பிச்ச சரக்குக்கு இன்வாய்ஸ ரிவைஸ் பண்ணி இந்த மாசத்துல கேட்டிருந்தானே சேட், அனுப்பினியா?”

“அண்ணே சேட்டுகிட்ட இருக்க ஆளு ஒரு கூமுட்டைண்ணே”

“ஏம்ப்பா?”

“போன மாசம் பண்ணுன இன்வாய்ஸ் காப்பிய அனுப்பிச்சு அப்பா சாமி இதுக்குப் பதிலா நீங்க கேட்ட மாதிரி இந்த மாசம் இன்வாய்ஸ் பன்ணியிருக்கேன் . புதுசுல கையெழுத்துப் போட்டு சீல் வச்சு அனுப்புங்க, பழசக் கிழிச்சிருங்கன்னு சொல்லியிருந்தேன்”

“சரி அதுக்கென்ன?”

“அவன் பழசு புதுசு ரெண்டுலயும் சீல் வச்சு கையெழுத்துப் போட்டுப் பக்காவா அனுப்பியிருக்கான். ஒரு சப்ளைக்கு ரெண்டு இன்வாய்ஸ். நமக்கு நல்ல சான்ஸ்ணே. எத்தனை தடவ சேட் நமக்கு டெபிட் நோட் அனுப்ச்சிருக்கான். இப்ப அந்த லாஸையெல்லாம் சரி பண்ணிடலாம்ணே”

“அந்த மாதிரியெல்லாம் எதையும் பண்ணிடாதே. ஊருக்குப் போனதும் முதல் காரியமா பழைய இன்வாய்ஸ கிழிச்சுப் போடு”

“என்னண்ணே, இதுவே நான் முன்னாடி வேலை செஞ்ச கம்பெனியா இருந்தா இன்னேரம் எனக்கு இன்செண்டிவ் கொடுத்திருப்பாரு, நீங்க என்னடான்னா நீதி நேர்மைன்னுட்டு”

“ சேட்டு டெபிட் நோட்டு போடுறது சரக்குல இருக்க குறைபாட்டுக்குத்தான். நம்ம மேல கடுப்புல இல்ல. எத்தன தடவ அவசரமாப் பணம் வேணும்னு சேட்டுகிட்ட வாங்கியிருக்கோம் சேட்டு அதுக்கு வட்டியோ இல்ல வரவேண்டிய பேமெண்டுல கழிக்கவோ செஞ்சாரா? கைமாத்து வேற, வரவு செலவு வேறன்னு தெளிவா இருக்காரு. கார்த்தி ரெண்டு விஷயம். ஒன்னு இது நம்பிக்கைத் துரோகம். ரெண்டு என்னைக்கிருந்தாலும் ஷூவுக்குள்ள சிக்குன கல்லு மாதிரி என்னை உறுத்திக்கிட்டே இருக்கும். கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் செய்ய மாட்டேன்”

காரருகில் கடலை விற்கும் சிறுமி, “அண்ணே அவிச்ச கல்லைண்ணே, ரெண்டு ரூவாதான்னே”,

“ சரி ஆளுக்கு ரெண்டு கொடு” என்று பத்து ரூபாயை நீட்டினேன்.

“அண்ணே சில்லறை இல்லண்ணே இன்னொரு பொட்டலம் தரவா?”

“வேண்டாம்மா, பாக்கிய நீயே வச்சிக்க”

ரயில் கடந்திருக்கவே கேட் திறக்கப்பட்டு வாகனங்கள நகரலாயிற்று. ஸ்பீடு பிரேக் அருகில் வேகத்தைக் குறைத்த போது கடலை விற்கும் சிறுமி வேகமாக ஓடி வந்து, “ அண்ணே உழைக்காம வந்த காசு நிக்காதாம்ணே எங்காத்தா சொல்லிச்சு. இந்தாங்க பாக்கிக்காசு” என்று என் ஜன்னல் வழியாக வீசி எறிந்தாள்

தன் காலடியில் விழுந்த இரண்டு ரூபாய் நாணயத்தை எடுத்த கார்த்தி நாணயத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்

டிஸ்கி : முதல் பகுதி என்னோட கற்பனை. இரண்டாம் பகுதி சென்ற வாரம் சிவகாசி செல்லும் போது நடந்தது.

.

Advertisements

28 comments

 1. உழைக்காம கிடைக்கும் காசு உடம்புல ஒட்டாதுன்னா…நம்ம ஊரு அரசியல் வாதிகள் எல்லாம் இந்நேரம் என்ன ஆகியிருப்பாய்ங்கே..!
  நம்மள மாதிரி ஆளுங்கதானுங்க இன்னும் சும்மா நீதி, நேர்மை, நியாயம் அப்டின்னுகிட்டு இருக்கோம்…
  ஆனா ஒரு விதத்துல,
  “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் இறுதியில் வெல்லும்” அப்டின்றது உண்மைதான்…

 2. கற்பனை நிகழ்ச்சி முதல்…பின் நிஜம்…நல்ல உத்தி

 3. //உழைக்காம வந்த காசு நிக்காதாம்ணே எங்காத்தா சொல்லிச்சு//

  வழிமொழிகிறேன்

  அதை விட நீங்க சொன்னீங்களே ..குற்ற உணர்வு..ம்ஹீம் அது ரொம்ப கொடுமை..அதனால வாய்ப்பே இல்லை.

 4. கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் இதே நிலை வந்தது. பஸ்ஸில் அழுக்கான ஆடைகளுடன் ஒரு சிறுவன் ஹூக் விற்று வந்தான். ஹூக் கொத்து இரண்டு ரூபாய். அம்மாவுக்கு இரண்டு, மனைவிக்கு இரண்டு வாங்கி 10 ரூபாய் கொடுத்தேன். சில்லறை இல்லாததால் இரண்டு ரூபாயை வைத்துக் கொள் என்றேன். இல்லை வேண்டாம் என்றவனை வற்புறுத்தி வைத்துக் கொள்ளச் சொன்னேன். பஸ் கிளம்பும் போது ஜன்னல் வழியே ஒரு ஹூக் கொத்தை போட்டு விட்டு மீதி 2 ரூபாய்க்கு என்று சொல்லி விட்டு சென்று விட்டான். சில வினாடிகள் பிரமிச்சு போய் விட்டேன்.

 5. சிறப்பா இருக்குதுண்ணே.

  இன்னும் கொஞ்சம் நடைமொழியை செதுக்கி இருக்கலாம். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னுடைய தாழ்மையான கருத்து.

 6. /*அண்ணே உழைக்காம வந்த காசு நிக்காதாம்ணே எங்காத்தா சொல்லிச்சு. இந்தாங்க பாக்கிக்காசு”*/
  ஊர்ல மழை பெய்யறது எல்லாம் இந்த மாதிரி மக்களுக்காகத்தான்

 7. டக்லஸ், சரியா சொன்னீங்க.
  //
  ஆனா ஒரு விதத்துல,
  “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் இறுதியில் வெல்லும்” அப்டின்றது உண்மைதான்…
  //
  அதுவுமே அரசியல்வியாதிகள் விஷயத்தில உண்மையா இருக்கிற மாதிரி தெரியலையே?
  எல்லா பயலும் என்பது வயசு வரைக்கு எட்டு பொண்டாட்டிங்க கூட சுகமா வாழ்ந்துட்டு தானே சாகுரானுங்க?

 8. அண்ணாச்சி தி க்ரேட். இப்டி தான் ஒருக்கா.. என்னோட டீலர் ஒருத்தர் ஒரு ஃப்ரிட்ஜ் ரிட்டர் அனுப்பினதை மறந்துட்டு அல்லது கணக்குல வைக்காம விட்டுட்டு அதுக்கும் சேர்த்து செக் போட்டு அனுப்பிட்டார். எங்க அக்கவுண்டண்ட் “ சார் செக் வேல்யூ ஜாஸ்தியா இருக்கு. என்ன பண்ணலாம்”னு கேட்டாங்க. அடுத்த நிமிஷமே அந்த டீலருக்கு இன்னொரு ஃப்ரிட்ஜ் பில் பண்ணி அனுப்பிட்டோம். அவர்கிட்ட கூப்ட்டு விஷயத்தை சொல்லி “ பாருங்க தலைவா உங்க கிட்ட அட்வான்ஸ் பேமெண்ட் வாங்கிடேன்”னு ஜாலியா சொல்லிடேன். இப்போ என்னோட டாப் டீலர்கள்ல அவரும் ஒருத்தர்.

  அதென்னவோ போங்க.. அடுத்தவனை எமாத்தறது நம்மள மாதிரி நிறுதொழில் பண்றவங்களுக்கு பிடிக்காத காரியமே. அதெல்லாம் ஒரு பொழப்பா என்ன?

  முன் பாதி கற்பனையா இருந்தாலும் அப்படி ஒரு சூழ்நிலை வந்திருந்தா நீங்க நேர்மையா தான் இருந்திருப்பிங்க.

 9. வேலன்!
  சட்டென்று முகத்தில் அறைகிற குறும்படம் போல இருந்தது. அருமை.

 10. சத்தியமான வார்த்தைகளை சொல்லியிருக்கீங்க. தர்மத்தின் வழி நிற்கும் போது, தர்மம் துணையிருக்கும்.

  //உழைக்காம கிடைக்கும் காசு உடம்புல ஒட்டாதுன்னா…நம்ம ஊரு அரசியல் வாதிகள் எல்லாம் இந்நேரம் என்ன ஆகியிருப்பாய்ங்கே..!//

  படுத்த உடனே உங்களுக்கும் எனக்கும் வரும் தூக்கம், எந்த அரசியல்வாதிக்கும் கிடையாதுங்க.

  மன நிம்மதி நம்மிடம் நிறைய இருக்குங்க.

 11. நன்றி Aanand

  நன்றி டக்ளஸ். ராகவன் சொல்லியிருக்கதப் பாருங்க. படுத்தாத் தூக்கம் வரனும். சாப்பிட்டாச் ஜீரணம் ஆகனும்.

  நன்றி TVRK சார்.

  நன்றி தமிழ். எதிர்பாராத இடத்திலிருந்து கிடைக்கும் இது போன்ற படிப்பினைகள்தான் நம்மை மேலும் பக்குவமாக்குகிறது.

  நன்றி மண்குதிரை. செஞ்சிருக்கலாம்; செஞ்சிடுவோம் அடுத்தில.

  நன்றி அமுதா. சரியாச் சொன்னீங்க.

  நன்றி Joe. ஆனா அவங்க சதவீதம் பாருங்க. மேலும் அதை சுகம்னு நாம எடுத்துக்கிறதுலதான் இருக்குங்க. சொந்த ஊருக்குப் போனா இனிப்பு ஆப்பம் சாபிடுறது என்னோட பழக்கம். ஒரு முறை என் உறவினர் குழந்தை அனுபவிச்சுச் சாப்பிடும் அழகுக்காக அந்தப் பாட்டி மேலும் ஒரு ஆப்பத்த தன் கையாலேயே உட்டி விட்டுட்டு அதுக்குக் காசு வேணாம் என் பேத்திக்குத்தானே குடுத்தேன்னு சொல்லீட்டுப் போனாங்க. இதெல்லாம் என்ன விதமான சந்தோஷம்? என்ன விதமான நிம்மதி? ஸ்விஸ் பேங்குலயம், லீ மெரிடியன் ஹோட்டல்லயும் கிடைக்காதுங்க.

 12. நன்றி சஞ்சய். அதத்தான் நான் சொல்லுவேன். குறுக்கு வழியில வரும் லாபம் கொஞ்சமா இருக்கும் உடனே கரைஞ்சிரும். அதே நேர் வழியில வந்தா லாபம் கொஞ்சமா இருந்தாலும் நிலைக்கும்.

  நன்றி மாதவராஜ். ஏழ்மையிலும் நேர்மைதான் கடினமானது இல்லையா?

  நன்றி ராகவன். //மன நிம்மதி நம்மிடம் நிறைய இருக்குங்க.// ஆமாங்க அத பணத்தால வாங்க முடியாது.

 13. அடித்தட்டு மக்களிடம் நாம் நம்ப முடியாத நேர்மை இருப்பதை நானும் பலமுறை பார்த்து இருக்கேன். நீங்க டிஸ்கி போடலைனா முதல் பாதி உண்மைனும் பின் பாதி கதைக்காக சேர்க்கப்பட்டது என்றும் தோன்றும். உலகம் அப்படி இருக்கு.

  சஞ்சய்க்கு இரண்டு வாழ்த்துகள். ஒன்று நேர்மைக்கும், இன்னொன்று பணம் திருப்பித் தரணும்னு இல்லாமல் அடுத்த பிரிட்ஜ் பில் போட்டாரே. அது அது.

  அனுஜன்யா

 14. மாதவராஜ் says:
  April 17, 2009 11:45 AM

  வேலன்!
  சட்டென்று முகத்தில் அறைகிற குறும்படம் போல இருந்தது. அருமை.
  //

  ரிப்பீட்டு.!

 15. //.. ஏழ்மையிலும் நேர்மைதான் கடினமானது இல்லையா?..//

  ஏழ்மையில் மட்டும்தான் இப்போ நேர்மை இருக்குன்னு நினைக்கறேன்..

 16. சூப்பர்

  குறுக்கு வழியில வரும் லாபம் கொஞ்சமா இருக்கும் உடனே கரைஞ்சிரும். அதே நேர் வழியில வந்தா லாபம் கொஞ்சமா இருந்தாலும் நிலைக்கும்.

 17. சூப்பர் அண்ணாச்சி.முதல்பாதி உண்மைன்னும், அதையொட்டிய கற்பனை இரண்டாவதுன்னும் நினைச்சேன். இனிய ஏமாற்றம்.
  அந்தப் பெண்ணின் செயலால்,வழக்கம்போல எமோஷனல் ஆகிட்டேன்.

 18. தலைப்பு அட்டகாசம்….

  //ஷூவுக்குள்ள சிக்குன கல்லு மாதிரி//
  எஸ்.ராமகிருஷ்ணனுடைய நடை மாதிரி… 🙂

 19. மிக நல்ல எதார்த்தம்.
  அருமையான செய்தியோடு
  சுருக்கெனத் தைக்கிறது.

 20. //அடித்தட்டு மக்களிடம் நாம் நம்ப முடியாத நேர்மை இருப்பதை நானும் பலமுறை பார்த்து இருக்கேன்.//
  நூறு சதவிகிதம் நிஜம்.

  அண்ணன்கள் மாதவராஜ், ஆதிமூலகிருஷ்ணன் சொன்னது போல குறும்படம் பார்த்தது போலவே இருந்தது. வாழ்த்துக்கள்!

 21. ENGO IRUKKUM ANDHA CHINNA PENNAIYUM AVALIN AMMAVAIYUM NINAITHAAL PRABIKKARADHU.

  ADHAI NEENGAL EZUTHIL VADITHAVIDHAM ARUMAI

  (THAMIZIL TYPE SEYYA MUDIYAVILLAI MANNIKKAVUM)

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s