அது மட்டும் எப்படி?


எனக்குப் புரியலீங்க பதிவப் படிச்சிட்டு என் தங்கமணி கேட்ட கேள்விகள் இது. வழக்கம் போலவே எனது பதில் ‘ஙே’

1. ஃபெடெரர் எத்தனை முறை ஜெயிச்சாரு, கம்பிர் எத்தனை சதமடிச்சாருன்னு எல்லாத்தையும் ஒன்னுவிடாம ஞாபகம் வச்சுக்குங்க. ஆனா அரைக்கிலோ துவரம் பருப்பு வாங்கிட்டு வாங்கன்னு சொன்னது மட்டும் மறந்த்துடுதே அது ஏன்.

2. தங்கத்துல எனக்கு ஒன்னும் ஆசை இல்லைன்னு பெரிய ரிஷி மாதிரிப் பேசுறீங்களே, அவசரத்துக்கு அடமானம் வைக்க எங்கிட்டதான வர்ரீங்க.

3. உங்களுக்கு மட்டும் ப்ரவுன் கலர் சட்டை, கிரீம் கலர் பேண்டுன்னு கரக்டா மேட்சிங்கா எடுக்கிறீங்க. ஒரு சேலை எடுத்துக் குடுத்துட்டு அதுக்கு ப்ளவுஸ் எடுக்கதுக்குள்ள முகத்தைத் தூக்கி வச்சுக்கிறீங்க.

4. உங்க வீட்டுக்குப் போனா பிரண்டப் பாக்குறேன்னு நாள் முழுவதும் வெளிய சுத்துறீங்க. அதே எங்க வீட்டுக்கு வந்தா வெளிய போகவே மாட்டேங்கிறீங்க. எங்க அக்கா தங்கச்சிகளோட ஃப்ரீயா பேச முடியுதா ஒன்னா?

5. ஐந்தாவது திட்டக் கமிசன் அறிக்கை, தேர்தல் புள்ளி விபரம் எல்லாம் விரல் நுனியில வச்சிருக்கீங்க. நம்ம பையன் போன பரிட்சையில் கணக்குல வாங்குன மார்க் ஞாபகம் இருக்கா?

6. எங்க வீட்டுல இருந்து யாரு வந்தாலும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆகுற மூஞ்சி என் தங்கச்சி வர்ரான்னு சொன்னா மட்டும் 1000 வாட்ஸ் பல்பு போல பிரகாசிக்குதே ஏன்?

7. பிரண்டுகூட வெளியே போறேங்கிறீங்க. செலவுக்கு 100 குடுத்தாலும் சரி 1000 குடுத்தாலும் சரி அம்புட்டையும் காலி பண்ணீட்டு அடுத்த நாள் காசு கேக்குறீங்களே அது ஏன்.

8. பிரண்டுகிட்ட மட்டும் இதோ கிளம்பீட்டன், ஒண்டிபுதூர் வந்திட்டேன், சிங்காநல்லூர் வந்திட்டேன்னு கூப்பிட்டோ இல்ல மெசேஜ் பண்ணியோ சொல்லிடுறீங்க. நீங்க வருவீங்கன்னு 5 மணியிலருந்து காத்திட்டிருக்க எனக்கு ஒரு போன் பண்ண முடியாதா?

9. புதுசா ஒரு ரெசிபி படிச்சு வித்தியாசமா சமைச்சா அது என்னன்னுகூடக் கேக்காம மாடு வைக்கப் பில்லு மேஞ்சா மாதிரி சாப்பிடுறீங்களே இது என்ன ஞாயம்?

10. என்னை ஊருக்கு அனுப்புறதுல இருக்க வேகம், ஊருக்கு வந்து என்னக் கூப்பிடுறதுல இல்லியே? அது ஏன்?

டிஸ்கி : கொஞ்சம் அடி பலம்தான்.
Picture Courtesy : Alexie Talimonov

.

Advertisements

38 comments

 1. 9 வது கேள்விக்கு என்ன சொல்றதுன்னு தெரியல…. இதே தான் எங்க வீட்டிலும் நடக்கும். உண்மையான அன்பு என்பது இரு கை ஓசை தான்.

 2. ஆதி சொன்னாரே பின்னூட்டம் போட முடியலைன்னு.

 3. // 9. புதுசா ஒரு ரெசிபி படிச்சு வித்தியாசமா சமைச்சா அது என்னன்னுகூடக் கேக்காம மாடு வைக்கப் பில்லு மேஞ்சா மாதிரி சாப்பிடுறீங்களே இது என்ன ஞாயம்? //

  லேப்ல எலி மாதிரி நம்மள உபயோகின்றாங்க… இதுல என்னத்த சொல்வது. சாப்பிட்டுவிட்டு உடம்புகு எதுவும் வராம இருந்தா, நாம செஞ்ச புண்ணியம்.

  மத்த கேள்விகளுக்கு எலாம் என்னிடம் பதில் கிடையாதுங்க..

 4. அதுக்குள்ள யாருப்பா.. அது மைக் டெஸ்டிங்.? உட்டுக்கலாய்க்கிறீங்களேடா சாமி..

 5. போன பத்துக்கு இந்தப் பத்து சரியான பதிலடி….. நடக்கட்டும்… நடக்கட்டும்… இன்னும் எத்தனை பத்தோ? பொண்ணு கேட்ட 10 கேள்விக?

 6. ஆகா ஆகா ஆகா.. என்னென்னமோ தோணுதே.. எல்லா இடத்திலையும் same blood தானா?

 7. நல்ல வேலை எங்கூட்டுல உங்க பதிவ காட்டாம மறைச்சுட்டேன்.
  ( கிரேட் எஸ்கேப் )

 8. மனோதத்துவ நிபுணர்: இதை Excessive selfish Disorderன்னு சொல்லலாம்.

  எங்க பாட்டி: நல்ல புளிய மர விளார ஒடைச்சி நாலு சாத்து சாத்தினா எல்லாம் சரியா போய்டும்.

  (வேலன் அண்ணே நா பக்க மெட்ராஸ்காரன். இந்த “ விளார”
  என்ற சொல் சரியாண்ணே?)

 9. தங்கமணி அக்காவின் தங்கமான கேள்விகள்னு தலைப்பு வெச்சிருக்கலாம்.

 10. நன்றி தமிழ். 9 ஆம் கேள்விக்கு மட்டும்தானா? மனசாட்சியத் தொட்டுச் சொல்லுங்க.

  நன்றி மைக் டெஸ்டிங். தேர்தல் வந்திருச்சு?

  நன்றி ராகவன். லேப்ல எலிதான் நான் எப்பவும் எந்தங்கமணிகிட்டச் சொல்லும் உதாரணம்.

  நன்றி மாதவ்

  நன்றி ஆதவ்

  நன்றி மகேஷ்

  நன்றி loshan

  நன்றி கணினி தேசம். தப்பிச்சீங்க.

  நன்றி ரவிஷங்கர். விளாறுன்னு வரணும். அது என்ன பக்கா மெட்றாஸ்காரன்?

  நன்றி பொன்.பாரதிராஜா. நீங்க எப்பப் படம் எடுப்பீங்க?

 11. //விளாறுன்னு வரணும்//
  நன்றி.

  //அது என்ன பக்கா மெட்றாஸ்காரன்?//

  சில சொலவடைகள்/பழமொழிகள் மண்
  வாசனை இருந்தால் டக்கென்று வரும்.இங்க கூவம் வாசனைதானே?

  நீங்கள் சொல்லும் “”அது மட்டும் எப்படி?” கொஞ்சம் தோண்டிக்
  கொண்டேப் போனால ஆழத்தில் “ஆண் ஆதிக்க மனோபாவம்” வரும் என்று சொல்லலாம். சரியா? பதில் கூறவும்.

 12. ரவி ஆழமாகத் தோண்ட வேண்டாம், மேல்பரப்பில் மிதக்கும் கசடுகளின் அடியில் இருப்பது அதுவேதான்.

  மிகச்சிறந்த உதாரணம், வேலைக்குப் போகும் பெண்களின் ATM கார்டை பெரும்பாலும் அவர்களின் கணவர்கள்தான் பயன்படுத்துகின்றனர்.

  ஆனா அந்தக் கணக்கைத் துவங்கித்தரும் போது சொல்லுவது, “ அவளுக்குன்னு ஒரு இண்டிவிஜுவலிட்டி இருக்கனும் அதுதான்”

  ”எனக்கு ஏதாவது ஆயிருச்சுன்னா அதுதான் இப்பவே எல்லாத்தையும் சொல்லித் தருகிறேன்”. இது இன்னொரு மொக்கை வாதம். இதைச் சொல்லிச் சொல்லியே கரன்ட் பில், டெலிபோன் பில் காட்டுற வேலையெல்லாம் கூட அவர்களிடம் தள்ளியாச்சு.

  சில சமயம், பெண் விடுதலையாவது புடலங்காயாவதுன்னு சொல்லத் தோணுது.

 13. \\புதுசா ஒரு ரெசிபி படிச்சு வித்தியாசமா சமைச்சா அது என்னன்னுகூடக் கேக்காம மாடு வைக்கப் பில்லு மேஞ்சா மாதிரி சாப்பிடுறீங்களே இது என்ன ஞாயம்?\\

  This is the Topone …

 14. //எங்க வீட்டுல இருந்து யாரு வந்தாலும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆகுற மூஞ்சி என் தங்கச்சி வர்ரான்னு சொன்னா மட்டும் 1000 வாட்ஸ் பல்பு போல பிரகாசிக்குதே ஏன்?//

  :-)))))))) வேலன் இப்படி சாச்சு புட்டாங்களே

 15. நன்றி டக்ளஸ்.
  நன்றி கிரி. பின்ன அது உண்மைதானுங்களே.

 16. ப்ளாக் டெம்ப்ளேட் சூப்பரா இருக்குங்க.

 17. //பிரண்டுகூட வெளியே போறேங்கிறீங்க. செலவுக்கு 100 குடுத்தாலும் சரி 1000 குடுத்தாலும் சரி அம்புட்டையும் காலி பண்ணீட்டு அடுத்த நாள் காசு கேக்குறீங்களே அது ஏன்.//

  அவசரத்துல உண்மைய வெளில சொல்லிட்டிங்களே அண்னாச்சி..

  (இல்ல, எல்லோருக்கு தெரியுமா?)

 18. எல்லா கேள்விகளும் நியாயமாத்தானே இருக்கு?
  பதில் பத்து எப்போ போடறிங்க?
  🙂

 19. போன பதிவையும் வாசித்தேன்

  பின்னூட்டம் இட முடியல.

  இது சரியான போட்டி. தொடர வேண்டாம். அடுத்து ஒரு கவிதை எழுதுங்கண்ணே காத்திக்கிட்டிருக்கோம்.

 20. //தங்கத்துல எனக்கு ஒன்னும் ஆசை இல்லைன்னு பெரிய ரிஷி மாதிரிப் பேசுறீங்களே, அவசரத்துக்கு அடமானம் வைக்க எங்கிட்டதான வர்ரீங்க.//

  ஹிஹிஹின்னு வழியிறத தவிர வேறேதும் செய்ய முடியாத சூழ்நிலை!

 21. ஆதிகிட்ட சொல்லி மெம்பர்சிப் கார்டு வாங்கிகோங்க!

 22. நன்றி தமிழ்நெஞ்சம்
  நன்றி கார்க்கி
  நன்றி பட்டாம்பூச்சி
  நன்றி முரளிக்கண்ணன்
  நன்றி மண்குதிரை
  நன்றி வால் பையன்

 23. /
  வடகரை வேலன் says:
  April 15, 2009 11:48 AM

  மிகச்சிறந்த உதாரணம், வேலைக்குப் போகும் பெண்களின் ATM கார்டை பெரும்பாலும் அவர்களின் கணவர்கள்தான் பயன்படுத்துகின்றனர்.
  /

  ஓ அப்படியா இவ்ளோ நாள் இது தெரியாம இருந்துட்டேனே
  :)))))))))

  அப்படியே செஞ்சிருவோம்

 24. ஹா ஹா ஹா ஹா முடியல முடியல சாமியோவ். ஹா ஹா ஹா

 25. எப்படியோ பேலன்ஸ் செய்து காமிச்சிட்டிங்க….அடி பலமோ?

 26. எங்க அக்கா தங்கச்சிகளோட ஃப்ரீயா பேச முடியுதா ஒன்னா?\\

  அதான் நாம இருக்கமே கடலை போட

 27. \\எங்க வீட்டுல இருந்து யாரு வந்தாலும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆகுற மூஞ்சி என் தங்கச்சி வர்ரான்னு சொன்னா மட்டும் 1000 வாட்ஸ் பல்பு போல பிரகாசிக்குதே ஏன்?\\

  தெரிஞ்சிகிட்டே கேட்டாகளா !

 28. வடகரை வேலன் said…
  ரவி ஆழமாகத் தோண்ட வேண்டாம், மேல்பரப்பில் மிதக்கும் கசடுகளின் அடியில் இருப்பது அதுவேதான்.

  மிகச்சிறந்த உதாரணம், வேலைக்குப் போகும் பெண்களின் ATM கார்டை பெரும்பாலும் அவர்களின் கணவர்கள்தான் பயன்படுத்துகின்றனர்.

  ஆனா அந்தக் கணக்கைத் துவங்கித்தரும் போது சொல்லுவது, “ அவளுக்குன்னு ஒரு இண்டிவிஜுவலிட்டி இருக்கனும் அதுதான்”

  ”எனக்கு ஏதாவது ஆயிருச்சுன்னா அதுதான் இப்பவே எல்லாத்தையும் சொல்லித் தருகிறேன்”. இது இன்னொரு மொக்கை வாதம். இதைச் சொல்லிச் சொல்லியே கரன்ட் பில், டெலிபோன் பில் காட்டுற வேலையெல்லாம் கூட அவர்களிடம் தள்ளியாச்சு.

  //சில சமயம், பெண் விடுதலையாவது புடலங்காயாவதுன்னு சொல்லத் தோணுது //

  உண்மைய எழுதுன உங்க கைக்கு, 2 பவுன்ல இல்ல, 20 பவுன்ல காப்பு போடலாம்.

 29. 2. தங்கத்துல எனக்கு ஒன்னும் ஆசை இல்லைன்னு பெரிய ரிஷி மாதிரிப் பேசுறீங்களே, அவசரத்துக்கு அடமானம் வைக்க எங்கிட்டதான வர்ரீங்க. //

  சான்ஸே இல்ல,

  படிச்சி ஒரு நொடி அரண்டு போயிட்டேன். (நிறைய பேச கத்துக்கிட்டேன் இந்த பதிவுல இருந்து)
  நன்றி : உங்க தங்கமணியாருக்கு

 30. அண்ணாச்சி வாழ்த்துக்கள்– ரங்கமணிகளின் நிலைமையை வெளிக்கொண்டு வந்ததற்கு……….

 31. நன்றி சிவா.

  நன்றி சிவக்குமரன்

  நன்றி கும்க்கி. பின்ன அவங்க அடிக்க நான் ஓட, நான் ஓட அவங்க அடிக்கன்னு.

  நன்றி ஜமால். ஏங்க காதலிக்கும்போது பேசுனா அது கடலை. கல்யாணமாச்சுன்னா அது கடமை.

  நன்றி Senthil.

  நன்றி அமிர்தவர்ஷினி அம்மா. ரெம்பப் பாதிக்கபட்டிருப்பீங்க போல.

  நன்றி அத்திரி

 32. //
  9. புதுசா ஒரு ரெசிபி படிச்சு வித்தியாசமா சமைச்சா அது என்னன்னுகூடக் கேக்காம மாடு வைக்கப் பில்லு மேஞ்சா மாதிரி சாப்பிடுறீங்களே இது என்ன ஞாயம்?
  //
  அவங்க என்ன ரெசிபி செஞ்சாலும் அது வழக்கம்போல காம்பினேசன் ஆப் உப்பு, காரம், புளிப்பு, அது இதுனு தான் இருக்க போறது.. அதனாலதான்னு சொல்லிட வேண்டியது தானே..?

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s